
துடிக்க பிறந்த பின்
இருவருடன் உறவினர்
சிரிக்க நீ மட்டும்
அழுது கொண்டு
அரவனைத்து பராமறித்து
வளர்க்கப் பட்டு பின்
உறவும் நட்பும் பெருகி
நீயும் தாயாகவோ தகப்பனாகவோ
மாறி அதே பணியை
தொடர இறப்பு வந்து
பலர் அழ சிலர் மகிழ
முடியுமிந்த வாழ்க்கை உனக்கு
வேண்டாம்
எதிர்காலத்தில் எனக்கு திருமணமாகி பிறக்க போகும் என் குழந்தைக்கு நான் சொல்ல போகும் பாடமிது (ஒரு 4 வருசம் ஆகும்).
நாம் அனைவரும் இந்த சாதாரன வாழ்க்கைக்காகத்தான் போராடி கொண்டிருக்கிறோம். இந்த பிறப்புக்கும் இறப்புக்குமிடையில்தான் எத்தனை மகிழச்சி, துக்கம், சண்டைகள். பெரும் பணம் சேர்க்கும் கடமை எனக்கிருக்கிறது. என் சந்ததிக்காக அல்ல. எனக்கு கிடைத்த இந்த சாதாரண வாழ்க்கை கூட கிடைக்க பெறாமல் சாலையோரத்தையும், அனாதை இல்லத்தையும் இருப்பிடமாக கொண்டு வாழ்ந்து வரும் என்னை போன்ற மனிதனுக்காக.
இது போன்ற மனிதர்களை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். நம்மில் சிலர் அவர்கள் மீது பரிதாப பட்டு காசோ உணவோ வழங்கியிருப்போம் அவ்வளவுதான். இன்று பல பெரும்பணம் படைத்த நிறுவன அதிபர்கள் சேர்க்கும் பணமெல்லாம் தாங்கள் தான் உலகின் முதன்மை பணக்காரன் என்ற பட்டத்தை அடையும் நோக்கமாகவே இருக்கிறது.
சிலர் மனமுவந்து சேவைகளும் செய்கின்றனர். பலர் இன்னும் அனாதையாகவோ பிச்சைகாரராகவோ இருப்பதற்கு காரணமும் இதுதான். அவர்களின் தேவை ஒரு வேலை உணவு அல்ல. நிரந்தரமான உணவும் இருப்பிடமும். இது கிடைக்க அவர்கள் கல்வியறிவும், வேலைவாய்ப்பும் பெற வேண்டும்.
பணம் இதை கண்டு பிடித்த பின்தான் ஏற்றதாழ்வுகளும் உருவாகி மனித மனங்கள் சுருங்கி மனிதன் மனிதத்தை மறந்து சுயநலவாதியாக மாற்ற பட்டான். நான் முன்னரே ஒரு பதிவில் சொல்லியதுதான் "என்னுடைய இந்த வாழ்க்கை பயணம் முடியும் முன் குறைந்தது ஒரு ஆதரவற்ற மனிதனாவது என்னால் கல்வி பெற்று திறமை கொண்டு வேலை பெற்று சாதாரண மனித வாழ்க்கை எய்த வேண்டும்" என்பது என் இலட்சியமாக உள்ளது. நிச்சயம் அதற்காக உழைப்பேன். இதையே என் சந்ததிக்கும் போதிப்பேன்.

பாரதி சொன்னது போல்
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிறையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
என் சந்ததிக்காக வாழும் இந்த சாதாரண வாழ்வியலில் இருந்து விடுபட்டு ஒரு மாறுபட்ட மனிதனாக என்னை உருவகப்படுத்தி கொள்ள இந்த முயற்சி நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கையில்........
17 விவாதங்கள்:
//பணம் இதை கண்டு பிடித்த பின்தான் ஏற்றதாழ்வுகளும் உருவாகி மனித மனங்கள் சுருங்கி மனிதன் மனிதத்தை மறந்து சுயநலவாதியாக மாற்ற பட்டான்//
மிகச்சரி புலிகேசி...
சிந்தனையை தூண்டும் இடுகை.
நல்லாருக்கு. ஒவ்வொருவரும் இது போல் எண்ணினால் சுபிட்சமே!
பிரபாகர்.
சிந்திக்க வைத்திருக்கிறீர்கள் நண்பரே...ம்..ம்..
அவசியமான இடுகை,,,,
//
சிலர் மனமுவந்து சேவைகளும் செய்கின்றனர். பலர் இன்னும் அனாதையாகவோ பிச்சைகாரராகவோ இருப்பதற்கு காரணமும் இதுதான். அவர்களின் தேவை ஒரு வேலை உணவு அல்ல. நிரந்தரமான உணவும் இருப்பிடமும். இது கிடைக்க அவர்கள் கல்வியறிவும், வேலைவாய்ப்பும் பெற வேண்டும்.//
உண்மை .....
பணம் இதை கண்டு பிடித்த பின்தான் ஏற்றதாழ்வுகளும் உருவாகி மனித மனங்கள் சுருங்கி மனிதன் மனிதத்தை மறந்து சுயநலவாதியாக மாற்ற பட்டான்.//
உண்மைதான் நண்பரே காகிதமான பணத்துக்கு இருக்கும் மதிப்புக் கூட மனிதனுக்கு இல்லையே..
100 ரூபாய்க்குக் கூட மனிதர்களைக் கொல்லும் மனநிலையும் சமூகநிலையும் இன்று உள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாதே..
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நண்பரே..
இந்தப்பாடல் எனக்கும் பிடிக்கும் சராசரி மனிதவாழ்க்கை செக்குமாடு சுற்றி வருவது போன்றது.. இந்தப்பாடல் மனிதனை தம் இலக்கு நோக்கி நகர்த்துவது.. நல்ல சிந்தனை நண்பரே..
// இன்று பல பெரும்பணம் படைத்த நிறுவன அதிபர்கள் சேர்க்கும் பணமெல்லாம் தாங்கள் தான் உலகின் முதன்மை பணக்காரன் என்ற பட்டத்தை அடையும் நோக்கமாகவே இருக்கிறது. //
சிந்தனையை தூண்டும் பதிவு..
good one.
//என் சந்ததிக்காக வாழும் இந்த சாதாரண வாழ்வியலில் இருந்து விடுபட்டு ஒரு மாறுபட்ட மனிதனாக என்னை உருவகப்படுத்தி கொள்ள இந்த முயற்சி நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கையில்........//
வாழ்த்துக்கள் தல..
நல்ல சிந்தனை
லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்...
நல்ல இடுகை.பாராட்டுகள்.
லட்சியம் நிறைவேறட்டும்... வாழ்த்துக்கள்
புலிகேசி
பணம் உள்ளவர்கள் அனைவரும் தர்ம்ம் செய்ய வந்துவிட்டால் ஏழைகளும் அநாதைகளும் இருக்க மாட்டார்கள் என்ற உங்களது சிந்தனை உங்களுடையது அல்ல• அதனை உங்களது மண்டைச்சுரப்பில் ஏற்றிய முதலாளிகளின் சிந்தனையைத்தான் வாந்தி எடுக்கின்றீர்கள். இதில் வித்தியாசமாக வாழ்வதாக எண்ணி சொல்லுக்கும் செயலுக்கும் நேர்மையாக இருந்து விட்டுப் போகாத பார்ப்பன பாரதியை துணைக்கு அழைத்து இருக்கின்றீர்கள்.
திருடர்கள் எல்லாம் தரம்ம் செய்தால் சமூகம் மாறி விடும் என்ற இந்த நம்பிக்கை அறிவியலின்பாற் பட்டதல்ல• பலர் ஏழைகளாகவும் அநாதைகளாகவும் ஆக்கப்பட்டதற்கு காரணமே முதலாளிகளின் கோவிலான சந்தைதான். சந்தை ஈவிரக்கமற்றது. மக்களுக்காக பொருட்களை உற்பத்தி பண்ணிய பழைய உற்பத்தி முறைகளை ஒழித்து சந்தைக்காக என்று பொருட்கள் உற்பத்தி ஆகத் துவங்கியதோ அன்றே சந்தையின் பொருட்களை மட்டுமல்ல தொழிலாளிகளையும் தூக்கி எறியத் துவங்கி விட்டது. தூக்கி எறியப்படுவர்கள் அநாதைகளாகவும் ஏழைகளாகவும் மாறி விடுவது இயல்புதானே.. தான் ஏழையாக்கி அவர்களுக்கு அவனோ அல்லது அவனைப் போன்ற ஒருவனோ வந்து சேவை செய்வது என்பது ஏமாற்று வேலை அல்லவா.
பணம்தான் பிரச்சினை என்பது கூட சொத்தை வாதம்தான். என்றைக்கு மனிதனை மனிதன் அடிமையாக்கலாம் என சமூகம் மாறியதோ அன்றைக்கே மனிதர்களுக்கிடையிலான உறவுகளிலும் ஜனநாயகம் மறைந்து விட்டது. அது நிலவிய புராதன சமூகம் பற்றி ம் அதில் நிலவிய பொதுவுடைமை பற்றியும் நிறைய படித்து பிறகு எழுதினால் சிறப்பாக இருக்கும்.
ஒருத்தரை ஒருத்தர் முன்னேற்றி விடுவதால் சமூகம் மாறி விடுமா.. அல்லது சமூக மாற்றத்தை நடைபெறுவதை தடுக்குமா என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்து விட்டு எழுத வாருங்கள். பாரதியின் இரட்டைத்தன்மை பற்றி விபரம் கோரினால் தருகிறேன்.
நல்ல முயற்சி
உங்கள் முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் புலிகேசி
புத்தாண்டு வாழ்துக்கள்
பாராட்டுகளுக்குரிய இடுகை நண்பா... சிந்தனையும் செயலும் ஒன்றாய் அமையும் பட்சத்தில் நாமும் நண்பர்களே.
உங்கள் உயரிய நோக்கம் நிறைவேற என் வாழ்த்துக்களும் புலிகேசி. நல்ல பகிர்வு.
புலவர் வாழ்க
Ennudaiya muthal pathivil kooda ithe kavithai thaan irukkum, neengal palarukku uthavi mananiraivai adaiya vaazhthukkal.
Post a Comment