
நண்பர்களுக்கு வணக்கம்!
நேற்று எந்திரன் குறித்து ஒரு பதிவிட்டிருந்தேன். பலர் வறிந்து கட்டிக் கொண்டு சண்டையிட வந்தனர். முகிலன் எதிர்வினை எழுதி எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.
அப்படி அந்த பதிவில் நான் என்ன தேச விரோதமாகவா எழுதி விட்டேன்? இவர்களுக்கு ஏன் அந்த ஒரு நடிகன் மீது இவ்வளவு பாசம்?
நடிகனுக்காக வறிந்து கட்டிக் கொண்டு வந்த இவர்களில் யாரும் போபால் குறித்து பதிவெழுத அழைத்திருந்த போது வரவில்லை. இதிலேயே புரிகிறது இவர்கள் என்ன ரகம் என்று.
நல்ல விடயங்கள், மக்களுக்கான விடயங்களுக்கு நாங்கள் ஒன்று கூட மாட்டோம். ஆனால் நடிகனைப் பற்றி விமர்சித்தால் கண்டனம் தெரிவிக்க ஒன்று கூடுவோம் என்கின்றனர்.
முதலில் நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நான் ஒன்றும் புரட்சிகர எழுத்தாளன் அல்ல. சொல்லப் போனால் நான் ஒரு எழுத்தாளனே அல்ல. எனக்கு தவறென பட்டால் அதை பதிவிட்டு பலருக்கு சொல்லி வருகிறேன்.
என்னை ஏன் இவர்கள் புரட்சிக்காரன் என சொல்கிறார்கள் எனப் புரியவில்லை. அந்த புரட்சிக்காரன் என்னும் சொல்லைக் கேவலப் படுத்தாதீர்கள். அது அவ்வளவு எளிதில் அடையக் கூடிய இலக்கு அல்ல.
அதில் சிலர் ஒருவரை விமர்சனம் செய்ய நமக்கு என்ன தகுதி இருக்கிறது? என பார்க்க வேண்டும் என எழுதியிருந்தார். அதாவது ஏழ்மையை ஒழிக்க நீ என்ன செய்தாய்? ரஜினியை கேள்வி கேட்கிறாய் என்றார்.
என்னால் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் நான் ஒரு சாதாரண பொதுமக்களில் ஒருவன். ஆனால் நீங்கள் தான் உங்கள் ரஜினியை கடவுளாகப் பார்க்கிறீர்களே! அவரால் ஒன்றும் முடியாதா? அவரை விமர்சனம் செய்ய எனக்கு பொதுமக்களில் ஒருவன் என்ற தகுதி இருக்கிறது.
சிலர் கேட்டிருந்தனர் "நீங்கள் சொல்லும் விடயங்கள் ஏழை ரசிகனுக்கு என்றால் அதை ப்ளாகில் எழுதி என்ன பயன்?".
நண்பர்களே நீங்கள் இது போன்ற வெறும் சினிமா ரசிகனாக இருந்து விடக் கூடாது. சமுதாயத்தில் நமக்கு நிறைய கடமைகள் இருக்கிறது அவற்றை விட இது ஒன்றும் பெரிய விடயமல்ல. சொல்லப் போனால் பைசா பிரயோசனமில்லாத விடயம். இதை ப்ளாகில் எழுதுவதில் எந்த தவறும் இல்லை. ஏழைகளை விட இந்த விடயங்கள் நடுத்தர வர்க்க மக்களுக்கு புரிய வேண்டும்.
நேற்று பதிவுலகில் நான் மிகுந்த மரியாதை வைத்திருந்த ஒரு நபரின் குட்டும் உடை பட்டு போய் விட்டது. அவர் என்ன செய்தார் என்றால் என்னுடைய நேற்றைய பதிவிற்கு தமிழ்மணம், இண்டலி என இரண்டிலும் வாக்களித்து விட்டு முகிலன் எழுதிய எதிர்வினைக்கும் சென்று வாக்களித்து கருத்திட்டிருக்கிறார். இவர்கள் என்ன ரகம் என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.
எந்திரனால் பயன் ஆளும் வர்க்கத்திற்கும், மேட்டுக்குடி வர்க்கத்திற்கும் மட்டுமே. இது புரியவில்லை என்றால் திட்டி விட்டு போங்கள்.