கடவுளை மற..மனிதனை நினை..

Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

10 July 2010

பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?

12:48:00 PM Posted by புலவன் புலிகேசி , 22 comments
நண்பர் தமிழ் மகன் என்னை இந்தத் தொடர்பதிவு எழுத அழைத்திருக்கிறார். தொடர்பதிவுகள் எழுதும் விருப்பமில்லை என்பதை நான் கடைசியாக எழுதியத் தொடர்பதிவில் கூறியிருந்தேன். இருந்தாலும் இந்தத் தொடர் பதிவில் உள்ளக் கேள்விகள் என்னை எழுதத் தூண்டின. அதனால் எழுதுகிறேன்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

புலவன் புலிகேசி

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. என் பெயர் முருகவேல். இந்தப் பெயருக்குப் பெரிதாய் ஒன்றும் காரணமில்லை. நான் பதிவெழுத வந்த காலத்தில் நடுத்தர வர்க்க சிந்தனையோடுத் தொடங்கினேன். அப்போது வெளி வந்திருந்த 23ம் புலிகேசிப் படம் எனக்குப் பிடிக்கும் அதனால் வைக்கப் பட்டதுதான் இப்பெயர்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

எனக்கு வலையுலகம் இப்ப்டிப் போய்க் கொண்டிருப்பது தெரியாத காலம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நான் மற்றும் வெண்ணிற இரவுகள் கார்த்தி ஆகிய இருவரும் நண்பன் ஊடகன் இம்ரானைப் பார்த்து ஆரம்பித்ததுதான் இந்த வலைப்பூ. ஆரம்பித்த காலத்தில் நான் பார்த்த என்னை பாதித்த விடயங்களை எழுத ஆரம்பித்து கதை, கட்டுரைக் கவிதை எனப் போய்க் கொண்டிருந்தேன். ஆனால் சமீபக் காலங்களில் சில பதிவுலகக் கட்டுரைகளையும் மற்ற சில நிகழ்வுகளின் வாயிலாகவும் அரசியல் பற்றி எதுவும் எழுதாத நான் அது பற்றி அதிகம் தெரியாத நான் அது பற்றிப் புரிதலுக்கு வர ஆரம்பித்தப் பின்னர் நம் மக்கள் ஒவ்வொருவருக்கும் இந்த அரசியலின் நிலைத் தெரிய வேண்டும். எல்லாவற்றிலும் ஒரு அரசியல் பார்வை ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. நம் நாட்டின் அரசியலின் நிலைப் பாட்டையும் அவர்களின் தந்திர அரசியலையும், அமெரிக்க அரசியலுக்கு நம்மைத் தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருப்பதயும் நான் அறிந்த வரை என் பதிவுகளைப் படிப்பவர்களுக்கு எடுத்து சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். இது வெறும் ஆரம்பம் தான் இன்னும் நிறைய அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதெல்லாம் தேவையா? என என்னை சிலர் தொடர்பு கொண்டு கேட்டனர். ஆனால் இதெல்லாம் தேவை என அனைவருக்கும் தோன்றினால் அப்போது தான் இந்த அரசியல் சாக்கடை சுத்தம் செய்யப் படும். திரைப் படங்களில் காண்பிப்பது போல் இந்தியனோ, அந்நியனோ, ரமணாவோ வர மாட்டான். அப்படியே வந்தாலும் முழுத் தீர்வுக் கிடைக்காது. கொலை ஒரு விடயத்தை நிர்ணயிக்காது. மக்களுக்கு ஒரு புரிதல் இது ஏன் இப்ப்டி ஆகியிருக்கிறது? என ஏற்பட வேண்டும். எல்லாவற்றையும் வெறும் செய்தியாக மட்டும் பாவிக்கும் இந்த நடுத்தர வர்க்கம் மாற்றப் பட வேண்டும். எல்லாவற்றிலும் அக்கரை எடுத்துக் கொண்டு மக்கள் அரசியல் வாதிகளை பார்க்கத் தொடங்கினால் இந்த அரசியல் இங்கு இருக்காது என்பதே என் நோக்கம்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் பதிவுலகிற்கு வந்த காலத்தில் எனக்கு நீ ஓட்டுப் போட்டியா? உனக்கும் நான் போடுறேன். அது தரமோ தரமற்றதோ என ஆரம்பித்ததுதான் இந்த பிரபல ஃபார்முலா. அதே ஃபார்முலாவில் துவங்கியவன் தான் நான். ஓடிச் சென்று பல பதிவுகளைப் ஃபாலோ செய்து பின்னூட்டமிட்டு வளர்த்து வந்த எனக்குள் ஏற்பட்ட எண்ணம் தான் நாமும் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். இனி இப்ப்டி இருக்கக் கூடாது. நிறைய மாற்றங்களை இந்த வலைப்பூ மூலம் நிகழ்த்த வேண்டும் என மாறியிருக்கிறேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என் பதின்மக் குறிப்பும், என்னைப் பற்றிய ஒருத் தொடர்பதிவும் பகிர்ந்திருக்கிறேன். விளைவு என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுது போக்கிற்காக எழுதியவன் தான். இப்போது அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம் என யோசித்து சில உப்யோகமான விவாதங்களை முன் வைத்து எழுதி வருகிறேன். இதை வைத்து காசு பார்க்கும் எண்ணம் எனக்குத் துளியும் இல்லை.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

எனக்கு செம்மொழிப் பிடிக்கும் ஆனால் சமீபத்தில் நடந்த செம்மொழி மாநாடுப் பிடிக்கவில்லை. வலைப் பதிவு என்று பார்த்தால் இது ஒன்று மட்டுமே. அதுவும் தமிழில் இருக்கிறதா? என்பது சந்தேகமே. பெரும்பாலும் அரைகுறை தமிழில் தான் இருக்கிறது. அப்பறம் என் கல்லூரி நண்பர்களுக்காக ஒரு வலைப்பூ 2008-ல் ஆரம்பித்தேன். அது எங்கள் நண்பர்களின் த்கவல்களைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கப் பட்டது. அவ்வளவே.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை என்பதை விட பலப் பதிவர்களைப் பார்த்து வியப்படைந்திருக்கிறேன். ஒருவர் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால் குறிப்பாக பாலாசி மற்றும் கதிரை சொல்லியாகனும். இவர்களின் எழுத்துக்களில் தமிழ் பழகிக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லலாம். கோபம் என்பது வெண்ணிற இரவுகள் கார்த்தியுடன் அடிக்கடி வந்திருக்கிறது. அப்போதெல்லம் சண்டையிட்டிருக்கிறேன். பார்ப்பனீய ஆதரவாளர்கள் அனைவர் மீது அடிக்கடி வரும்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாரட்டைப் பற்றி..

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நண்பர் பாலாசி மற்றும் வெண்ணிற இரவுகள் கார்த்தி. அப்புறம் வானம்பாடிகள் ஐயா. இவர்கள் எனக்குத் தொடர்ந்து ஊக்கம் தருபவர்கள். இது சரி இதுத் தவறு என என்னுடன் விவாதிப்பவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் கார்த்தியும், வானம்பாடிகள் ஐயாவும். அவர்களுக்கு என் நன்றி.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னைப் பற்றி முன்னமே ஒரு தொடர்பதிவில் சொல்லியிருக்கிறேன். இதோ அதின் இணைப்பு... நானும் தீபாவளியும்...!!!...இதை எழுத நான் அழைப்பது நண்பர் பாலாசி மற்றும் வானம்பாடிகள் ஐயா.

17 March 2010

பிடித்த பத்து பெண்கள்

1:09:00 PM Posted by புலவன் புலிகேசி 21 comments
நண்பர்கள் வெள்ளிநிலா ஷர்புதீனும், சசிக்குமாரும் இந்தத் தொடர்பதிவை எழுத அழைத்திருந்தனர்.

நிபந்தனைகள் :-

1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,
2. வரிசை முக்கியம் இல்லை.,
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...


1) அன்னை தெரேசா

இவ்வுலகில் பலரின் தாய். தாய் என்ற சொல்லுக்கு முழு அர்த்தமாய் வாழ்ந்தவர். என் தாய்க்கு பிறகு எனக்கு இவர் தான் தாய். இது போன்ற மனமுடையவர்கள் மிகச்சிலரே

2) சாந்தி

நான் பணிபுரியும் TNQ நிறுவனத்தின் C.O.O. தன்னம்பிக்கைக்கும், பொறுமைக்கும் எடுத்துக் காட்டாய் இவரைத்தான் சொல்வேன். பல விடயங்களில் எனக்கு ரோல் மாடல் இவர்தான். ஆயிரக்கணக்கில் பணியாளர்களைக் கொண்ட நிறுவனத்தின் பணிகளை நிதானமாக கையாளும் திறமை படைத்தவர்.

3) மரிய ஷரபோவா

டென்னிஸ் வீராங்கனை. இவரின் ஆட்ட வெளிப்பாடும், ஆர்வமும் என்னை வியக்க வைத்திருக்கிறது.

4) ஐஸ்வர்யா ராய்

உலக அழகிப் பட்டத்திற்கு முழு தகுதியானவர். தன்னால் எப்படிப் பட்ட கதாப் பாத்திரத்தையும் சிறப்பாக செய்ய முடியும் என நிரூபித்துக் காட்டியவர். தமிழில் உதாரணம்: இருவர்.

5) சரோஜினி நாயுடு

ஒரு கவிஞராகவும், தேசிய போராட்ட வீரராகவும் இருந்தவர். இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர். இந்தியாவின் முதல் மாநில பெண் ஆளுநர்.

6) கல்பனா சாவ்லா

விண்வெளி சென்ற முதல் பெண் வீராங்கனை.

7) புனிதா அரோரா (Lieutenant General.)

இந்தைய இராணுவத்தில் உயர் பதவி அடைந்த முதல் பெண் என்ற பெருமைக்குரியவர்.

8) தாமரை

சொல்லவா வேண்டும். சிறந்த பாடலாசிரியர். இவரைப் பற்றி பலமுறை சொல்லியிருக்கிறேன்

9) கேப்டன் துர்கா பேனர்ஜி (முதல் பைலட்)


இந்திய விமானத்துறையின் முதல் பெண் பைலட் என்ற பெருமை பெற்றவர்.

10) எஸ் ஜானகி

எல்லா விதமான குரலிலும் பாடக்கூடிய திறமை மிக்கவர். இன்றும் இவர்க் குரலை கேட்க ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

யாரையும் தொடர் பதிவுகள் எழுத அழைப்பதில் விருப்பமில்லாததால், விருப்பமானவர்கள் எழுதலாம்.

07 November 2009

அடக் கொடுமையே... 10 - தொடர் பதிவு

9:55:00 AM Posted by புலவன் புலிகேசி 12 comments

விருப்பம் இல்லை என்றாலும் அருமை நண்பர் அகல்விளக்குக்காக இந்த தொடர்பதிவு.

இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்

2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்

3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதி

பிடித்தவர் :- வியாதிகள் பிடிக்காது (அரசியல்(வியா)திகள்).
பிடிக்காதவர்:- இந்திய அரசியல்வாதிகள் அனைவரும்..

நடிகர்

பிடித்தவர் :- கமலஹாசன், சூர்யா
பிடிக்காதவர் :- விஜய், எஸ்.ஜே.சூர்யா

இயக்குனர்

பிடித்தவர் :- மணிரத்தினம், கௌதம், பாலா
பிடிக்காதவர் :- பேரரசு

கவிஞர்

பிடித்தவர் :-  பாரதி, சுஜாதா
பிடிக்காதவர் :- யாருமில்லீங்கோ

தொழிலதிபர்

பிடித்தவர் :- அம்பானி
பிடிக்காதவர் :- நடிகைகளுடன் கும்மாளம் போடும் ஜவுளிக்கடை உரிமையாளர்.

நடிகை

பிடித்தவர் :- சிம்ரன், ஜோ
பிடிக்காதவர் :- த்ரிஷா மற்றும் நமீதா

இசையமைப்பாளர்

பிடித்தவர் :- ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா
பிடிக்காதவர் :- தேவா, இளையராஜா(கர்வத்தால்)

எழுத்தாளர் 

பிடித்தவர் :- சுஜாதா
பிடிக்காதவர் :- பிடிக்கலைன்னு சொல்றதுக்கு எனக்குத் தகுதி இல்லீங்கோ...


நான் அழைப்பு விடுத்தவர்கள் :-

வேணாம் இதோட நிருத்திக்கிறுவோம்.......வலிக்குது....

05 November 2009

தொடர்பதிவு - புலவன் புலிகேசி

9:43:00 AM Posted by புலவன் புலிகேசி 15 comments
இது போன்ற தொடர்பதிவுகள் எழுத விருப்பமில்லை என்றாலும் அருமை நண்பர் கவிதைகள் விஜயின் அன்பிற்காக இது...

1. A- Available/single - Available நட்புக்கும் என்னால் முடிந்த உதவிக்கும்

2. B - Best friend - என் தந்தை

3. C- Cake or pie - இரண்டுமில்லை

4. D - Drink of choice - சோளக் காஞ்சி (அம்மாவின் தயாரிப்பு)

5.E - Essential items you use everyday - My Bike

6. F- Favorite colour - வான் நீலம்

7. G - Gummy bears or worms - ரெண்டுமில்லை

8. H - Hometown - மயிலாடுதுறை

9. I - Indulgence - புத்தகங்கள்

10. J - January/Feruary - பிப்ரவரி 9

11. K - Kids and their names - இன்னும் கல்யானமாகலீங்கோ...

12. L - Life is incomplete with out - Achievements

13. M - Marriage date -  வரும் போது சொல்லுறேன்

14. N - Numberof siblings - 1 அண்ணன் - குமரவேல்

15. O - Oranges or Apples - ஆப்பிள்

16. P - Phobias/ Fears - Indian Politicians

17. Q - Quotes for today - உனக்கு சரி எனப் பட்டால் தயங்காமல் செய். இல்லை என்றால் எவர் சொன்னாலும் செய்யாதே...

18. R - Reason to smile - நல்ல நண்பர்கள்...

19. S - Season - குளிர்

20. T- TAG 4 PEOPLE - நால்வரை அழைக்க விருப்பமில்லை. காரணம் அவர்களுக்கேத் தெரியும். அதனால் பாலவாசகன்(சிறகுகள்) மட்டும்.

21. U- Unknown fact about me - Nothing

22. V - vegetables you dont like - பாகற்காய்

23. W - Worst habbit - கோபம் மட்டும்

24. X - Xrays you had - எதுவும் இல்லை.

25. Y - Your favourite food - மோர்க் குழம்பு

26. Z - Zodiac sign - நம்பிக்கையில்லை

அன்பிற்கு உரியவர்கள் -  குடும்பத்தினர், நண்பர்கள் (வலையுலகம் சேர்த்து), உடன் பிறவா சகோதரி (பெயர் கீதா)

ஆசைக்குரியவர் - தேடிக் கொண்டிருக்கிறேன்

இலவசமாய்க்கிடைப்பது - அறிவுரைகள்

ஈதலில் சிறந்தது - எது கொடுத்தாலும்(கொடுக்கும் மனப்பான்மைதான் சிறந்தது)

உலகத்தில் பயப்படுவது - தீவிரவாதம்

ஊமை கண்ட கனவு - கனவாகவே!!! (மற்றவருக்குத் தெரியாது)

எப்போதும் உடன் இருப்பது -  நட்பிடம் பெற்ற வெள்ளி மோதிரம்

ஏன் இந்தப் பதிவு - நண்பர் விஜய்க்காகவும், என்னைப் பற்றிய விபரங்களுக்காகவும்

ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது - அதரவற்றோர் இல்லங்கள் (எனது கனவும் அதுதான்)

ஒரு ரகசியம் - யாருக் கிட்டயும் சொல்லக்கூடாது...


ஓசையில் பிடித்தது - குழந்தையின் அழுகையும் சிரிப்பும்


ஒளவை மொழி ஒன்று - ஐயமிட்டு உண்

01 November 2009

நானும் தீபாவளியும்...!!!

3:47:00 PM Posted by புலவன் புலிகேசி 25 comments
ஒரே ஊர்க் காரராக இருந்தாலும் இது வரை நேரில் சந்தித்திராத பதிவுலக நண்பர் க.பாலாசி-யின் அழைப்பை ஏற்று நானும் இந்தத் தொடர்ப் பதிவை எழுதுகிறேன்..... இந்தப் பதிவு தோழி தேனம்மைலக்ஷ்மனனுக்காகவும்

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

பெயர் முருகவேல், என்னத்த சொல்ல-னு என்னுடைய சுயவிவரத்திலேயே சொல்லியிருப்பேன். இருந்தாலும், மயிலாடுதுறையில் MCA முடித்து விட்டு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். எல்லா மனிதர்களைப் போலவே இந்த நாட்டிற்காகவும் கஷ்டப்படும் மக்களுக்காகவும் ஏதாவது செய்ய முடியுமான்னு எண்ணிக்கொண்டே இருப்பவன் (இது வரை எதுவும் செய்யவில்லை.). கடவுள் மீது நம்பிக்கை இல்லாத மனிதன்.

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

பனிரெண்டு வயது என நினைக்கிறேன். எதிர்வீட்டு மாமா அணுகுண்டு வெடித்துக் கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தபோது எங்கள் வீட்டு செல்ல நாய் பற்ற வைத்திருந்த வெடியின் மீது மூத்திரமிட்டத்தை கண்டு அங்கிருந்த அனைவரும் சிரித்தது.....

3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

மயிலாடுதுறையில் தான். வேறெங்க போறது எங்க அப்பா அம்மாவ உட்டுட்டு.

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?

தீபாவளி என்றால் முதலில் உற்சாகப் பட வேண்டியது குழந்தைகள் தான். ஆனால் இப்போதெல்லாம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தீபாவளியை "தொலைக்காட்சிப் பெட்டியில்" தான் கொண்டாடுகிறார்கள். வழக்கமாக தீபாவளியன்று உறவினர்கள் நண்பர்களிடையே செய்யப் படும் அன்புப் பரிவர்த்தனைகள் குறைந்திருக்கிறது.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்க‌ளா ?

மூன்று மாதத்திற்குப் பிறகு அப்பா அம்மாவையும், சொந்த ஊரையும் பார்க்க வேண்டும் அவ்வளவுதானேத் தவிர தீபாவளிக் கொண்டாட வேண்டுமென்ற எண்ணமில்லை. நட்பு ஒருவர் எடுத்துக் கொடுத்த பிறந்தநாள் சட்டையும் அதற்கு அழகு சேர்க்க நான் ரெங்கநாதன் தெருவில் வாங்கிய கால்சட்டையும் தான்.....


6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?
வழக்கம் போல் முறுக்கு அப்பறம் அம்மா அன்புடன் எனக்குப் பிடித்த சீடையும் அண்ணனுக்குப் பிடித்த ரவா லட்டும்  செய்திருந்தார். அப்பா ஒரு இனிப்பகத்திலிருந்து எனக்கும் என் அண்ணனுக்கும் பிடித்த "பாசமுள்ள" மைசூர் பாகு வாங்கி வந்திருந்தார்.

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி...சென்ற ஆண்டு வரை என்னுடன் பள்ளியில் படித்த ஒரு நண்பனிடமிருந்து வாழ்த்து அட்டை வந்துகொண்டிருந்தது. இந்த ஆண்டு அவனும் தொலைபேசிதான்.....


8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?
காலைப் பத்து மணிக்கு புறப்பட்டால் இரவு பனிரெண்டு வரை பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் தான்..........தொலைக்காட்சியில் புதைவது பிடிக்காது.......


9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

இத்தனை ஆண்டுகளாக இத்தகைய திருநாளில் யாருக்கும் உதவி செய்ததில்லை. இந்த ஆண்டு என் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பணம் சேகரித்து எங்கள் ஊரில் உள்ள "அன்பகம்" என்ற ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று இனிப்பு மற்றும் உணவு வழங்கி வந்தோம்.


10) நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள்?

தமிழ் மீது பற்று கொண்டு ஆய்வுகள் செய்து வரும் அருமை நண்பர் "முனைவர்.இரா.குணசீலன்"
அவர்களையும் தமிழர் மீது பற்று கொண்ட கோபக்கார நண்பர் "வெண்ணிற இரவுகள்" கார்த்தியையும் நிச்சயம் என் அழைப்பை ஏற்பார்கள் என்ற நம்பிக்கையில் அழைக்கிறேன்.........