கடவுளை மற..மனிதனை நினை..

Showing posts with label பகுத்தறிவு. Show all posts
Showing posts with label பகுத்தறிவு. Show all posts

06 November 2009

கண்டேன் கடவுளை....

9:53:00 AM Posted by புலவன் புலிகேசி 23 comments

உழுது விதை விதைத்து
நாற்று நட்டு நீர்ப் பாய்ச்சி
கதிர் அறுக்கும் விவசாயி
உழைப்பில்....

நல்லவன் கெட்டவன்
தெரியாமல் யாரைப் பார்த்தாலும்
புன்னகை செய்யும் பச்சிளம்
குழந்தையின் சிரிப்பில்...

தோல்வியில் துவண்டு
விழும் போது தோள்
கொடுத்துத் தூக்கும்
தோழமையிடம்...

ஆதறவற்றோர் இல்லத்தில்
50 காசு மிட்டாய்க்கு
அழகாய் சிரிக்கும்
சிறுவனிடம்....

விபத்தில் சிக்க நேர்ந்த போது
என் கையைப் பிடித்துக்
காப்பாற்றிய பெயர் தெரியாத
மனிதனிடம்....

கண்டேன் கடவுளை....
கோவிலில் அல்ல....

28 October 2009

தெய்வம் முதியோர் இல்லத்தில்........பகுத்தறிவு (பகுதி-2)

9:12:00 AM Posted by புலவன் புலிகேசி 20 comments
*வியாபார உலகில் பெரியவன். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தைக் கோவில் உண்டியலில் செலுத்தினான்.

பாதிக்கப் பட்டது ஏழை மக்கள்.



*தீமிதித் திருவிழாவில் மற்றவனைப் போல் ஓடத் தெரியாதவன் காலில் புண். 

தெய்வக்குத்தமாம்.....??

*பத்தாம் வகுப்புத் தேர்வுக்குப் படிக்காதவன் பிள்ளையார் கோவிலில் சென்று தேர்வு எண்ணை எழுதினான். 

தேர்விலும் அதை மட்டும் தான் எழுதினான்.

*எதிர் வீட்டுக் குழந்தை அடித்த பந்து மேலேப் பட்டதால் வெட்டுக்குத்து சண்டை. கோவிலில் நேர்த்திக்கடனாக தலையில் தேங்காய் உடைப்பு. 

குழந்தையும் தெய்வமும்..???


*வியாபாரத்தில் வெற்றி. கோவிலில் நேர்த்திக்கடன். 

தெய்வம் (தாய்) முதியோர் இல்லத்தில்......

26 October 2009

தெய்வக் குத்தமாகிப் போச்சே........??? பகுதி-1

4:00:00 PM Posted by புலவன் புலிகேசி 44 comments

* வண்ணான் தொட்டால் தீட்டு என்றவன் திருநாளில் புது சட்டை அணிந்தான்.

சட்டையைத் தானே உருவாக்கினானோ???

* சாணியக் கொடுத்து சந்தனம் என்றால் ஒப்புக்கொள்ள மறுத்தவன் கல்லைக் காட்டிக் கடவுள் என்றதும் ஒப்புக்கொண்டான்.


* பொங்கல் திருநாளில் பானையில் ஊற்றப்பட்ட கோமியத்தை (மாட்டுக் கழிவு) பார்த்தக் குழந்தை ஏனென்று கேட்டது. சம்பிரதாயம்
என்றாள் அதன் விபரம் தெரியாத அம்மா.....

மாட்டுக் கழிவு மனிதனுக்கு உணவா???

* மாட்டுத் தொழுவத்திலிருந்து வெளியேறி கையில் ஒட்டியிருந்த மாட்டுசானத்தைக் கழுவி சுத்தம் செய்து விட்டு சாமி அறைக்கு வந்தவன்....

மாட்டுச்சாண சாம்பலை எடுத்து நெற்றியில் பூசி வாயில் போட்டுக் கொண்டான்.
* 6 வயது குழந்தைக்கு கால் நடக்க முடியாமல் போன போது தெய்வக் குத்தம் என்று சொல்லி குழந்தைக்கு மொட்டைப் போட்டான்.

தெய்வம் போலியோ சொட்டு மருந்து எனத் தெரியாதவன்.