கடவுளை மற..மனிதனை நினை..

26 September 2009

யார் கடவுள்....? - பகுதி-1

9:34:00 AM Posted by புலவன் புலிகேசி 21 comments

கடவுள் இருக்கிறானா? இல்லையா?? இருக்கிறான் என்றால் அவன் யார்???

இது போன்ற கேள்விகள் மனிதர்களிடத்தில் இன்று வரை தெளிவு படாமல் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றது.

இதைப் பற்றி விவாதிக்க இந்த ஒரு பதிவு போதாது என்பதால் தான் இதை ஒரு "தொடர்கதை" (TV mega Serial அல்ல...) போல் எழுதத் தொடங்கியுள்ளேன். இதன் முதல் பகுதியைப் பார்ப்போம்.

முதலில் கடவுள் எவ்வாறு படைக்கப் பட்டிருப்பான் எனப் பார்ப்போம்..

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு விதமான நம்பிக்கைகள் உள்ளன. அவை தன்னம்பிக்கை மற்றும் பிறர் மீது கொள்ளும் நம்பிக்கை.

எந்த ஒருவனுக்கு தன்னம்பிக்கை குறையத் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் அவன் பிறர் மீது நம்பிக்கைக் கொள்ள கட்டாயம் ஏற்படுகிறது. நாம் பிறர் மீது கொள்ளும் நம்பிக்கை பெரும்பாலும் தோற்றுப் போகிறது (உதாரணம்: நமது அரசாங்கம்...).

"தன்னம்பிக்கை குறையும் பொழுது கடவுள் கருவில் வளரத் தொடங்குகிறான். எப்போது பிறர் மீது கொள்ளும் நம்பிக்கை குறையத் தொடங்குகிறதோ அப்போது அவன் வளரத் தொடங்குகிறான். அதே நம்பிக்கை பொய்க்கும் பொழுது பிறந்து விடுகிறான்."

இங்கு பிறப்பது வெறும் நம்பிக்கை மட்டுமே! கடவுள் அல்ல!!!

"மனிதனைப படைத்தது கடவுள் என்பதெல்லாம் சுத்தப் பொய்! உண்மையில் கடவுள் தான் மனிதனால் படைக்கப் படுகிறான். வெறும் நம்பிக்கையாக!!!"

இந்த நம்பிக்கை சிறிது சிறிதாக தவறான முறையில் வளர்ந்து இப்போது நம் மக்களிடம் மூடநம்பிக்கையாக உருவெடுத்துள்ளது.

"தன்னம்பிக்கை இழப்பவன் உண்மையில் ஒரு ஊனமுற்றவன். அவன் நடப்பதற்கு ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகிறது. அந்த ஊன்றுகோல் சிலருக்கு மனிதர்களிடம் கிடைக்கிறது. மனிதர்களால் புறக்கணிக்கப் படுபவர்களுக்கு இல்லாத ஒரு ஊன்றுகோலாக கடவுள் தேவைப் படுகிறான்."

இந்த கடவுள் நம்பிக்கையையும் மூடநம்பிக்கையையும் பற்றி இனி வரும் பகுதிகளில் தெளிவாக விவாதிக்க விரும்புகிறேன்...

உங்கள் கருத்துக்களுக்காகவும் வாக்குகளுக்காகவும் காத்துக் கொண்டிருக்கும் கடவுள் அல்லாத ஒரு மனிதன்...............

23 September 2009

அரசு வேலைக்கு ஆட்கள் தேவை???

9:19:00 AM Posted by புலவன் புலிகேசி 8 comments
இந்த பதிவு விகடனின் நல்ல பதிவில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது..


எனது முந்தைய பகிர்வான "பள்ளி செல்ல ஆசையின்" தொடர்ச்சிதான் இது.....

"தமிழ்நாடு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்றும் 6 லிருந்து 60 வரையிலானவர்கள் பதிவு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்".

ஆனால் இந்த வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலை பெறுபவர்கள் பெரும்பாலும் ஆசிரியர் பணிக்குத் தான்.

அவர்கள் பணிநியமனம் செய்யப் படும் முறை சரிதானா என விவாதிப்போம்...

பதிவு செய்தவர்களின் வரிசைப் பட்டியல் மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யப் படுகின்றனர். ஒருவர் வேலை பெற வேண்டுமானால் அவர் அதற்கான கல்வித் தகுதி மட்டும் பெற்றிருந்தால் போதுமா???

இப்போது உள்ள பல அரசுப் பள்ளிகளில் "கல்வியின் தரம்" எவ்வாறு உள்ளது. நானும் அரசுப் பள்ளியில் பயின்ற ஒரு மாணவன் தான். எனது அனுபவத்திலிருந்து ஒரு எடுத்துக்காட்டு.

நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு கணித வகுப்பெடுத்த "அருணாசலம்" என்ற ஆசிரியர் தான் வகுப்பிற்கு வந்த முதல் நாள் எங்களிடம் கூறிய வார்த்தை "நீங்கள் தேர்ச்சி பெற 35 மதிப்பெண் பெற்றால் போதும். அதற்கு தேவையான பகுதிகளை மட்டும் உங்களுக்கு சொல்லித் தருகிறேன் அது போதும் என்றார்."

இன்னொரு தமிழாசிரியர் "சிங்காரம்" நான் உங்களுக்கு இலக்கணம் சொல்லித் தர வேண்டுமானால் ஒவ்வொரு மாணவனும் "25 ரூபா தர வேண்டும் என்றார்".

இவர்கள் அரசிடம் சம்பளம் வாங்கவில்லையா??? இவர்களின் மொத்த வேலை நேரம் ஒரு நாளைக்கு 4 மணி நேரம். இதைக் கூட சரியாக செய்ய முடியவில்லையா???

இத்தகைய பொறுப்பற்றவர்கள் ஆசிரியர்களாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் தேர்வு செய்யப் பட்ட முறை தான்.


ஆசிரியர்கள் தேர்வு செய்யப் படும் பொழுது தனியார் நிறுவனங்களில் நடப்பது போல் அல்லது வங்கி தேர்வுகளைப் போல் தேர்வு வைக்கப் பட்டு பின்னர் அவர்களின் தகுதியின் அடிப்படையிலும் , திறமையின் அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப் பட்டால் தகுதியானவர்கள் ஆசிரியர்களாக வருவார்கள். கல்வியின் தரமும் உயரக் கூடும்.

தனியார்ப் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளிகளும் மாணவர்களின் தரத்தை உயர்த்தலாமே!!!

ஆசிரியர்கள் என்பதை விட தான் ஒரு மனிதன் என்பதை உணர்ந்து தன்னை கேட்பதற்கு யாருமில்லை என்றாலும் என் பணியை நான் சிறப்பாக செய்வேன் என பணியாற்றி வரும் ஒரு சில ஆசிரியர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் (என் பார்வையில் "மோகன்தாஸ்". எனது பனிரெண்டாம் வகுப்பு கணித ஆசிரியர்.)

உங்கள் கருத்து???

19 September 2009

பள்ளி செல்ல ஆசை!!!...............

9:21:00 AM Posted by புலவன் புலிகேசி 17 comments

அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டம் எந்த அளவிற்கு வெற்றியடைந்துள்ளது எனப் பார்ப்போம்....

தமிழகத்தில் அடிப்படைக் கல்வி கூட கிடைக்காத குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு??? தமிழக அரசு அறிவித்த "அனைவருக்கும் கல்வித் திட்டம்" அவர்களை சென்று சேர வில்லையா???

நிச்சயம் சேர்ந்திருக்கிறது.. ஆனால் அந்த திட்டத்தில் தான் குறைபாடு உள்ளது. என்ன குறைபாடு என விவாதிப்போமா???

எனது முந்தைய பகிர்வான "பிச்சைகாரனின் பிள்ளைகளை" படிக்காதிருந்தால் படித்துவிட்டு தொடருங்கள்...(இந்த பகிர்வுக்கும் அதற்கும் தொடர்பு உள்ளது.)

நம் அரசு மக்களுக்கு நல்லது செய்வதாக காட்டிக் கொள்வதற்காக அறிமுகப் படுத்தியது போல் தோன்றுகிறது இந்தத் திட்டம். உண்மையில் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு முன் அதற்கான மூல காரணம் அறியப்பட வேண்டும்.

இங்கு மூல காரணம் என்னவென்றுப் பார்த்தால் வறுமை. ஒரு குழந்தை நல்ல கல்வி பெற வேண்டுமென்றால் அதற்கு நல்ல உணவு,உடை போன்றவைகளுடன் பெற்றவர்களின் ஆதரவும் தேவை.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் படிக்க வரும் குழந்தையின் குடும்பத்தின் வறுமையை போக்க என்ன வழி என்பதையும் இந்த அரசு யோசித்திருக்க வேண்டும் (கல்வி அறிவில்லாதவர்கள் ஆட்சி நடத்தும் பொழுது நாம் இதை எதிபார்ப்பது தவறு தான்).

குழந்தை தொழிலாளர் முறையை அரசு குற்றம் என சொல்லுகிறது. "நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை அதிகாரிகளுக்கு தேநீர் வாங்கி வருவது ஒரு 8 வயது குழந்தை???"

குற்றப் பதிவு செய்தால் தான் அதைப்பற்றி கருத்தில் எடுத்துக் கொள்ளுமோ காவல் துறை??? காவலாளிகள் மனிதர்கள் இல்லையோ???(அனைத்துக் காவலர்களையும் சொல்லவில்லை)

பொது மக்களாக நம்மால் செய்ய முடிந்தது குறைந்தது ஒரு அனாதை குழந்தைக்காவது நமது ஓய்வு நேரத்தில் குறைந்த பட்ச கல்வியையாவது கொடுக்க முயற்சி செய்யலாமே!!!

உங்கள் கருத்துக்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்!!!

16 September 2009

பேருந்துக்குள் பிரளயம் (அவதியில் பொதுமக்கள்)

9:18:00 AM Posted by புலவன் புலிகேசி 11 comments

தமிழக அரசாங்கம் சாலை போக்குவரத்தில் சாதனைகள் புரிந்துள்ளதாக கூறிக்கொள்கிறது. இது உண்மையா??? என சிந்தித்து பார்ப்போம்.

தமிழக அரசாங்கம் நிறைய புதியவகை பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சொகுசுப் பேருந்துகளும், குளிர் சாதன பேருந்துகளும் ஏழைகளுக்கு எந்த விதத்தில் உதவி செய்ய முடியும்???

ஏழைகள் பயணம் செய்வதற்கு உகந்த "வெள்ளை நிற பலகை" பேருந்துகளின் எண்ணிக்கை எவ்வளவு???

அதுவும் காலை மற்றும் மாலை வேளைகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பேருந்துகளை காண்பது அரிதாகி விட்டது. வெள்ளை நிற பேருந்துகளில் M என்று ஒரு எழுத்தை சேர்த்துக் கொண்டு அதற்கு 1 ரூபாய் அதிகப் படுத்தியுள்ளது.

சரி இவ்வளவு வருமானங்களை அள்ளித் தரும் இந்த பேருந்துகளின் பராமரிப்பு???


இந்த அரசாங்கம் பேருந்து பராமரிப்புக்கு ஒதுக்கும் நிதி அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் தான் சென்றடைகிறது. பேருந்துக்கோ, பொது மக்களுக்கோ வருவதில்லை.

ஒவ்வொரு பேருந்தின் தினசரி லாபத்தில் 10% ஒதுக்கினால் போதும், அனைத்து பேருந்துகளும் தனியார் பேருந்துகளை போல் சிறப்பாகவும் மக்களுக்கு தொந்தரவு இல்லாமலும் செயல்பட முடியும்.

நம்மை போன்ற பொது மக்களுக்கும் இந்த பேருந்து பராமரிப்பில் பங்கு உள்ளது. பேருந்தை சேதப்படுத்தும் கல்லுரி மற்றும் பள்ளி மாணவர்கள் (அ) பொதுமக்கள் முதலில் தண்டிக்கப் படவேண்டும் (சேதாரத்தொகை வசூலிக்கலாம்).

இது சம்மந்தமாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கலாம்??? எப்போது என் இந்தியா சிங்கப்பூர் ஆக மாறும்???

14 September 2009

பிச்சை காரனின் பிள்ளைகள்.......

9:56:00 AM Posted by புலவன் புலிகேசி 7 comments

மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் தனது நிலையிலிருந்து தடுமாறும் பொழுது இந்தியாவின் மக்கள் தொகை தவறான முறையில் அதிகரிக்கிறது. இந்த தடுமாற்றம் பணக்காரன் முதல் பிச்சைக்காரன் வரை பொதுவானது. இதில் பணக்காரன் பெரும்பாலும் தப்பித்துக் கொள்கிறான். பிச்சைக்காரனுக்கு யார் சொல்வது கருத்தடை சாதனங்களை பற்றி??? இந்த அரசாங்கம் சொல்லும் வழிமுறைகள் அவனை சென்றடைகிறதா??? அவர்களுக்கு கருகலைப்பு செய்ய எந்த மருத்துவர் தயாராக உள்ளார்??? இந்தியா என்னதான் வளரும் நாடாக இருந்தாலும் பிச்சைகாரர்களின் எண்ணிக்கையிலும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவர்கள் ஏன் பிச்சை எடுக்க வேண்டும் என இந்த அரசாங்கம் எப்போதாவது எண்ணிப் பார்த்ததுண்டா??? அப்துல் கலாம் கூட நல்ல பணக்கார குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கும் கல்லூரிக்கும் தானே சென்று அறிவுரைகள் எல்லாம் சொல்கிறார். இது போன்று பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்காக எதுவும் செய்ய வில்லையே!!! அரசாங்கத்தை சிந்திக்க வைக்க என்ன வழி உள்ளது?????