
"ஒருவனுக்கு ஒருத்தி" என்ற வார்த்தை மனிதனுக்கு பல பெண்களின் உறவால் வந்த வியாதிக்கு பின்னரே உபயோகத்திற்கு வந்தது. அக்கால ஆண்கள் பல பெண்டிருடன் வாழ்ந்ததற்கு சான்றாக 1000 பெண்டிருடன் வாழ்ந்த தசரதனை சொல்லலாம். பலருடன் உறவு என்பது உண்மையில் தவறான விடயம். அதை தவறென சுட்டியமை எல்லாம் நன்றுதான். ஆனால் அது பெண்டிருக்கு மட்டும் தான் என்ற வகையில் கற்பாக வைக்கப்பட்டதுதான் தவறு.
பெண்ணின் தாய்மையடையும் சிறப்பே அவளின் அடிமைத்தணத்திற்கும் காரணமாயிற்று. அதை வைத்தே பெண்களின் கற்பு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. அவள் தவறு செய்தால் அவளின் வயிறு காட்டி கொடுத்துவிடும். இந்த கற்பு என்ற சொல்லை கண்டுபிடித்தது நிச்சயம் ஆணாகத்தான் இருக்கும். அதிலும் தன் ஆணாதிக்கத்தை புகுத்தியிருக்கிறான்.
பெண்களின் பெருமைக்கு உதாரணம் என பார்த்தால் கண்ணகியின் கற்புதான் முதலில் அனைவருக்கும் தோன்றும். "பொண்ணு கண்ணகி மாதிரி. குனிஞ்ச தல நிமிர மாட்டா" என்பர். குணிந்து நடந்தால் எதிரில் வரும் ஆபத்து தெரியாமல் போய்விடும். பெண்ணே நிமிர்ந்து நட.
இதுவே ஆண்களுக்கு உதாரணம் பார்த்தால் பல இதிகாச வீரர்களை குறிப்பிடுகின்றனர். ஏன் அந்த வீரம் பெண்களுக்கு கிடையாது என நினைக்கிறான்? உண்மையில் பெண்களுக்கும் வீரம் உண்டு. ஆனால் பெண்ணென்றால் மென்மையானவளாக இருக்க வேண்டும் என ஆணாதிக்கம் வரைமுறை விதித்து விட்டது. அது இன்றும் தொடர்கிறது.

இன்றும் பெண்பார்க்கும் முறை என்ற பெயரில் பெண் காட்சிப் பொருளாக்கப்படுவது யாராலும் மறுக்க முடியாது. ஏன் நாளை எனக்கே திருமணம் என்றால் கூட என் வீட்டில் பெண் பார்க்க கூட்டி செல்வார்கள். அங்கே பெண் குணிந்த தலை நிமிராமல் வந்து காபி கொடுப்பதும் யாரென்று தெரியாதவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் என்ற பெயரில் "என்னை திருமணம் செய்து கொண்டால் நான் உங்கள் அடிமை" என அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பதும் இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது.
நான் ஏன் இவர்கள் காலில் விழ வேண்டும் என எந்த பெண்ணும் யோசித்ததுமில்லை, கேள்வி கேட்டதுமில்லை. அப்படியே யோசித்தாலோ அல்லது கேள்வி கேட்டாலோ அவளுக்கு பெயர் அகங்காரி, அடங்காபிடாரி. எந்த பெண் பார்க்கும் நிகழ்விலாவது மாப்பிள்ளை பெண் வீட்டாரின் கால்களில் விழுந்திருக்கிறானா? திருமணத்தின் போதுதான் விழுவான்.
ஏனென்றால் பெண் பிடிக்கும் வரை அவனுக்கு அந்த குடும்பத்தாரோடு எந்த உறவுமில்லை. நான் ஏன் விழ வேண்டும்? என்ற எண்ணம் ஆணுக்கு உண்டு. ஆனால் பெண்ணுக்கு இல்லை.
கற்பாம் கண்ணகியாம்! கொடுமை தீர பெண்ணே நிமிர்ந்து நட! நேர்பட பேசு! அடிமை விலங்கை உடைத்தெறி!
71 விவாதங்கள்:
சரியாக சொன்னீர்கள். (ஆமா, பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாச்சா, வாழ்த்துக்கள்.)
//1 Comment
Close this window Jump to comment form
Blogger சைவகொத்துப்பரோட்டா said...
சரியாக சொன்னீர்கள். (ஆமா, பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாச்சா, வாழ்த்துக்கள்.)//
இப்போதைக்கு இல்ல தல..இன்னும் 2 அ 3 வருடம் கழித்துதான்...
///கால்களில் விழுந்து ஆசிர்வாதம் என்ற பெயரில் "என்னை திருமணம் செய்து கொண்டால் நான் உங்கள் அடிமை" என அடிமை சாசனம்//
புலி பதுங்குவது பாயத்தான் என்ற அனுபவ உண்மையை கூடிய விரைவில் புரிந்து கொள்ள 'திருமணஞ்சேரி ஸ்ரீ கல்யாண சுந்தரமூர்த்தி' அருள் புரியட்டும். :))
///அவளின் வயிறு காட்டி கொடுத்துவிடும். ////
வயிறு காட்டிக் கொடுப்பதெல்லாம் இருக்கட்டும், கருக்கலைப்பும், இன்னார்தான் "அப்பா" என்று நிரூபிக்க முடியாத காலங்களில் இது பற்றிய பயம் இருந்திருக்கலாம். இப்போது யாருமே இப்படியெல்லாம் பயப்படுவதாகத் தெரிலையே!
///கற்பாம் கண்ணகியாம்!////
இதைத் தவிர, மத்தபடி நீங்க சொல்லி இருக்கும் //பெண்ணே நிமிர்ந்து நட! நேர்பட பேசு! //// விஷயங்களுக்கு சபாஷ்.
/////அவளின் வயிறு காட்டி கொடுத்துவிடும். ////
வயிறு காட்டிக் கொடுப்பதெல்லாம் இருக்கட்டும், கருக்கலைப்பும், இன்னார்தான் "அப்பா" என்று நிரூபிக்க முடியாத காலங்களில் இது பற்றிய பயம் இருந்திருக்கலாம். இப்போது யாருமே இப்படியெல்லாம் பயப்படுவதாகத் தெரிலையே!//
நட்பே நகர்புற வாழ்க்கையை மட்டும் வைத்து பெண்களை எடை போடாதீர்கள்...இன்றும் கிராமங்களிலும் சிறுநகரங்கலிலும் பெண்கள் நான் சொல்லியிருப்பது போலத்தான் இருக்கிறார்கள்.
:). நல்லாருக்கு. ஆனால் போதாது. இன்னும் உள்ளே போகணும்.
//Blogger வானம்பாடிகள் said...
:). நல்லாருக்கு. ஆனால் போதாது. இன்னும் உள்ளே போகணும்.//
நிச்சயமா எழுதுவேன் ஐயா...ஆமாம் என்ன ஒரு 6 நாளா ஒன்னும் எழுதக்காணோம்.. என்னாச்சு? தினம் பாத்து ஏமாந்து போறேன்.
இப்போவெல்லாம் காலில் விழுவது என்பது மாறி விட்டது என்றுதான் தோன்றுகிறது..
அவர்கள் காலில் விழுந்தால் காலை வாருவதறகாகதான் இருக்கும் :)
அருமையான கருத்து,
பென்னுரிமை இன்னமும் வார்த்தையில் தான் என்னதான் முன்னேறிவிட்டாலும் மனதளவில் இன்னமும் பழைய நிலைதான்
குனிந்த தலை நிமிராமல் நடக்க சொல்லுவதற்க்கு இன்ன்மொரு காரணம் அப்பொழுது தான் புருஷன் வேறெங்கிலும் அலையவிடும் பார்வையை மறைக்க முடியும்
இன்னமும் மாறத்தான் வேண்டும் நாம்
நன்றி புலவரே
ஜேகே
கல்யாணம் ஆகிவிட்டால் சரியாகிவிடும்.
கற்பு என்றால் ‘பதிவிரதம்’ அப்படியானால், கன்னிப்பெண்களுக்கு அது கிடையாதா? சமூகம் அவர்களுக்குத்தான் அதை குறிப்பாக வைத்திருக்கிறது. எனவே கற்பு என்றால் அனைத்துப்பெண்களுக்குமாம்.
‘பதிவிரதம்’ போல ‘ஏக பத்தினி விரதம்’ என்று ஆண்களுக்கும் உண்டு.
பலபெண்களை மனதால் உறவு கொள்வது ஆண்களுக்கு உண்டு. அது தவறு என்பது அனைத்து மதங்களின் ஆணை.
ஆனால், அது பெண்களுக்கு உண்டா இல்லையா என்பதை மனோத்ததுவ நிபுணர்களிடம் கேட்டுத்தெரியவும்.
‘கற்பு’ என்றால், ஆங்கிலத்தில் chastity. அங்கே உடல் சார்ந்த கற்பையே குறிக்கும்.
தமிழில் ‘கற்பு’ என்றால், மனம், மெய், வாக்கு எல்லாம் சேர்ந்த்தான்.
அன்னிய ஆடவன் உடல் தன்மீது படும்போதும், அவன் கண்ணடி படுவம்போதும், ஒரு பெண் அருவருப்படைந்தால் அவள் கற்புடைய நங்கை.
இதில் எந்த ஆணாதிக்கமும் இல்லை. தன்னாலே வருவது.
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப்பெறின்.
இதை எழுதிய தமிழர், கற்பெனும் திண்மை ஒரு ஆண்கூட்டம் அவளுக்கு வைத்தது என்ற நினைப்பில் எழுதவில்லை. கற்பு என்பது தானே வந்து உணரப்படுவது என்பதுதான் அவர் கருத்து.
இதே தமிழர் மேலும் சொவார்:
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தளை.
இங்கு இவர் தெளிவாகச்சொல்வார்: கற்பென்பது திணிக்கப்படும், அல்லது கட்டமைக்கப்படும், ஆணாதிக்கச்செயல்ல. பெண் தனக்குத்தானே உணர்வது; செய்வது ஆகும். ஆணுக்கு இங்கே இடமில்லை என்றார் இந்தத் தமிழ்ச்சான்றோர்.
'ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கோட்பாடு ஆண்களின் உடல் நலத்துக்காக என்று மட்டும் சொல்கிறீர்கள்.
அது குழந்தைகளில் வாழ்க்கைக்காகவும் ஆகும்.
பெண் தனக்கு அன்னிய ஆடவர்களிடமிருந்து ஒரு பாதுகாப்பிற்காகவும்; தாயமையடைந்து அந்தத் தாய்மையை அனுபவிப்பதற்காகவும், குடும்பம் ஒன்று வேண்டும். அதற்கு இக்கோட்ப்பாடு உதவுகிறது.
புலவரே, Breaking Point என்ற ஆங்கிலத் திரைப்படத்தைப்பார்க்கவும்.
எல்லாச் செயல்களையும் சிலர் அபகரித்து தன் இட்டப்படி செய்துகொள்வர். அது போல் இக்கொள்கையும் பாழ்படுத்தப்படலாம். அதற்காக கொள்கையே வேண்டாமென்பது
throwing the baby with bath water.
பெண் பார்க்கும் சடங்கு ஒரு convenient platform, not only for you see to see the girl or prospective bride, but also, for the elders to decide other terms of references.
பெண் பார்க்கும் படலம் என்பது புலவரே, உமக்கு மட்டுமல்ல. நீங்கள் போய் பெண்ணை பார்த்துவிட்டு, ஹலோ ஹலோ சுகமா? ஆமா நீங்க நலமா? என்று உரையாடி மகிழ்வதற்காக?
பெண்ணும் ஆணும் ‘பையன் - பொண்ணு” என்று குழந்தைகளாகவே கருதப்படுகிறார்கள். மற்றெல்லாம் பெரிய்வர்களுக்கு.
இதை வெளியே செய்யலாமா? செய்யலாம். ஒரு ஒட்டலில் candle light dinnerல் செய்யலாம். ஆனால் அங்கு நீங்களிருவர் மட்டுமே இருப்பர். மற்ற விடயங்களை எப்படி பேசுவது?
இங்கு பின்னூட்டமிட்ட பெண்கள் சொன்னமாதிரி, ‘குனிந்த தலை நிமிராமல்...’ etc. என்பதெல்லாம் ஒரு act.
அப்படியேயிருப்பார் திருமணத்துக்குப்பின் என்ற ஆணாதிக்கச்சிந்தனையை கொண்டுபோயீராயின், உம் மனையாளிடம் உதை படுவீர்.
‘போகப்போகத் தெரியும்’
நல்ல கருத்துள்ள பதிவு நண்பா...தொடர்ந்து எழுதுங்கள்...
என்னைப்பொருத்தவரையில் கிராமங்களிலும் இநத் அடிமைத்தன்மை வெகுவாக குறைந்துவருகிறது என்றே நினைக்கிறேன். ஆயினும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
//இப்போவெல்லாம் காலில் விழுவது என்பது மாறி விட்டது என்றுதான் தோன்றுகிறது..
அவர்கள் காலில் விழுந்தால் காலை வாருவதறகாகதான் இருக்கும் :)//
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் . எல்லா பொண்ணுங்களும் ஒரேமாதிரி இல்ல . பொன்னுனாலே ஏதோ பேய் மாதிரி பேசுறத விடுங்க . நீங்க தப்பு செஞ்சா கண்டிப்பா உங்க கால் வாரப் படும் . there is no doubt .நீங்க நல்லவரா இருந்தா கண்டிப்பா பொண்ணு உங்கள கைல வச்சு தாங்குவா.
/////அவளின் வயிறு காட்டி கொடுத்துவிடும். ////
வயிறு காட்டிக் கொடுப்பதெல்லாம் இருக்கட்டும், கருக்கலைப்பும், இன்னார்தான் "அப்பா" என்று நிரூபிக்க முடியாத காலங்களில் இது பற்றிய பயம் இருந்திருக்கலாம். இப்போது யாருமே இப்படியெல்லாம் பயப்படுவதாகத் தெரிலையே!//
பொண்ணு மட்டும் பயப்படனும் , ஆனா ஆண்கள் தப்பு செய்யலாம் அப்படியா ?
புலவா... கருத்துள்ள பதிவு..கொறகையினுடைய பின்னூட்டமும் அருமை..
குணிந்து நடந்தால் எதிரில் வரும் ஆபத்து தெரியாமல் போய்விடும். பெண்ணே நிமிர்ந்து நட.
நல்லா சொல்லிருக்கீங்க , இதே மாதிரியே எல்லாரும் இருந்தா நல்லா இருக்கும் .
நல்ல முயற்சி புலவரே...கொற்கையின் பின்னூட்டமும் ரசிக்கத் தக்கதாய் இருந்தது. சிலபல எழுத்துப் பிழைகளை சரி செய்திருக்கலாம்.
//பெண் பார்க்கும் நிகழ்விலாவது மாப்பிள்ளை பெண் வீட்டாரின் கால்களில் விழுந்திருக்கிறானா? திருமணத்தின் போதுதான் விழுவான்.//
இதுதான் சூப்பர் பஞ்ச் புலவரே
சரி, நான் போயிட்டு அப்புறம் வரேன்
நீங்க எந்த காலத்தில் இருக்கீங்க. எனக்கு தெரிஞ்சு இப்பல்லாம் அதிகபட்சம் போனா பெரியவங்க கிட்ட மட்டும்தான் பெண் பார்க்கும் படலத்தின் போது பெண்கள் (அதுவும் நகர்புறம் அல்லாத ஊர்களில்) காலில் விழுகிறார்கள். World has changed a lot - India too; some for good and some for bad.
நான் காலில் விழுவதை ஆதரிக்கவில்லை. ஆனால் அதை ஏன் பெரியவர்களை மதிக்கும் ஒரு பண்பாக எடுத்துக் கொள்ள கூடாது. வட இந்தியாவில் ஆண்கள்(குறிப்பாக சிங்குகள்) பெரும்பாலும் பெரியவர்களை கண்டால் காலை தொட்டு வணங்குவார்கள்.
புலிகேசி. நல்ல கருத்துத்தான் சொல்லி இருக்கீங்க...ஆனா மேலோட்டமா சொல்றிங்க. பெண் மனதைப்புரிந்தவர்கள் பெண்ணின் கருத்தைக் கேட்பார்கள். மற்றவர்கள்...???? அடங்காப்பிடாரி என்று பட்டம் கட்டுவார்கள். இந்த நிகழ்வு ஒரு சம்பிரதாயமாக் நடந்துகொண்டுதான் இருக்கிறது. காலம் மாறிக்கொண்டிருக்கிறது.இப்பொழுதெல்லாம் கோயிலுக்கு வருவதுபோல் இருதரப்பும் வந்து பார்த்துக்கொள்கிறனர். இதனால் பல சங்கடங்கள் தவிர்க்கப்படுகின்றன. அக்கம்பக்கம், உறவினர்களின் கேள்விகளைத் தவிர்க்க முடிகிறது.
“கற்பாம்,,,கண்ணகியாம்” வரி சம்பந்தமில்லாமல் இருக்கிறது.
எல்லாப்பெண்களும் அப்படி இருப்பதில்லை. என் திருமணத்தின்போது நான் எதிர்ப்பு தெரிவித்தேன். என் அப்பா அதை ஏற்றுக்கொண்டார். எல்லோர் விட்டீலும் இது நடக்குமா.
சில விலங்குகளை நாங்களே கழட்டிக்கொள்கிறோம். சிலதை கழட்ட முடிவதில்லை.. காலம் ஒருநாள் மாறும்...
நன்றிங்க.பெண்களுக்கு வக்காலத்து வாங்கியதற்கு.
கொற்கையே எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.
@மதார்
அய்யோ சிரிப்பான் போடுறத எல்லாம் சீரியஸா எடுக்ககூடாது..போங்கக்கா உங்களுக்கு வலையுலக அடிப்படை கூட தெரியல..
//குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் //
இதுல நீங்க உங்களை சொல்லலியே :))
வெற்றி தம்பி உண்மைதான் வலையுலக அடிப்படை எனக்கு தெரியவில்லை . உங்கள மாதிரி தம்பிகள்தான் சொல்லிக் குடுக்கணும் . சிரிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல , ஒரு பின்னூட்டம் போடும் முன் சற்று சிந்தித்துப் போடுவது நல்லது . பொத்தாம் பொதுவாக மற்றவர் சிரிக்க மட்டுமே பின்னூட்டம் இடுவதைத் தவிர்க்கலாம் .
சரிங்க..ரொம்ப பீல் பண்ணி சொல்றீங்க...மாத்திக்கிறேன்..இனிமேல்யாரையும் காயப்படுத்தாத மாதிரி பின்னூட்டம் போடுறேன் !
//வெற்றி said...
சரிங்க..ரொம்ப பீல் பண்ணி சொல்றீங்க...மாத்திக்கிறேன்..இனிமேல்யாரையும் காயப்படுத்தாத மாதிரி பின்னூட்டம் போடுறேன் !
//
நல்லது வெற்றி...
கொற்கை சொன்னது //தமிழில் ‘கற்பு’ என்றால், மனம், மெய், வாக்கு எல்லாம் சேர்ந்த்தான்.
அன்னிய ஆடவன் உடல் தன்மீது படும்போதும், அவன் கண்ணடி படுவம்போதும், ஒரு பெண் அருவருப்படைந்தால் அவள் கற்புடைய நங்கை.
//தமிழில் ‘கற்பு’ என்றால், மனம், மெய், வாக்கு எல்லாம் சேர்ந்த்தான்.
அன்னிய ஆடவன் உடல் தன்மீது படும்போதும், அவன் கண்ணடி படுவம்போதும், ஒரு பெண் அருவருப்படைந்தால் அவள் கற்புடைய நங்கை.//
அப்போ ஆண் அருவருப்படைந்தால் அதற்கு என்ன பெயர்? இங்குதான் ஆணாதிக்கம் இருக்கிறது கொற்றவை.
//இங்கு இவர் தெளிவாகச்சொல்வார்: கற்பென்பது திணிக்கப்படும், அல்லது கட்டமைக்கப்படும், ஆணாதிக்கச்செயல்ல. பெண் தனக்குத்தானே உணர்வது; செய்வது ஆகும். ஆணுக்கு இங்கே இடமில்லை என்றார் இந்தத் தமிழ்ச்சான்றோர்.//
அந்த பாடல் ஒப்புகொள்ளக் கூடியதல்ல. ஒருவேளை அவருக்குள்ளும் ஆணாதிக்கம் இருந்திருக்கும்
//கொற்கை said...
'ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கோட்பாடு ஆண்களின் உடல் நலத்துக்காக என்று மட்டும் சொல்கிறீர்கள்.
//
உடல் நலத்துக்காக மட்டும் என சொல்லவில்லை. அந்த நிலைக்கு பின்னர்தான் அந்த வாக்கியம் உப்யோகத்திற்கே வந்தது.
//பெண் பார்க்கும் சடங்கு ஒரு convenient platform, not only for you see to see the girl or prospective bride, but also, for the elders to decide other terms of references.
பெண் பார்க்கும் படலம் என்பது புலவரே, உமக்கு மட்டுமல்ல. நீங்கள் போய் பெண்ணை பார்த்துவிட்டு, ஹலோ ஹலோ சுகமா? ஆமா நீங்க நலமா? என்று உரையாடி மகிழ்வதற்காக?//
இது பற்றி அடுத்த வாரத்திற்குள் ஒரு பதிவு போடுறேன்
//அப்படியேயிருப்பார் திருமணத்துக்குப்பின் என்ற ஆணாதிக்கச்சிந்தனையை கொண்டுபோயீராயின், உம் மனையாளிடம் உதை படுவீர்.
‘போகப்போகத் தெரியும்’//
பார்க்கலாம்
//க.பாலாசி said...
நல்ல கருத்துள்ள பதிவு நண்பா...தொடர்ந்து எழுதுங்கள்...
என்னைப்பொருத்தவரையில் கிராமங்களிலும் இநத் அடிமைத்தன்மை வெகுவாக குறைந்துவருகிறது என்றே நினைக்கிறேன். ஆயினும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
//
ஆமாம் நண்பா
////இப்போவெல்லாம் காலில் விழுவது என்பது மாறி விட்டது என்றுதான் தோன்றுகிறது..
அவர்கள் காலில் விழுந்தால் காலை வாருவதறகாகதான் இருக்கும் :)//
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் . எல்லா பொண்ணுங்களும் ஒரேமாதிரி இல்ல . பொன்னுனாலே ஏதோ பேய் மாதிரி பேசுறத விடுங்க . நீங்க தப்பு செஞ்சா கண்டிப்பா உங்க கால் வாரப் படும் . there is no doubt .நீங்க நல்லவரா இருந்தா கண்டிப்பா பொண்ணு உங்கள கைல வச்சு தாங்குவா.//
வெற்றி பாத்துப்பா..
//மதார் said...
/////அவளின் வயிறு காட்டி கொடுத்துவிடும். ////
வயிறு காட்டிக் கொடுப்பதெல்லாம் இருக்கட்டும், கருக்கலைப்பும், இன்னார்தான் "அப்பா" என்று நிரூபிக்க முடியாத காலங்களில் இது பற்றிய பயம் இருந்திருக்கலாம். இப்போது யாருமே இப்படியெல்லாம் பயப்படுவதாகத் தெரிலையே!//
பொண்ணு மட்டும் பயப்படனும் , ஆனா ஆண்கள் தப்பு செய்யலாம் அப்படியா ?
//
இது அவர்களின் நகர்ப்புற சிந்தனை. அவர்களுக்கு என்னத் தெரியும் மற்ற பெண்களைப் பற்றி? விடுங்கள்
//ஸ்ரீராம். said...
நல்ல முயற்சி புலவரே...கொற்கையின் பின்னூட்டமும் ரசிக்கத் தக்கதாய் இருந்தது. சிலபல எழுத்துப் பிழைகளை சரி செய்திருக்கலாம்.
//
அடுத்த முறை சரி செய்கிறேன் நண்பா..
//thenammailakshmanan said...
//பெண் பார்க்கும் நிகழ்விலாவது மாப்பிள்ளை பெண் வீட்டாரின் கால்களில் விழுந்திருக்கிறானா? திருமணத்தின் போதுதான் விழுவான்.//
இதுதான் சூப்பர் பஞ்ச் புலவரே//
ஹி ஹி ஹி..
//
February 1, 2010 2:27 PM
சங்கர் said...
சரி, நான் போயிட்டு அப்புறம் வரேன்
//
வந்துருங்க
//ஆதி மனிதன் said...
நீங்க எந்த காலத்தில் இருக்கீங்க. எனக்கு தெரிஞ்சு இப்பல்லாம் அதிகபட்சம் போனா பெரியவங்க கிட்ட மட்டும்தான் பெண் பார்க்கும் படலத்தின் போது பெண்கள் (அதுவும் நகர்புறம் அல்லாத ஊர்களில்) காலில் விழுகிறார்கள். //
ஆமாம் நகர்ப்புறத்தில் வாழ்பவர்கள் மட்டும் தான் பெண்களா? இந்தியாவில் நகரங்களை விட கிராமங்கள் தான் அதிகம்
/நான் காலில் விழுவதை ஆதரிக்கவில்லை. ஆனால் அதை ஏன் பெரியவர்களை மதிக்கும் ஒரு பண்பாக எடுத்துக் கொள்ள கூடாது. வட இந்தியாவில் ஆண்கள்(குறிப்பாக சிங்குகள்) பெரும்பாலும் பெரியவர்களை கண்டால் காலை தொட்டு வணங்குவார்கள்.//
காலில் விழ வயதானால் மட்டும் போதாது ஒருவரை ஆசீர்வதிப்பதற்கு நல்ல குணமும் வேண்டும்.
//எல்லாப்பெண்களும் அப்படி இருப்பதில்லை. என் திருமணத்தின்போது நான் எதிர்ப்பு தெரிவித்தேன். என் அப்பா அதை ஏற்றுக்கொண்டார். எல்லோர் விட்டீலும் இது நடக்குமா.
சில விலங்குகளை நாங்களே கழட்டிக்கொள்கிறோம். சிலதை கழட்ட முடிவதில்லை.. காலம் ஒருநாள் மாறும்...//
இந்த காலமாற்றம் வரவேண்டுமானால் பெற்றோர்களாலும் பெண்களாலும் மட்டுமே முடியும்
நாங்களும் கிராமப்புறமே . கிராமமோ , நகரமோ இரண்டிலும் ஆண் , பெண் இருவருமே தவறு செய்பவர் உண்டு .
/////அவளின் வயிறு காட்டி கொடுத்துவிடும். ////
வயிறு காட்டிக் கொடுப்பதெல்லாம் இருக்கட்டும், கருக்கலைப்பும், இன்னார்தான் "அப்பா" என்று நிரூபிக்க முடியாத காலங்களில் இது பற்றிய பயம் இருந்திருக்கலாம். இப்போது யாருமே இப்படியெல்லாம் பயப்படுவதாகத் தெரிலையே!//
இங்கே பயம் என்பது பெண்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டு இருக்கிறது . இதைத்தான் நான்
//பொண்ணு மட்டும் பயப்படனும் , ஆனா ஆண்கள் தப்பு செய்யலாம் அப்படியா ?// சொல்லிருந்தேன் .தப்பு இருவரிடமும் உள்ளது . சமுதாயத்தின் பார்வையில் ஏனோ பெண்களின் மீதான பார்வையே அதிகம் உள்ளது .
//மதார் said...
நாங்களும் கிராமப்புறமே . கிராமமோ , நகரமோ இரண்டிலும் ஆண் , பெண் இருவருமே தவறு செய்பவர் உண்டு .
//
நான் உங்களை சொல்லலைங்க..நகர்ப்புற சிந்தனையுடன் பின்னூட்டமிட்டிருந்தவரை சொன்னேன்.
//.தப்பு இருவரிடமும் உள்ளது . சமுதாயத்தின் பார்வையில் ஏனோ பெண்களின் மீதான பார்வையே அதிகம் உள்ளது //
காரணம் அவள் இன்னும் அடிமை விலங்கிலிருந்து முழுமையாக வெளியேற்ற படாமலிருப்பது..
காரணம் அவள் இன்னும் அடிமை விலங்கிலிருந்து முழுமையாக வெளியேற்ற படாமலிருப்பது..
அந்த அடிமை விலங்கை நாங்களே உடைத்தெரிந்தால் சமுதாயத்தில் எங்களுக்கு குடுக்கப்படும் பெயர் "பெண் ஆதிக்கவாதி ", "திமிர் பிடித்தவள்" , "அடங்காப்பிடாரி" இன்னும் .இந்த விலங்கை உடைத்தெறிய ஆண்களால் மட்டுமே முடியும் .
//மதார் said... அந்த அடிமை விலங்கை நாங்களே உடைத்தெரிந்தால் சமுதாயத்தில் எங்களுக்கு குடுக்கப்படும் பெயர் "பெண் ஆதிக்கவாதி ", "திமிர் பிடித்தவள்" , "அடங்காப்பிடாரி" இன்னும் .இந்த விலங்கை உடைத்தெறிய ஆண்களால் மட்டுமே முடியும் .//
அதை பற்றி கவலை கொள்ள கூடாது. வெற்றியாளர்களின் வாழ்க்கை வரலாற்றை பார்த்தால் அதில் அவமானங்கள் அதிகமாக இருக்கும். ஆணால் மட்டும் இதனை ஒழிக்க முடியும் என்பது தவறு. இருபாலரும் சேர்த்து ஒழிக்கப் பட வேண்டிய விடயமிது.
புலவரே என்னாச்சு.. இந்த போடு போடுறீங்க... நடக்கட்டு நடக்கட்டு...
பெண் பார்க்கும் முறை என்பது மிகவும் நாகரிகமான முறை. பெரியவர்கள் ஒன்று கூடி, பெண்ணை அழைத்து, ஒருவரை ஒருவர் பார்க்கச் சொல்வது ரொம்ப டீசண்ட். அதுவுமில்லாமல், இப்போதெல்லாம் பெண்ணிடம் தனியாக பேசலாம். பொண்ணுக்குப் பாடத் தெரியுமா, ஆடத்தெரியுமா, காலில் விழுவதெல்லாம் 20 வருஷத்துக்கு முன்னாடி இருந்திருக்கலாம். திருமணத்திற்கு பிறகு காலில் யார் விழுவது என்பது விரைவில் புரியும் : )
பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா என்று கேட்பதே ஆணாதிக்கம் என்கிறது பெண்ணிய கும்பல்!
இந்த ஆணாதிக்கம், தோசையாதிக்கம் எல்லாம் மலையேறிப்போச்சுங்க...எங்க இருக்கீங்க நீங்க!
ஆண்களின் ஆதரவே நான் சொன்னது . என்னுடன் படித்த மாணவர்களின் பெரும்பான்மையான விருப்பம் , அதிகம் படிக்காத கிராமப்புற பெண்களே . படித்த பெண் நிறையப் பேசுவாளாம். இதைத்தான் நாங்கள் எதிர்ப்பது . பேசும் உரிமை கூட இல்லையா ?
" மதார் said...
ஆண்களின் ஆதரவே நான் சொன்னது . என்னுடன் படித்த மாணவர்களின் பெரும்பான்மையான விருப்பம் , அதிகம் படிக்காத கிராமப்புற பெண்களே . படித்த பெண் நிறையப் பேசுவாளாம். "
நூற்றுக்கு நூறு உண்மை !
"இதைத்தான் நாங்கள் எதிர்ப்பது . பேசும் உரிமை கூட இல்லையா ?"
நண்பரே, பேசுவதை யாரும் எதிர்ப்பதில்லை. என்ன பேசுறாங்க, எந்த நோக்கத்தோட பேசுறாங்க அப்படின்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க. அப்படிப்பட்ட பெண்கள் கூட்டுக் குடும்பத்தைப் பிரிப்பது தான் பிரச்சினையின் வேர்.
பேசுவதை யாரும் எதிர்ப்பதில்லை. என்ன பேசுறாங்க, எந்த நோக்கத்தோட பேசுறாங்க அப்படின்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க. அப்படிப்பட்ட பெண்கள் கூட்டுக் குடும்பத்தைப் பிரிப்பது தான் பிரச்சினையின் வேர்.
கூட்டு குடும்பத்தை எந்த பெண்ணும் பிரிக்க தானாக எந்தப் பெண்ணும் விரும்புவது இல்லை . அதற்க்கான காரணங்களை பார்த்தால் அப்பெண்ணின் கணவனாகவே இருப்பான் . பலி மட்டும் பெண்ணிற்கு .
" மதார் said...
.....
கூட்டு குடும்பத்தை எந்த பெண்ணும் பிரிக்க தானாக எந்தப் பெண்ணும் விரும்புவது இல்லை . அதற்க்கான காரணங்களை பார்த்தால் அப்பெண்ணின் கணவனாகவே இருப்பான் . பலி மட்டும் பெண்ணிற்கு ."
மாமியாருக்கு ஒரு பெண்ணியம், மருமகளுக்கு ஒரு பெண்ணியம், நாத்தனாருக்கு ஒரு பெண்ணியம் என குழம்பிப் போயுள்ள பெண்ணியத்தைக் கொஞ்சம் டிங்கரிங்க் செய்தால் இந்தப் பிரச்சினை வராது.
கூட்டுக் குடும்பத்தோடு இருந்தாலும்(பஞ்சாயத்து தலைவர் பதவியுடன்), தனிக்குடித்தனத்தில் இருந்தாலும் பலி கடா ஆண்கள் தான்!
தங்கை , அம்மா , மனைவின்னு எல்லாரையும் மோத விட்டு வேடிக்கை பார்த்து , பின் முடிவில் மட்டும் வந்து எல்லாம் உன்னாலதான்டின்னு சொல்றது என்ன வொரு வில்லத்தனம் ? ஆரம்பத்திலிருந்தே மனைவி சொல்றத காது குடுத்து கேட்காம , சண்ட வரும்போதெல்லாம் காத்து வாங்க வெளிலப் போயிட்டு எல்லாம் முடிஞ்ச பிறகு வந்து ஒன்னும் தெரியாத மாதிரி எல்லார்கிட்டயும் பேசுறது . இங்கதான் கூட்டுக் குடும்பம் பிரியுது .
"மதார் said...
....
ஆரம்பத்திலிருந்தே மனைவி சொல்றத காது குடுத்து கேட்காம ,"
காது கொடுத்து கேட்க எல்லோரும் ரெடிங்க. மாமியார் வாங்கிக் கொடுத்த பட்டுப் புடவையை கேவலமா பேசிட்டு, அம்மா வாங்கிக் கொடுத்த வாயில் புடவையை தலையில தூக்கி வச்சு கொண்டாடுற கதை எல்லாம் கேட்டுட்டு, ஒண்ணும் சொல்லாம போறதே, ஆண்களின் பொருமையை உணர்த்துகிறது. முன்ன மாதிரி எல்லாம் இல்லைங்க....ஆணுரிமைச் சங்கம்னு தனியா ஒண்ணு ஆரம்பிக்கணும்ங்க... : )
" சண்ட வரும்போதெல்லாம் காத்து வாங்க வெளிலப் போயிட்டு எல்லாம் முடிஞ்ச பிறகு வந்து ஒன்னும் தெரியாத மாதிரி எல்லார்கிட்டயும் பேசுறது . இங்கதான் கூட்டுக் குடும்பம் பிரியுது ."
ஐயோ : ) இந்த டெக்னிக் கூட ஃபாலோவ் பண்ணலைன்னா, மனுஷன் நிம்மதியா வாழ்க்கையை ஓட்ட முடியாதுங்க...
புகுந்த வீடும் நம்ம வீடு தான்...அந்த சொந்தங்களும் நம்ம சொந்தங்கள் தான் அப்படிங்குற நினைப்பு குறைஞ்சுப் போனது தான் கூட்டுக் குடும்பம் பிரிவதற்கு காரணம்ங்க..
Breaking Point is a very old English b & w film.
A working woman commutes to job daily by metro rail. She is happily married with a son and a loving husband.
வேலைப்பார்க்கும் பெண் - திருமணமானவள். ஒரு 8 வயதுப்பையனின் தாய். அவள் மீது அன்பும் அரவணைப்பும் கொண்ட காதல் கணவன். அமைதியான இன்பமான வாழ்க்கை அவளது.
வேலைக்கு நித்தம் ரயிலில் செல்வாள். லண்டன் பட்டணத்தில்.
அப்படியிருக்கையில் ஒருநாள் ஒரு ஆடவனோடு உரையாடல். அவன் அழகன் மட்டுமல்ல. பண்பாளன். அடக்கமும் கண்ணியமும் உடையன். அவனை ஒரு பெண் விரும்ப அனைத்து லச்சணங்களும் உடலாலும் உள்ளத்தாலும் கொண்டவன்.
இவனோடு நித்தம் உரையாடல். வெரி டீசண்டாகத்தான்.
அது காதலா இல்லையா?
க்ளைமாக்சில் கேட்கிறான். அவளால் சொல்லமுடியவில்லை. நான் உன்னிடம் வாழ விரும்புகிறேன் என்று முடிக்கிறான். முடிவை நாளைச்சொல்’ என்கிறான்.
பரபரப்பாக வீடு திரும்புகிறார். முன்னறையில் யாரும் இல்லை. மேல் மாடிக்குச்செல்ல, அங்கு கணவன் ஒரு நாற்காலியில் கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்து இருக்கிறான்.
டாக்டர் அவர்கள் குழந்தையைச் சோத்தித்து நாளை வருகிறேன் என்று சொல்லிச்செல்ல, கணவன் சொல்கிறான்: ‘டோரா...னியுமோனியா” என விம்முகிறான்.
அவள் அவனைக் கட்டிக்கொண்டு அவனை விம்மலை அடக்க, பின்னர் அவளே விம்முகிறான்.
வரும் நாட்களில் அவளும் கணவனும் குழந்தையைப்பழைய் நிலைக்குக் கொண்டுவர படாத பாடுகிறார்கள். குழந்தை பிழைக்கிறது.
மீண்டும் வேலைக்குத் திரும்புகிறாள். மாலையில் வழியில் அந்த ரயில் நிலையம் வருகிறது. அங்குதான் வண்டி மாற வேண்டும். அங்குதான் அச்சிறு இடைவெளியில் தேனீர் அருந்தும் போது அவன் வருவது வழக்கம்.
வந்தான். கேட்டான்.
’Dora! What is the news? Hoping for a positve answer?"
'John, decided firmly"
'Really!'
'Yes"
'Tell me, dora please!'
'Lets be friends for ever!'
ஏன்...என்னவாயிற்று?
‘அப்படித்தான் ஜான். என் கணவன், என் குழந்தை - இதற்கு எனக்கு மாற்றில்லை. ஜான் நீங்கள் பண்பாளர். புரிந்துகொள்ளும் சக்தி உங்களுக்கு நிறைய”
‘Indeed, Dora..I understand. Lets be friends for ever!'
Story ends.
அருமை புலவரே.
நல்லாயிருக்கு புலவரே!!
புலிகேசி நண்பா, பொங்கி வந்த காட்டாற்று வெள்ளம் சட்டென்று ஒரு குளம் ஆனது போல் நிறுத்தி விட்டீர்கள். உங்களுக்கான கோபம், பெண்களை அடிமைப்படுத்தியே வைத்திருக்கும் ஆண் சமுதாயம், இன்றைய காலச் சூழலில் நகர் புறப் பெண்களிடம் இருக்கும் முன்னேற்றம், இன்னும் அடிமைத் தனம் உடைக்க முடியாமல் தவிக்கும் கிராமப்புற பெண்களின் வாழ்க்கை நோக்கிய தளர்நடை இப்படி பல விடயங்களை சுருக்கமாக தொட்டு சென்றுள்ளீர்கள்.
மேலும் நிறைய வரும் என்று ஆவலுடன் இருக்கிறேன்.
//மதார் said...
நீங்க நல்லவரா இருந்தா கண்டிப்பா பொண்ணு உங்கள கைல வச்சு தாங்குவா.//
சரியா சொன்னீங்க..
//புலவன் புலிகேசி said...
எந்த பெண் பார்க்கும் நிகழ்விலாவது மாப்பிள்ளை பெண் வீட்டாரின் கால்களில் விழுந்திருக்கிறானா? திருமணத்தின் போதுதான் விழுவான்.//
அப்போ மட்டும் தான் விழுவாங்க.. நல்ல இடுகை புலவரே.. தொடருங்கள்..
பெண்களுக்காக வாதாட ஒரு ஆண் புலவர்.வாழ்த்துக்கள்.எங்காவது ஒரு கல் அசைந்து கொடுத்தால் கூடச் சந்தோஷம்.
தெரியாதவர்கள் என்று சொல்லி கொடுக்கீறிர்களா.
கருத்துள்ள இடுகை நண்பா...,
எப்போ தான் ஆணுக்கு தனி சட்டம் பெண்ணுக்கு தனி சட்டம் என்ற அராஜகம் ஒழிய போகிறதோ...,
intha karutha VINCY nu oru ponnu kaathu kiliya kathitu iruku yaarukum kekalayaa....VINCI blog padichu thirunthungapa
{{{{{ இன்றும் பெண்பார்க்கும் முறை என்ற பெயரில் பெண் காட்சிப் பொருளாக்கப்படுவது யாராலும் மறுக்க முடியாது. ஏன் நாளை எனக்கே திருமணம் என்றால் கூட என் வீட்டில் பெண் பார்க்க கூட்டி செல்வார்கள். அங்கே பெண் குணிந்த தலை நிமிராமல் வந்து காபி கொடுப்பதும் யாரென்று தெரியாதவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் என்ற பெயரில் "என்னை திருமணம் செய்து கொண்டால் நான் உங்கள் அடிமை" என அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பதும் இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது. }}}}
மிகவும் வரவேற்கத் தகுந்த பதிவுதான் . வாழ்த்துக்கள் நண்பரே . !
//செ.சரவணக்குமார் said...
அருமை புலவரே.//
நன்றி நண்பா..
// February 1, 2010 8:46 PM
Mrs.Menagasathia said...
நல்லாயிருக்கு புலவரே!!
//
நன்றி தோழி
//காவிரிக்கரையோன் MJV said...
புலிகேசி நண்பா, பொங்கி வந்த காட்டாற்று வெள்ளம் சட்டென்று ஒரு குளம் ஆனது போல் நிறுத்தி விட்டீர்கள். உங்களுக்கான கோபம், பெண்களை அடிமைப்படுத்தியே வைத்திருக்கும் ஆண் சமுதாயம், இன்றைய காலச் சூழலில் நகர் புறப் பெண்களிடம் இருக்கும் முன்னேற்றம், இன்னும் அடிமைத் தனம் உடைக்க முடியாமல் தவிக்கும் கிராமப்புற பெண்களின் வாழ்க்கை நோக்கிய தளர்நடை இப்படி பல விடயங்களை சுருக்கமாக தொட்டு சென்றுள்ளீர்கள்.
மேலும் நிறைய வரும் என்று ஆவலுடன் இருக்கிறேன்.//
நிச்சயம் வரும். நன்றி தல
// February 1, 2010 11:35 PM
திவ்யாஹரி said...
//மதார் said...
நீங்க நல்லவரா இருந்தா கண்டிப்பா பொண்ணு உங்கள கைல வச்சு தாங்குவா.//
சரியா சொன்னீங்க..
//புலவன் புலிகேசி said...
எந்த பெண் பார்க்கும் நிகழ்விலாவது மாப்பிள்ளை பெண் வீட்டாரின் கால்களில் விழுந்திருக்கிறானா? திருமணத்தின் போதுதான் விழுவான்.//
அப்போ மட்டும் தான் விழுவாங்க.. நல்ல இடுகை புலவரே.. தொடருங்கள்..
February 1, 2010 11:45 PM //
நன்றி திவ்யா
//ஹேமா said...
பெண்களுக்காக வாதாட ஒரு ஆண் புலவர்.வாழ்த்துக்கள்.எங்காவது ஒரு கல் அசைந்து கொடுத்தால் கூடச் சந்தோஷம்.//
நன்றி ஹேமா...அதே நம்பிக்கையில் நானும்
// February 2, 2010 2:54 AM
தாராபுரத்தான் said...
தெரியாதவர்கள் என்று சொல்லி கொடுக்கீறிர்களா.//
:)
// February 2, 2010 7:24 AM
தியாவின் பேனா said...
super
//
நன்றி தியா
// February 2, 2010 8:37 AM
பேநா மூடி said...
கருத்துள்ள இடுகை நண்பா...,
எப்போ தான் ஆணுக்கு தனி சட்டம் பெண்ணுக்கு தனி சட்டம் என்ற அராஜகம் ஒழிய போகிறதோ...,
//
நன்றி பேநாமூடி...
//Follower of Vincy said...
intha karutha VINCY nu oru ponnu kaathu kiliya kathitu iruku yaarukum kekalayaa....VINCI blog padichu thirunthungapa
//
படிக்கிறேன்..நன்றிங்க
// February 2, 2010 2:21 PM
வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...
{{{{{ இன்றும் பெண்பார்க்கும் முறை என்ற பெயரில் பெண் காட்சிப் பொருளாக்கப்படுவது யாராலும் மறுக்க முடியாது. ஏன் நாளை எனக்கே திருமணம் என்றால் கூட என் வீட்டில் பெண் பார்க்க கூட்டி செல்வார்கள். அங்கே பெண் குணிந்த தலை நிமிராமல் வந்து காபி கொடுப்பதும் யாரென்று தெரியாதவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் என்ற பெயரில் "என்னை திருமணம் செய்து கொண்டால் நான் உங்கள் அடிமை" என அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பதும் இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது. }}}}
மிகவும் வரவேற்கத் தகுந்த பதிவுதான் . வாழ்த்துக்கள் நண்பரே . !
//
நன்றி தல
பெண்ணியம்,கற்பு,சமத்துவம் எல்லாம் வலைப்பதிவுகள் வரைக்கும் தான் வரும். அதற்கு பின்னால்?
நல்லா எழுதி இருக்கீங்க புலவரே..
//Blogger PRAKASH said...
பெண்ணியம்,கற்பு,சமத்துவம் எல்லாம் வலைப்பதிவுகள் வரைக்கும் தான் வரும். அதற்கு பின்னால்?//
அப்புடில்லாம் நெனைக்காதீங்க..முடிந்த அளவு செயல்லயும் முயற்சிப்போம். இப்புடி அடுத்தவங்க எடுக்குற முயற்சிக்கு தடைக்கல்லா இப்புடில்லாம் பேசாம நீங்களும் முயற்சி பன்னுங்க..
//
Blogger சுசி said...
நல்லா எழுதி இருக்கீங்க புலவரே..
February 3, 2010 1:34 AM//
நன்றி தோழி
Post a Comment