கடவுளை மற..மனிதனை நினை..

Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts

22 August 2010

நேதாஜியும் விடுதலைப் போராட்டமும்

5:57:00 PM Posted by புலவன் புலிகேசி , , , 20 comments

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரின் போராட்டங்கள் தன்னைக் காத்துக் கொள்வதற்காக அல்ல. இந்திய மக்களை காப்பதற்காக மட்டுமே இருந்தது. பாரத திருநாட்டை 200 ஆண்டுக் காலம் அடிமைப் படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

23 வது வயதில் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்ட இவர் இந்தியாவிற்கு முழு சுதந்திரம் கிடைத்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளும் தீர்மானத்தை நிறைவேற்ற முற்பட்டு காந்தியின் எதிர்ப்பால் தோல்வியைத் தழுவினார். ஆனால் 1929ம் ஆண்டு நேரு தலைமையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

1938ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தனது 41வது வயதில் நியமிக்கப் பட்டார். 1939ம் ஆண்டு தேர்தலில் மகாத்மா காந்தியால் நிறுத்தப்பட்ட பட்டாபி சீதாராமையாவை தோற்கடித்தார். பட்டாபியின் தோல்வி தன் தோல்வி என காந்தி கூறியதாம் மன வருத்தமடைந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் திரிபூரியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், இந்தியாவிற்கு அடுத்த ஆறு மாதங்களில் பிரிட்டிஷ் அரசு முழு விடுதலை அளித்துவிட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற நேதாஜி முயன்றார். ஆனால் காந்தியவாதிகளின் எதிர்ப்பால் தோல்வியடைந்தது. காந்தியுடனான பிரச்சினைகளால் தலைவர் பதவியிலிருந்து நேதாஜி விலகினார்.

கட்சிக்குள்லேயே ஒரு முற்போக்கு அணியைத் தொடங்கினார். அதற்கு ஆதரவு வலுத்தது. காங்கிரஸ் கட்சியில் எந்த பொறுப்பும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நேதாஜி வகிக்க கூடாது என தலைமை முடிவெடுத்தது. இந்நிலையில் தான் 2ம் உலகப் போர் மூண்டது. வெள்ளையரை எதிர்த்து முற்போக்கு அணியினர் கடு பிரச்சாரம் செய்தன்ர்.

1940ம் ஆண்டு நேதாஜி சிறையிலடைக்கப் பட்டார். தன்னை விடுவிக்காவிடில் இங்கேயே பட்டினி கிடந்து சாவென் என அவர் சொன்னதால். பிரிட்டிஷ் அவரை வீட்டுக் காவலில் அடைத்தது. 1941 ஜனவரி 14 அன்று வீட்டுக் காவலில் இருந்து தப்பினார் நேதாஜி.

1943-ஆம் ஆண்டு அவருடைய கனவு நிறைவேறியது. ஜெனரல் மோகன் சிங் தலைமையில் துவக்கப்பட்டு ஆனால் செயல்படாமல் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் சுணங்கி கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு உயிர்கொடுத்தார்.

1944 ஆம் ஆண்டு தனது தலைமையகத்தை பர்மா தலைநகர் ரங்கூனுக்கு மாற்றிக்கொண்டார் நேதாஜி. இந்திய தேசிய ராணுவத்திற்கு நிதியுதவியும், பொருளுதவியும் தாராளமாக வழங்குமாறு நேதாஜி விடுத்த வேண்டுகோளை ஏற்று சிங்கப்பூர், மலேசியா, பர்மா நாடுகளில் வாழ்ந்த இந்தியர்கள் மனமுவந்து பெரும் அளவில் நிதியுதவி செய்தனர்.

பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய உரை என்னவெனில்

"அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால், நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது - எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ - அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது... ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந்தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை.... சலோ டெல்லி :"

ஆனால் இந்திய தேசிய ராணுவத்தின் வெற்றியை அப்போது பெய்த பெருமழை தடுத்ததுடன் தோலிவியடைய செய்தது. ஆனால் அப்போது நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்காக உரையாற்றினார்.

"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. . . விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!"

இதை அவர் சொன்னது ஆகஸ்ட்-15 1945ம் ஆண்டு சரியாக அதிலிருந்து 2 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரமடைந்தது. ஆனால் நேதாஜியின் விருப்பம் போல் இல்லாமல் இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடாக.

இப்படியெல்லாம் நேதாஜி போன்றவர்கள் நமக்காக போராடிப் பெற்றுத்தந்த சுதந்திரத்தின் இன்றைய நிலையும் அதை நாம் காக்க வேண்டிய கடமையும் புரியாமல் திரிகிறோம்.