கடவுளை மற..மனிதனை நினை..

24 August 2010

யார் நம்பர் ஒன் டுபாக்கூர்?

10:42:00 AM Posted by புலவன் புலிகேசி , , 11 comments

இது முழுக்க முழுக்க கற்பனையே. யாருடைய மனமாவது புண்பட்டால் சேற்றை அள்ளி புண் மீது வைத்து கை வைத்தியம் செய்து கொள்ளவும்.

இந்தப் போட்டியில் மொத்தம் மூன்று பேர் பங்கேற்கின்றனர். ஒருவர் மிகப்பெரும்புள்ளி அவருக்கு தமிழகத்தில் பெரும் செல்வாக்கு. அவரது பெயர் நிதியமான் இவர் மகன் முசோலினி. இன்னொருவர் அவருக்கு பிஸினஸ் எதிரி. இருவரும் செய்வது ஒரே டுபாக்கூர் பிஸினஸ் தான். இவர் பெயர் செல்வி. இன்னொருவர் புதுசா இந்த பிஸினெஸ் ஆரம்பிச்சிருக்காரு. சினிமாவில் புகழ் வாய்ந்தவர். பெயர் விருட்சிககாந்த்.

இந்த மூவரும் ஒருவரையொருவர் தாக்கியே பெரிய ஆளாக பிஸினஸில் இடம் பெற முயற்சிப்பவர்கள். தாங்கள் செய்யும் டுபாக்கூர்களை நியாயப் படுத்தி பிஸினஸ் செய்கிறவர்கள். (இவிங்க என்ன ரகம்னே தெரியலையா???)

செல்வி: தமிழகத்தில் விலையேற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் பிஸினெசில் இருந்த போது 15 ரூ விற்ற சாப்பாடு இப்போது 50ரூ விற்கிறது.

நிதியமான்: தமிழ்நாட்டப் பத்தி மட்டும் பேசுறீங்க. ஏன் இந்தியாவப் பத்தி பேச மாட்டேங்கறீங்க. அதையும் பத்தி பேசுங்க எனக்கு கொஞ்சம் டைம் பாஸ் (மன்னிக்கனும் நேரம் போகனும். நான் தான் பச்சை மஞ்ச சிவப்பு தமிழனாச்சே) ஆகனும்.

நிதியமான்: டேய் மவனே முசோலினி! இந்தம்மா நெறைய ஊழல் செஞ்சதத் தான் தமிழ் நாட்டுக்கே போட்டுக் காடிருக்கோம்ல. அதனால் அதுல ஒரு கேசுல தொடர்ந்து வாய்தா வாங்கினுக்கீதே. அதக் கண்டிச்சி ஒரு ஆர்ப்பாட்டம் செஞ்சி நாம தப்பிச்சிக்கனும். என்ன புரியுதா?

முசோலினி: சரிப்பா நான் பாத்துக்குறேன்.

முசோலினி: பல ஆண்டுகளாக நடைபெறும் வழக்கில் தொடர்ந்து வாய்தா வாங்கிக் கொண்டிருக்கும் செல்வியை எதிர்த்து ஒரு ஆர்பாட்டம் செய்வோம். நம் நிறுவன தொழிலாளர்கள் எல்லாம் ஒன்று கூடுங்கள். அந்த வாயாடி ராணிக்கு கண்டனம் தெரிவிப்போம்.

செல்வி: என்னைப் பார்த்து வாயாடி என சொல்லி விட்டார்கள். பொறுத்தது போதும் நிர்வாக ஊழியர்களே. பொங்கி எழுங்கள். அவர்கள் கண்டனம் நடத்திய இடங்களில் எல்லாம் நாளை நாம் கண்டனம் நடத்த வேண்டும். அனைவரும் புறப்படுங்கள்.

வாடிக்கையாளர்கள்: நேத்து அந்தாளு கண்டனம். இனைக்கு இந்தாளு கண்டனம். நாம சோத்துக்கில்லாம திண்டாடிக் கிட்டிருக்கோம். இதுக்கு ஒன்னும் பண்ணக் காணோம். ஆனா இவிங்க ரெண்டு பேரும் நல்லாவே அடிச்சிக்கிறாங்கே.

(அடுத்த பிஸினஸ் கூட்டனி குறித்த விவாதங்கள் வருகின்றன)

செல்வி: தம்பி நீங்க நம்ம கூட சேந்து பிஸினெஸ் செய்யனும். ஏத்துக்குவீங்கன்னு நம்பறேன். அப்பத்தான் அந்த நிதியமானுக்கு ஒரு பாடம் புகட்ட முடியும்.

விருச்சிககாந்த்: அப்புடி வாங்க. போன தடவ நான் தனியா பிஸினஸ் செய்யலாமுன்னு வந்தப்போ உங்க பிஸினஸ் முழுசா பாதிச்சி தோத்து போனீங்க. அந்த பயம் இருக்கட்டும். நான் உங்க கூட பிஸினஸ் செய்யனும்னா ஒரு கண்டிசன். "எனக்கு நீங்க பிஸினஸ்ல துணைத்தலைவர் பதவி கொடுக்கனும்". இதுக்கு சம்மதம்னா மேல பேசலாம்.

வாடிக்கையாளர்கள்: செம காமெடிம்மா!

(பேச்சுவார்த்தை தோல்வியில் முடிகிறது.)

விருச்சிககாந்த்: என்ன நம்மள அந்தாளு கூப்புடவே மாட்டேங்கறாரே? சரி நாமளா ஒரு அறிக்கைய உடுவோம். "செல்வி, நிதியமான் இவர்கள் இருவருமே ஊழல் பெருச்சாளிகள். அதனால் அவர்களுடன் கூட்டு வைத்து சாப்பிட...ச்சீ அவர்களுடன் கூட்டு வைத்து பிஸினெஸ் செய்ய மாட்டேன்."

நிதியமான்: என்னை ஊழல் பெருச்சாளி என சொல்லும் இவர் சினிமாவில் நடித்த போது வாங்கிய சம்பளங்களுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. என்னைப் பற்றி பேச இந்த ஊழல்வாதிக்கு என்ன தகுதி இருக்கிறது.

வாடிக்கையாளர்கள்: "பாம்பின் கால் பாம்பறியும்"-னு சொல்லுவாங்களே அது இதுதானோ???

விருச்சிககாந்த்: பொறியல்...அடச்சே! கூட்டு குறித்து எனது இறுதி அறிக்கை இது. "என்னைத் தலைமையாக ஏரற்கும் முதலாளிகளுடந்தான் நான் கூட்டனி வைப்பேன்."

வாடிக்கையாளர்கள்: யம்மா முடியலப்பா. 2010-ட செம காமெடியன் இவுருதான். என்னமா கமெடி செய்யுறாரு...எப்பவுமே மப்புலதாம்பா அறிக்கை உடுறாரு.


22 August 2010

நேதாஜியும் விடுதலைப் போராட்டமும்

5:57:00 PM Posted by புலவன் புலிகேசி , , , 20 comments

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரின் போராட்டங்கள் தன்னைக் காத்துக் கொள்வதற்காக அல்ல. இந்திய மக்களை காப்பதற்காக மட்டுமே இருந்தது. பாரத திருநாட்டை 200 ஆண்டுக் காலம் அடிமைப் படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

23 வது வயதில் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்ட இவர் இந்தியாவிற்கு முழு சுதந்திரம் கிடைத்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளும் தீர்மானத்தை நிறைவேற்ற முற்பட்டு காந்தியின் எதிர்ப்பால் தோல்வியைத் தழுவினார். ஆனால் 1929ம் ஆண்டு நேரு தலைமையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

1938ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தனது 41வது வயதில் நியமிக்கப் பட்டார். 1939ம் ஆண்டு தேர்தலில் மகாத்மா காந்தியால் நிறுத்தப்பட்ட பட்டாபி சீதாராமையாவை தோற்கடித்தார். பட்டாபியின் தோல்வி தன் தோல்வி என காந்தி கூறியதாம் மன வருத்தமடைந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் திரிபூரியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், இந்தியாவிற்கு அடுத்த ஆறு மாதங்களில் பிரிட்டிஷ் அரசு முழு விடுதலை அளித்துவிட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற நேதாஜி முயன்றார். ஆனால் காந்தியவாதிகளின் எதிர்ப்பால் தோல்வியடைந்தது. காந்தியுடனான பிரச்சினைகளால் தலைவர் பதவியிலிருந்து நேதாஜி விலகினார்.

கட்சிக்குள்லேயே ஒரு முற்போக்கு அணியைத் தொடங்கினார். அதற்கு ஆதரவு வலுத்தது. காங்கிரஸ் கட்சியில் எந்த பொறுப்பும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நேதாஜி வகிக்க கூடாது என தலைமை முடிவெடுத்தது. இந்நிலையில் தான் 2ம் உலகப் போர் மூண்டது. வெள்ளையரை எதிர்த்து முற்போக்கு அணியினர் கடு பிரச்சாரம் செய்தன்ர்.

1940ம் ஆண்டு நேதாஜி சிறையிலடைக்கப் பட்டார். தன்னை விடுவிக்காவிடில் இங்கேயே பட்டினி கிடந்து சாவென் என அவர் சொன்னதால். பிரிட்டிஷ் அவரை வீட்டுக் காவலில் அடைத்தது. 1941 ஜனவரி 14 அன்று வீட்டுக் காவலில் இருந்து தப்பினார் நேதாஜி.

1943-ஆம் ஆண்டு அவருடைய கனவு நிறைவேறியது. ஜெனரல் மோகன் சிங் தலைமையில் துவக்கப்பட்டு ஆனால் செயல்படாமல் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் சுணங்கி கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு உயிர்கொடுத்தார்.

1944 ஆம் ஆண்டு தனது தலைமையகத்தை பர்மா தலைநகர் ரங்கூனுக்கு மாற்றிக்கொண்டார் நேதாஜி. இந்திய தேசிய ராணுவத்திற்கு நிதியுதவியும், பொருளுதவியும் தாராளமாக வழங்குமாறு நேதாஜி விடுத்த வேண்டுகோளை ஏற்று சிங்கப்பூர், மலேசியா, பர்மா நாடுகளில் வாழ்ந்த இந்தியர்கள் மனமுவந்து பெரும் அளவில் நிதியுதவி செய்தனர்.

பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய உரை என்னவெனில்

"அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால், நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது - எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ - அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது... ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந்தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை.... சலோ டெல்லி :"

ஆனால் இந்திய தேசிய ராணுவத்தின் வெற்றியை அப்போது பெய்த பெருமழை தடுத்ததுடன் தோலிவியடைய செய்தது. ஆனால் அப்போது நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்காக உரையாற்றினார்.

"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. . . விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!"

இதை அவர் சொன்னது ஆகஸ்ட்-15 1945ம் ஆண்டு சரியாக அதிலிருந்து 2 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரமடைந்தது. ஆனால் நேதாஜியின் விருப்பம் போல் இல்லாமல் இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடாக.

இப்படியெல்லாம் நேதாஜி போன்றவர்கள் நமக்காக போராடிப் பெற்றுத்தந்த சுதந்திரத்தின் இன்றைய நிலையும் அதை நாம் காக்க வேண்டிய கடமையும் புரியாமல் திரிகிறோம்.


என்ன கைய புடிச்சி இழுத்தியா?

11:14:00 AM Posted by புலவன் புலிகேசி , , 12 comments

ஒரு விவாதத்தை முன்னிருத்தி பதிவெழுதும் போது அதற்கெதிரான விவாதங்கள் வருவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது மற்றும் வரவேற்கத் தக்கது. அந்த விவாதங்களின் மூலம் பதிவெழுதியவரும், விவாதம் செய்பவர்களும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து தெளிவு பெற முடியும்.

ஆனால் இன்று ஒரு விவாதம் துவங்கினால் அதை முற்றிலும் திசைத் திருப்பும் நோக்கில் பல்ர் செயல்படுகின்றனர். அந்த விவாதத்தையே சீர்குலைத்து விடுகின்றன அவர்களின் கருத்துக்கள். நீ முன்னாடி இப்புடி எழுதுன. இந்த மாதிரி கிரிக்கெட் பத்தி எழுதுன. அப்பறம் உன் கூட சண்டை போட்ட ஒரு பதிவரை திட்டுன என தற்போதைய விவாதத்தை விட்டு விட்டு முழுக்க முழுக்க திசைத் திருப்பி விட்டு ஆரோக்யமான விவாதத்தை சீர் குலைத்து விடுகின்றனர்.

15 வருடங்களுக்கு முன்னர் என்னிடம் உன் வயது என்ன என கேட்டவர்களிடம் 11 என சொல்லிக் கொண்டிருந்தேன்.

இபோதும் 11 என சொல்ல முடியுமா?
பிறந்த பொழுது உங்கள் அனைவருக்கும் அரசியல் தெரிந்து விட்டதா?
வேலை கிடைத்து விட்டதா?
நீங்கள் எழுதும் பதிவுலகம் புரிந்து விட்டதா?

இவையனைத்துடும் மாற்றங்களால் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன. அந்த மாற்றங்கள் வேண்டாம் என நினைத்திருந்தால் என்ன நடந்திருக்கும்.

இந்த உலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாமலிருப்பது. அதை மறுப்பதற்கு யாராவது தயாரா? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீ மாற்றமடைந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இப்பல்லாம் எழுதாத ஒரு வருசம் கழித்து எழுது. அப்புடி எழுதுனாக் கூட நாங்க ஒரு வருசத்துக்கு முன்னாடி நீ எழுதுனத சுட்டிக் காட்டுவோம். விவாதிக்க வேண்டிய விடயத்திற்குள் வரவே மாட்டோம் என்பது ஆரோக்யமான விவாதமா?

அடுத்து தோழர்கள் அல்லது யாருடனாவது பிரச்சினை என வைத்துக் கொள்வோம். அவர்களை போல் சில ஒத்தக் கருத்துக்களுடன் இன்னொருவர் பதிவெழுதும் போது அவர்களையும் அந்த தோழர் லிஸ்ட்டில் சேர்த்து வைத்துக் கொண்டு எழுதிய கருத்தை விட்டு விட்டு "தோழர் தோழர்" என கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். இது எப்படி இருக்கிறது என்றால் வடிவேல் ஒரு படத்தில் பஞ்சாயத்தில் நின்று "என்ன கைய புடிச்சி இழுத்தியா?" என கூறி அனைவரையும் கிறுக்கு பிடிக்க வைப்பது போல் உள்ளது.

நேரடி விவாதத்திற்கு கைடைசி வரை இவர்கள் வரப்போவதில்லை. அப்புறம் இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் வலைப்பதிவர் குழுமத்தின் ஃபோரத்தில் மட்டுமே கும்மியடிப்பார்கள். கவனிக்க அப்போது கூட விவாதம் செய்ய மாட்டார்கள். அதை விட பெரிய பொதுவெளியான வலைப்பூவிற்கு அழைத்தால் பலர் காணாமற் போய் விடுகிறார்கள்.

அப்படியே விவாதத்திற்கு வந்தாலும் அது வெறும் வெட்டி விவாதமாகவே இருக்கிறது. பதிவின் கருத்து சம்மந்தமான ஆரோக்யமான விவாதமாக இருப்பதில்லை. இது போன்ற வெட்டி விவாதங்கள் தேவையா?

பன்னாடை பிரச்சினையில் அவர் மன்னிப்பு கேட்டு விட்டார், மாறி விட்டார் என சொல்லிக் கொண்டிருக்கும் இவர்கள் ஏன் என்னுடைய ஆரோக்யமான மாற்றத்தை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் அவர்களால் என் கருத்து சரி என்றாலும் ஏற்றுக் கொள்ளும் மனபாவம் இல்லாததாகவே தெரிகிறது.

இப்படியே கும்மி மட்டும் அடித்துக் கொண்டிருங்கள். பதிவுலகம் முழுக்க நீங்கள் கொட்டும் குப்பைகள் மட்டுமே நிறைந்திருக்கும்.

நன்றி!


20 August 2010

எந்திரனால் திரை விலகும் இரும்புத்திரை


"எலே எப்புடிடா நீ எந்திரனைப் பத்தி பேசலாம்?" என வறிந்து கட்டிக் கொண்டு நிற்கும் அரவிந்த், முகிலன் பதிவுகளை ம்னசாட்சியுடன் படித்துப் பாருங்கள். அவர்களின் போலி முகங்கள் அங்கே தெரியும். இவர்களின் பதிவுகளுக்கும் அரசியல் தொலைக்காட்சிகளின் செய்திகளுக்கும் யாதொரு வித்யாசமும் இல்லை.

நான் ஒன்றும் புரட்சியாளர் இல்லை என சென்ற பதிவில் தெளிவாக விளக்கியிருக்கிறேன். விளக்கம் கொடுத்தப் பதிவில் விவாதிக்க இவர்கள் யாரும் வரவில்லை. அதன் கருத்துக்களோடு மோதும் பயமோ என்னவோ?

அரவிந்த் அவர் வலைப்பூவில் என்னைப் பற்றி எழுதியவை மற்றும் என் பதில்கள் இங்கே.

//"அதனால் நர்சிம் பிரச்சனை நடந்து பதினாறு நாட்கள் ஆனப்பின் பன்னாடை என்று சொன்னார்."//

நான் அந்தப் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். வேலை பளு காரணமாக என்னால் பதிவுலகில் நடந்த பிரச்சினையை தெரிந்து கொள்ள இயலவில்லை. தாமதமாக படித்தாலும் அதை எதிர்த்து எழுதக் கூடாதா என்ன? நீங்கள் தான் தாமதமான பின் எல்லாவற்றையும் பழைய செய்தியாக்கி விடுகிறீர்களே. அது போலவே இதயும்.

//"அப்துல்லா என்ற பதிவர் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நியாயம் கேட்கிறார்.நீங்கள் தான் பன்னாடை என்று பதினாறு நாள் கழித்து திட்டுவீர்களே இதற்கும் திட்டுங்கள் என்று சொன்னால் அது அப்துல்லாவுடைய தனிப்பட்ட பிரச்சனையாம்."//

நர்சிம் பிரச்சினை நாம் உபயோகிக்கும் பதிவுலகில் பொதுவில் உமிழப்பட்ட ஒரு கேவலம்.

ஆனால் அப்துல்லாவிற்கோ அது பதிவுலகப் பெண்ணாக இருந்தாலும் (அவர் சொல்வது உண்மையாக இருந்தால்) வெளியில் செய்யப்படும் சதிவேலை. அந்தப் பெண் பதிவுலகில் அல்லது பொதுவெளியில் இதை செய்து அவர் சொல்லும் அவரை புரிந்து கொண்ட பெண்ணும் பதிவுலகில் சொல்லியிருப்பின் அது பற்றி குரல் எழுப்புவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

அரவிந்த் நீங்கள் தோழராகவோ, தோலராகவோ அல்லது தோளராகவோ இருந்து விட்டுப் போங்கள். அது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. நான் மனிதனாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்.அதற்கான முயற்சியில் தான் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

இவ்வளவு பிதற்றும் உங்களைப் போன்றவர்கள் நான் கேட்ட போபால் பதிவுக்கு ஏன் வரவில்லை? ஏன் குரல் கொடுக்கவில்லை? என்ற கேள்விகளுக்கு பதிலில்லையே! அது எனது சொந்த நோக்கில் ஹிட்ஸ் வாங்கும் நோக்கில் தொடங்கப் பட்டதல்ல. அது ஒரு தனி வலைப்பூ. அதில் பதிவர்களின் குரல்கள் பதிய வேண்டும் என்ற ஒரேயொரு நோக்கம் மட்டுமே இருக்கிறது. எனது சொந்த வலைப்பூவில் ஹிட்சுக்காக யாரையும் எழுத அழைக்கவில்லை.

நானும் சினிமா, கிரிக்கெட் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் மூழ்கி முட்டாளாய் இருந்தவந்தான். சச்சின் இருநூறு அடித்த போது அதை எதிர்த்த கார்த்தியைத் திட்டிப் பதிவிட்டிருந்தவன் தான். நாட்டில் நடக்கும் அவலங்களையும், அரசியலையும் புரியாத எனக்கு அவை பெரிய விடயங்களாகத் தெரிந்தன.

ஆனால் நிறைய படிக்கும் போதுதான் நாம் மேன்மையடைவோம், பக்குவமடைவோம் என்பது என் விடயத்தில் நிஜமாகியிருக்கிறது. ஏன் நாம் இப்படி இருக்கிறோம் என்ற சுய சிந்தனையும், நம் சமூகம் ஏன் இப்படியே இருக்கிறது என்ற கேள்வியும் எழுந்த பின் அதற்கான காரணிகளாக எனக்குக் கிடைத்தவைகளில் ஒன்றுதான் இந்த சினிமா.

விருந்தாளியோ, திட்டக்குடியோ எந்திரன் அளவுக்கு எதிர் பார்ப்பையும், காசு விரயங்களையும் ஏற்படுத்துவதில்லை. விருந்தாளிக்கு கட்டவுட் வைத்து பாலாபிசேகம் செய்யும் முட்டாள்கள் இல்லை. அது வெறும் படமாக வந்து போகிறது. அதனால்தான் எந்திரனின் விமர்சனம் அவசியமாகிறது. இதுவும் விருந்தாளி போன்று என்றால் எதுவும் தேவையில்லை.

நான் எழுதி வரும் அனைத்தும் எனக்கு சரியெனப் பட்ட விடயங்கள். இதற்காக என்னை நீங்கள் கம்யூனிஸ்ட் அல்லது புரட்சிக்காரன் என நினைத்தால் நிச்சயம் நீங்கள் எல்லாம் முட்டாள்களாகத்தான் இருக்க முடியும்.

நான் ஒன்றும் புரட்சிக்காரன் அல்ல!


நண்பர்களுக்கு வணக்கம்!

புரட்சி! இது வெறும் சொல் அல்ல. இது பல முறை பல துறைகளிலும், மனிதர்களிலும் நடந்ததால் தான் நாம் இன்று இப்படி இருக்கிறோம். புரட்சி என்பது நடக்கவில்லை என்றால் நாம் எல்லோரும் குரங்காகவே இருந்திருப்போம். புரட்சி என்பது ஒன்று இன்னொன்றாக மாறுவதுதான். குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய பரிணாமம் கூட ஒரு புரட்சியால் நடந்ததுதான்.

ஆனால் இந்த புரட்சிகள் எதுவும் உடனுக்குடன் நடந்து விடும் ஒரு சாதாரண விடயமல்ல. இதற்கு பல ஆண்டுகள் ஏன் பல நூறு, பல ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம். அதற்காக புரட்சி பிரயோசனமற்றது என நினைப்பது முட்டாள்த்தனம். நாம் அனைவரும் பிறந்தவுடன் சம்பாதித்து திருமனம் செய்து பிள்ளை பெற்று விட முடியுமா?

அதற்கென நாம் குறைந்த படசம் பதினெட்டு ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். ஒரு தனி மனிதனின் வாழ்வியல் புரட்சிக்கே இத்தனை ஆண்டுகள் தேவைப்படும் போது சமூகத்தின் புரட்சிக்கு? ஆனால் இத்தகைய புரட்சிகள் ஒரு துறையிலோ அல்லது சமூகத்திலோ நடை பெறுவது அதை சார்ந்திருப்பவர்களின் ஒருமித்த புரிதலின் போதுதான் சாத்தியம். அதன் காலநிலையை நிர்ணயிப்பதும் அதுவே.

நமக்கு ஒரு அமைப்பு பிடிக்காவிட்டாலும் நாம் அதிலிருந்து கொண்டுதான் அதனை வெறுத்தொதுக்க முடியும். காரணம் நமது வாழ்வாதாரம் அந்த அமைப்பிற்குள் முடக்கப் பட்டிருக்கிறது. உதாரணமாக சொன்னால் நம்மை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை நம்மில் எத்தனை பேருக்கு பிடிக்கும்? இல்லை என்றாலும் அதற்குள் இருந்து கொண்டு தானே அதனை எதிர்க்கிறோம்.

அதை விடுத்து இதனை விமர்சனம் செய்ய நீ இந்த பணியில் இருக்க கூடாது, நடிகனை விமர்சணம் செய்யக் கூடாது என்றால் மக்கள் அந்த அரசியலை நிச்சயம் எதிர்த்து கேள்வி கேட்க போவதில்லை. பொழுதுபோக்கு ஊடகங்களின் பிடியில் சிக்கிக் கொண்டு நாட்டின் விலைவாசி ஏற்றத்தை பற்றிக்கூட கேள்வி எழுப்பாமல் மனதிற்குள் புழுங்கி விட்டு அடுத்த படத்திற்கு டிக்கெட் எடுக்க செல்லும் முட்டாள்களாகத்தான் நாம் இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது.

மானாட மயிலாட மாராட்டமும், மட்டைபந்து விளையாட்டும், எந்திரன் போன்ற படங்களும் முக்கியமாக படும் அளவிற்கு இந்த விலைவாசி ஏற்றமும், காமன்வெல்த் சுரண்டல்களும், அரசியல் ஊழல்களும், போபாலும் பெரிதாகப் படுவதில்லை நமக்கு. இவற்றைப் பற்றி எழுதியவர்கள் எத்தனை பேர்? இது போன்ற செயலகளை எதிர்த்து பதிவிட்டால் அவனுக்கு பெயர் புரட்சியாளன் அல்லது கம்யூனிஸ்ட்.

புரட்சி என்பது அவ்வளவு எளிதான வார்த்தையாகிப் போய் விட்டது. அதன் உள் அர்த்தம் சென்று பார்த்தால் அது எவ்வளவு பெரிய விடயம் என்பது புரியும். அதனால் நான் புரட்சி பேசுகிறேன் என யாரும் சொல்லி விடாதீர்கள். அதற்கு நான் தகுதியற்றவன். நான் எழுதுவதெல்லாம் என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் வெளிப்பாடு. நான் புரிந்து கொண்ட சிலவற்றை சிலருக்காவது எடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம். அவ்வளவே!

இதற்கு பெயர்தன் புரட்சி என நீங்கள் கருதினால் அது முழுக்க முழுக்க உங்கள் முட்டாள்தனமே. அப்புறம் சிலர் கூறியது எழை கஷ்டபட்டு உழைத்து வந்து களைப்பை நீக்க எந்திரன் படம் பார்க்கின்றான். அந்த உரிமை கூட அவனுக்கில்லையா? என்று.

நிச்சயம் இருக்கிறது. ஆனால் அந்த பொழுது போக்கில் அவன் மூழ்கி விடாமலிருக்க வேண்டும். அவனது களைப்பிற்கு அது ஒரு தற்காலிக ஆறுதல் தரலாம். அந்த தற்காலிக ஆறுதலானது அவனது நிரந்தர ஆறுதலைத் தடை செய்கிறது.

அந்த பொழுதுபோக்கை விடுத்து தனது இந்த நிலைக்கு என்ன காரணம் என அவன் சிந்திக்கத் தொடங்கினால் அது ஒரு வித புரட்சியாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு நிரந்தரத் தீர்வும் கிட்டுவது நிச்சயம். ஆனால் அவற்றிற்கு தடைக்கல்லாக இருக்கும் பல விடயங்களில் இந்த சினிமாவும் ஒன்று என்பதை விட முக்கியமான் ஒன்று என சொல்லலாம்.

அப்புறம் "திரையுலகை எதிர்த்து கோசமிடும் நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகளெல்லாம் நீங்கள் ஓட்டுப்போட்ட அரசியல்வாதிகளிடம்" என சில கருத்துரைகள் வந்திருந்தன.

"நீங்கள் ஓட்டு போட்ட" என்பதே சமூகத்தைதான் குறிக்கிறது. அந்த சமூகத்தில் சம்மந்தப்பட்ட கட்சிக்கு ஓட்டு போடவில்லையென்றாலும் நாமும் இருக்கிறோம். அது ஏன் "நீங்கள் ஏன் இதை பற்றி எழுதவில்லை?" என கேட்கிறீர்கள். நீங்களே எழுதலாமே!. ஊழல்களுக்கெதிராக கேள்வி கேட்க வேண்டியது பொது மக்களாகிய நாம் எனும் போது அது ஏன் இன்னொருவரைக் கேர்ட்கிறீர்கள்? நீங்களே செய்யலாமே.

காரணம் புரிகிறதா? உங்களையெல்லாம் கட்டிப்போட்டு வைத்திருப்பது இது போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் தான். அலுவலில் அதிக நேரப் பணியா? யோகா செய் ஏன் அதிக நேரப்பணி என யோசிக்காதே! விலைவாசி ஏற்றமா? ஏன் என யோசிக்காதே மானாட மயிலாட பார். இத்தகைய கொள்கைகள் தான் நம் அனைவரையும் சிந்திக்க விடாமல் தடுத்து வைத்திருக்கிறது.

என்னை கம்யூனிஸ்ட் என்றோ புரட்சிக்காரன் என்றோ யாரும் சொல்ல வேண்டாம். அந்த வார்த்தைகளுக்கு இன்னும் கூட எனக்கு முழு அர்த்தம் தெரியாது. அப்படியெல்லாம் அழைப்பதற்கு நான் தகுதியற்றவன். என்னுடைய புரிதல்களும், நான் பிறந்த இந்த சமுதாயத்தின் அவலங்கள் குறித்தவை மட்டுமே என்னுடைய பதிவுகள்.

அனைவருக்கும் நன்றி!

19 August 2010

எந்திரன் - திட்டறவங்க திட்டலாம்

9:03:00 AM Posted by புலவன் புலிகேசி , , 31 comments

நண்பர்களுக்கு வணக்கம்!

நேற்று எந்திரன் குறித்து ஒரு பதிவிட்டிருந்தேன். பலர் வறிந்து கட்டிக் கொண்டு சண்டையிட வந்தனர். முகிலன் எதிர்வினை எழுதி எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.

அப்படி அந்த பதிவில் நான் என்ன தேச விரோதமாகவா எழுதி விட்டேன்? இவர்களுக்கு ஏன் அந்த ஒரு நடிகன் மீது இவ்வளவு பாசம்?

நடிகனுக்காக வறிந்து கட்டிக் கொண்டு வந்த இவர்களில் யாரும் போபால் குறித்து பதிவெழுத அழைத்திருந்த போது வரவில்லை. இதிலேயே புரிகிறது இவர்கள் என்ன ரகம் என்று.

நல்ல விடயங்கள், மக்களுக்கான விடயங்களுக்கு நாங்கள் ஒன்று கூட மாட்டோம். ஆனால் நடிகனைப் பற்றி விமர்சித்தால் கண்டனம் தெரிவிக்க ஒன்று கூடுவோம் என்கின்றனர்.

முதலில் நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நான் ஒன்றும் புரட்சிகர எழுத்தாளன் அல்ல. சொல்லப் போனால் நான் ஒரு எழுத்தாளனே அல்ல. எனக்கு தவறென பட்டால் அதை பதிவிட்டு பலருக்கு சொல்லி வருகிறேன்.

என்னை ஏன் இவர்கள் புரட்சிக்காரன் என சொல்கிறார்கள் எனப் புரியவில்லை. அந்த புரட்சிக்காரன் என்னும் சொல்லைக் கேவலப் படுத்தாதீர்கள். அது அவ்வளவு எளிதில் அடையக் கூடிய இலக்கு அல்ல.

அதில் சிலர் ஒருவரை விமர்சனம் செய்ய நமக்கு என்ன தகுதி இருக்கிறது? என பார்க்க வேண்டும் என எழுதியிருந்தார். அதாவது ஏழ்மையை ஒழிக்க நீ என்ன செய்தாய்? ரஜினியை கேள்வி கேட்கிறாய் என்றார்.

என்னால் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் நான் ஒரு சாதாரண பொதுமக்களில் ஒருவன். ஆனால் நீங்கள் தான் உங்கள் ரஜினியை கடவுளாகப் பார்க்கிறீர்களே! அவரால் ஒன்றும் முடியாதா? அவரை விமர்சனம் செய்ய எனக்கு பொதுமக்களில் ஒருவன் என்ற தகுதி இருக்கிறது.

சிலர் கேட்டிருந்தனர் "நீங்கள் சொல்லும் விடயங்கள் ஏழை ரசிகனுக்கு என்றால் அதை ப்ளாகில் எழுதி என்ன பயன்?".

நண்பர்களே நீங்கள் இது போன்ற வெறும் சினிமா ரசிகனாக இருந்து விடக் கூடாது. சமுதாயத்தில் நமக்கு நிறைய கடமைகள் இருக்கிறது அவற்றை விட இது ஒன்றும் பெரிய விடயமல்ல. சொல்லப் போனால் பைசா பிரயோசனமில்லாத விடயம். இதை ப்ளாகில் எழுதுவதில் எந்த தவறும் இல்லை. ஏழைகளை விட இந்த விடயங்கள் நடுத்தர வர்க்க மக்களுக்கு புரிய வேண்டும்.

நேற்று பதிவுலகில் நான் மிகுந்த மரியாதை வைத்திருந்த ஒரு நபரின் குட்டும் உடை பட்டு போய் விட்டது. அவர் என்ன செய்தார் என்றால் என்னுடைய நேற்றைய பதிவிற்கு தமிழ்மணம், இண்டலி என இரண்டிலும் வாக்களித்து விட்டு முகிலன் எழுதிய எதிர்வினைக்கும் சென்று வாக்களித்து கருத்திட்டிருக்கிறார். இவர்கள் என்ன ரகம் என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.

எந்திரனால் பயன் ஆளும் வர்க்கத்திற்கும், மேட்டுக்குடி வர்க்கத்திற்கும் மட்டுமே. இது புரியவில்லை என்றால் திட்டி விட்டு போங்கள்.

18 August 2010

உமாசங்கரும் என் கண்டனமும்

5:59:00 PM Posted by புலவன் புலிகேசி , 3 comments

ஜாதி வெறி பிடித்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது நம் அரசாங்கம். அதற்கு பலிகடாவாய் ஒரு நேர்மையான அதிகாரி. 27 வருடமாக தெரியாத (கண்டுகொள்ளாத) ஒன்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரணம் வேறொன்றுமில்லை. அவரின் நேர்மை மட்டுமே. உமசங்கருக்கு ஆதரவாக அரசாங்கத்திற்கு என் கண்டனங்களை பதிவுசெய்கிறேன்.

எந்திரன் - ஏழைப் பங்காளன்!

12:11:00 AM Posted by புலவன் புலிகேசி , , 48 comments

60 ஆனாலும் ஸ்டைல்தான்
அதனால் நாட்டுக்கு என்ன பயன்?

37 என்றாலும் கவர்ச்சிதான்
அதனால் ஏழைகளுக்கு என்ன பயன்?

கட்அவுட் வைத்து பாலாபிசேகம்
செய்து உழைத்த காசை
ஒரு நாளில் தீர்த்துவிட்டு

அடுத்த வேலை சோற்றுக்கு
அடுத்தவனிடம் கையேந்தும் நிலை

ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும்
இயல்பு தான்

அதற்காக தலைவர் வந்து உனக்கு
சோறு போட்டாரா?

நாட்டின் வறுமையை படங்களில்
ஒழிக்கும் தலைவன்

உண்மையில் அது பற்றி
யோசித்தாவது இருப்பாரா?

180 கோடியில் அவர்கள்
படத்தில் ஒழிப்பது ஏழ்மையை
நிஜத்தில் உருவாக்குவது ஏழையை!

17 August 2010

ரஹ்மானும் காமன்வெல்த்தும் - கொடுமைடா!

2:25:00 AM Posted by புலவன் புலிகேசி , , 12 comments

"நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் காமன்வெல்த் போட்டி. எனவே அதுகுறித்து தவறான, அவதூறான செய்தியை வெளியிட்டால் அது நாட்டுக்குத்தான் அவப் பெயரைத் தேடித் தரும்."

---என்ன சொல்ல வர்ராருன்னா, யாரு கொள்ளையடிச்சாலும், எத்தனை பேரு வீடிழந்தாலும் இந்தியாவுல காமன்வெல்த்துங்கற ஏழைகள் கலந்துகிட்டு விளையாடுற போட்டி நடக்குது. அதப்பத்தி மட்டும் எழுதுங்க. அப்பதான் ஏழைங்க சந்தோசமா இருக்க முடியும்.

"எனவே மீடியாக்கள் எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவின் புகழை சீர்குலைக்கும் வகையில் காமன்வெல்த் போட்டிகள் குறித்து மீடியாக்களில் செய்தி வருவது எனக்கு வேதனை தருகிறது."

---ஏண்ணே! உண்மையை வெளியில சொன்னா புகழ் சீர்குலையுதாண்ணே! நீங்க ரொம்ப நல்லவருண்ணே. நல்லாவே சொம்படிக்கிறீங்க. பேமெண்ட் ரொம்ப ஜாஸ்தியா குடுத்துட்டாங்களோ?


"நான் லண்டனில் இருந்தபோது காமன்வெல்த் போட்டிகள் குறித்து மோசமான செய்திகள் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பாசிட்டிவான சிந்தனையுடன் இதை நாம் அணுக வேண்டும்."

---இன்னா சொல்றாருன்னா ஒரு பெரிய ஆபத்து வரும்போது அதுல உள்ள பாஸிடிவ்வை மட்டும் எடுத்துக்குங்க. அதை நெகட்டிவ்வாவோ இல்ல சரியான கோணத்துலயோ பாக்காதீங்க. இதனால எவ்வளவு ஊழல் நடந்தாலும், எத்தனை ஏழைகள் வீடிழந்தாலும் பரவாயில்லை. பணக்கார முதலாளிகள் சுகமாக வாழ வேண்டும். அதனால அந்த பாஸிடிவ்வை மட்டும் எடுத்து கிட்டு மத்தத மறந்துருங்க. வெளிய சொல்லாதீங்க. ஒரு தடவை விதர்பாவுல இருந்து யோசிச்சி பாருங்கண்ணே!

"எனவே டெல்லி காமன்வெல்த் போட்டிகள் குறித்த நல்ல விஷயங்களை செய்திளாக மீடியாக்கள் வெளியிட வேண்டும் என்றார் ரஹ்மான்."

---நல்ல விசயம்னு எதண்ணே சொல்றீங்க! பெப்ஸி, கோக் எல்லாம் ஸ்பான்சர்சா மாறி காசு பாத்து விவசாயிங்க வயத்துல அடிப்பாங்களே அந்த நல்ல விசயமா?

அல்லது

---90 ரூ மதிப்புள்ள முதலுதவிப் பெட்டியை 5000 ரூ வாடகைக்கு எடுத்ததா கணக்கு காட்டி பாவம் தன்னோட குடும்ப வயித்து பொழப்புக்காக எங்க வரிப்பணத்துல எடுத்துக்கிட்டு சந்ததிய வளக்குறாங்களே அந்த நல்ல விசயமா இருக்குமோ?

ரஹ்மானின் இசை மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதற்காக அந்தத் தனி மனிதன் சொல்வதற்கு ஆமாம் சாமி போட்டுக்கிட்டிருக்க நான் ஒன்றும் முட்டாள் ரசிகன் அல்ல. பணம் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம். நாம் சொன்னால் நம் ரசிகர்கள் கேட்பார்கள் என்ற அயோக்கியத்தனம் மட்டுமே இங்கு வெளிப்பட்டிருக்கிறது. அவரின் இந்த பேச்சுக்கு என் கண்டனங்கள்.

15 August 2010

அடடே 64வது சுதந்திரம்!

1:26:00 PM Posted by புலவன் புலிகேசி , 16 comments

இன்றுடன் 64-ஆண்டுகள் கடந்து விட்டது. நாம் வெள்ளைக்காரனிடம் பெற்று அரசியல்வியாதிகளிடம் ஒப்படைத்து. இன்று நாம் சுதந்திர நாட்டில் வாழ்வதாக பீற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் மனதை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் சுதந்திரமாகத்தான் வாழ்கிறீர்களா?

அது குறித்து சில கேள்விகள். சுதந்திரப் பெருமை பேசுபவர்கள் பதிலளிக்குமாறு கோருகிறேன்.

1) அரசியல்வாதி அல்லது அரசியல் கட்சியின் ஊழல்கள் பல நம் முன் பலமுறை வெளிக்கொணரப் பட்டிருக்கின்றன. அவர்கள் மீண்டும் ஆட்சி அமைக்க என்ன காரணம்? இங்கு சுதந்திரம் மக்களுக்கா? (அ) அரசியல்வியாதிகளுக்கா?

2) மக்களுக்கான ஆட்சிதான் இப்போது இந்தியாவில் நடக்கிறதா? இல்லை என்றால் அதை எதிர்த்து கோசமிடும் அல்லது கேள்வி கேட்கும் சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறதா?

3) அரசியல் கட்சி ஊர்வலங்கள், ஆர்பாட்டங்கள் இதுவரை உங்களில் யாரையும் பாதிக்கவில்லையா? அப்படிப்பட்ட ஆர்ப்பாட்டங்களை எதிர்த்து கேட்க உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?

4) அமெரிக்கா காரன் கொட்டும் குப்பைகளாக பல அணு உலைகள், விடம் கக்கும் நிறுவனங்கள் இங்கு வந்து விழுகின்றன. அதை எதிர்த்து கேட்க, தடுத்து நிறுத்த உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?

5) போபாலில் கொடுக்கப் பட்ட தீர்ப்பு அனைவருக்கும் அதிருப்தியே! ஆனால் அதை தவறு என கூறி கேள்வி எழுப்பி ஆந்தர்சனை தூக்கிலிடும் கோரிக்கையை நிறைவேற்ற உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?

6) நீங்கள் வசிக்கும் இடத்தை பெரு முதலாளிக்கு அரசாங்கம் விற்று விட்டு உங்களை அந்த இடத்திலிருந்து காலி செய்ய சொல்லக் கூடும். அது நடக்காமல் தடுத்து உங்கள் வசிப்பிடம் அதன் இயற்கைவளம் சுரண்டப் படாமல் தடுக்கும் சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறதா?

7) உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் மற்றும் சரியான நேர உழைப்பு இவைகளை உள்ளடக்கிய வேலை சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறதா?

8) தேர்தலில் போலியாக மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெட்டிகளையும் ஏமாற்றி வெற்றி பெறும் அரசியல்வியாதிகள் இல்லையா? இருக்கிறார்கள் என தோன்றினால் அதை தடுக்கும் சுதந்திரம் உங்களிடம் இருக்கிறதா?

இதில் ஒன்று இல்லை என்றாலும் கூட நாம் என்ன சுதந்திர நாட்டில் வாழ்கிறோம். இதில் ஒன்று அல்ல 8 கேள்விகளுக்கும் மனசாட்சியுடன் பதிலளித்தால் சுதந்திரம் இல்லை என்றுதான் வரும். இது 64 ஆனால் என்ன 100 ஆனால் என்ன? மக்களுக்கு ஒன்றும் பயனில்லை. வெள்ளைக் காரனிடம் வாங்கி அமெரிக்கா காரனிடமும், நம் அரசியல்வியாதிகளிடமும் அடகு வைத்திருக்கிறோம்.

அனைவருக்கும் சுதந்திர தின(?) வாழ்த்துக்கள்!

14 August 2010

டரியல் - (14-ஆகஸ்டு-2010)

10:15:00 AM Posted by புலவன் புலிகேசி 8 comments
வணக்கம் நண்பர்களே!

"இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பை தருவதில்லை. தேர்தல் முடிவுகளில் தெளிவான தகவலை தருவதில்லை. சரிபார்ப்பு வசதியில்லை போன்ற குறைகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த வகை எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புண்டு." - அமெரிக்கா

எல்லாத்துக்கும் அமெரிக்காவுக்கு ஆமாம் சாமி! போடும் இந்தியா இந்த குற்றச்சாட்டை மட்டும் மறுத்துள்ளது. ஏண்ணா உண்மை வெளிவந்த நம்ம அமைச்சர் ஒருத்தர் எப்புடி செயிச்சாருன்னு தெரிஞ்சிடும்ல.

-----------------

எலே திருநெல்வேலியில ஏட்டா இருக்குற சுந்தரம் கொழுந்தியாள தனக்கு ரெண்டாம் தாரமா கல்யாணம் செஞ்சி வைக்கலைன்னா ஆசிட் ஊத்தி புடுவேன்னு மாமனார் கிட்ட போய் மெரட்டியிருக்காரு. அவரோட பொண்டாட்டி ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இறந்து போய்ட்டாங்க. அதனால கொழுந்தியாள எப்புடியாவது கல்யாணம் செஞ்சிடனும்னு திரியுறாரு. இது குறிச்சி விசாரணை நடக்குதாம்.

-----------------

மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்கப்பா! இந்த தடவை புள்ளையாருக்கு பதிலா அம்மன். அட ஆமப்பா பூந்தமல்ல பகுதியில இருக்குற 3 அம்மன் கோவில்களில் அம்மன் பால் குடிக்குதாம். எலே எண்ணெயில ஊறிப்போன சிலையில பால் என்ன எத ஸ்பூன்ல கொடுத்தாலும் உறிஞ்சத்தான் செய்யும். எங்க அத சுத்தமா கழுவிட்டு அப்பறம் குடுத்துப் பாரு. இல்ல ஸ்பூனுக்கு பதிலா சொம்புல குடுத்துப் பாரு குடிக்குதான்னு பாப்பம். இன்னும் எவ்வளவு நாளைக்குத்தாண்டா ஏமாத்திக் கிட்டுத் திரிவீங்க.

-----------------

வந்துருச்சுப்பா வழக்கம் போல ஆகஸ்டு-15. நம்ம மக்களுக்கு வருசத்துல ரெண்டு நாள் மட்டும் தான் இந்த உணர்வே வருது. சட்டையில கொடிய குத்திக்கிறான். தேசியக் கொடிக்கு சல்யூட் அடிக்குறான். முட்டாய் வந்ததும் வாங்கி சாப்டுட்டு போய்க்கிட்டே இருக்கான். கேட்டா நாமதான் சுதந்திர நாட்டுல இருக்கோம்லன்னு சொல்றான். அந்த சுதந்திரம் நம்ம அரசியல்வியாதிகளாலயும், அமெரிக்கா காரனாலயும் பறிக்கப் பட்டுக் கிட்டு இருக்குன்னு சொன்னா அட போடா உனக்கு வேற வேலையே இல்லைன்னு சொல்லிட்டு டாஸ்மாக்க பாக்க போயிடுறான்.

வாழ்க இந்தியா!

-----------------

டௌ கெமிக்கல்ஸீக்கு எதிரா ஒரு பேரணி நடக்கப் போவுது. இதுக்கு பொது மக்கள் அனைவரையும் கூப்புட்டுருக்காங்க. மக்கா வந்துருங்க.

கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!
ஆக்-15 முற்றுகை

ஆகஸ்டு-15, காலை 10.30 மணி,
பேரணி துவங்குமிடம்: காசி தியேட்டர், சென்னை.
பேரணி சேருமிடம், முற்றுகை: டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.
அனைவரும் வருக.

-----------------

05 August 2010

ஒரே கு(க)ஷ்டமப்பா!

6:56:00 AM Posted by புலவன் புலிகேசி 11 comments

அவன் பெயர் பிச்சை. தாசில்தார் அலுவலகத்தில் பணியில் இருக்கிறான். லஞ்சம் வாங்குவதிலும் அதைப் பதுக்குவதிலும் பலே கில்லாடி. மாட்டிக் கொள்ளாதவாறு திருடத் தெரிந்த திருடன். அவனுடன் வேலை பார்ப்பவள் தான் வள்ளி. இவளும் லஞ்சம் வாங்குபவள் தான். ஏன் இவர்கள் இருவருக்கும் யார் அதிகம் லஞ்சம் வாங்குகிறோம் எனும் அளவிற்கு போட்டிகள் பல நடந்தேறியிருக்கின்றன.

இதன் காரணமாகவே இருவரும் ஒருவரை ஒருவர் உயர் அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்தும், உடன் பணி புரிபவர்களை இரு அணியாகப் பிரித்து வைத்துக் கொண்டு புரணிப் பேசியும் திரிந்து கொண்டிருப்பர். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்தாலும் அந்த உயர் அதிகாரிக்கு பிச்சையால் சில பல காரியங்கள் (லஞ்சம்) நடக்க வேண்டியிருப்பதால் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பெயருக்கு ஒன்றிரண்டு முறை அவனது வீடுகள் சோதனையிடப் பட்டும், ஓரிரு முறை கைது செய்யப் பட்டும் இருக்கிறான். அவ்வளவே. ஆனால் வழக்குகள் மூடி மறைக்கப் பட்டு விட்டது. இவன் தனது ஆள் பலத்தைப் பயன் படுத்தி வள்ளியின் லஞ்சங்களை அம்பலப் படுத்தினான். அது தொடர்பாக வள்ளி மீது வழக்கும் தொடுக்கப் பட்டு நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இருவருக்குள்ளும் அடிக்கடி கருத்து யுத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. சில சமயங்களில் இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டு காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. சிலர் வேலையையும் இழந்திருக்கின்றனர். ஆனால் அது பற்றியெல்லாம் இருவரும் சிந்தித்தது கூட இல்லை.

சரி இவர்கள் இருவரும் ஏன் பகையாளியானார்கள்?

இருவருக்குள்ளும் யார் பெரிய ஆள்? என்ற எண்ணம் தலைதூக்கத் தொடங்கி அதன் பின் இருவரும் தங்களின் ஆதரவாளர்களைத் தனித் தனியே திரட்டி வைத்துக் கொண்டனர். பிச்சைக்கு இரண்டு மகன்கள். எப்படியாவது இருவருக்கும் அவன் வேலை பார்க்கும் இடத்திலேயே வேலை வாங்கிக் கொடுத்து விடுவது என விடாப்பிடியாக இருந்தான்.

வள்ளிக்கு பிள்ளைகள் இல்லை. தன் தோழி ரஞ்சிதா என்றால் அவளுக்கு உயிர். அவள் இல்லாமல் எங்கும் செல்ல மாட்டாள். தான் பெறும் லஞ்சங்களில் செய்யும் செலவுகளில் பாதி ரஞ்சிதாவுக்காக இருக்கும். எது வாங்கினாலும் அவளுக்கும் சேர்த்து வாங்குவாள். தன் தோழிக்கு எப்படியாவது தனது அலுவலகத்தில் வேலை வாங்க வேண்டும் என இவளும் விடாப்பிடியாக இருந்தாள்.

இவைதான் இவர்கள் இருவரையும் பகையாளிகளாக்கியது.

இந்நிலையில்தான் பிச்சை தன் அலுவலகக் கூட்டாளிகளையும், தனக்குத் தெரிந்த சில ரவுடிகளையும் வைத்துக் கொண்டு வேலை நிறுத்ததில் ஈடுபட்டான்.

"வள்ளி மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்.
அந்தத் திருடி வேலையிலிருந்து நீக்கப் பட வேண்டும்"

என்றவாறு அலுவலக வாயிலில் போஸ்டர் ஒட்டி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தான்.

அன்று அங்கு சாதிச்சான்றிதழ் மற்றும் இன்ன பிற சான்றிதழ்கள், பத்திரப் பதிவுகளுக்காக வந்த மக்கள் தலையிலடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அங்கு சாதிச்சான்று பெற வந்திருந்தான் குமரன். ஆர்ப்பாட்டக் கூட்டத்திலிருந்து வெளியே வந்தான் குமரனிடம் லஞ்சம் பெற்ற அந்த பியூன்.

"தம்பி இன்னைக்கு ஆபீஸ் நடக்காது. நீ பேசாம நாளைக்கு வா" என்றான்.

"அண்ணே! நாளைக்கு பேங்க் வேலைக்கு அப்ளிக்கேசன் போட லாஸ்ட் டேட். அதுக்கு சாதிச்சான்றிதழ் அவசியம் வேணும்" என்றான்.

"அப்ப காலையிலயே வந்துடு. நான் பாத்துக்குறேன். மதியத்துக்குள்ள அனுப்பிச்சிரலாம்" என்றான்.

சரி காலையில் வாங்கிக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு வீடு திரும்பினான். மறு நாள் காலை எட்டு மணிக்கெல்லாம் புறப்பட்டு அந்த அலுவலகத்தை அடைந்தான். அதிர்ச்சியில் செய்வதறியாது நின்றான்.

"எங்கள் தலைவியை திருடி என கூறி அவமானப்படுத்தி
ஆர்ப்பாட்டம் செய்ததை கண்டித்து
இன்று வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்"

என்ற போஸ்டரின் கீழ் அலுவலகப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க அப்போது அருகாமை டீக்கடையிலிருந்து வந்த பியூன்

"தம்பி இன்னைக்கும் ஒன்னும் செய்ய முடியாது. நீ வேற பேங்குக்கு அப்ளிக்கேசன் போட்டுக்கலாம். நாளைக்கு வா" என்றான்.

எதுவும் பேசாமல் ஏமாற்றத்துடன் திரும்பினான். வாங்கி வைத்திருந்த பேங்க் அப்ளிக்கேசனை குப்பைத் தொட்டியில் போட முயன்ற போது கவனித்தான் அங்கு நிறைய அப்ளிக்கேசன்கள் கிடந்தன.


04 August 2010

டரியல் - (04-ஆகஸ்டு-2010)

9:42:00 AM Posted by புலவன் புலிகேசி 12 comments
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

சென்ற வாரம் முழுதும் வலைச்சரத்தில் நிறைவு செய்தேன். என்னால் முடிந்த அளவுக்கு அங்கு நல்ல பதிவுகளையும், நல்ல பதிவர்களையும் அறிமுகப் படுத்தியிருக்கிறேன் என நம்புகிறேன். எனக்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பளித்த சீனா ஐயாவிற்கும், அங்கு வந்து ஆதரவளித்த நண்பர்களுக்கும் நன்றிகள்.

---------------------

அப்பறம் எந்திரன் பாடல்கள் வெளியாகி விட்டது. அடுத்த மாதம் படமும் வெளி வருகிறது. இன்னும் 2 மாசத்துக்கு பதிவுலகம் வேற எந்த செய்தியையும் முக்கியமா பவிக்கப் போறதில்லை. இதுக்கு தமிழிஷ் (இண்டலி)-ம் உடந்தையா இருக்கப் போவுது. காசு உள்ளவன் 150 கோடிஉ செலவு செஞ்சி எடுத்தா அவனுக்கு முழுக்க லாபம் கிடைக்கும் என்பது மட்டுமே நோக்கம். ஆனால் ரசிகர்கள் என்பவர்கள் லாபமின்றி அவரவர் காசுகளை செலவு செய்து கட்-அவுட், போஸ்டர்கள், ரசிகர் மன்ற டிக்கெட்டுகள் என அடுத்த மாதம் முழுதும் தண்ட செலவுகள் செய்யப் போவது உறுதி. பல தயாரிப்பு நிறுவனங்கள் அடைந்து வந்த லாபங்கள் எல்லாம் இன்று ஒரே இடத்தை சென்று சேர்கிறது. கொடுமைடா!!!!

---------------------

நாட்டுல தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கு. ஏன் தமிழ்நாட்டுல மட்டும் கூட எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு, மீனவன் செத்தா ஒரு கடிதம், இலங்கைத் தமிழன் செத்தா ஒரு கடிதம் என இயங்கிக் கொண்டிருக்கும் அவர் எந்திரன் ஆடியோ ரிலீசுக்காக பிரத்யேகமாக பேட்டியளித்திருக்கிறார். பேரன் லாபம் பார்ப்பதற்காக பேசியிருக்கிறார் என்பது மட்டுமே நிஜம். மக்களுக்காக எந்தக் குரலும் வருவதில்லை. ஆனால் தன் குடும்பத்திற்காக குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

வாழ்க தமிழ்நாடு!

---------------------

அண்ணன் ஜாக்கி சேகரின் பதிவு திருடப்பட்டு பாக்யா இதழில் வேறு பெயரில் வெளி வந்ததும், அதன் பின் அந்த நபர் அதற்கு விளக்கப் பதிவு போட்டதையும் படித்தேன்.

நண்பரே சி.பி.செந்தில்குமார்,

நீங்கள் கொடுத்த விளக்கங்கள் ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தாலும், ஒரு படைப்பாளியிடம் அனுமதி பெறாமல் அதை அவர் பெயரில் வெளியிட்டாலும் அது திருட்டுதான். அதனால் ஜாக்கி அண்ணன் திருடப்பட்ட பதிவு என்று சொன்னதில் எந்த தவறும் இல்லை. இனி நீங்கள் பதிவுகளை அனுப்பும் முன் சம்மந்த பட்டவர்களிடம் அனுமதி பெற்று அனுப்புங்கள். அது அந்தப் படைப்பாளிக்கு ஊக்கம் கொடுக்கும்.

---------------------

இந்த வாரப் பதிவர்: சவுக்கு

சவுக்கு என்ற இணையதளத்தின் மூலம் பலரது முகத்திரையைக் கிழித்துக் கொண்டிருக்கும் இவர்கள் தான் மீண்டும் தொடங்கியுள்ள டரியலின் இந்தவாரப் பதிவர். பலரது லஞ்சங்களை ஆதரத்துடன் எழுதி வருகிறார்கள். இதற்காக சமீபத்தில் போலியாக கைதும் செய்யப் பட்டார்கள். ஆனாலும் அஞ்சாமல் தொடர்ந்த அம்பலப் படுத்தி வரும் இவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நண்பர்கள் அனைவரும் இந்த சவுக்கு தளத்திற்கு ஆதரவளியுங்கள்.

---------------------