
நேற்று நடந்தப் போட்டியில் சச்சின் 200 ரன்களைக்கடந்து உலக சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே. சச்சின் இந்த சாதனையைப் புரிவார் என நேற்று வரை யாரும் நினைக்கவில்லை. ஷேவக்கால் மட்டுமே இது முடியும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேலையில் சச்சின் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தி இந்தியர்களை விளையாட்டுத்துறை மூலம் பெருமையடைய செய்திருக்கிறார்.
இதுவரை எந்தக் கிரிக்கெட் வீரரும் செய்திடா அளவு சாதனைகளை இவர் புரிந்திருக்கிறார்.இவரது இத்தகைய சாதனைகளின் காரணம் தன்னம்பிக்கையும், தேசப்பற்றுமே. சமீபத்தில் நடந்த பால்தாக்கரே பிரச்சினையின் போது கூட "நான் முதலில் இந்தியன்" எனப் பெருமிதக் குரல் கொடுத்தவர்.
ஆனால் இப்படிப்பட்ட மனிதனை வெறும் விளம்பரத்திற்காக விளையாடுவதாகவும், இந்த இரட்டை சதத்தால் ஜட்டி விளம்பரம் கிடைக்கும், வேறொன்றும் நிகழப்போவதில்லை என ஒரு "ப்ராபளப்" பதிவர் கூறியிருக்கிறார்.
நண்பரே பரபரப்பு ஏற்படுத்த எதை வேண்டுமானாலும் எழுதலாம். விளையாடுவது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. கிரிக்கெட்டிற்காக தன்னை வருத்திக் கொள்பவர் சச்சினைத் தவிற வேறு யாரும் இருக்க முடியாது. அந்த ஐந்து அடி உயர மனிதனின் உடலில் உள்ள தழும்புகள், வலிகள் மற்றும் காயங்கள் எண்ணிலடங்கா.
சம்பாதிப்பது மட்டும் நோக்கமாக இருந்திருந்தால் அவர் இவ்வளவு சிரமப்பட்டிருக்க மாட்டார். தன் துறையை முழுமையாக நேசிக்கிறார். அந்த நேசிப்புக்குக் கிடைத்த பரிசு இது. எந்த நோக்கமும் இல்லாமல், சம்பள உயர்வு இல்லாமல் பணி புரிய நீங்கள் தயாராக உள்ளீர்களா?
சச்சின் தன் பணியை சிறப்பாக செய்வதால் விளம்பரங்களும், பணமும் தேடி வருகின்றன. இப்படி குறை சொல்லி சொல்லியே திறமையான இந்திய வீரர்களை இழிவு படுத்த ஒரு கூட்டம் இருக்கிறது. கஜினிப் படத்தில் ஒரு வசனம் வரும்
"கஷ்டப் பட்டு உழைத்தால் ஜெயிக்க முடியாது.
இஷ்டப் பட்டு உழைத்தால் தான் ஜெயிக முடியும்"
நண்பரே ஒன்றை முதலில் புரிந்து கொள்ளுங்கள் "எந்த துறையிலும் சுலபமாக வெற்றியடைய முடியாது. அதற்கான ஆர்வமும், விருப்பமும் முழுமையாக இருக்க வேண்டும்". இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் கூட பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. அதற்காக கவலை மட்டுமே பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை.

கிரிக்கெட் பார்க்கும் போது கவலைப் படும் மனங்களில் ஒரு ஆறுதல் கிடைத்தால் அது அவன் கவலைகளை மறக்கடிக்கும் மருந்தாக இருக்கும். எந்நேரமும் பிரச்சினைகளை எண்ணி கவலை மட்டும் படுவதில் எந்த அர்த்தமும், பிரயோஜனமும் இல்லை. முதலில் இந்தப் புரிதலுக்கு வாங்க. இது போல் சாதனையாளர்களைத் தாக்கி எதிராக எழுதுவதை விடுத்து உங்களால் என்ன செய்ய முடியுமோ அந்த நல்ல காரியங்களை செய்யுங்கள் அது போதும்.
கிரிக்கெட் பார்ப்பதால் நாங்கள் மற்ற பிரசினைகளை கண்டு கொள்வதில்லை என அர்த்தமல்ல. நாங்களும் எங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டுதானிருக்கிறோம்.
78 விவாதங்கள்:
சரியாச் சொன்னீங்க...
அந்தப் பதிவைப் பாத்ததும் எனக்கு வேதனை தான் வந்தது.. :(
சச்சினுக்கு வாழ்த்துக்கள்.
யாருங்க அந்த காமெடிப்பீசு. இப்பதான் பார்த்து,படிச்சு comments போட்டிருக்கேன். தகதிமிதா போலவே தெரியாத விடயத்திலெல்லாம் மூக்கை நுழைத்து சூ.... புண்ணாக்கிகிறாங்கெ.
//////சமீபத்தில் நடந்த பால்தாக்கரே பிரச்சினையின் போது கூட "நான் முதலில் இந்தியன்" எனப் பெருமிதக் குரல் கொடுத்தவர்./////
..........இந்தியன் சாதனை படைத்திருக்கிறார்........... !!!!
பெருமிதம்!!!
@@எதிராகவே பதிவெழுதிப் பிரபலமடைந்த சாருவின் ரசிகர் என்பதை நிரூபித்திருக்கிறார் அந்தப் பதிவர். அந்த ப்ராபள பதிவர் வேறு யாருமல்ல வெண்னிற இரவுகள்./////
இந்த பீசொட எல்லா பதிவுகளையும் விடிய விடிய உக்காந்து படிச்சிட்டு கூடிய சீக்கிரம் இத வெட்றோம்...ரெட்டைவால்ஸ்லையோ இல்ல வெளியூர்க்காரன்லையோ...நீங்க வருத்தப்படாதீங்க...சச்சின கிண்டல் பண்றது தேசதுரோகம்...தேசதுரோகிகளுக்கு தண்டனை குடுப்பான் வெளியூர்க்காரன்..!!!
நியாயமான பதிவு இது, சச்சினை பாராட்டியே ஆக வேண்டும்.
நல்லா எழுதியிருக்க Young Man, Keep it up... :)
சச்சினின் சாதனை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது நண்பா...
ஆனாலும் நண்பர் கார்த்தி சொன்னது முழுக்க முழுக்க அவரது சொந்தக் கருத்துக்களை...
இதற்கு பதிவு போட்டதற்கு பதிலாக அவரை தனிப்பட்ட முறையில் கடிந்து கொண்டிருக்கலாம்...
இது தேவையில்லாத மனக்கசப்பை ஏற்படுத்தும் என்பது என் கருத்து...
:-)
சரியா எழுதிருக்கீங்க. அந்த பதிவு படிதேன். அங்கே கமெண்ட் போட மனம் வர வில்லை. அவர் குறிப்பாய் சொல்லுவது.. "எத்தனையோ பிரச்சனை இருக்க..இது பெருசா" என்பது தான். நீங்கள் இந்த கட்டுரையில் சொல்வதும் நான் எண்ணுவதும் கூட .." இத்தனை பிரச்சனை இருக்கும் போது இது போன்ற நிகழ்வுகளே ஆறுதலாக உள்ளது" என்பது தான்.
எனக்கு கர்நாடக சங்கீதம் புரியாது. அதற்காக பிறர் ஏன் இதை போய் பெருசாய் ரசிக்கிறார்கள் என நான் கேட்க முடியுமா? Tastes differ and no one has right to comment about others taste.
வண்ண நிலவன் ஒரு கவிதையில் சொன்னது போல், " எதையேனும் சார்ந்திரு.. இல்லையேல் உலகம் காணாமல் போய் விடும்.."
//அகல்விளக்கு said...
சச்சினின் சாதனை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது நண்பா...
ஆனாலும் நண்பர் கார்த்தி சொன்னது முழுக்க முழுக்க அவரது சொந்தக் கருத்துக்களை...
இதற்கு பதிவு போட்டதற்கு பதிலாக அவரை தனிப்பட்ட முறையில் கடிந்து கொண்டிருக்கலாம்...
இது தேவையில்லாத மனக்கசப்பை ஏற்படுத்தும் என்பது என் கருத்து...
:-)
//
தனிப் பட்ட முறையில் அல்ல நண்பா எந்த முறையில் சொன்னாலும் கேட்கக் கூடியவர் அல்ல அவர். எவ்வளவோ முயற்சிச்சாச்சு...
புலிகேசி...
ஒருமனிதனை கொண்டாடுவதும்... அவனோடு முரண்படுவதும் அவரவர் தனிப்பட்ட கருத்தே...
நான் ஒரு போதும் கிரிக்கெட்டை ரசித்துப் பார்ப்பதில்லை... எதேச்சையாக நேற்று பார்த்தேன்... சச்சின் விளையாட்டை 110 லிருந்து 200 வரை பார்த்தேன்... 191-200 வரை ஒரு த்ரில் இருந்தது உண்மைதான்.... ரசித்தேன்... சில மணி நேரங்களில் மறந்தும் போனேன்...
அதைக்கொண்டாட என்னிடம் ஒரு காரணமும் இல்லை..
அதே சமயம் அது சச்சினின் தொழில்(!!), எனவே அந்த மாய எண் பற்றி குறை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை..
கார்த்திக்கின் இடுகையில் இருந்த அந்தப் படம் அருவருப்பான ஒன்று...
அதே சமயம் இடுகையில் அடங்கியிருந்த நியாமும் யோசிக்க வேண்டிய ஒன்றுதான்...
இந்தியாவில் பொதுத்தேர்தல் நடந்த போது, வெளிநாட்டில் போய் இந்த விளையாட்டை நடத்தி தங்கள் இருப்பை, வருமானத்தை நிலை நிறுத்திக்கொண்டவர்கள் தான் இந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள்....
கிரிக்கெட் வீரர்களுக்கும் சரி / வெறித்தனமான ரசிகர்களுக்கும் சரி.. அன்று தேர்தலை விட கிரிக்கெட்டே மிக பிரதானமாகப் பட்டது....
அது அவர்கள் விருப்பம், ஜனநாயக, குடியரசு நாட்டில் கேள்வி கேட்க முடியாது..
அதே சமயம் ஒரு பதிவரின் கருத்தோடு ஒத்துப் போகமுடியாவிட்டால் அதை அங்கேயே பதிவு செய்யலாம்.. அதை விடுத்து தனிப்பட்ட இடுகைகள் எழுதுவது கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது...
//சச்சின கிண்டல் பண்றது தேசதுரோகம்..//
இது நல்ல நகைச்சுவை
பிரபலமான பதிவர் எழுதியதை விமர்சித்து விளம்பரம் தேடும் ------- புலிகேசி... நீங்க விளம்பரத்திற்காக என்னவெல்லாம் செய்வேன்னு எனாகு தெரியுண்டா....
வெண்ணிற இரவுகள் ஒன்றும் சச்சினை பற்றி குறை கூறவில்லை.. அது உனக்கு புரியவில்லை.. மற்றவர்கள் சொல்வதை சூப்பரா நீங்க எழுதுறீங்க..
அண்ணே நீங்க ஒரு நம்பர் ௧ டுபாக்கூர்...
உங்களுக்கும் நிறைய ஜால்ரா இருக்கு போல (உங்கள மாதிரியே )
//அதே சமயம் ஒரு பதிவரின் கருத்தோடு ஒத்துப் போகமுடியாவிட்டால் அதை அங்கேயே பதிவு செய்யலாம்.. அதை விடுத்து தனிப்பட்ட இடுகைகள் எழுதுவது கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது...//
நண்பரே சமீப காலமாக அவர் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை. காரணம் என் பின்னூட்டங்களை அவர் வெளியிடுவதும் இல்லை. அதனால் தான் இப்பதிவு.
//வெண்ணிற இரவுகள் ஒன்றும் சச்சினை பற்றி குறை கூறவில்லை.. அது உனக்கு புரியவில்லை.. மற்றவர்கள் சொல்வதை சூப்பரா நீங்க எழுதுறீங்க..//
உனக்குத்தான் புரியவில்லை..பொதுவாக கிரிக்கெட் வீரர்களைப் பற்றி எழுதியிருந்தால் நாங்கள் ஒன்றும் சொல்லப் போவதில்லை. சச்சினைக் கேவலப் படுத்தும் படத்துடன் வெளியான பதிவை சுட்டிக்காட்ட எழுதப் பட்டதை புரிந்து கொள்ள முடியாத நீ எல்லாம் கமெண்ட் போட வந்துட்ட...
நானும் நீயும் ஒரே ஆபீஸ் டா... அதானால நீ டம்மி பீசுன்னு எனக்கு தெரியும் ..
நான் சொன்ன மேட்டரை திரும்ப என்கிட்டே வந்து சொல்லியும் பல்பு வாங்கியும் உனக்கு அறிவு வரல
கதிர்,
ஐ.பி.எல்லில் விளையாடுவதற்கும் இந்தியாவுக்காக விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
ஐபிஎல் லில் விளையாடுவது அவர்கள் தொழில் - முதலாளிகளுக்காக விளையாடுகிறார்கள்.
இந்தியாவுக்காக விளையாடுவதில் அவர்கள் இந்தியா என்ற நாட்டின் பிரதிநிதிகளாக விளங்குகின்றனர்.
அபிநவ் பிந்த்ரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற போது நான் எப்படி மகிழ்ந்தேனோ, ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் வென்ற போது எப்படி மகிழ்ந்தேனோ, அதே போலத்தான் இந்த சச்சினின் சாதனைக்கும் மகிழ்கிறேன்.
இதை சச்சினின் தொழில் என்று குறிப்பிட்டது வேதனையைத் தருகிறது..
1999ல் தன் தந்தையின் மரணத்திற்கு இந்தியா வந்து செய்ய வேண்டிய காரியங்களை முடித்து விட்டு அடுத்த ஃப்ளைட் பிடித்து இங்கிலாந்து சென்று கென்யாவுடனான போட்டியில் சதமடித்து அதை தன் தந்தைக்கு சமர்ப்பித்தாரே? அது தொழிலுக்கும் சம்பாதிப்பதற்கும் மட்டுமா? இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தரவேண்டும் என்ற ஆர்வமும் வெறியும் தானே? ஆக அப்படிப்பட்டவரின் நாட்டுப்பற்றை ஜட்டியில் இருப்பதாக சொன்னது சில்லறைத்தனம் இல்லையா?
//இளந்(இழந்த)தமிழன் said...
நானும் நீயும் ஒரே ஆபீஸ் டா... அதானால நீ டம்மி பீசுன்னு எனக்கு தெரியும் ..
நான் சொன்ன மேட்டரை திரும்ப என்கிட்டே வந்து சொல்லியும் பல்பு வாங்கியும் உனக்கு அறிவு வரல
//
ஒரே ஆஃபீஸ்ங்கறதால நீ சொல்றது சரின்னு ஆயிடாது..நீ யாருன்னு எனக்கும் தெரியும். உன்னைப்போல் கேவலமாக தனி நபரைத் தாக்கும் எண்ணம் எனக்குக் கிடையாது. பொறாமையும் எனக்கில்லை..
//முகிலன் said...
//இதை சச்சினின் தொழில் என்று குறிப்பிட்டது வேதனையைத் தருகிறது..//
தொழில் என்ற வார்த்தை தவறில்லை முகிலன். இதில் வருந்த ஒன்றும் இல்லை....
//அப்படிப்பட்டவரின் நாட்டுப்பற்றை ஜட்டியில் இருப்பதாக சொன்னது சில்லறைத்தனம் இல்லையா?//
அந்தப் படம் மிகத் தவறான ஒன்றுதான்
என்ன சொன்னாலும் நீ காமெடி பீச்தண்டா.... ஒரே சிரிப்பு தான் போ!
நீ பெரிய பதிவரா (ஹைய்யோ ஹைய்யோ )
இருக்கலாம் .. ஆனா நீ அந்த அளவுக்கு வொர்த் இல்லன்னு எனக்கும் , கார்த்திக்கும் மட்டும்தான் தெரியும்...
//Blogger இளந்(இழந்த)தமிழன் said...
என்ன சொன்னாலும் நீ காமெடி பீச்தண்டா.... ஒரே சிரிப்பு தான் போ!
நீ பெரிய பதிவரா (ஹைய்யோ ஹைய்யோ )
இருக்கலாம் .. ஆனா நீ அந்த அளவுக்கு வொர்த் இல்லன்னு எனக்கும் , கார்த்திக்கும் மட்டும்தான் தெரியும்...//
அப்புடிங்களா..ரொம்ப நன்றிங்க உங்களோட இந்தக் கருத்தே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக நினைக்கிறேன். மனமார்ந்த நன்றிகள்..
நல்லா இருந்தா நல்லா இரு .....இல்லாட்டி நாசமா போ
நல்லா இருந்தா நல்லா இரு .....இல்லாட்டி நாசமா போ
அண்ணாச்சி...முதலாளி...சார்....மரியாதையா எவ்வளோ வார்த்தை வேணா கேட்டுக்கங்க... சச்சின் கடவுள் தான்...நாங்க எல்லாம் பூசாரிங்க தான்! ஆனா தலைவா இங்க சச்சினுக்கு தீபாரதனை காட்டறவன் முதக் கொண்டு தீவிர வாதியா இருப்பானே... சச்சின் கிரிக்கெட் மேட்சை கட் அடிச்சுட்டா விளம்பரத்துல நடிக்கப் போனாரு! 100க்கு மேல 100 அடிச்சுட்டு தானய்யா விளம்பரத்துல நடிக்கப் போனாரு! விட்டா இலங்கை பிரச்சினை தீரலை..காஷ்மீர் பிரச்சினை தீரலை..அதனால சச்சின் ரன்னே அடிக்கக் கூடாதும்பீங்க போலயே...
சச்சின் 200 அடிக்கிறதுக்கும் ஜட்டி விளம்பரத்துல நடிக்கிறதுக்கும் நாட்டுல பிரச்சினை தீர்றதுக்கும் என்னய்யா சம்மந்தம்.? பல் இருக்கறவன் பட்டாணி சாப்பிடறான்!உங்களுக்கு ஏன் சார் எரியுது?
சச்சினுக்கு வாழ்த்துகள்.
அப்படிப்போடு!
எதிர் விமர்சனம் வைத்தால் பிரபலம் ஆகலாம் என்பது தான் சாருவின் பாலபாடமே! அவர்களது பக்தகோடிகளும் அதை தானே செய்வார்கள்!
அந்த ”அப்படிபோடு” என்ற கமெண்ட் இதற்கு முன் இருந்த பதிவிற்கு வர வேண்டியது!
சரியா சொன்னீங்க . பகிர்வுக்கு நன்றி
இப்பொழுதும் நண்பர்களே ................கருத்துடன் நீங்கள் எங்கே மோதிநீர்கள் ......தனி மனித தாக்குதலுக்கு பதில் சொல்ல அவசியம் இல்லை .........உங்களால் நிரூபிக்க முடியுமா............
சச்சின் தேசப்பற்று என்று எல்லாம் பிதர்த்ற்ற கூடாது ...................கிரிக்கெட் மட்டுமே தேசப்பற்றா ????????என்ன?????
நாம் ஈழத்தில் சண்டை நடந்த பொழுது அதே ஈழத்தில் நடந்த மேட்ச் பார்த்து இருக்கிறோம் ...!இதை மறுக்க முடியுமா ...............! ஆம் வாக்குகள் வாங்க வில்லை என்பது
ஐரோம் ஷர்மிலாவிர்க்கு ஏற்ப்பட்ட தோல்வி தான் ...............!
என்ன தேசப்பற்று .........சச்சினை திட்டும் பொழுது வரும் நீங்கள் .......ஏன் ஐரோம் ஷர்மிலாவிர்க்கு பின்னூட்டம் போடா வில்லை
எதிர் விமர்சனம் என்றால் எதிர் கொள்ளுங்கள் வால் அவர்களே ..............நீங்கள் சொல்வதை பார்த்தால் பாராட்டு மட்டுமே செய்ய வேண்டும் ..........! விமர்சனத்தில் இது தவறு அது தவறு என்று சொல்லுங்கள் ...விமர்சனம் பண்ணியவரை எதற்கு விமர்சனம் செய்ய வேண்டும் .....
//////புலவன் புலிகேசி said...
//கெட்டவன் said...
நான் தமிழன் ...தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன் ...இந்தியாவை என்
அண்டை நாடாகத்தான் இனி என்னால் பார்க்க முடியும் ..தமிழனுக்கு
இந்தியாவை விட அதிகமா துரோகம் செய்த நாடு வேறேதும் இருக்காது
//
நீ இந்தியனாவோ தமிழனாவோ இருக்க வேண்டாம். மனிதனய் இரு அது போதும். பிரித்து சிந்தித்து சிந்தித்து ஒரு தொலைநோக்கு பார்வையை கொள்ளாமல் அரைகுறையாய் நான் தமிழன் நான் இந்தியன்னு சொல்றதுல அர்த்தமே இல்ல..
7 February 2010 19:23
புலவன் புலிகேசி said...
நல்ல பதிவு நண்பா..
7 February 2010 19:27 //////
நண்பரே இந்த இரண்டும் ஐரோம் ஷர்மிளா பதிவில் நான் இட்டப் பின்னூட்டங்கள்..என்ன பேசுகிறீர்கள்
நான் வேலை பார்பதற்கு ஊதியம் வாங்குகிறேன் ..............சரி ................................என்னை யாரும் கடவுள் என்ற சொல்லவில்லையே ????சச்சின் கடவுள் அளவு பார்க்க படுகிறாரே
//வெண்ணிற இரவுகள்....! said...
நான் வேலை பார்பதற்கு ஊதியம் வாங்குகிறேன் ..............சரி ................................என்னை யாரும் கடவுள் என்ற சொல்லவில்லையே ????சச்சின் கடவுள் அளவு பார்க்க படுகிறாரே
//
அந்த அளவுக்கு நீங்கள் சாதிக்க வில்லை..அதுதான் காரணம் உனக்குள் உள்ளக் கடவுளைத் தோந்தி அதைக் கொண்டு அடுத்தவருக்கு உதவு அல்லது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஏதாவது செய்...நீயும் போற்றப் படுவாய்..
சரி சாரு நான் படிப்பதில்லை என்று இரண்டு முறை சொல்லி இருக்கிறேன்????????????பதிவிலும் ........................உங்களை நன்றாகவே தெரியும் ...............நான் படிப்பதில்லை என்பதும்
நன்றாகவே தெரியும் .....................!! அதையும் தாண்டி சாருவின் ரசிகர் என்று சாரு பெயரை
ஹிட்ச்க்கு பயன்படுத்துகிறீர்கள் ...........என்ன சொல்ல உங்கள் பெருந்தன்மையை
அப்படி எல்லாம் கடவுள் இல்லை.................!! அவர் சாதித்தது ஒரு துறை .......................!!!!
எத்தனையோ போராளிகள் பெயர் தெரியாமல் இருக்கின்றனர் ....................
சச்சினுக்கு குடை பிடிக்கும் அதில் தான் தேசிய பற்று வைக்கும் நண்பா உன்னை என்ன
சொல்ல
//வெண்ணிற இரவுகள்....! said...
சரி சாரு நான் படிப்பதில்லை என்று இரண்டு முறை சொல்லி இருக்கிறேன்????????????பதிவிலும் ........................உங்களை நன்றாகவே தெரியும் ...............நான் படிப்பதில்லை என்பதும்
நன்றாகவே தெரியும் .....................!! அதையும் தாண்டி சாருவின் ரசிகர் என்று சாரு பெயரை
ஹிட்ச்க்கு பயன்படுத்துகிறீர்கள் ...........என்ன சொல்ல உங்கள் பெருந்தன்மையை
//
ஹா ஹா ஹா....சாருவைப் புகழ்ந்து எழுதி ஹிட்ஸ் வாங்கி விட்டு அவரிப் படிப்பதில்லை என இவர் சொல்லுவாராம்..பாருங்கப்பா "சாருவின் அடியாளை"..இவரை வெண்ணிற இரவுகள் என்பதை விட "சாருவின் அடியாள்" எனதான் பலருக்குத் தெரியும்....ஹிட்சுக்காக வைக்கப் பட்டப் பெயரல்ல...சாருவைப் போலவே எழுதியமைக்கு வைத்தப் பெயர்...
//Blogger வெண்ணிற இரவுகள்....! said...
அப்படி எல்லாம் கடவுள் இல்லை.................!! அவர் சாதித்தது ஒரு துறை .......................!!!!
எத்தனையோ போராளிகள் பெயர் தெரியாமல் இருக்கின்றனர் ....................
சச்சினுக்கு குடை பிடிக்கும் அதில் தான் தேசிய பற்று வைக்கும் நண்பா உன்னை என்ன
சொல்ல//
தேசியப்ப்ற்று விளையாட்டில் வரக்கூடாதுன்னு சொல்றீங்களா?
இப்படித்தான்யா இந்திய வீரர்கள் எதிர்க்கப் படுகிறார்கள்...சானியா மிர்சா பிரச்சினை உட்பட...நாங்கள் ஒன்றும் கிரிக்கெட்டில் மட்டும் தேசிய உணர்வைக் காட்டவில்லை. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது.
எங்களுக்கு தேசிய உணர்வு இல்லைன்னு எப்புடி சொல்ல முடியும்?
எல்லோருக்குள்ளும் இருக்கும்.
உங்களிடம் "நான்" என்ற எண்ணம் அதிகம் உள்ளது. அதனால் உங்களுக்கு மட்டும் தான் அனைத்து உணர்வுகளும் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்...
நல்ல பதிவுங்க..... இது வாழ்த்தும் தருணம்.....
குறைச் சொல்லும் தருணம் இதுவல்ல.
//எதிர் விமர்சனம் என்றால் எதிர் கொள்ளுங்கள் வால் அவர்களே ..............நீங்கள் சொல்வதை பார்த்தால் பாராட்டு மட்டுமே செய்ய வேண்டும் ..........! விமர்சனத்தில் இது தவறு அது தவறு என்று சொல்லுங்கள் ...விமர்சனம் பண்ணியவரை எதற்கு விமர்சனம் செய்ய வேண்டும் ..... //
அந்த பதிவின் கடைசிக்கு வரும் முன்னரே பின்னூட்டம் போட்டுவிட்டேன்! சாருவின் ரசிகர்களுக்கு நான் பொதுவாக கொடுக்கும் பின்னூட்டம் தான் அது! அதில் மாற்றமில்லை!
சச்சின் பற்றி நான் எந்த கருத்தும் கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்க!
வேண்டாம் புலவா விடுங்க, ரொம்ப கார சாரமா போகுது.....உங்க ரெண்டு பேரையுமே பிடிக்காத வேற எந்த நாதரியாட்சும் வந்து கருத்து சொல்கிறேன் பேர்வழின்னு குழப்பம் பண்ணிருவாங்க....
@@தம்பி.... said...
வேண்டாம் புலவா விடுங்க, ரொம்ப கார சாரமா போகுது..வேற எந்த நாதரியாட்சும் வந்து கருத்து சொல்கிறேன் பேர்வழின்னு குழப்பம் பண்ணிருவாங்க....///
கருநாக்குன்னா உங்களுக்கு....இதோ வந்துட்டோம் கருத்து சொல்ல..
"சச்சினும் ஜட்டி விளம்பரமும் வொயிட் நைட்ஸும்!"..
http://rettaivals.blogspot.com/2010/02/blog-post_25.html
சிவசம்போ......வெளியூர்க்காரன்... :)
ஆம்லா, டி-வில்லியர்ஸ்...
எதிராகவே ஆடினாலும் சக விளையாட்டு நண்பரை பாராட்டியதற்கு நன்றி.:))
புலவரே படத்த போட்டதுக்கு நன்றி:)
அவர் மனசில இருந்ததை அவரு சொல்லிட்டாரு, உங்க மனசுல இருந்ததை நீங்க சொல்லிட்டீங்க. சச்சினின் திறமை உலகறியும். சச்சின் எத்தனையோ விமர்சனங்களை கண்டவர்.
சச்சினுக்கு வாழ்த்துக்கள்.
புலவா விடுங்க.. ரொம்ப கார சாரமா போகுது....
நல்ல பதிவு தம்பி........எந்த விளையாட்டென்றாலும் இந்தியா ஆடி ஜெயித்தால் சந்தோசமே......... அவர் பதிவில் தேவியில்லாத வார்ததைகளை உபயோகித்திருக்கிறார்........................ இந்தியா ஜெயிக்க வேண்டும் இந்தியன் சாதிக்க வேண்டும் அவ்ளோதான் தம்பி.....................
அப்ப்டியே நீயும் பிரபலம் ஆயிட்ட போல
http://priyanparvaiyil.blogspot.com/
plz read my opinion also.. he is stupid
////முகிலன் said...
//இதை சச்சினின் தொழில் என்று குறிப்பிட்டது வேதனையைத் தருகிறது..//
தொழில் என்ற வார்த்தை தவறில்லை முகிலன். இதில் வருந்த ஒன்றும் இல்லை....//
கதிர் தொழில் என்ற வார்த்தை வேதனை அளிக்கவில்லை. அது உங்களிடம் இருந்து வந்ததுதான் வேதனை..
அது சரியென்றால் உலகில் விளையாட்டு வீரர்கள் எல்லாம் தொழில் செய்பவர்கள்தானா? மைக்கேல் ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக்கில் சாதனை செய்தததும் அமெரிக்கா அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியதே அது தவறா?
அஜித் சொன்னதுதான் இங்கேயும் பொருந்தும்.
ஹலோ யாருப்பா அந்த சைடுல கொஞ்சம் ஓரமா பார்த்து போங்க.
அய்யா சச்சினுக்குக் குடை பிடிக்கிறது மட்டும் தான் தேசியப் பற்றுன்னு இங்க யாருமே சொல்லலை.
நீங்கதான் சொல்லிட்டுத் திரியிறீங்க..
புலவன் சொன்னமாதிரி உங்களுக்கு ஒரு காம்ப்ளக்ஸ். உங்களத் தவிர யாருமே போராளிகளைப் பத்தி கவலைப் படுறதில்லைன்னு..
எல்லாருக்கும் கவலைகளும் வருத்தங்களும் கோபங்களும் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக ஒரு சந்தோச நிகழ்வு நடக்கும் போதும் மூஞ்சத் தூக்கி வச்சிக்கிட்டேதான் இருப்பேன்னு சொல்றதுதான் தப்பு.
விளையாட்டு வீரன் சம்பளம் வாங்கிக்காம விளையாடினாத்தான் பாராட்டுவோம்னா என்னாங்க இது?
இங்கே கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறேன் என்று தனி மனித தாக்குதல்கள் நடத்துவது அநாகரீகம். கருத்தோடு மட்டும் மோதுங்கள் - புலிகேசி உங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் - ஒரு நண்பன் என்ற முறையில் (அந்தக் கடைசி பாராவை நீக்கி விடுங்கள்).
நடிகர்களையும் விளையாட்டு வீரர்களையும் அவங்க “தொழில்” பார்க்க விடுங்க. வீணா உலகப் பிரச்சனைகள்ல தலையக் குடுக்கச்சொல்லாதீங்க.
சரியான பதிலடி நண்பரே.......
என்னுடைய பதிலடியையும் பாருங்கள்
http://saaralhal.blogspot.com/2010/02/blog-post_25.html#more
நல்லப் பதிவு புலவரே. அதுப்போல வாலின் வார்த்தைகளும்........
//இங்கே கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறேன் என்று தனி மனித தாக்குதல்கள் நடத்துவது அநாகரீகம். கருத்தோடு மட்டும் மோதுங்கள் - புலிகேசி உங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் - ஒரு நண்பன் என்ற முறையில் (அந்தக் கடைசி பாராவை நீக்கி விடுங்கள்).//
நீக்கியாச்சு நண்பா...
கருத்து சுதந்திரம் மற்றவர்கள் கருத்தை காயப்படுத்தினாலும்
சாதனைகளை சாகடிக்க வேண்டாமே!!!!
திரு. இளந்(இழந்த)தமிழன் - தன்னடகமில்லா கருத்துக்களை தெரிவித்து தேசிய உணர்வை((இழந்த)தமிழன்) இழந்த நீங்கள், தயவு செய்து தன்மைனதியும் இழந்து விடாதீர்கள். தங்களை காயப்படுத்த இந்த கருத்து இல்லை நண்பா. சாதனையை கொண்டாடவில்லை என்றாலும், நம்மவரை கண்டு உலகம் வியக்கிறதே!!! சற்றே பெருமைப்படலாமே!!!!
"வெண்ணிற இரவுகள்" - தாங்கள் இதுவரை என்ன சாதித்தீர்கள்? தாங்கள் தற்பொழுது செய்திருப்பது சாதனை என்ற பெருமிதம் வேண்டாம்!!!
(இழந்த)தமிழனுக்கு சொன்னது உங்களுக்கும்.
-மதுமிதா
ஷேவாகால் 200 அடிக்க முடிந்தால் சச்சினால் 201 அடிக்க முடியும் சாரே!
புலவர் கருத்து சரியே
இந்த யுகத்தில் எதிரிகள், பொறாமைக் காரர்கள் அதிகமாகிறார்கள் என்றால், நாம் ஜெயித்துக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். எந்தக் கல்வெட்டில் வேண்டுமானாலும் இதை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்..
சச்சின் ஒரு வரலாறு. இந்த நூற்றாண்டின் இணையற்ற கிரிகெட் வீரர்..
விமர்சிப்பது மிக எளிது.. ஆனா அவர் சாதனை முன் இந்த விமர்சனங்கள் வெட்கக் கேடு...
நன்றி....
இப்படி சாமியாரைப் போல விளையாட்டு மூடநம்பிக்கையில் மக்களை ஏமாற்றாதீர்.
பகுத்தறிவை பயன்படுத்துங்கள்
நீங்கள் இப்படி சொல்வதால்தான் விளையாட்டு பிடிக்காதவர்கள் தொடந்து எதிர்த்து எழுதும் உத்வேகம் கிடைக்கும். நீங்களும் ஒரு சராசரி மதவாதியைப்போல நடிப்பதை திருத்திக்கொள்ளுங்கள்
மேல்தட்டு மக்கள் கண்டுகழிக்கும் விளையாட்டால் வறுமையில் உள்ள ஏழைகளுக்கு எப்படி நிம்மதிக்கிடைக்கும்?
விளையாட்டு பிடிக்காதவர்களின் வரிப்பணத்தால் அவர்கள் சம்பாரிக்கலாமா?
தந்தைப்பெரியார் சொன்னார் "எந்த வீட்டில் உழைப்பும் ...." அது எதற்கு கிரிக்கெட் பார்பனீயர்களின் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்பது என் கருத்து.
இதற்கு விடையை எதிர்பார்கிறேன்.
இப்படிக்கு
உங்கள் வாசகன்
பெயர் குறிப்பிடாததற்கு காரணம் கிரிக்கெட் பார்பனீயர்களுக்கு நான் பந்தாகிவிடக்கூட தென்பதால்
sariyaana saatayadi sir,namma chennaiyila syed anwar 194 run adichappa naan kanneer vittu kadari aludavan,anaal sachin 200 adichappa indiyargal anaivarum anandha kanneer vaditaargal
சூப்பர் போஸ்ட் தல
Hi. I love Your post. I love Sachin the Master.
Have a look @ here too.
Anjali Tendulkar Rare Photos
சரியா சொன்னீங்க புலவரே சச்சின் நம்மைப்போல (வெற்றி பெற்ற )இந்தியர்தான் என்பதில் பெருமிதம்
//இப்படி சாமியாரைப் போல விளையாட்டு மூடநம்பிக்கையில் மக்களை ஏமாற்றாதீர்.
பகுத்தறிவை பயன்படுத்துங்கள் //
நாங்கள் ஒன்றும் சாமியார் அல்ல. அதிலும் கிரிக்கெட்டை மூட நம்பிக்கை என சொல்வது பகுத்தறிவுத் தனமல்ல. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். கிரிக்கெட் பார்க்கும் எந்த ஒரு ரசிகனும் வருடத்தின் அனைத்து நாட்களிலும் சச்சினைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதில்லை. மேட்ச் முடிந்த அடுத்த சில மணி நேரத்தில் அவரவர் வேலையைப் பார்க்க சென்று விடுவர். அதில் மூழ்கிப் போன ரசிகர்கள் என யாருமில்லை.
//நீங்கள் இப்படி சொல்வதால்தான் விளையாட்டு பிடிக்காதவர்கள் தொடந்து எதிர்த்து எழுதும் உத்வேகம் கிடைக்கும். நீங்களும் ஒரு சராசரி மதவாதியைப்போல நடிப்பதை திருத்திக்கொள்ளுங்கள்
//
நான் மனிதம் நம்புபவன்..மதம் நம்புபவனல்ல...நடிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை.
//மேல்தட்டு மக்கள் கண்டுகழிக்கும் விளையாட்டால் வறுமையில் உள்ள ஏழைகளுக்கு எப்படி நிம்மதிக்கிடைக்கும்?
விளையாட்டு பிடிக்காதவர்களின் வரிப்பணத்தால் அவர்கள் சம்பாரிக்கலாமா?
தந்தைப்பெரியார் சொன்னார் "எந்த வீட்டில் உழைப்பும் ...." அது எதற்கு கிரிக்கெட் பார்பனீயர்களின் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்பது என் கருத்து.
இதற்கு விடையை எதிர்பார்கிறேன்.//
ஒரு வேலை இது போன்ற அனைத்து விளையாட்டுகளும் பர்ப்பதை நிறுத்தி விட்டால் வறுமை ஒழிந்து விடுமா? அவர்களின் வறுமைக்கும் சச்சினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வறுமையின் காரணம் நம் அரசியலமைப்பும், குறிப்பாக அரசியல்வியாதிகளும். வறுமையில் உள்ள மக்கள் போடும் ஓட்டுக்ள் தான் அவர்களின் வறுமையின் முழுக்காரணம்.இதையெல்லாம் விடுத்து கிரிக்கெட்டால்தான் வறுமை என சொல்வது பகுத்தறிவுவாதியின் மூடநம்பிக்கை என்றுதான் சொல்ல வேண்டும்...
இந்த ஒரு பின்னூட்டமே போதும் தல.
//நாங்கள் ஒன்றும் சாமியார் அல்ல. அதிலும் கிரிக்கெட்டை மூட நம்பிக்கை என சொல்வது பகுத்தறிவுத் தனமல்ல. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். கிரிக்கெட் பார்க்கும் எந்த ஒரு ரசிகனும் வருடத்தின் அனைத்து நாட்களிலும் சச்சினைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதில்லை. மேட்ச் முடிந்த அடுத்த சில மணி நேரத்தில் அவரவர் வேலையைப் பார்க்க சென்று விடுவர். அதில் மூழ்கிப் போன ரசிகர்கள் என யாருமில்லை.
நல்ல பதிவு புலிகேசி
விமர்சனமும் அதன் எதிர்தாக்கமும் எழுத்தாளர்க்கு தெம்பு..இந்த ஒரு பதிவில் பலமான தெம்பு பெற்று
கிரிக்கெட்டையும் அதன் வருவாயையும் கண்டு வெறித்தனமாக அதை எதிர்ப்பவர்கள் பல கோடி இந்தியாவில்
அவர்கள் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும் தெரிந்தோ தெரியாமலோ கிரிக்கெட்டில் இந்தியா கொடி கட்டி பறக்கிறது இந்தியனின் பெயரை உலக அளவில் புகழ் ஈட்டி தருகிறது, சச்சினுக்கு இதில் பெரும்பங்கு உண்டு. இன்று ஹாக்கி உலக கோப்பைக்கு எல்லா விதமாகவும் உதவ முனைந்தாலும் ஆரம்ப நாளுக்கு ஒரு வாரம் இருக்கும் நேரத்தில் டிக்கெட் கெள்ண்டர் கூட இல்லை , விளையாட்டுக்கு நாம் நம் பங்கை தந்தால் கூட விளையாட ஆளும் இல்லை நம்மை உலக தரத்தில் நிறுத்தவும் இல்லை , இதை தொடர்ந்து செய்யும் காரணத்துக்காக சச்சினை ஒவ்வொரு இந்தியனும் பாராட்டியே ஆக வேண்டும் ,
விளையாட்டில் மட்டும் தான் ஜாதி மதம் இல்லை வெவ்வேறு ஜாதியும் மதமும் இணைந்து ரசிக்கிறார்கள் அதிலும் உலகமே பாரட்டும் ஒருத்தரை பற்றி பதிவு செய்ய எதற்கு இத்துணை எதிர்ப்பு,
இந்தையனாக நாம் எல்லாரும் மற்ற கவலையை விட்டு சற்றே சந்தோஷபடுவோம்
நன்றி புலிகேசி
ஜேகே
நல்ல பதிவு புலிகேசி
விமர்சனமும் அதன் எதிர்தாக்கமும் எழுத்தாளர்க்கு தெம்பு..இந்த ஒரு பதிவில் பலமான தெம்பு பெற்று விட்டீர்களோ?
கிரிக்கெட்டையும் அதன் வருவாயையும் கண்டு வெறித்தனமாக அதை எதிர்ப்பவர்கள் பல கோடி இந்தியாவில்
அவர்கள் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும் தெரிந்தோ தெரியாமலோ கிரிக்கெட்டில் இந்தியா கொடி கட்டி பறக்கிறது இந்தியனின் பெயரை உலக அளவில் புகழ் ஈட்டி தருகிறது, சச்சினுக்கு இதில் பெரும்பங்கு உண்டு. இன்று ஹாக்கி உலக கோப்பைக்கு எல்லா விதமாகவும் உதவ முனைந்தாலும் ஆரம்ப நாளுக்கு ஒரு வாரம் இருக்கும் நேரத்தில் டிக்கெட் கெள்ண்டர் கூட இல்லை , விளையாட்டுக்கு நாம் நம் பங்கை தந்தால் கூட விளையாட ஆளும் இல்லை நம்மை உலக தரத்தில் நிறுத்தவும் இல்லை , இதை தொடர்ந்து செய்யும் காரணத்துக்காக சச்சினை ஒவ்வொரு இந்தியனும் பாராட்டியே ஆக வேண்டும் ,
விளையாட்டில் மட்டும் தான் ஜாதி மதம் இல்லை வெவ்வேறு ஜாதியும் மதமும் இணைந்து ரசிக்கிறார்கள் அதிலும் உலகமே பாரட்டும் ஒருத்தரை பற்றி பதிவு செய்ய எதற்கு இத்துணை எதிர்ப்பு,
இந்தையனாக நாம் எல்லாரும் மற்ற கவலையை விட்டு சற்றே சந்தோஷபடுவோம்
நன்றி புலிகேசி
ஜேகே
புலவரே,
------------
ஏன் இந்த கருத்து யுத்தம்!?
உன் கருத்துக்களில் குற்றமும் இல்லை
குறையும் இல்லை நண்பா!!!
சூடு புரியும் சுட்ட வலி உணருகையில்!!!
கருத்து கருங்காளிகளுக்கு,
-------------------------------------
தங்கள் இயலாமையை இயன்ற வரை
இல்லை என்று நிரூபணம் செய்ய
முயற்சிப்பவர்களுக்கு
சச்சின் சாதனையை சாகடிக்கவும் முடியாது
சச்சின் சரித்திரத்தையும் மாற்றவும் முடியாது
புறம் மட்டும் சொல்லி பிழைப்பு நடத்தி
விளம்பரம் தேடும் கருத்து கருங்காலிகளே
மனிதம் மனமகிழ்ந்தால் நகைக்க வேண்டும்
மனிதம் வலி கண்டால் அழ வேண்டும்
மனிதம் சாதித்தால் கொண்டாட வேண்டும்
கொண்டாட மனமில்லாது கொச்சைப்படுத்துவது
மனிதமும் இல்லை, செய்பவன் மனிதனும் இல்லை!!
மாற்றுக்கருத்து கணவான்களை,
என் கருத்து காயப்படுத்தி இருந்தால்
மிக்க நன்றி!!
-மதுமிதா
என்னை பொறுத்தமட்டில் தேசப்பற்று தேவையில்லை, மனித நேயமே தேவை! தேசப்பற்று என்பது ஒரு நோய்! உதாரணத்திற்கு இந்தியாவிற்கு எதிராக ஒரு பாகிஸ்தான் வீரர் சிறப்பாக விளையாடினால் ஏற்க மறுக்கும் மனம்! நாளொரு மேனி பொழோதொரு வண்ணம் வெடிகளையும் துன்பங்களையும் தாங்கும் பல வெளிநாடுகளைப்பற்றி கண்டுகொள்ளாத மனம், அனால் மும்பையில் ஒரு நட்சித்திர ஹோடேலில் நடந்த தாக்குதலை பெரிதாக பார்க்கும் இயல்பு! வேண்டாமே தேசபற்று! மனித நேயம் போதாதா?
மற்றபடி, கிரிக்கெட் வீரர் என்று பார்க்கும் பொழுது சச்சின் ஒரு சிறந்த வீரர்! அவர் சாதனைகள் போற்றப்பட வேண்டியவையே (கிரிக்கெட் ரசிகர்களக்கு).
தேசப்பற்றினை காரணம் எனக் கூறி உள்ளீர்கள். எப்படி அது ஒரு காரணம் என விளக்க முடியுமா... நான் ஒரு இந்தியன் என பால் தாக்கரே வுக்கு அவர் பதில் சொல்லாமல் இருந்திருந்தால் அவருக்கான விளம்பரங்களின் கதி என்ன என சொல்ல முடியுமா.. அவரது கிரிக்கெட இருப்பு பற்றியும் சொல்ல முடியுமா...
உயர்வர்க்கதினருக்கான ஓட்டலில் தாக்குதல் நடந்தால் கிரிக்கெட் போட்டியின் நாயகன் விருதை அர்ப்பணிக்க தெரிந்த அவருக்கு பத்து ஆண்டுகளில் மும்பைக்கு அருகில் உள்ள விதர்பா விவசாயிகளின் தற்கொலைக்காக அர்ப்பணிப்பதற்கு ஒரு செஞ்சுரி கூடவா கிடைக்கவில்லை. தேசப்பற்று என்றால் கிரிக்கெட் ல் வெல்வது, கார்கில் போரில் வெல்வது, அர்ஜூன் படம் பார்த்து மயிர்க்கூச்செறிவது என்று நினைக்கிறீர்கள் போலும். ஆனால் சியாச்சின் மலையில் இந்தியாவை காவல் காக்கும் நமது மிலிட்டரிக்கும் நமது சென்னை பங்களாக்களில் முன்னால் நிற்கும் செக்யூரிட்டிகளிற்கும் அவ்வளவு வேறுபாடு இல்லை என நினைக்கிறேன். இருவருக்குமே உள்ளே என்ன நடக்கின்றது என தெரியாதுதானே... சியாச்சினில் ஏழை சிப்பாய்கள் சாவும்போது பின்னால் டாடாவும் பிர்லாவும் அம்பானியும் தேசத்தை கூறுபோட்டு தங்களது சட்டைப் பைக்குள்ளும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் எல்லா2 வளங்களையும் அடகு வைக்கும் போது வெறும் தேசப்பற்றால் முடிகள் சிலிர்த்து நின்றால் தியேட்டரில் வருமான ம் கூடுவதை தவிர என்ன மிச்சம்.
தேசப்பற்று மட்டுமே உள்ள அவர் ஐபிஎல் கிரிக்கெட் ல் வீர்ர்கள் ஏலம் விடப்படுவதை எதிர்த்து ஒரு வார்த்தை கூட உதிர்க்கவில்லையே.. மாறாக தானே ஒரு அடிமையாக நின்றவர்தானே....(அடிமைகள் ஏலம் விடப்படும் 18ஆம் நூற்றாண்டை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்)
தனது பேட்டில் கம்பெனி பெயரை ஏன் ச்ச்சின் மாற்றினார். 200 அடித்தவுடன் இந்தியா படம் போட்ட பேட்டையா உயர்த்தி காட்டினார். அல்லது பாரத மாதா கீ ஜே என்று சொன்னாரா... எது தேசப்பற்று.
விளையாடுவதை விட விவசாயம் செய்வது சுலபம் என்று நினைக்கிறீர்களா... விளையாட்டில் கூட இந்தியாவில் அவரைப் போன்ற மேல்சாதி பையன்களே தொடர்ந்து வருகிறார்களே.. அதற்கு யாரும் உதவி செய்யாமல் இருப்பார்கள் என நினைக்கிறீர்களா... அவருடன் விளையாட வந்த அவருக்கு நிகராக விளையாட கூடிய காம்ப்ளி என்ற அவரது பள்ளி கால நண்பன் அதன் பிறகு காணாமல் போனானே அதற்கு சாதி காரணம் இல்லை என நினைக்கிறீர்களா...
குறை சொல்வது என்பது இழிவுபடுத்துவது எனப் புரிந்து கொண்டால் விமர்சனம் மூலம் மனித குலம் தன்னை முன்னேற்றப் பாதையில் செலுத்தி இருக்கவே முடியாது. முயற்சியும் விருப்பமும் திறமையும் இருந்தால் கூட பலரும் சமூகத்தில் முன்னேற முடியாமல்தான் இருக்கின்றார்கள். இதனை சுட்டிக்காண்பிப்பதே தவறு என்பது நிலவும் பிரச்சினைகளில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை மிகுந்த சுயநலத்துடன் பயன்படுத்த முடியும் சிலரால் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் அதுதான் மாரல் வேல்யூவை ஒரு சமூகத்திற்கு திருத்தமாக மாற்றி அமைக்க உதவும் ஒன்று.
-mani...
பிரச்சினைகளுக்காக கவலைப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லைதான். நமக்கு ஒரு பிரச்சினை இருந்தால் கூட அப்படித்தான் இருக்கின்றீர்களா. ஒரு காயம் பட்டு லேசா இரத்தம் வந்தா கூட டாக்டர்ட போறதா, எண்ணெய் வச்சுட்டு செலவ கம்மி பண்ணலாமா, இந்த காயம் இனிமே படாம இருக்க என்ன பண்ணனும்னு இன்னும் பலவிதமா யோசிக்கிற நாம அதே பிரச்சினை பொது விசயம் சம்பதந்தப்பட்டதா இருக்கும்போது மாத்திரம் கொஞ்சம் ரிலாக்ஸ் பிளீஸ்னு சொல்லுதே.. உங்க வேல்யூ சிஸ்டம் எதால ஆக்கப்பட்டிருக்கு.. உங்களுக்குன்னா ஒரு நியாயம் சமுதாயத்துக்குனா ஒரு நியாயம். வெல்டன் புலிகேசி..
என்னால் முடிந்த்தை செய்வேன் என்பது தான் இந்திய அரை நிலபிரபுத்துவ சமூகத்தை பிடித்த பெரிய நோய்களில் முதன்மையானது. நீங்கள் எப்போதுமே வள்ளல்களாக இருப்பீர்கள். உங்களிடம் உதவி பெறுபவர்கள் பிச்சைக்கார்ரர்கள். பிச்சைக்கார்ர்களின் விருப்பமறிந்த உபிச்சை போட வேண்டும் என ஒரு நாள் கூட நீங்கள் நினைப்பதில்லை. அவனுக்கு உணவு தேவைப்படும்போது உங்களிடம் மீதமாக இருக்கும் துணியை தர விரும்புவீர்கள். ஆனால் தனக்கு உணவு தேவை என்பதற்காக துணியை அவன் மறுக்க கூடாது... என்னே உங்களது கருணை.. தப்பித்தவறி அவன் மறுத்தால் அந்த பிச்சைக்காரன் திமிர்பிடித்தவனாகவும் ஆகி விடுவான்... முதல்ல அப்படி கேட்டுப் பழகினால்தான் சமூகத்தில் நாம் பிரச்சினையை நமக்கு விருப்பமான முறையில் தீர்க்காமல் பிரச்சினைக்கு தீர்வுக்கான வழியில் தீர்ப்போம்.
அப்படி தீர்க்க வேண்டுமானால் நோய் நாடி நோய் முதல் நாடி என்ற என்ற முறையில்தான் பிரச்சினையை அலசி ஆராய வேண்டும். நோய்குக் முதலில் மருந்து தேவை என முடிவு செய்தால் டாக்டர் உங்களுக்கு ஹை டோஸ் ஆண்டிபயாடிக் தந்து தடுப்பார். ஆ2னால் அது நௌயை குணப்படுத்துவதில்லை. மாறாக பிரச்சினையை தள்ளிப்போடும். அதுதான் நீங்கள் செய்யும் உதவிகள்.
அப்புறம் சிறீகாந்த்
மனித நேயம்னு ஒண்ணு தனியா இருக்க முடியாது. உதாரணமாக இப்போ போட்டிருக்கும் மத்திய பட்ஜெட் மனித நேயமற்ற ஒன்று என நான் நிரூபிக்க முடியும். அப்படியானால் அதனை நிதியமைச்சர் திருத்த முடியுமா அல்லது திருத்த வேண்டும் எனக் கோருவீர்களா. அதக்கூட விடுங்க மனித நேயம் என்ற ஒற்றைக்கருத்து எல்லா வர்க்கத்தை சேர்ந்த நபர்களாலும் ஒரே அர்த்த்த்தில் புரிந்துகொள்ளப்பட முடியாது. காரணம் மனிதநேயம் என்பது வர்க்கம் சார்ந்த ஒன்றுதான். தேசப்பற்று என்பது அதன் குறுகிய பொருளில் இருக்க கூடாது என்பதுதான் சரி...பாரதிதாசனின் பள்ளம் பறிப்பாய்.. எனத் துவங்கும் பாராட உனது மானிடப்பரப்பை என்ற பாடல் உங்களுக்கு உதவக் கூடும்.
மனிதநேயம் என்பது தான் ஒரு மேனாமினுக்கித்தனம். அது பல தவறுகளை மறைக்க உதவுவது. தனது வருமான வரிச்சலுகைக்காக வும், பகார்ப்பரேட்டுகளின் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்ற பெயரில் சாதாரண மக்களுக்கு நாய்க்கு பிஸ்கட் போடுவது போல உதவி செய்து மக்களை தனக்கு எதிராக அணிதிரள முடியாமல் பார்த்துக் கொள்ளும் பச்சைப் பொறுக்கித்தனத்திற்கு மனிதநேயம் என்றுதான் பெயர் சூட்ட முடியும். அதற்கு பின்னால் உள்ள முதலாளிகளின் குரூரம் பற்றி தெரிய வரும் தருணத்தில் மனிதநேயம் என்ற சொல்லை அவர்கள் கேடாக பயன்படுத்தியது தெரிய வரும்.
இப்பொழுது எல்லாம் சாரு படிப்பதில்லை என்ற பதிவுகள் நீயும் படித்திருக்கிறாய் புலிகேசி........................
என் கூடவே இருப்பதால் உனக்கும் தெரியும் இது எவ்வளவு கேவலமாய் நடந்து கொள்கிறாய் ............
நான் என் பதிவில் கூட இந்த செய்தியை போட்டிருக்கிறேன் ............
நீ எதற்கு சம்பந்தம் இல்லாமல் சாரு பெயரை இழுக்கிறாய்..............ஹிட்ஸ் காக என்ன வேண்டுமென்றாலும் செய்வாயா ............
சாருவின் அடியாள் என்று சொன்ன பிறகு நான் பதிவு போட்டேன் சாரு எழுதி ஏமாற்றி கொண்டிருக்கிறார் என்று..........
உன்னிடம் கூட சொல்லிருக்கிறேன் ...........................நான் பதிவு எழுதவே வேண்டாம் என்று நினைத்தேன் ............!!!உன் பதிவுகள் கூட
படிக்க வில்லை...........!!!!அதற்குள் ஹிட்ஸ் அது இது என்று சொல்கிறாய் ........சம்மந்தம் இல்லாமல் ஹிட்ச்க்கு சாரு பெயரை உபயோக
படுதிருக்கிருப்பது நீயா நானா????
http://vennirairavugal.blogspot.com/2009/12/blog-post_30.html
//சாரு ராமகிருஷ்ணன் மக்களுக்கு என்ன செய்தார்கள் .....சில பதிவர்கள் ஈழ பிரச்சனை போது ...
என்னிடம் கேட்டதை அவர்களிடம் கேட்கிறேன்......வெறும் ரஷ்ய இலக்கியம் தெரியும் பிரெஞ்சு தெரியும் என்பதிலே புண்ணியம் இல்லை.......தன் மக்களுக்காய் இலக்கியம் இருக்க வேண்டும் .....நானும் எதாவது செய்ய வேண்டும் ....? ஒன்று செய்தால் எழுதுவேன் இல்லை என்றால் எழுத மாட்டேன் ..................!
//
சாருவின் படம் கூட போட்டுள்ளேன் .........நண்பா இது நான் அந்த பதிவில் எழுதியது .......
நீ படிக்கவில்லை என்றாலும் உன்னிடம் நான் கூறியுள்ளேன் நான் சாரு படிப்பதில்லை என்று ........
பின்னர் ஏன் சாரு பெயரை போட வேண்டும் ........சொல் ???????????என்னை அசிங்க படுத்துவது உன் நோக்கம்
நன்றி நண்பா ????????
இதை எல்லாம் படித்து விட்டு தான் ஒரு கை பார்க்கலாம் என்று வந்துள்ளேன் ...............உனக்கு நான் இப்பொழுது
படிப்பதில்லை என்று தெரிந்து சாருவின் ரசிகன் அப்பா????இதற்கும் சாருவிற்கும் என்ன சமந்தம்
//நல்ல பதிவு நண்பா...எதிர் பார்த்த மாற்றம் உங்களிடம்.
//இப்படியே போனால் நாம் மறுபடியும் பிறர் கையேந்தும் அடிமைகள் ஆவோம்..சோற்றுக்கு பிற நாட்டு உதவி தேவை படும்..........இப்பொழுது அந்நிய தேசத்தில் வேலை பார்ப்பது கூட கூலி வேலை செய்வதை போன்றதே எச்சரிக்கை......!//
அப்பட்டமான உண்மை//
நீங்கள் அந்த பதிவிற்கு போட்ட பின்னூட்டம் .....................................
நல்ல மாற்றம் என்பது நான் சாருவை படிப்பதில்லை என்பதற்கு சொல்லி இருக்கீங்க ????
இதுக்கு என்ன சொல்லப்போறீங்க நண்பா
இவர் பெரிய விளையாட்டு வீரர். இவரைப் போல யாரும் இல்லை என்ற பேச்சுக்களை தள்ளி வைத்துவிட்டு, சற்றே யோசித்தால், இவருடன் விளையாட வந்தவர்கள் யாரும் இப்பொழுது விளையாட்டில் இல்லை. பணம் எவ்வளவு வந்த பின்னும் கெட்ட பழக்கம் (காம்ளி, சிவராமகிருஷ்ணன்) இல்லாமல், அர்பணிப்புடன் இருப்பது, பணத்தை தாண்டியும் உலகத்தில் பல விஷயங்கள் செய்யலாம் என்பதற்கு எ.காட்டு.
//வெண்ணிற இரவுகள்....! said...
இப்பொழுது எல்லாம் சாரு படிப்பதில்லை என்ற பதிவுகள் நீயும் படித்திருக்கிறாய் புலிகேசி........................
என் கூடவே இருப்பதால் உனக்கும் தெரியும் இது எவ்வளவு கேவலமாய் நடந்து கொள்கிறாய் ............
நான் என் பதிவில் கூட இந்த செய்தியை போட்டிருக்கிறேன் ............
நீ எதற்கு சம்பந்தம் இல்லாமல் சாரு பெயரை இழுக்கிறாய்..............ஹிட்ஸ் காக என்ன வேண்டுமென்றாலும் செய்வாயா ............
சாருவின் அடியாள் என்று சொன்ன பிறகு நான் பதிவு போட்டேன் சாரு எழுதி ஏமாற்றி கொண்டிருக்கிறார் என்று..........
உன்னிடம் கூட சொல்லிருக்கிறேன் ...........................நான் பதிவு எழுதவே வேண்டாம் என்று நினைத்தேன் ............!!!உன் பதிவுகள் கூட
படிக்க வில்லை...........!!!!அதற்குள் ஹிட்ஸ் அது இது என்று சொல்கிறாய் ........சம்மந்தம் இல்லாமல் ஹிட்ச்க்கு சாரு பெயரை உபயோக
படுதிருக்கிருப்பது நீயா நானா????
//
ஹா ஹா ஹா..நன்றாக நகைச்சுவை செயிறாய்..உன்னைப் பற்றித் தெரிந்ததாலும், நீ ஒரு குழப்பவாதி என நன்கறிந்ததாலும், இதுவரை நீ எடுத்த எந்த முடிவையும் பின்பற்றியதில்லை என்பதாலும்தான் நான் இந்த தலைப்பே வைத்தேன். ஹிட்சுக்காக எழுதுஇபவன் நான் அல்ல. என் எழுத்துக்கள் பிடித்தவர்கள் படிக்கிறார்கள்..இந்த ஒரு வார்த்தையே என் வெற்றி என நினைக்கிறேன்.
//வெண்ணிற இரவுகள்....! said...
http://vennirairavugal.blogspot.com/2009/12/blog-post_30.html
//சாரு ராமகிருஷ்ணன் மக்களுக்கு என்ன செய்தார்கள் .....சில பதிவர்கள் ஈழ பிரச்சனை போது ...
என்னிடம் கேட்டதை அவர்களிடம் கேட்கிறேன்......வெறும் ரஷ்ய இலக்கியம் தெரியும் பிரெஞ்சு தெரியும் என்பதிலே புண்ணியம் இல்லை.......தன் மக்களுக்காய் இலக்கியம் இருக்க வேண்டும் .....நானும் எதாவது செய்ய வேண்டும் ....? ஒன்று செய்தால் எழுதுவேன் இல்லை என்றால் எழுத மாட்டேன் ..................!
//
சாருவின் படம் கூட போட்டுள்ளேன் .........நண்பா இது நான் அந்த பதிவில் எழுதியது .......
நீ படிக்கவில்லை என்றாலும் உன்னிடம் நான் கூறியுள்ளேன் நான் சாரு படிப்பதில்லை என்று ........
பின்னர் ஏன் சாரு பெயரை போட வேண்டும் ........சொல் ???????????என்னை அசிங்க படுத்துவது உன் நோக்கம்
நன்றி நண்பா ????????
இதை எல்லாம் படித்து விட்டு தான் ஒரு கை பார்க்கலாம் என்று வந்துள்ளேன் ...............உனக்கு நான் இப்பொழுது
படிப்பதில்லை என்று தெரிந்து சாருவின் ரசிகன் அப்பா????இதற்கும் சாருவிற்கும் என்ன சமந்தம்
//
அதைத்தான் சொல்கிறேன். நீ சொன்ன எதையும் பின்பற்றியதில்லை. அதனால் இந்த முடிவு எந்த அளவு என்பதில் எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை. முதலில் நீ தெளிவாக இரு. அப்பறம் அடுத்தவனைப் பத்தி சொல்லு..
//வெண்ணிற இரவுகள்....! said...
//நல்ல பதிவு நண்பா...எதிர் பார்த்த மாற்றம் உங்களிடம்.
//இப்படியே போனால் நாம் மறுபடியும் பிறர் கையேந்தும் அடிமைகள் ஆவோம்..சோற்றுக்கு பிற நாட்டு உதவி தேவை படும்..........இப்பொழுது அந்நிய தேசத்தில் வேலை பார்ப்பது கூட கூலி வேலை செய்வதை போன்றதே எச்சரிக்கை......!//
அப்பட்டமான உண்மை//
நீங்கள் அந்த பதிவிற்கு போட்ட பின்னூட்டம் .....................................
நல்ல மாற்றம் என்பது நான் சாருவை படிப்பதில்லை என்பதற்கு சொல்லி இருக்கீங்க ????
இதுக்கு என்ன சொல்லப்போறீங்க நண்பா
//
இந்த கேள்விக்கும் போனக் கேள்விக்கான என்னோட பதில்தான். நீ மாறி விட்டாய் என நினைத்து போடப் பட்டது அந்த பதில். கிரிக்கெட்டிலேயே தெரிந்து போனது உனது லட்சனம். வேற ஒன்னும் சொல்றதுக்கில்ல..நீ எடுக்கும் முடிவுகள். உன் கருத்துக்கள்.கொடுமைங்க...
//அப்படி தீர்க்க வேண்டுமானால் நோய் நாடி நோய் முதல் நாடி என்ற என்ற முறையில்தான் பிரச்சினையை அலசி ஆராய வேண்டும். நோய்குக் முதலில் மருந்து தேவை என முடிவு செய்தால் டாக்டர் உங்களுக்கு ஹை டோஸ் ஆண்டிபயாடிக் தந்து தடுப்பார். ஆ2னால் அது நௌயை குணப்படுத்துவதில்லை. மாறாக பிரச்சினையை தள்ளிப்போடும். அதுதான் நீங்கள் செய்யும் உதவிகள்.//
நண்பரே ஆரம்பித்த இடத்திற்கு யாராலும் சொல்ல முடியது. அப்படி செல்லப் போகிறேன், சொல்ல வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கும் அனைவரும் பேச்சு வீரர்கள் அவ்வளவே...பேச்சு வீரனாக இருப்பதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. என்னால் முடிந்ததை செய்வேன் அதை பிச்சை என சொல்லி அசிங்கப் படுத்தாதீர்கள்...
@புலவன் புலிகேசிappadi asingapaduvathaaga ninaikkum pokku kooda feudal value thaan. ithai purinthu kolla niraiya padikka vendum nanbaa
-mani
Post a Comment