
காதல் கொண்டேன் எனை
காதலியுடன் சேர்த்து வை
எனக் கதறிய நண்பனுக்காய்
அப்பெண்ணை பெற்றவன் பிரித்து
உற்றவன் இவன் எனக்
கூறி இணைத்து வைத்தேன்
அறுபதும் முப்பதும் முடித்து
பிரிந்து வந்த அப்பெண்ணை
வேண்டாம் என பெற்றவனும்
இவள் இனி தேவையில்லை
என உற்றவனும் உதறி
தள்ள அனாதையாய் அவள்
காரணம் நானோ என்ற
குழப்பத்தில் நண்பனை கேட்டேன்
காமம்தான் காதலா?
காதலியுடன் சேர்த்து வை
எனக் கதறிய நண்பனுக்காய்
அப்பெண்ணை பெற்றவன் பிரித்து
உற்றவன் இவன் எனக்
கூறி இணைத்து வைத்தேன்
அறுபதும் முப்பதும் முடித்து
பிரிந்து வந்த அப்பெண்ணை
வேண்டாம் என பெற்றவனும்
இவள் இனி தேவையில்லை
என உற்றவனும் உதறி
தள்ள அனாதையாய் அவள்
காரணம் நானோ என்ற
குழப்பத்தில் நண்பனை கேட்டேன்
காமம்தான் காதலா?
32 விவாதங்கள்:
:). நல்லாருக்கு புலிகேசி.
அருமை நண்பா.
எனது பிற்சேர்க்கை, சும்மா!
கடைசியாய்
காதல் கொண்டேன் எனை
காதலியுடன் சேர்த்து வை
எனக் கதறிய நண்பனுக்காய்
வழியில்லாத அவனின் காதலி மேல்
வீணாய் உட் புகுதலால்....
பிரபாகர்.
காமம் சேர்ந்ததுதான் காதல்.
இல்லையென்று சொல்ல முடியாது.ஆனால் உண்மையான காதல் காமம் தாண்டியது.
இரண்டற கலந்தத்துதான் கா & கா
//காமம்தான் காதலா?
//
கண்டிப்பா புலிகேசி
காமம்தான்காதலா...அதே தான்..
பத்தவச்சிட்டீங்களே புலவரே ::))
நல்ல கவிதை. இந்தக் கதையைப் பொறுத்தவரை காமம்தான் காதல். அனால் உண்மையில் காதல் அதைக் கடந்தது.
என்னைப் பொறுத்தவரையில் வயதுதான் காதலுக்கு அளவுகோல். இளவயதில் புற அழகில் ஈர்க்கப் படும் காதல் காமம்தான்.
மத்திம வயதில், முதுமையில் வரும் காதல்தான் காதல். நன்றி புலவரே.
super
எப்படி பிராயச்சித்தம் செய்யப் போகிறீர்கள்
புவனா ஒரு கேள்விக்குறி போலவா
//மத்திம வயதில், முதுமையில் வரும் காதல்தான் காதல். நன்றி புலவரே.//
நானும் இன்னும் ஒரு இருபது வருஷம் கழிச்சி லவ் பண்ணலாம்னு இருக்கேன்
நல்லா கவிதை நண்பா... சிந்திக்க வைக்கும் கேள்வி...
எப்படி நண்பா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க..? அருமையான கவிதை.சில காதல் காமம் மட்டுமே நண்பா? உண்மைகாதல் ஒரு போதும் பிரியாது. எவராலும் பிரிக்க முடியாது..
ஒய்...ஒய்..ஒய் ..
ஏன் பிரிஞ்சாங்க...? சொல்லுங்க சேத்து வச்சுருவோம்...
கேக்கலேன்னா சோத்துல விஷத்தை வச்சுருவோம்
நாடோடிகள் படத்துக்கு லேட்டா விமர்சனமா?
நாடோடிகள் படத்தின் வெளிப்பாடா...
நல்லாருக்கு புலிகேசி.
காமமில்லா காதல் இல்லவேயில்லை. புலி..
கேபிள் சங்கர்
நல்ல கவிதை நண்பா....
ம்ம்... இனக்கவர்ச்சியில் திரும்ப திரும்ப ஈர்க்கப்படுபவர்கள் காதலை அத்தனை முறையும் அறிவதில்லை..! காதல் பத்தி சொல்ல எனக்கு தகுதி இருக்கா தெரியலப்பா..
ஆனா.. கவிதையும்.. கேள்வியும் நன்று..
நல்லாருக்கு.:-))))))
நல்ல கவிதை.... வாழ்த்துக்கள்!!!
kamam isnt only the cause for divorce
அருமையான கவிதை!
ஹ்ம்ம்...நிறைய சமயங்களில் காமம் தான் காதல் எனத் தோன்றுவதுண்டு.
ஆனா ஒரு சின்ன வேறுபாடு பார்க்கணும்....
திருமணத்திற்கு பின், காதல் + காமம் !
திருமணத்திற்கு முன், காமம் அல்லது ஒரு ஈர்ப்பு மட்டுமே!
மற்ற உறவுகளுக்கும் காதலுக்கும் உள்ள ஒரே வித்யாசம் காமம் மட்டுமே!
//காமம்தான் காதலா?//
இருக்கலாம்
இவள் இனி தேவையில்லை என்று சொல்வது காதல் இல்லை நண்பா..அதில் இருப்பது காதலில்லா காமம்.. என்னவானாலும் இவள் என்னுடையவள் என்று நினைப்பதே காதல்.. அதுதான் காமம் கலந்த காதல்.. சரிதானா நண்பா நான் சொல்வது?
\\ஜெட்லி said...
//காமம்தான் காதலா?
//
கண்டிப்பா புலிகேசி\\
அப்படியே ரிபீட்ட்டுகிறேன்..:))
நல்லா கேட்டீங்க புலிகேசி அவங்களுக்கு புரிஞ்சுதா நீங்க சொன்னது
புத்தாண்டு வாழ்த்துக்கள்
//காமம்தான் காதலா?
//
இல்லங்க..காமத்த தாண்டினதுதான் காதல்..வெறும் உடல் கவர்ச்சியால் ஏற்படுவது காதலன்று..ஆனா பயபுள்ளைங்க அதையும் காதல்னு சொல்லிட்டு இருக்காங்க..
காதல்
அன்பின் அதிஉச்ச வெளிப்பாடு நட்பின் அடுத்த பரிணாமம் இரு உளன்களின் உணர்வு சங்கமம் இக் காதல் ஆதாம் ஏவாளுக்கு அப்பிளில் வந்தது
அம்பிகாபதி அமராவதிக்கு புறாவிடு துதாக வந்தது அதன் பின் கடிதத்தில் காதல் வந்தது இப்போ நெட்டிலே காதல் வந்தவேகத்தில் போய்விடுகின்றன நிலைபதோ சில அவற்றிற்கும் இடையுறுகள் பல
காமம் இல்லாவிட்டால் அது காதல் இல்லை.காமம் இல்லாத காதல்? அதுக்கு பேர் வேற. அன்பு,நட்பு,பாசம். அம்புடுதேன். காமத்தைக் கடந்த காதல் என்பது வெறும் ஹம்பக். இந்த கவிதையில் சொல்லப்பட்டிருப்பது காமம் கலந்த ஈர்ப்பு .
காமம் கலந்ததுதான் காதல். காமமே காதல் இல்லை. காதல் இல்லா காமம் உண்டு...காமம் இல்லாக் காதல் கடினம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Post a Comment