
நான் இந்த பதிவுலகில் நுழைந்து 4 மாதகாலம் முடிவடையும் நிலையில் புத்தாண்டு பரிசாக என்னுடைய இந்த 50வது பதிவு. இந்த நான்கு மாத காலத்தில் என் பதிவை தொடரும் நண்பர்கள் 102(எனக்கு கிடைத்த பரிசு) பேருக்கும் (எவ்வளவு பேர் படிக்கிறாங்கன்னு தெரியல), தொடராமல் படித்து புன்னூட்டமிட்டும், இடாமலும் ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
49 படங்களில் எந்த ஒரு வித்தியாசமும் காட்டாமல் நடித்து(?) குழந்தைகளை ஏமாற்றி வரும் விஜய், வித்தியாசப்படுத்தும் திறமை இருந்தும் கதைத் தேர்வில் கோட்டை விட்டு தோல்விகள் பல சந்தித்து போராடி கொண்டிருக்கும் அஜீத் இவர்கள் இருவரும் 50ஐ நோக்கி பயணித்து கொண்டிருக்கும் நிலையில் நான் உங்கள் ஆதரவில் 50ஐ அடைந்தே விட்டேன் (அடக் கொடுமையேன்னு நெனைக்கிறது தெரியுது).
நான் பதிவெழுத வந்த கதை:
என் நண்பன் ஊடகன் பதிவெழுத துவங்கிய பின் வாசகனாக மட்டுமிருந்த எனக்கும் பதிவெழுத ஆசை வந்தது. அதன் விளைவுதான் இன்று இந்த 50 (ஊடகனை யாரும் கல்லால் அடிக்க வேண்டாம்). ஆரம்பித்த காலத்தில் நண்பர்கள் உதவியுடன் தமிழிஸ் பற்றி தெரிந்து கொண்டு அதில் இணைத்த பின் நண்பர்கள் கூட்டம் அதிகரித்தது.
அதன் பின் நண்பர்கள் பாலாசி, பிரபாகர் உதவியில் தமிழ்மணத்தில் இணைத்த பின் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. அதன் பின் உலவு, நம்குறள் என்று திரட்டிகளின் வரிசை நீண்டது. 50க்கு உதவி புரிந்த திரட்டிகளுக்கும் நன்றி.
பதிவெழுதும் போது சில கவிதைகள் கதைகளை வெளியிடும் முன் "இளமை விகடனுக்கு" அனுப்பியதில் அங்கும் அங்கீகாரம் கிடைத்தது. இந்த பங்களிப்பிற்காக இளமை விகடன் 3 புத்தகங்களை பரிசாக அளிப்பதாக கூறியுள்ளது. அதன் பின்னர் என் சில பதிவுகள் இளமை விகடனால் சிறந்த பதிவுகளாக (குட் பிளாக்) தேர்ந்தெடுக்கப் பட்டு வெளியிடப் பட்டது. விகடனுக்கு என் நன்றிகள்.
நல்ல பல பதிவுகளை படிக்க துணை புரிந்த இந்த வலைப்பூ உலகிற்கும், முழு உறுதுணையாக இருந்து வரும் கூகுள் குழுமத்திற்கும் என் நன்றிகள். என் பதிவுகளில் வரும் எழுத்து பிழைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி திருத்தி வரும் குணசீலன் மற்றும் கதிருக்கும் நன்றிகள்.
இந்த பதிவுலகில் பல பதிவுகளை பாராட்டியும் சில பதிவுகளுக்கு எதிர் கருத்து தெரிவித்தும் (இதைத்தான் சண்டைன்னு சொல்றாரு நம்ம வெண்ணிற இரவுகள் கார்த்தி) வாசகனாகவும், பதிவராகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். என்னை கவர்ந்த பதிவுகளை பற்றி எழுத ஆசை, ஆனால் அதுக்கு இந்த பதிவு பத்தாது என்பதால் அதை பற்றி டரியல் போல் வாரம் ஒன்றாக எழுதலாம் என முடிவெடுத்திருக்கிறேன்.
அனைத்து நண்பர்களுக்கும் (மைனஸ் ஓட்டு போடுறவங்களும்தான்) என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஊக்கம் தொடரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து உங்கள் நண்பன் "புலவன் புலிகேசி". அனைவருக்கும் புதுவருட நல் வாழ்த்துக்கள்.
34 விவாதங்கள்:
வாழ்த்துக்கள் புலிகேசி முதலில்.
50 என்ற மைல் கல்லை அடைந்திருக்கிறீர்கள், 100 ஐ இன்னும் விரைவாக அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இன்னும் நிறைய எழுதுங்கள். நிறைய படியுங்கள். சந்தோசமாய் உணர்கிறேன் என் சக தோழன் அரைச் சதத்தால்...
பிரபாகர்.
வரும் ஆண்டில் அரைசதம் பலசதங்கள் ஆக நல்வாழ்த்துக்கள்!
ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்,
புத்தாண்டு வாழ்த்துக்கள்
டபுள் வாழ்த்துக்கள் பாஸ்.
//(அடக் கொடுமையேன்னு நெனைக்கிறது தெரியுது).//
அதே தான், ஒப்பிட்டு சொல்ல வேற ஆட்களே கிடைக்கலையா?
50வது பதிவு நூறை கடந்து, முன்னூறை தாண்டி, ஐநூறை அடைய வாழ்த்துக்கள் நண்பா..
vazhthukkal pulikesi. Thodarnthu eluthungal ungal pathivugalil nalla muthirchi therikirathu.
வாழ்த்துகள் புலிகேசி..
வாழ்த்துக்கள் நண்பா.., இன்னும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துக்கிறேன்...
Happy New Year
vijay
வாழ்த்துக்கள் புலிகேசி
அட அம்பதுதானா அதுக்குள்ள இந்தப் போடு போடுறீங்க புலவரே அருமை
தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி
கூகுளுக்கு வலைத்தளத்துக்கு எல்லாம் நன்றி சொல்லி இருக்கீங்க
வாழ்க வளர்க பல்லாண்டு
புத்தாண்டு வாழ்த்துக்கள்
50க்கு வாழ்த்துக்கள்,
இனிய புதுவருட வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பா.. சத்தம் போடாமல் 50 போட்டுட்டிங்க. அஜித், விஜய் 50 வந்துட்டு அவங்க பண்ற அலம்பல் மாதிரி இல்லை, உங்கள் 50. கிரிக்கெட்ல சச்சின் 50 போட்ட மாதிரி ஆர்ப்பாட்டம் இல்லாத வெற்றி.
வாழ்த்துக்கள் நண்பரே. புலவருக்கும் மற்றும் அனைவருக்கும் 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்
நாலு மாசத்துல அம்பது பதிவா? பின்னிடீங்க போங்க.... நானும் நாலு மாசத்துல 41 அ எழுதி தள்ளிட்டேன்.
ஐம்பது என்ன ...நூறத்தாண்டி வெளுத்து வாங்குங்க. யாரு கேட்குறது...(ச்சும்மா. நீங்க அசத்துங்க.)
கலக்குங்க தல..புத்தாண்டு வாழ்த்துக்கள்..
எழுத்தில் முதிர்ச்சி
எண்ணத்தில் எழுச்சி
தேர்ந்த எழுத்தோட்டம்
தேடிவரும் கூட்டம்
:)). பாராட்டுகள் புலிகேசி. புத்தாண்டு வாழ்த்துகள்.
50வது பதிவு நூறை கடந்து, முன்னூறை தாண்டி, ஐநூறை அடைய வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பா.
ஐம்பது நூறாகி நூறு ஐநூறாக...... இன்னும் மேலோங்க வாழ்த்துக்கள்...
50யை தொட்ட நண்பனுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்....
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கலக்குங்க புலிகேசி. ஐம்பது நூறாகி நூறு ஐநூறாக இன்னும் இன்னும் வெளுத்து வாங்குங்க. வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
அரைச் சதம் தொட்டமைக்கு வாழ்த்துக்கள்..
தொடர்ந்து வெற்றி நடை போடுங்கள்..
அவர் தளபதி.. மற்றவர் தல.. நீங்க? ;)
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோஷம்ங்க. இன்னும் பல மைல்கற்களைத் தாண்டியும் வாருங்கள்
அரை சதத்திற்கு வாழ்த்துக்கள்!
போட்டோவுல விஜய் மாதிரி இருக்கிங்க!
(எனக்கு விஜய் பிடிக்காதுன்னு யாராவது சொன்னா நம்பாதிங்க)
அரைசத வாழ்த்துக்கள் & புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பா...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் புலிகேசி.
வாழ்த்துக்கள் புலிகேசி
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..
வாழ்த்துக்கள் புலிகேசி :-)
வாழ்த்துகள்.
Post a Comment