கடவுளை மற..மனிதனை நினை..

19 January 2010

பெற்றோர் சொத்து பிள்ளைக்கு

6:21:00 PM Posted by புலவன் புலிகேசி 36 comments


தட்டு
தண்ணீர் குவளை
படுக்கை
பெற்றோர் விட்டு சென்ற சொத்து
முதியோர் இல்லத்தில்


இரு கைகளற்ற அனாதைக்
குழந்தைக்கு டாட்டா காட்ட
ஓங்கிய வலக்கையை இடக்கை
திட்டியது காலால் டாட்டா
காட்டி தன்னம்பிக்கை காட்டினாள்
அச்சிறுமி


பி.கு: இரண்டாவது கவிதை மட்டுமல்ல. இந்த பொங்கலில் எனக்கு நேர்ந்த நான் கலங்கிய நிஜம்.

36 விவாதங்கள்:

க.பாலாசி said...

இரண்டு கவிதைகளுமே வெவ்வேறு கோணத்தில் நன்றாக இருக்கிறது. இரண்டாவது மிக சிறப்பு...

புலவன் புலிகேசி said...

//Blogger க.பாலாசி said...

இரண்டு கவிதைகளுமே வெவ்வேறு கோணத்தில் நன்றாக இருக்கிறது. இரண்டாவது மிக சிறப்பு...//

இரண்டாவது கவிதை மட்டுமல்ல பாலாசி..இந்த பொங்கலில் எனக்கு நேர்ந்த நான் கலங்கிய நிஜம்.

அண்ணாமலையான் said...

என்ன சொல்ல? ஆழமான உணர்வுகள் கொப்பளிக்கும் பதிவு...

Paleo God said...

இந்த பொங்கலில் எனக்கு நேர்ந்த நான் கலங்கிய நிஜம்//

வருத்தமாயிருக்கிறது புலவரே..:(

க.பாலாசி said...

//புலவன் புலிகேசி said...
இரண்டாவது கவிதை மட்டுமல்ல பாலாசி..இந்த பொங்கலில் எனக்கு நேர்ந்த நான் கலங்கிய நிஜம்.//

ஓ...அப்படியா...

நிகழ்காலத்தில்... said...

நெஞ்சைத் தொட்ட நிகழ்வுகள்..

நிதர்சனமான உண்மைகளும் கூட

வாழ்த்துகள்

இதற்கு கவிதை வடிவம் இன்னும் உணர்வைக் கூட்டுகிறது.

அகல்விளக்கு said...

ஆழமான பதிவு நண்பா....

கலங்க வைக்கிறது...

திவ்யாஹரி said...

A .V.C கல்லூரிக்கு போற வழியில் உள்ள இல்லத்துக்கு போய் இருந்தீர்களா நண்பா? நானும் போனேன்.. அவர்களை பார்த்ததும் என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியாமல் அழுது விட்டேன்.. பார்த்து வந்த தாக்கம் வெகு நாட்கள் இருந்தது நண்பா.. இப்போதும் கலங்கிய கண்களுடன்..

வெற்றி said...

இரண்டு கவிதைகளுமே வேதனையான அனுபவங்கள் புலிகேசி..:((

ஸ்ரீராம். said...

நெகிழ்ச்சியான கவிதைகள்...

முனைவர் இரா.குணசீலன் said...

மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன கவிதைகள்.

உடல் ஊனமுற்றவர்களையே இப்போதெல்லாம் மாற்றுத் திறன் உடையவர்கள் என்று அழைக்கின்றனர்.

உடல் குறைபாடு உடையவர்கள் தன்னம்பிக்கை பெறும் போது சராசரி மனிதர்களைவிட இரு மடங்கு வலிமையும், திறமையும் உடையவர்களாகிறார்கள்.

sathishsangkavi.blogspot.com said...

கலங்க வைக்கும் பதிவு...

Chitra said...

நிஜங்கள் சுடுகின்றன, மனப் பானையில்.
கண்களில் இமை மூடி திறந்து,
கன்னத்தில் பொங்கி
கண்ணீராய் வழிகிறது.

malarvizhi said...

நெஞ்சைத் தொட்ட பதிவு...வாழ்த்துகள்

கமலேஷ் said...

அழகு வரிகள் .... வாழ்த்துக்கள்....

vasu balaji said...

நிஜமென உணர்ந்ததால் அதிகம் வலிக்கிறது. நேர்த்தி

RJ Dyena said...

//இரண்டு கவிதைகளுமே வெவ்வேறு கோணத்தில் நன்றாக இருக்கிறது. இரண்டாவது மிக சிறப்பு//

Very true.... and fantastic....

Dyena

ஜோதிஜி said...

கலக்கியது நிஜம்

balavasakan said...

ம்..என்னது வானம்பாடி சாரிடம் வருத்தப்பட்டது போதாது ன்றால் இங்குமா ..ம்.. சாரி நண்பா..என்ன செய்வது...

சுசி said...

கனமான வார்த்தைகள்..

அனுபவித்த வலி தெரிகிறது.

:(((

Anonymous said...

அனைவருக்கும் ஆண்டவன் அமைதியைக் கொடுக்கட்டும்,

கலகலப்ரியா said...

:)..

ஹேமா said...

உண்மை உணர்வுகள் மிகவும் வலிக்க வைக்கிறது புலவரே.

சைவகொத்துப்பரோட்டா said...

இரண்டுமே சுடும் நிதர்சனங்கள்.

கண்ணகி said...

இரண்டாவது வாழ்க்கையின் மீது புகார் உள்ள்வர்கள் படிக்கவேண்டியது.

ரோஸ்விக் said...

கலங்கிபோய்... - ரோஸ்விக்

Vidhoosh said...

:(

ஈரோடு கதிர் said...

சிலிர்க்க வைக்கும் தன்னம்பிக்கை

அந்த குழந்தை குறித்து ஒரு இடுகை எழுதுங்கள்

பின்னோக்கி said...

மனதைத் துளைக்கும் பதிவு.

விஜய் said...

நானும் எனது நண்பர்களும் எங்களால் முடிந்த அளவு இதுமாதிரியான இல்லங்களுக்கு உதவி வருகிறோம். இதில் கிடைக்கும் ஆத்மா திருப்தி வேறெதிலும் கிடைப்பதில்லை.

விஜய்

Thenammai Lakshmanan said...

அந்தக் குழந்தையின் தன்னம்பிக்கையை பார்த்து மனதை தேற்றிக்கொள்ள வேண்டும்புலவரே

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாருக்கு தலைவரே.

goma said...

கவிதகள் கற்பனை இல்லை கண்ணீர்த்துளிகளின் வரிகள் என்று அறிந்ததும் கலங்க வைத்துவிட்டது

'பரிவை' சே.குமார் said...

நெஞ்சைத் தொட்ட நெகிழ்ச்சியான பதிவு.

Unknown said...

நெஞ்சை தொட்ட பதிவு நண்பா...,

புலவன் புலிகேசி said...

அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்