கடவுளை மற..மனிதனை நினை..

16 January 2010

டரியல்(16-சனவரி-2010)

7:00:00 PM Posted by புலவன் புலிகேசி 21 comments

புத்தக கண்காட்சியில் ஒரு பதிவர் சந்திப்பு. பல பதிவுலக நண்பர்களை சந்தித்தேன். அதற்கு சென்ற கதை ஒரு பெருங்கூத்து. கேபிளாருக்கு அலைபேசியில் அழைத்தால் அவர் எண் தொடர்பு எல்லைக்கு வெளியில். வேறு எந்த பதிவர் எண்ணும் இல்லாமல் அவதிப்பட்டு நீண்ட நேரம் (சுமார் 1 மணி நேரம்) சுற்றி சுற்றி முயற்சித்து ஒரு வழியாக பிடித்து நண்பர்களுடன் உரையாடி விட்டு வந்தேன். இது பற்றி தனியாக பதிவு போடலாம் என யோசித்து கொண்டிருக்கையில் பொங்கல் வந்து விட்டது. அடுத்த சந்திப்பில் போடறேன்.

---------------

அந்த சந்திப்பில் நண்பர் சர்புதீன் அவர்களை சந்தித்தோம். அவர் "வெள்ளி நிலா" என்ற இதழை நடத்தி வருவதாகவும், இதுவரை காயல்பட்டணம் மற்றும் அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் உலக அறிவு\கல்வி போன்ற விசயங்களை சற்று அதிகமாக பரவசெய்ய வேண்டும் என்பது அதன் நோக்கமாக இருந்ததாகவும், இனி வலைப் பதிவர்களின் ஆக்கங்களை மட்டுமே இடம் பெற செய்ய போவதாகவும் கூறினார். அது குறித்த விபரம் வெள்ளிநிலா. வாழ்த்துக்கள் நண்பரே.

---------------

நமது நண்பர் "பட்டர்ப்ளை சூர்யா"அவர்களிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி என் அலை பேசிக்கு வந்தது. பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி. அவர் இந்த இதழ் சூர்யகதிரில் (16-31) உலக சினமா பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். நேற்று படித்தேன். உலக சினிமா என்பது வாழ்வியலோடு ஒன்றிய ஒன்றாக இருக்க வேண்டும் என எழுதியிருந்தார். கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது. விபரங்களுக்கு இந்த மாத இரண்டாவது இதழ் பாருங்க (16-31).

---------------

அப்புறம் ஊருக்கு வந்து சொந்த பந்தம் நட்புகளை பார்த்து பொங்கல் நல்லபடியா முடிஞ்சி போச்சு. இந்த பொங்கலில் சில நல்லுள்ளம் படைத்த மனிதர்களை சந்தித்தேன். அவர்களை பற்றி ஒரு தனி பதிவாகவே எழுதுகிறேன். அப்புறம் எங்கள் நண்பர்கள் கூட்டம் சிறப்பா முடிஞ்சிது. ஊர் வந்து நண்பர்கள்,அரட்டை, அநாதை இல்லம்னு எல்லாம் எதிபார்த்தபடி நடந்தது.

---------------

அப்பறம் இந்த வார டரியல் நம்ம நண்பர் அகல் விளக்கு எழுதின "மண்ணோடு மரிக்கும் மனங்கள்". நம் நாட்டு விவசாய நிலையை ஆழமாக பதிந்திருக்கிறார். படிச்சி பாருங்க. நன்றி அகல்விளக்கு ராஜா.

---------------

21 விவாதங்கள்:

vasu balaji said...

nice dariyal:)

வினோத் கெளதம் said...

டரியலா தான் இருக்கு ..;)
பதிவர் சந்திப்பு பதிவை சீக்கிரம் போடுங்கள்..

ஈரோடு கதிர் said...

அகல்விளக்கு ராஜாவுக்கு வாழ்த்துகள்

balavasakan said...

ஆயிரத்தில் ஒருவன் பாக்கலயா டரியலில் இடம்பிடிக்கும் என எதிரபாரத்தேன்...
அப்போ இந்த முறை பொங்கல்உங்களுக்கு கலக்கல் ன்னு சொல்லுங்கோ

அகல்விளக்கு said...

//இது பற்றி தனியாக பதிவு போடலாம் என யோசித்து கொண்டிருக்கையில் பொங்கல் வந்து விட்டது. அடுத்த சந்திப்பில் போடறேன்.//

Kandippa Podunga thala. waiting....

//அப்பறம் இந்த வார டரியல் நம்ம நண்பர் அகல் விளக்கு எழுதின "மண்ணோடு மரிக்கும் மனங்கள்". //

nandri thala!!!

கலகலப்ரியா said...

நல்ல பகிர்வு புலிகேசி...

சினிமா புலவன் said...

good tariyal

Paleo God said...

கலக்கல் டரியல்..::))
அகல் விளக்கு பதிவு அருமை..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நன்று.

Ashok D said...

அகல்விளக்கு நுயூஸ் புதிசு, பகிர்வுக்கு நன்றி

ஸ்ரீராம். said...

ஊரிலிருந்து திரும்பியாச்சா..

சங்கர் said...

//புத்தக கண்காட்சியில் ஒரு பதிவர் சந்திப்பு. பல பதிவுலக நண்பர்களை சந்தித்தேன். அதற்கு சென்ற கதை ஒரு பெருங்கூத்து//

பெருங்க்கூத்தை பற்றி கொஞ்சம் பெருசா எழுதறது

வெற்றி said...

ம்ம்..சீக்கிரம் பதிவர் சந்திப்ப போடுங்க..

ஜிகர்தண்டா Karthik said...

புலவர் புலி..
கொடுத்த இரண்டு வாக்குறுதிகளையும் சீக்கிரம் நிறைவேர்த்தவும்... :)

Chitra said...

நல்ல டரியல் தொகுப்பு. வாழ்த்துக்கள்.
விரைவில் சொல்ல பட்டிருக்கும் பதிவுகளும் படிக்க ஆவலை தூண்டி உள்ளீர்கள்.

திவ்யாஹரி said...

உங்களை பார்க்க நெனச்சேன்.. but முடியல.. டரியல் உங்கள் டைரி போல் உள்ளது

Thenammai Lakshmanan said...

how is ur pongal holidays in ur hometown PULIKESI...?

சைவகொத்துப்பரோட்டா said...

பொங்கல் கொண்டாட்டம் நன்றாக இருந்ததா நண்பரே.

Romeoboy said...

ரைட் மேட்டர் சின்னது சின்னதா அழகா இருக்கு .

Unknown said...

நல்ல பகிர்வு நண்பா...

பிரபாகர் said...

Welcome Back புலிகேசி... அகல் விளக்கு ராஜா பற்றிய பகிர்தல் அருமை.

பிரபாகர்.