கந்தசாமி மிகப்பெரும் அரசியல்வாதி. அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவன் என்று கட்சி தலைமையில் அவன் மீது ஒரு அபிப்ராயம். அவன் யார் மீதும் நம்பிக்கையில்லாதவன் ஒருவனை தவிர. உண்மையில் சொன்னால் கந்தசாமி ஒரு அரசியல்வியாதி.
ஆம் இந்த இருபது ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அவன் குடும்பத்திற்காக மட்டுமே சேவை செய்திருக்கிறான். மக்களை பற்றி தேர்தல் நேரத்தில் மட்டுமே கவலைப் படும் வழமையான அரசியல்வியாதிகளுள் அவனும் ஒருவன். அவனுக்கு துணையாக கூட்டாளியாக அந்த ஒருவனும்.
கந்தசாமிக்கு அவன் இருக்கிறான் என்ற எண்ணம் தான் இத்தனை தவறுகளையும் செய்ய தூண்டியது. இவன் எது செய்வதாக இருந்தாலும் அவனிடம் சொல்லி விட்டுதான் செய்வான். எவ்வளவு லஞ்சம் கிடைத்தாலும் நேர்மையாக(?) அவனுக்கும் பங்கு கொடுத்து விடுவான்.
ஆனால் கந்தசாமிக்கு துணையாக நிற்பவன் மீது மக்களில் பலருக்கு நல்லவன் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. ஆனால் அதற்கெல்லாம் தகுதியற்றவன் அவன் என்பது அதே மக்களில் சிலரின் அபிப்ராயம்.
அடுத்த சட்டசபை தேர்தல் நெருங்கியது. கந்தசாமி இந்த முறையும் தான் தான் வெற்றி பெற வேண்டும் என்பதில் மும்முரமாக இருந்தான். அந்த ஒருவனின் இல்லத்தில் வைத்து அவன் உதவியுடன் தொகுதி மக்களுக்கு பணமாகவும் பொருளாகவும் லஞ்சம் பட்டுவாடா செய்தான்.
தேர்தல் நாள் அன்று எதிர்கட்சிக்காரனும் கந்தசாமி ஆட்களும் மாறி மாறி கள்ள வாக்குகள் செலுத்தினர். கந்தசாமி செலவு செய்த பணத்தாலும் போட்ட கள்ள வாக்குகளாலும் வெற்றி பெற்றான். அன்றுடன் அந்த மக்களையும் மறந்து விட்டான்.
ஆனால் அந்த ஒருவனுக்கு மட்டும் மறவாமல் அவன் தொகுதியில் ஒரு வீடு கட்டி கொடுத்தான். மக்களும் மகிழ்ச்சியாக அந்த இல்லத் திறப்பு விழாவிற்கு வந்து விழாவை சிறப்பித்தனர். கந்தசாமி செய்தது நல்ல விடயம் என்று பாராட்டினர்.
அதோடு முடித்து கொண்டு மீண்டும் குடும்பத்தை முன்னேற்றுவதில் குறியாயிருந்தான். வழக்கம் போல் மக்களுக்கும் கந்தசாமி மீது கெட்ட அபிப்ராயம் தோன்றி அவன் மீது கோபம் வர வைத்தது. ஆனால் இந்த கோபத்தை எல்லாம் தேர்தலின் போது மட்டும் பணம் கொடுத்து சரிசெய்து விடலாம் என்ற அரசியல் தந்திரம் தெரிந்தவன் கந்தசாமி.
இப்படி கந்தசாமி மீது அடிக்கடி வரும் கோபம் மக்களுக்கு ஒரு முறை கூட அவனின் கூட்டாளியான அந்த ஒருவன் மீது வரவில்லை. என்ன மக்கள் இவர்கள். ஒருவேளை அந்த கோபம் அவன் மீது வந்திருந்தால் கந்தசாமி போன்றவர்கள் அரசியலில் இருந்து துரத்த பட்டிருப்பார்கள் என்று சிந்திக்கத் தெரியாதவர்கள்.
சரி யார் அந்த ஒருவன்? என்று கேட்பது புரிகிறது. வேற யாரு மக்களை யுகம் யுகமாக ஏமாற்றி கொண்டிருக்கும் கட்வுள்(?). இவனுக்கு கந்தசாமி மட்டும் கூட்டாளியல்ல. இது போல பல தவறு செய்பவர்கள் இவனது கூட்டாளிகள். அவனுக்கு பெயர் கடவுள். என்ன கொடுமை இது.
பி.கு: கடவுள் என்பவன் மனிதத்தில் ஒரு நல்ல குணமாக இருக்க வேண்டுமே தவிற கல்லாகவோ, கோவிலாகவோ இருந்து தவறு செய்பவர்களின் கூட்டாளியாக இருக்க கூடாது. அப்படி பட்டவன் கடவுளாக இருக்கவே முடியாது.

36 விவாதங்கள்:
நல்ல கருத்து...ஆனா நீங்க சொல்றது கடவுளுக்கு கேக்குமா... ??
ஊதற சங்க ஊதி வெப்போம்...
பிரபாகர்.
//ஒருவேளை அந்த கோபம் அவன் மீது வந்திருந்தால் கந்தசாமி போன்றவர்கள் அரசியலில் இருந்து துரத்த பட்டிருப்பார்கள் என்று சிந்திக்கத் தெரியாதவர்கள்.//
இது எப்படின்னு புரியல புலவரே
நன்றி ஜெட்லி, பிரபாகர்
//சங்கர் said...
//ஒருவேளை அந்த கோபம் அவன் மீது வந்திருந்தால் கந்தசாமி போன்றவர்கள் அரசியலில் இருந்து துரத்த பட்டிருப்பார்கள் என்று சிந்திக்கத் தெரியாதவர்கள்.//
இது எப்படின்னு புரியல புலவரே
//
கடவுளை நம்பி முட்டாளாகியிருக்கும் மனிதன் கடவுளை வெறுக்கும் சிந்தனை பெற்றால் நிச்சயம் இது போன்ற அரசியல் வாதிகளையும் வெறுத்து ஒதுக்கியிருப்பர்..
அவனா? அவளா? ஒருவனா? ஒருத்தியா?
முப்பத்து முக்கோடி என்று கணக்கு சொல்றாங்களே?
எதிர்க்கிற நம்மளை விட அதிகமா இருப்பாங்க போலிருக்கே ?
அறியாமையை முதலில் அப்பா அம்மா ஒழிக்கணும்.
பிள்ளையார் சுழி போட்டு சொல்லிக்கொடுக்குறாங்கோ பிள்ளைங்களுக்கு.
எங்கிருந்து மறையும் அறியாமை?
ஒரு ரகசியம் சொல்றேன் கேட்டுக்குங்கோ.
நான் எதிர்கால பிரஜை. தற்காலிகமா இங்கே இப்போ வந்து மாட்டிக்கிட்டிருக்கேன். (காதல் விவகாரம் :-)
எங்க தற்காலத்துல கடவுள் எல்லாம் இல்லீங்கோ.
2172 ஜூன் 4ம் தேதி கடைசிக் கோவிலையும் காட்சியகமா மாத்திட்டாங்கோ.
உங்களுக்கு இன்னும வர வேண்டிய லாறு; எங்களுக்கு வந்துவிட்ட வரலாறு. உண்மைங்கோ.
சரி யார் அந்த ஒருவன்? என்று கேட்பது புரிகிறது. வேற யாரு மக்களை யுகம் யுகமாக ஏமாற்றி கொண்டிருக்கும் கட்வுள்(?).
உண்மைதான் நண்பரே அருமையான கதை சிந்திக்கத்தூண்டுவதாக இருக்கிறது..
கோயில் உண்டியல் நிறைவதன் ரகசியம் என்ன?
தான் செய்த பாவத்தின் பங்குதான் அந்த உண்டியல் நிறைதல்...
அரசியல்வாதியாவது மக்களை மட்டும் தான் ஏமாற்றுகிறான்...
ஆனால் இந்த மக்கள் கடவுளின்பெயரால் தங்களையும் ஏமாற்றிக்கொண்டு..
தாங்களும் ஏமாந்துபோகிறார்கள்..
பி.கு.ஏற்ககூடியது. கடவுளின் மீது பக்தி இருக்க வேண்டும், பயம் இருக்க கூடாது. பயம் வரும்பொழுதுதான் நாம் சுலபமாக சில "போலிகளிடம்" ஏமாறுகிறோம்.
கடவுள் மக்களுக்குப் புத்திக் கொடுப்பதா(அதாவது அவனைக் காட்டிக் கொடுப்பதா) அல்லது அவனைத் திருத்துவதா என சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் வெளிவந்துள்ளது இக்கட்டுரை. இதற்கும் உதவி இருக்கிறான் என்பதன் மூலம் அவன் நேர்மையைப் பாராட்டுவோம்.
'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்'
/கடவுளை நம்பி முட்டாளாகியிருக்கும் மனிதன் கடவுளை வெறுக்கும் சிந்தனை பெற்றால் நிச்சயம் இது போன்ற அரசியல் வாதிகளையும் வெறுத்து ஒதுக்கியிருப்பர்../
அப்படியானால் தி.க. ஏன் எப்போதும் ஆளும்கட்சியோடு தொங்குகிறது. ஆண்டவனுக்கு அரசியல் அவுட் ஆஃப் சிலபஸ்னு வேணா சொல்லலாம்.
சிந்தனையை தூண்டும் இடுகை..
சவுக்கடி பதிவு.., வாழ்த்துக்கள்...
நல்ல கதை... கடவுளைக் குறை சொல்வதைவிட மீண்டும் மீண்டூம் வாக்களித்து ஏமாறும் மக்களை என்ன சொல்வது?? மக்கள் எப்பக்கமோ கடவுளும் அப்பக்கம் என்று வைத்துக்கொள்ளலாம் இல்லையா?
புலவரே மிக நல்ல இடுகை
அதில் குணசீலன்சாரும் அரங்கம் பெருமாள் சாரும் சொன்ன கருத்துக்களுடன் இயைந்து போகிறேன்
கதை நல்ல இருக்கு, நீங்க பின் குறிபெல்லாம் போடாமலே விட்டு விடலாம் என்று தோன்றுகிறது.
நல்ல கதை...
சும்மா 'நச்'சுன்னு இருக்கு தல...
ஆனா யாருக்குத்தான் உறைக்கப்போகுதோ..
புலிகேசி
திராவிடர் கழகம் ஜெயல்லிதாவை ஒரு பதினைந்து ஆண்டுகாலம் ஆதரித்த்து. அதில் 1991-96ம் அடங்கும். அந்த காலகட்டத்தில் Jஜெயா ச்சிகலா கூட்டணி அடித்த கொள்ளையை நாடே அறியும். கடவுளை தூக்கி எறிந்த திராவிடர் கழக தலைவருக்கு அது தெரியாதா.. அஅஅஅஅ
கடவுளை நம்பி முட்டாளாகியிருக்கும் மனிதன் கடவுளை வெறுக்கும் சிந்தனை பெற்றால் நிச்சயம் இது போன்ற அரசியல் வாதிகளையும் வெறுத்து ஒதுக்கியிருப்பர்..
இது போல பல தவறு செய்பவர்கள் இவனது கூட்டாளிகள். அவனுக்கு பெயர் கடவுள். என்ன கொடுமை இது.
உண்மை தான் புலவரே.. கடவுள் படித்து திருந்த வேண்டும்.. அரசியல்வாதி.. அரசியல்வியாதி சரியான வார்த்தைகள்..
கடவுள் என்பவன் மனிதத்தில் ஒரு நல்ல குணமாக இருக்க வேண்டுமே தவிற கல்லாகவோ, கோவிலாகவோ இருந்து தவறு செய்பவர்களின் கூட்டாளியாக இருக்க கூடாது. அப்படி பட்டவன் கடவுளாக இருக்கவே முடியாது.
அருமையான கருத்து நண்பா....
கடவுள் உண்டா இல்லையா இது எனது அறிவுக்கு அப்பால்பட்ட கேள்வி சிலவேளை கடவுளா ஹி..ஹி... என்று எண்ண தோன்றுகிறது சிலவேளை ஏதோ ஒரு சகதி மேலே இருப்பதாகவே தோன்றுகிறது ஆனால் உலகத்தில் நடப்பது என்னவோ ... புரியவில்லை..
கடவுள் என்று சொல்லி கேள்விக் குறி இட்டிருக்கிறீர்கள்....அவனோடு கூட்டு என்றும் சொல்கிறீர்கள்...இருக்கிறான் என்று சொல்கிறீர்களா இல்லை என்று சொல்கிறீர்களா...அல்லது கமல் போல இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்கிறீர்களா?
ம்ம்.. :)
நல்ல கட்டுரை....
//கடவுள் என்பவன் மனிதத்தில் ஒரு நல்ல குணமாக இருக்க வேண்டுமே தவிற கல்லாகவோ, கோவிலாகவோ இருந்து தவறு செய்பவர்களின் கூட்டாளியாக இருக்க கூடாது. அப்படி பட்டவன் கடவுளாக இருக்கவே முடியாது.//
இதை அப்படியே ஏற்கிறேன்.
//கடவுள் என்பவன் மனிதத்தில் ஒரு நல்ல குணமாக இருக்க வேண்டுமே தவிற கல்லாகவோ, கோவிலாகவோ இருந்து தவறு செய்பவர்களின் கூட்டாளியாக இருக்க கூடாது. அப்படி பட்டவன் கடவுளாக இருக்கவே முடியாது.//
கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள்
கடவுள் யார் என்று தேடுபவனும் முட்டாள்
புரியலயா !
//அப்பாதுரை said...
அவனா? அவளா? ஒருவனா? ஒருத்தியா?
முப்பத்து முக்கோடி என்று கணக்கு சொல்றாங்களே?
எதிர்க்கிற நம்மளை விட அதிகமா இருப்பாங்க போலிருக்கே ?
அறியாமையை முதலில் அப்பா அம்மா ஒழிக்கணும்.
பிள்ளையார் சுழி போட்டு சொல்லிக்கொடுக்குறாங்கோ பிள்ளைங்களுக்கு.
எங்கிருந்து மறையும் அறியாமை?
ஒரு ரகசியம் சொல்றேன் கேட்டுக்குங்கோ.
நான் எதிர்கால பிரஜை. தற்காலிகமா இங்கே இப்போ வந்து மாட்டிக்கிட்டிருக்கேன். (காதல் விவகாரம் :-)
எங்க தற்காலத்துல கடவுள் எல்லாம் இல்லீங்கோ.
2172 ஜூன் 4ம் தேதி கடைசிக் கோவிலையும் காட்சியகமா மாத்திட்டாங்கோ.
உங்களுக்கு இன்னும வர வேண்டிய லாறு; எங்களுக்கு வந்துவிட்ட வரலாறு. உண்மைங்கோ.
//
நன்றி தல..கூட்டத்தை பார்த்து பயப்படாம நம்ம வேலையை செஞ்சிட்டிருப்போம். நம்ம பக்கம் நிச்சயம் கூட்டம் வரும்
//முனைவர்.இரா.குணசீலன் said...
சரி யார் அந்த ஒருவன்? என்று கேட்பது புரிகிறது. வேற யாரு மக்களை யுகம் யுகமாக ஏமாற்றி கொண்டிருக்கும் கட்வுள்(?).
உண்மைதான் நண்பரே அருமையான கதை சிந்திக்கத்தூண்டுவதாக இருக்கிறது..
கோயில் உண்டியல் நிறைவதன் ரகசியம் என்ன?
தான் செய்த பாவத்தின் பங்குதான் அந்த உண்டியல் நிறைதல்...
அரசியல்வாதியாவது மக்களை மட்டும் தான் ஏமாற்றுகிறான்...
ஆனால் இந்த மக்கள் கடவுளின்பெயரால் தங்களையும் ஏமாற்றிக்கொண்டு..
தாங்களும் ஏமாந்துபோகிறார்கள்..
//
உண்மை நண்பரே..நன்றி..நிச்சயம் ஒரு நாள் தெளிவு பிறக்கும்.நம்புவோம்.
நன்றி
சைவகொத்துப்பரோட்டா
அரங்கப்பெருமாள்
//வானம்பாடிகள் said...
/கடவுளை நம்பி முட்டாளாகியிருக்கும் மனிதன் கடவுளை வெறுக்கும் சிந்தனை பெற்றால் நிச்சயம் இது போன்ற அரசியல் வாதிகளையும் வெறுத்து ஒதுக்கியிருப்பர்../
அப்படியானால் தி.க. ஏன் எப்போதும் ஆளும்கட்சியோடு தொங்குகிறது. ஆண்டவனுக்கு அரசியல் அவுட் ஆஃப் சிலபஸ்னு வேணா சொல்லலாம்.
//
அந்த தி.க கட்சிகயிலும் ஊரை ஏமாற்றும் ஆத்திகர்கள் நாத்திகன் என்ற போர்வையிலிருப்பதால்..
நன்றி
பூங்குன்றன்.வே
பேநா மூடி
பாலாசி
//க.பாலாசி said...
நல்ல கதை... கடவுளைக் குறை சொல்வதைவிட மீண்டும் மீண்டூம் வாக்களித்து ஏமாறும் மக்களை என்ன சொல்வது?? மக்கள் எப்பக்கமோ கடவுளும் அப்பக்கம் என்று வைத்துக்கொள்ளலாம் இல்லையா?
//
அதுதான் தவறு பாலாசி..மக்கள் ஏமற்றபடுவது தொடங்குவதே இது போன்ற கடவுளிடம் தான்
நன்றி
thenammailakshmanan
இனியாள்
அகல்விளக்கு
//Anonymous said...
புலிகேசி
திராவிடர் கழகம் ஜெயல்லிதாவை ஒரு பதினைந்து ஆண்டுகாலம் ஆதரித்த்து. அதில் 1991-96ம் அடங்கும். அந்த காலகட்டத்தில் Jஜெயா ச்சிகலா கூட்டணி அடித்த கொள்ளையை நாடே அறியும். கடவுளை தூக்கி எறிந்த திராவிடர் கழக தலைவருக்கு அது தெரியாதா.. அஅஅஅஅ
//
நன்றி நண்பரே...வானம்பாடிகள் ஐயாவுக்கு சொன்ன அதே பதில்தான் உங்களுக்கும்...
நன்றி
divyahari
Balavasakan
ஸ்ரீராம்.
//ஸ்ரீராம். said...
கடவுள் என்று சொல்லி கேள்விக் குறி இட்டிருக்கிறீர்கள்....அவனோடு கூட்டு என்றும் சொல்கிறீர்கள்...இருக்கிறான் என்று சொல்கிறீர்களா இல்லை என்று சொல்கிறீர்களா...அல்லது கமல் போல இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்கிறீர்களா?
//
குழப்பமே வேண்டாம். கடவுள் என்பது வெறும் பெயரே..நல்ல குணங்களுக்கு பயன்படுத்த வேண்டியது கல்லுக்கு பயன்படுத்த படுகிறது..
நன்றி
கலகலப்ரியா
சி. கருணாகரசு
ராஜவம்சம்
//ராஜவம்சம் said...
//கடவுள் என்பவன் மனிதத்தில் ஒரு நல்ல குணமாக இருக்க வேண்டுமே தவிற கல்லாகவோ, கோவிலாகவோ இருந்து தவறு செய்பவர்களின் கூட்டாளியாக இருக்க கூடாது. அப்படி பட்டவன் கடவுளாக இருக்கவே முடியாது.//
கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள்
கடவுள் யார் என்று தேடுபவனும் முட்டாள்
புரியலயா !
//
நாங்கள் தேடவில்லை..புரிந்திருக்கிறோம். அந்த கடவுளின் புரிதல் அனைவருக்கும் வேண்டும் என்கிறோம். சும்மா காரணமில்லாமல் அடுத்தவனை முட்டாள் என சாடுவதுதான் முட்டாள்தனம்..
நண்பரே
திக வீரமணி நாத்திகர்தான். அதில் ஒன்றும் சந்தேகமில்லை. அவர் உண்மையில் ஆத்திகராக உள்ளார் என நீங்கள் கருதினால் அதனை ஆதாரத்துடன் நிறுவ வேண்டும். ஊர்ப்பக்கம் முழங்காலுக்கும் முக்காட்டுக்கும் முடிச்சுப் போடுறதுன்னு ஒரு பழமொழி சொல்வாங்க•. அதத்தான் நீங்க இணையத்தில் செய்கின்றீர்கள். இதனைப் புரிந்து கொள்ள மதம் என்ற நிறுவனத்தின் தோற்றம் பற்றிய வரலாற்றை தாங்கள் படித்து அறிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
மதம் என்பது அரசு நிகழ்த்தும் தவறு, கொடூரங்களை மறைக்கின்ற உறுப்பாகத்தான் வரலாறு நெடுகிலும் நிலவி வந்துள்ளது. இவ்வுலகில் கஷ்டப்படுபவர்களுக்கு மறு உலகில் சொர்க்கம் நிச்சயம் என்பதை சொல்லாத மதம் ஏது.. அதுதான் எதிர்கால சொர்க்கத்திற்காக நிகழ்காலத்தில் நீங்கள் குறிப்பிடும் அரசியல்வாதிகளால் தமக்கு தீங்கு நேர்ந்தாலும் மக்களை அமைதி காக்க வைக்கின்றது. கடவுள் அதன் பிரதிநிதி. வில்லனான கடவுளை நீங்கள் கதாநாயகனாக்க முயற்சி செய்கின்றீர்கள்.
//அதுதான் எதிர்கால சொர்க்கத்திற்காக நிகழ்காலத்தில் நீங்கள் குறிப்பிடும் அரசியல்வாதிகளால் தமக்கு தீங்கு நேர்ந்தாலும் மக்களை அமைதி காக்க வைக்கின்றது. கடவுள் அதன் பிரதிநிதி. வில்லனான கடவுளை நீங்கள் கதாநாயகனாக்க முயற்சி செய்கின்றீர்கள்.//
நான் ஒன்றும் கதாநாயகனாக்க முயற்சி செய்யவில்லை. அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் கடவுளை வெறுத்தாலும் முழுமையான பகுத்தறிவு பெறாதவர்களே...
//கடவுளை நம்பி முட்டாளாகியிருக்கும் மனிதன் கடவுளை வெறுக்கும் சிந்தனை பெற்றால் நிச்சயம் இது போன்ற அரசியல் வாதிகளையும் வெறுத்து ஒதுக்கியிருப்பர்..//
//நாங்கள் தேடவில்லை..புரிந்திருக்கிறோம். அந்த கடவுளின் புரிதல் அனைவருக்கும் வேண்டும் என்கிறோம். சும்மா காரணமில்லாமல் அடுத்தவனை முட்டாள் என சாடுவதுதான் முட்டாள்தனம்..//
இரண்டுமே நீங்கள் சொன்னதுதான்
நன்றி மீண்டும் வருவோம்
பகுத்தறிதல் என்பது மனிதனுக்கான திறமைகளில் ஒன்று. பகுத்து அறிய முடிந்தவர்களால் தவறுகளை தெளிவாக அறிந்து செய்ய முடியும். மற்றபடி பகுத்தறிவு என்பது இருந்தாலே ஒருவன் ஆதாயம் தேடாமல் இருப்பான் என்பது லாஜிக் ஆக இல்லையே. சரியாக சொன்னால் பகுத்தறியும் திறமைதான் நாட்டில் ஆடிட்டர்களையும், புரோக்கர்களையும் உருவாக்கி இருக்கிறது. அவர்களது தொழில் திறமையால் பணம் சம்பாதிப்பதை அதாவது சமூகத்திற்கு கேடு விளைவிப்பதன் மூலம் தமக்கு ஆதாயம் தேடுவதை பகுத்தறிவற்றவர்கள் என்று முத்திரை குத்துவதால் பகுத்தறிவற்றவராகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றீர்களே அது ஏன்...
kadavulnambikkai yenbathu ovovru manitha piravium sariyanavaliyil valvatharkea
Post a Comment