கடவுளை மற..மனிதனை நினை..

01 February 2015

மோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா?

9:52:00 AM Posted by புலவன் புலிகேசி No comments
இது குறித்து என் கல்லூரி நண்பர்கள் சிலருடன் விவாதம் நடந்தது.ஆடை என்பது உடலை மறைக்கும் பொருள் என்ற காலம் போய் நவ நாகரீகம் என்ற பெயரில் பல மாற்றங்களும் வடிவமைப்புகளும் வந்து விட்டன. ஒருவன் அணியும் ஆடை லட்சங்களிலோ கோடிகளிலோ இருக்க வேண்டிய அவசியம் ஏதாவது இருக்கிறதா? என முதலில் சிந்திக்க வேண்டும்.

ஒபாமா வருகையின் போது மோடி ஒரே நாளில் சினிமா நடிகனை போல் மூன்று வித ஆடைகளை மாற்றி காட்சி அளித்தார். இதன் அவசியம் என்ன? எனக்கு புரியவில்லை.

இரண்டாவது அவர் அணிந்திருந்த ஒரு ஆடையில் தன பெயரையே தைத்து போட்டிருந்தார். அதன் அவசியம் என்ன? தன்னை ஒரு தேச பக்தனாக அடையாளப் படுத்திக் கொண்டு மக்களிடம் ஓட்டு வாங்கிய மோடி "இந்தியன்" என தன் சட்டையில் தைத்து போட்டிருக்கலாம். அதோடில்லாமல் அந்த சட்டை தைக்க லட்சங்களில் செலவானதாக கூறப் படுகிறது.


அது உண்மையா? பொய்யா? என்ற விவாதத்தை தள்ளி வைத்து விடுவோம். மோடியின் ரசிக கோமாளிகள் சொல்வது என்ன என்றால் லட்சங்களில் ஆடை வாங்கி அணிய மோடிக்கு தகுதி இருக்கிறது. அவர் அணிகிறார் என்பது தான்.

அது என்ன தகுதி என கேட்டால் அவர் இந்திய பிரதமர் என்பது தான் பதில். ஒரு ஏழை இந்தியாவின் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்ததாக அடையாளப் படுத்தி வாக்கு வங்கியை நிறைத்து பிரதமரான ஒருவர் எளிமையான அல்லது தான் இருக்கும் இடத்திற்கு சாதாரணமான வழக்கமாக அணியும் ஒரு ஆடையே போதுமானது எனும் போது இந்த ஆடம்பரம் எதற்கு?

டெல்லியில் பெண்களின் பாதுகாப்புக்கு எந்த ஏற்பாடும் செய்யாமல் ஒபாமா வருகையின் போது பல லட்சம் செலவழித்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியது எதற்கு?

குறிப்பு: நான் இப்போது இருக்கும் இடத்திற்கு வழக்கமாக அணியும் ஒரு ஆடையை தான், குறைந்த செலவில் தான் அணிந்து வருகிறேன். இதுவும் அந்த மோடியின் ரசிக கோமாளிகளுக்காக சொல்லிக் கொள்கிறேன்.

0 விவாதங்கள்: