இரண்டு நிகழ்வுகள் ஒரே நாளில். ஒன்று மும்பையில் குண்டு வெடித்து பலர் பலி. இன்னொன்று சிகிச்சை முடிந்து ரஜினி சென்னைத் திரும்பினார். இவை தொடர்பாக நான் சந்தித்த இரண்டு சம்பவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
சம்பவம்-1
அலுவல் முடித்து வீடு வந்துத் தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்து ஹெட்லைன்ஸ் டுடே சானலுக்கு நகர்ந்தேன். மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடித்து 20க்கும் மேற்பட்டோர் பலி என்ற செய்தியைப் பார்த்ததும் நண்பன் ஒருவனை அலைபேசியில் அழைத்து
"எங்கடா இருக்க?" என்றேன்.
"தலைவரைப் பாக்க ஏர்போர்ட் வந்துருக்கண்டா" என்றான்.
"மும்பையில 3 இடத்துல குண்டு வெடிச்சிருக்குடா" என்றேன்.
"ஓ அப்புடியா! சரிடா ஒரே சத்தமா இருக்கு! தலைவர் வந்துட்டாருன்னு நெனைக்கிறேன். அப்பறமா கால பன்றேண்டா" என்று சொல்லி கட செய்தான்.
சம்பவம்-2
நான் செய்தியைப் பார்த்துக் கொண்டிருக்கையில் என்னுடன் தங்கியிருக்கும் நண்பன் விட்டிற்குள் நுழைந்தான்.
"எங்கடா மும்பைலையா?" என்றான்.
"ஆமாண்டா" என்றேன்.
"சரி சண் நியூஸ் வைடா. தலைவரைக் காமிக்கிறாங்கலாம்" என்றான்.
சன் செய்திகளின் முக்கிய செய்திகளில் முதலிடத்தில் "மும்பை சம்பவமும்" இரண்டாமிடத்தில் "ரஜினி வருகையும்" இடம் பிடித்திருந்தது.
இதைப் பார்த்த நண்பன் சொன்னான் "சே! இன்னைக்கு மட்டும் குண்டு வெடிக்கல எங்க தலைவரு நியூஸ் தான் ஃபஸ்ட். மிஸ் ஆயிருச்சு" என்றான்.
7 விவாதங்கள்:
நிஜ மனித உயிரை விட, நிழல் மனிதனுக்குத்தான் இந்த தமிழ் எப்பவுமே மரியாதையை குடுக்குறான், இலங்கை தமிழர்களை கொன்று குவிப்பதையே இவனுக்கு ஒரு பொருட்டு இல்லை என்னும்போது, மும்பை குண்டு வெடிப்பையா கண்டுக்க போறான்/.
குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தார் அமைதிகாக பிராத்திப்போம்.
மனொவியாதி போலவே ஆகிவிட்டது சிலருக்கு.. அதிலிருந்து மீளமுடியாமல்..
அவரவர் வீட்டில் நடந்தால் ஒருவேளை வலி புரியுமோ என்னமோ?.
எங்கோ நடக்கும் ஈழப்போர் , எங்கோ வெடிக்கும் குண்டுகள் , எங்கோ ஒரு பெண்ணுக்கு அநீதி ..
தம் விட்டு வாசல் தட்டும்வரை புரிவதில்லை சிலருக்கு..:((
//நிஜ மனித உயிரை விட, நிழல் மனிதனுக்குத்தான் இந்த தமிழ் எப்பவுமே மரியாதையை குடுக்குறான், இலங்கை தமிழர்களை கொன்று குவிப்பதையே இவனுக்கு ஒரு பொருட்டு இல்லை என்னும்போது, மும்பை குண்டு வெடிப்பையா கண்டுக்க போறான்///
வழிமொழிகிறேன்.
3 மாதத்திற்கு ஒரு குண்டு வெடிப்பும் உலகத்தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை ஆறுதல் சொல்வதும் அனிச்சை செயலாகி போய்விட்டது.
இலங்கை தமிழர்கள் என்ன, எந்த ரத்தக் கரையையும் கண்டு கொள்ளாத முடமாகிப்
போய்விட்டார்கள். சினிமா மோகம் என்று தான் போகுமோ பராபரமே..
தன் மனைவிக்கும் ,தனது தங்கைக்கும் இழிவு நேராத வரை எவருக்கும் கோபமோ , இரக்கமோ வரப்போவதில்லை.
நிஜ மனித உயிரை விட நிழல் மனிதனுக்குத்தான் மரியாதை.
திவிரவாதம் அழிய வேண்டும்
நிறைய பேருக்கு அது தான் ரொம்ப முக்கியமா படுத்து
Post a Comment