ஆறறிவு வாழ்வின் அதிர்ஷ்டத்தை
ஓரறிவு கிளியிடம் கேட்டவனுக்கு
புரியவில்லை அதிர்ஷ்டம் உழைப்பில்
உள்ளது என்று
திருமணம் நடக்க பரிகாரம்
என்ன சோசியக்காரனை கேட்டவனுக்கு
தெரியவில்லை ஜாதகத்தை தூக்கியெறிந்தால்
நடக்கும் என்று
எதிர்காலம் அறிய் கைரேகை
பார்த்தவன் அறியவில்லை
முயற்சியிருந்தால் ஒளி மயமான
எதிர்காலம் என்று
நாடித் துடிப்பை மருத்துவனிடம்
காட்டாமல் சோசியக்காரனிடம்
காட்டி கேட்டான் ஆயுள்
எப்படி என்று
37 விவாதங்கள்:
கருத்துள்ள கவிதை.அருமை நண்பா.
ஆனால் இப்போ நம்ம மக்கள் கிளிகிட்ட போறாங்களோ இல்லையோ கணினிகிட்ட ஜோசியம் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.
எங்க பார்த்தாலும் ஜோசியத்தின் மீது வைக்கும் நம்பிக்கையை தன்மேல் வைத்தால் முன்னேறுவான் !!!
இப்போது ஜோசியத்தை விட ஆலய வழிபாட்டிலும் மக்கள் நிறையவே ஈடுபடுகிறார்கள். அதுவும் கண்மூடித்தனமாக. இதற்கு முக்கிய காரணம் என்ன என்றால் மக்களுக்கு பயம் அதிகமாகி விட்டது. பயத்துக்கு காரணம் நம்பிக்கையின்மை.
சாடல்கள் அருமை புலிகேசி...
பிரபாகர்.
//இதப்பத்தி என்ன நெனக்கிறீக???//
புலவரே கலக்குங்க ..:))
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்! அருமையான கவிதை.
ஆமாம் நண்பா வியாழ மாற்றம் சனிமாற்றம் ன்னு எல்லோரும் கிரக மாற்றங்கள தான் நம்புறாங்களே ஒழிய தான் மாறணும் ன்னு எவனும் நினைச்சதில்ல...
அருமையான சிந்தனை நண்பா..!
வழக்கம்போலவே கலக்கல் நண்பரே.
அருமையான கவிதையும் சாடலும். இறை நம்பிக்கை இருக்கலாம், ஆனால் அதிலேயே மூழ்கிவிடக்கூடாது. அய்யா நான் இன்று ஒரு பதிவு இட்டுள்ளேன். நல்ல நிகழ்வுகளைப் படம் பிடித்துள்ளேன் பார்க்கவும். நன்றி.
கவிதையின் கருத்து அருமை... வார்த்தைப் பிரையோகங்களை சிரிது மாற்றவும்...
கலக்கல்
நாடித் துடிப்பை மருத்துவனிடம்
காட்டாமல் சோசியக்காரனிடம்
காட்டி கேட்டான் ஆயுள்
எப்படி என்று
...................ஜோசியத்தை மட்டுமில்லை, அதிர்ஷ்ட கல், பெயர் மாற்றம், வாஸ்த்து என்று நம்பிக்கை எங்கெல்லாமோ வேரூன்றி இருக்கின்றன. வெளிச்சத்தை நம்பாமல் இருளை நம்பி........... ம்ம்ம்மம்ஹும்.....
அருமை
கிளி ஜோசியம் மலையேறிப் போய் கம்ப்யூட்டர் ஜோசியம் வந்துருச்சு தல..
ஆனா மக்கள்தான் இன்னும் மாறாமல்..
கவிதை சாட்டையடி!
கடைசி கிளாஸ்.
nice one
Really super!!!
Everyone should think about it that how much they are mad by believening these things
//நாடித் துடிப்பை மருத்துவனிடம்
காட்டாமல் சோசியக்காரனிடம்
காட்டி கேட்டான் ஆயுள்
எப்படி என்று//
‘அட’ போட வச்சிட்டீங்களே நண்பா...
கவிதை அருமை...நல்ல சிந்தனை...
நல்ல சிந்தனைக்குட்படுத்த வேண்டிய பதிவு....
தல, தொடர்ந்து சாடுங்கள் இதுபோன்ற நிகழ்வுகள...
வலைத்தளங்களும் துணை போகின்றன என்பதே மிக வருத்தமான உண்மை
எல்லாமே அருமை:) பாராட்டுகள்.
திருஷ்டும் என்றால் பார்வை அதிர்ஷ்டம் என்றல் குருட்டுப்பார்வை..
அதிர்ஷ்டம் உழைப்பில் தான் உள்ளது என்பதை அறியாத பார்வைக் குறைபாடு உடையவர்கள்.
உடல் ஊனமுற்றவர்களைக் கூட இப்போதெல்லாம் மாற்றத்திறானாளர்கள் என்றே அழைக்கிறார்கள்..
சோதிடத்தை நம்புபவர்கள் “ மனம் ஊனமுற்றவர்கள்“
அவர்களும் உணருமாறு உள்ளது கவிதை..
http://nanavuhal.wordpress.com/2010/01/02/kolai/#comment-1902&id=858425
சோதிடர்கள் என்னும் கொலையாளிகள்…!
என்னும் இந்த இடுகையைப் படியுங்கள் நண்பரே..
நிகழ்கால் சமூக நிலை தெளிவாக விளங்கும்..
அருமை அருமை தோழா. சரியான நெத்தியடி. நம்பிக்கை மனிதனுக்கு எதன்மேலெல்லாம் போகிறது அவனைத்தவிர..
மிக நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.....
நல்லா இருக்கு கவிதை நல்ல கருத்துக்களும்
கரெக்ட்ஆ சொன்னிங்க,,,,
உண்மைதான்...
எதிர்காலம் அறிய் கைரேகை
பார்த்தவன் அறியவில்லை
முயற்சியிருந்தால் ஒளி மயமான
எதிர்காலம் என்று"//
ரசித்த வரிகள்
/எதிர்காலம் அறிய் கைரேகை
பார்த்தவன் அறியவில்லை
முயற்சியிருந்தால் ஒளி மயமான
எதிர்காலம் என்று
நாடித் துடிப்பை மருத்துவனிடம்
காட்டாமல் சோசியக்காரனிடம்
காட்டி கேட்டான் ஆயுள்
எப்படி என்று/
நன்றாக இருக்கிறது
இந்த ஜோசியத்தை நம்புறவங்க முதல்ல அவங்களை அவங்களே நம்பணும்.அப்புறம் ஜோசியம் தேவைப்படாது.
நல்லாருக்குங்க.
நல்ல சிந்தனை..
இதே சிந்தனையை யாரும் சொல்லாத வேறுவடிவத்தில்/வேறுகோணத்தில் சொல்ல முயற்சி செய்யுங்கள் நண்பா.. இன்னும் நல்லாருக்கும்.
//நாடித் துடிப்பை மருத்துவனிடம்
காட்டாமல் சோசியக்காரனிடம்
காட்டி கேட்டான் ஆயுள்
எப்படி என்று//
சில மருத்துவர்களிடம் காட்டினாலும் நமக்கு நேரம் சரியில்லாம போயிடும்
விஜய்
சிந்திக்கத் தூண்டும் இடுகை..
ஜோஸ்யம் நல்ல வழிகாட்டிதான் .அதற்காக வழிகாட்டி மரத்தின் அடியிலேயே அமர்ந்து கொண்டால் ஊர் போய்ச் சேருவது எப்படி?
என்னைக் கேட்டால் ,ஜோஸ்யத்துக்கு விளக்கம் இதுதான்
மருத்துவர் மட்டும் நம் ஆயுளைக் கணித்து விடுவாரா....
Post a Comment