கடவுளை மற..மனிதனை நினை..

09 January 2010

டரியல் (09-சனவரி-2009)

6:05:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments

அடுத்த வாரம் பொங்கல் வருது. சொந்த ஊருக்கு போய் அப்பா, அம்மா, அண்ணன், ஊர் நட்புகளை பார்க்க 2 மாதங்களுக்கு பிறகு வாய்ப்பு வந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் எங்கள் நண்பர்கள் குழு விழாவை எண்ணியும் மகிழ்ச்சி பெருகும் வாரமாக இருக்கிறது இந்த வாரம்.

------------------------

அஜீத்தின் அசல் பட பாடல்கள் வெளிவந்திருக்கிறது. கேட்டேன் பாடல்கள் சுமார் ரகமாகத்தான் தோன்றுகிறது. படமாவது நல்லா இருந்தா சரி.

நான் எதிர்பார்த்து கொண்டிருக்கும் தாமரையின் வரிகளால் நிரப்பப் பட்ட "வி்ண்ணைத்தாண்டி வருவாயா" பாடல்கள் இன்னும் மூன்று தினங்களில் வெளிவர இருக்கிறது.எனக்கு கிடைத்த ஒரு பாடலில் தாமரையின் இரு வரிகள் இதோ,

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் கொடுப்பேன்
நீ உடைக்கவே

எப்புடி இருக்குன்னு சொல்லுங்க. கேட்டதும் சட்டென மனதில் ஒட்டிய வரிகள்.
------------------------

ஒரு காலத்தில் மட்டைபந்து வெறியனாக திரிந்த எனக்கு அதிலிருந்த ஆரவம் குறைந்து போய் விட்டது. முத்தரப்பு மட்டைபந்து போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு (?) பங்களாதேசால் கூட 300ஐ நெருங்க வைத்தது வெறுப்பை ஏற்படுத்தியது. இந்திய மட்டைபந்து குழுமம் அரசியல் பார்க்காமல் சிறந்த வீரர்களை தேர்வு செய்யும் காலம் வருமா?
------------------------

எனது முதல் இடுகை(ஆதங்கம்)யான "பிச்சை காரனின் பிள்ளைகள்......." எத்தனை பேர் படித்திருப்பீர்கள் எனத் தெரியவில்லை. ஒரு நாள் அலுவலக இடைவேளையின் போது பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகளை பார்த்ததும் மனதிற்குள் ஏற்பட்ட வலிதான் இந்த பதிவு. இந்த குழந்தைகளின் நிலை அனாதைக் குழந்தைகளை விட கொடியது.
------------------------

இந்த வார டரியல் எங்கள் ப்ளாக்கின் "மனிதம் (சொன்னது பாதி....)". மனிதம் அனிச்சை செயலாக வெளிப்பட்டிருப்பதை சொல்லியிருக்கும் பதிவு. இந்த மனிதம் எத்தனை பேரிடம் மீதமிருக்கிறது எனத் தெரியவில்லை.
------------------------

அடுத்த வார டரியல் முதல் வாரம் ஒரு பதிவரையும் அறிமுகப் படுத்தலாம் என்றிருக்கிறேன். அதில் அந்த பதிவரின் பதிவுகளில் என்னைக் அவர்ந்த சில பதிவுகளையும் சேர்த்து அறிமுகப் படுத்தவிருக்கிறேன்.
------------------------

25 விவாதங்கள்:

ஜெட்லி... said...

//பாடல்கள் சுமார் ரகமாகத்தான் தோன்றுகிறது. படமாவது நல்லா இருந்தா சரி.
//

repeat..

வெற்றி said...

பொங்கல் வாழ்த்துக்கள் தல..ஊரில் அனைவரின் நலம் கேட்டதாக சொல்லுங்கள்..

விண்ணை தாண்டி வருவாயா வரிகள் நச்..

பிரபாகர் said...

கிரிக்கெட் பற்றி எனது எண்ணமும் அதுவே!

ஊரில் சென்று கலக்குங்கள். எல்லோரையும் விசாரித்ததாய் சொல்லுங்கள்...

பிரபாகர்.

சைவகொத்துப்பரோட்டா said...

மனிதம், மனித நேயம் எல்லாம் இப்பொழுது காணாமல் போய் கொண்டு இருக்கிறது நண்பா.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .

Subankan said...

அசல் என்னையும் கவரவில்லை.

வி்ண்ணைத்தாண்டி வருவாயாக்கு நானும் வெயிட்டிங் - இசைக்காக

மட்டைப்பந்து - டோனியே ஒத்துக்கொண்டுவிட்டாரே

பிச்சைக்காரனின் பிள்ளைகள் - :(

பதிவர் அறிமுகம் - நல்ல விடயம்

Raju said...

\\ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் கொடுப்பேன்
நீ உடைக்கவே\\

இது பைபிள் ரீமிக்ஸ் பாஸ்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு.

:-)

ஸ்ரீராம். said...

பொங்கலுக்கும் சொந்த ஊர், நண்பர்கள் அனுபவத்துக்கும் வாழ்த்துக்கள்.

கண்ணிரண்டு வைத்தாய்...கையிரண்டு வைத்தாய்...இதயம் மட்டும் ஒன்று வைத்தாய் என்று ஒரு பாட்டு உண்டு...மறு இதயம் எப்படிக் கொடுப்பது?

நன்றி..நன்றி...எங்கள் ப்ளாக் மனிதம் பற்றிய பாராட்டுக்கும் சுட்டியமைக்கும்

ஸ்ரீராம். said...

மற்ற எல்லா இடங்களிலும் தமிழ் 10 வாக்களிக்க வரும்போது முடிகிறது. உங்கள் இடத்தில் மட்டும் வோட் என்று அழுத்தினால் ஒரு பழைய பதிவுக்கே இட்டு செல்கிறது...( 73 நாட்களுக்கு முன் பதிந்தது) எப்படி சரிப் படுத்திக் கொள்வது? தமிளிஷில் இந்த பிரச்னை இல்லை!

கௌதமன் said...

எங்கள் நன்றி, உங்கள் சுட்டிக்கு.

க.பாலாசி said...

ஊருக்கு போயி இரண்டு மாசம் ஆவுதா? சீக்கிரம் போங்க நண்பா...

பொங்கல் வாழ்த்துக்கள்.

Chitra said...

இந்த குழந்தைகளின் நிலை அனாதைக் குழந்தைகளை விட கொடியது. ...... really very sad.

Anonymous said...

தாமரை மறுபடியும் நமக்கு பிடிச்ச மாதிரி எழுதியிருக்காங்களா!!!

vasu balaji said...

எப்போதும் போல் எல்லாம் தொட்டுச் செல்கிறது டரியல். அருமையாக.

Thenammai Lakshmanan said...

//இந்த குழந்தைகளின் நிலை அனாதைக் குழந்தைகளை விட கொடியது.//

உண்மையிலே வருத்தத்துக்கு உரியது இதுதான் புலிகேசி

Paleo God said...

♠ ராஜு ♠ said...
\\ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் கொடுப்பேன்
நீ உடைக்கவே\\

இது பைபிள் ரீமிக்ஸ் பாஸ்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு.//

அடேங்கப்பா.. ராஜூ அசத்திட்டீங்க..:))

பொங்கல் வாழ்த்துக்கள் புலவரே..:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

arumai

balavasakan said...

அடுத்த வாரம் பொங்கலா நினைவு படுத்தியதற்கு நன்றி..
அசல் சரியில்லையா கோவாவும் சரியில்லைன்னு சொல்றாங்க என்ன கொடுமை..
விண்ணைத்தாண்டி வருவாயா ;)
தாமரை எப்பவுமே சூப்பர்தான்
உலகிலையே மோசமான பந்துவீச்சு வரிசை இந்தியாதான் பங்களாதேஸ் பரவாயில்லை

கலகலப்ரியா said...

superb...

மாதேவி said...

இந்தக் குழந்தைகளின் நிலை :((

தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

எல்லோரையும் ஒரு நிமிடம் சிந்திக்க வைத்திருக்கும்
{{{{{{{{{ "பிச்சை காரனின் பிள்ளைகள்......." }}}}}}}}}

உங்களின் முதல் பதிவு . அற்புதமான சிந்தனை வாழ்த்துக்கள் நண்பரே



வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

வினோத் கெளதம் said...

ம்ம்ம்...ஊருக்கு போறீங்க என்ஜாய் பண்ணுங்க பிரதர்..:)

தேவன் மாயம் said...

பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பொங்கல் வாழ்த்துகள்.

தமிழ் உதயம் said...

ஊருக்கு போங்க. உற்றார் உறவினரோட மகிழ்ச்சியா இருங்க. பொங்கலை சிறப்பா கொண்டாடுங்க.

வெள்ளிநிலா said...

pls read my mail tomoro , then pls write about your vellinila in your DARIAL...- THANKING YOU !