
சென்னை சைதாப்பேட்டைதான் இந்த கதையின் களம்....
இரண்டு சிறுவர்கள் சச்சின், சாமிநாதன், இவர்கள் இருவரும் மட்டைப்பந்து விளையாட்டின் மூலம் நெருங்கிய் நண்பர்கள்.
சச்சின் ஒரு மிகப்பெரும் பணக்கார வீட்டு பிள்ளை. அவன் தந்தை ஒரு தொழில் அதிபர். சாமிநாதன் ஒரு ரிக்சா ஓட்டும் அன்னாடங்காச்சியின் பிள்ளை.
இந்த இரு சிறுவர்களும் முதன்முதலில் சந்தித்தது சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் விளையாட்டுத் திடலில்தான். இருவருக்கும் மட்டைப்பந்து மட்டும் தான் தெரிந்த விளையாட்டு. இதன் மூலம் இவ்விருவரும் நண்பர்களானார்கள்.

என்னதான் சச்சின் அவனை நண்பனாக ஏற்றுக் கொண்டாலும் அவன் வீட்டிற்குள் வர சாமிநாதனுக்கு அனுமதி கிடையாது. ஏனெனில் அவன் தந்தைக்கு சாமிநாதனைப் பிடிக்காது (ஏழை).
20-10-2009 அன்றுதான் சச்சினுக்கு 8 வது பிறந்த நாள். பெரும் தொழில் அதிபர்களுக்கெல்லாம் அழைப்பு பறந்தது. சச்சினுக்கு சாமிநாதனை கூப்பிட வேண்டும் என ஆசை. ஆனால் முடியவில்லை.
பிறந்தநாள் விழாத் தொடங்கியது. அனைவரும் சச்சினின் அப்பாவுக்காக காத்திருந்த பொழுதுதான் அந்த அழைபேசி அழைப்பு வந்தது. சச்சின்-ன் தந்தை தொழில் ரீதியான கலந்தாய்வில் இருப்பதால் தன்னால் வர இயலவில்லை என்று கூறினார்.
சச்சின் அழ ஆரம்பித்து விட்டான். ஒரு வழியாக அவனை சமாதானப் படுத்தி இனிப்புகளை வந்தவர்களுக்கு அவனது கைகளால் வெட்டி பரிமாற்றமும் முடிந்தது. சச்சினுக்கு அப்போதுதான் தோன்றியது அந்த இனிப்புகளில் கொஞ்சமும் தனது சென்ற ஆண்டின் பிறந்த நாள் ஆடையையும் தன்அம்மாவிடம் அனுமதி பெற்று சாமிநாதனுக்கு கொடுத்தான்.

அன்றுதான் சாமிநாதனுக்கும் பிறந்தநாள் என்பது சச்சினுக்குத் தெரியும். சச்சின் கொடுத்த புதிய ஆடையை (சாமிநாதனுக்கு புதிதுதானே!!!) அணிந்து கொண்டு அவன் கொடுத்த இனிப்பு பண்டத்தை தன் தாய்க்கும் தந்தைக்கும் கொடுத்த போது சாமிநாதனுக்கு கிடைத்தது ஒரு விலை மதிக்க முடியாத பரிசு.
சச்சின் அதிர்ந்து போனான். இவ்வளவு வசதி இருந்தும் தனக்குக் கிடைக்காத அந்த பரிசு எந்த வசதியும் இல்லாத தன் நண்பனுக்கு கிடைத்ததைப் பார்த்து பொறாமையும், பெறுமையும் கொண்டான்.
அப்படி என்ன விலையுயர்ந்த பரிசு தெரியுமா? இனிப்பை கொடுத்தவுடன் ஆனந்த கண்ணீருடன் அந்த ஏழைப் பெற்றோரால் கொடுக்க முடிந்த விலைமதிக்க முடியாத முத்தம்.
எது கிடைத்தாலும் அதை பெரிதாக எண்ணும் எண்ணம் ஏழைகளிடம் உண்டு. எவ்வளவு விலை உயர்ந்த பொருள் கிடைத்தாலும் அதை விட பெரிதாக கிடைக்காதா எனத் தேடித் தேடியே பாசத்தையும் வாழ்க்கையையும் அனுபவிக்க முடியாமல் தவிப்பவன் பணவெறிப் பிடித்தவன்.
25 விவாதங்கள்:
//அப்படி என்ன விலையுயர்ந்த பரிசு தெரியுமா? இனிப்பை கொடுத்தவுடன் ஆனந்த கண்ணீருடன் அந்த ஏழைப் பெற்றோரால் கொடுக்க முடிந்த விலைமதிக்க முடியாத முத்தம்.
//
நல்ல பரிசு
அன்பிற்குண்டோ அகிலத்தில் ஈடு
அதற்கு
என்றுமே கிடையாது எல்லைக்கோடு..
தோழரே!அன்பும்,பாசமும் என்ன விலைகொடுத்தும் வாங்க முடியாது என்பதை தங்களின் படைப்பு வாயிலாக உணர்த்தி இருக்கும் விதம் அருமை. இதை படித்த ஒரு சிலராவது திருந்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.வாழ்த்துக்கள்
//ஆனந்த கண்ணீருடன் அந்த ஏழைப் பெற்றோரால் கொடுக்க முடிந்த விலைமதிக்க முடியாத முத்தம்.//
இதை விட இந்த உலகத்தில் விலை மதிப்புமிக்க பரிசு கிடைக்காது.
1980's தமிழ் சினிமா கதை நல்லா இருக்கு .
சிலிர்த்தது புலிகேசி. பாராட்டுக்கள்.
//அப்படி என்ன விலையுயர்ந்த பரிசு தெரியுமா? இனிப்பை கொடுத்தவுடன் ஆனந்த கண்ணீருடன் அந்த ஏழைப் பெற்றோரால் கொடுக்க முடிந்த விலைமதிக்க முடியாத முத்தம்.//
மிக அருமை புலிகேசி... கலக்குகிறீர்கள்.
பிரபாகர்.
தாங்கள் கதையில் குறிப்பிட்டதுபோல் இன்றும் எங்கோ ஒரு சச்சினும், சாமிநாதனும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது சமுதாயத்தின் கழுவப்படாத அழுக்கு...
//அப்படி என்ன விலையுயர்ந்த பரிசு தெரியுமா? இனிப்பை கொடுத்தவுடன் ஆனந்த கண்ணீருடன் அந்த ஏழைப் பெற்றோரால் கொடுக்க முடிந்த விலைமதிக்க முடியாத முத்தம்.//
மிகச்சரியான பரிசு...இன்று பணக்காரப்பிள்ளைகள் இழக்கும் ஆனந்தம்...பரவசம்.
நல்ல இடுகை....
நல்ல இடுகை நண்பா..
அழகான கதை. ஏழை அன்பால் மனம் நிறைகிறான். பணம் படைத்தவன் பணத்தாலும் மனம் நிறைவதில்லை. அன்புக்கு மதிப்புக் கொடுப்பதுமில்லை. நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ஆரத்தழுவி முத்தம் தருவது / பெறுவது வெறும் சடங்கு அல்ல தான் அது அன்பையும் பாதுகாப்பையும் வழங்கும் பரிசு அருமை நண்பா
முத்தம்...உயிர் பரிசு! நல்ல பதிவுங்க, வாழ்த்துக்கள்.
உண்மையின் இந்த இளம் வயதிலேயே அந்தப் பிஞ்சு மனதில் இப்படியொரு எண்ணமிருக்குமானால் அவன் வாழ்வில் உச்சம் பெறுவான்.வாழ்த்தும் பாராட்டும் அந்தக் குழந்தைக்கு.
என் அன்பு முத்தமும் கூட.
நன்றி வெண்ணிற இரவுகள்....!, கடல் அலைகள்., மலிக்கா, விடுதலைவீரா, இளந்(இழந்த)தமிழன், வானம்பாடிகள், பிரபாகர், க.பாலாசி, கதிர் - ஈரோடு,
நன்றி ராமலக்ஷ்மி,ithayathirudan, சி. கருணாகரசு, ஹேமா
// ராமலக்ஷ்மி
பணம் படைத்தவன் பணத்தாலும் மனம் நிறைவதில்லை. அன்புக்கு மதிப்புக் கொடுப்பதுமில்லை.//
உண்மைத் தோழியே.இருப்பதை இழந்து எதைத் தேடுகிறான் எனத் தெரியாமலே பணம் தேடுகிறான்.
//அப்படி என்ன விலையுயர்ந்த பரிசு தெரியுமா? இனிப்பை கொடுத்தவுடன் ஆனந்த கண்ணீருடன் அந்த ஏழைப் பெற்றோரால் கொடுக்க முடிந்த விலைமதிக்க முடியாத முத்தம்.
எது கிடைத்தாலும் அதை பெரிதாக எண்ணும் எண்ணம் ஏழைகளிடம் உண்டு. எவ்வளவு விலை உயர்ந்த பொருள் கிடைத்தாலும் அதை விட பெரிதாக கிடைக்காதா எனத் தேடித் தேடியே பாசத்தையும் வாழ்க்கையையும் அனுபவிக்க முடியாமல் தவிப்பவன் பணவெறிப் பிடித்தவன்.//
மிக மிக அருமையான வரிகள்!!
புது வலைமனை அழகு
அருமை... நன்றாக இருந்தது... இந்த முத்தம்...
நன்றி Mrs.Menagasathia,ஈ ரா
//வானம்பாடிகள் said...
புது வலைமனை அழகு//
நன்றி ஐயா.....
யதார்த்தத்தை ரொம்ப அழகாகக் சொல்லியிருக்கிறீர்கள். இந்த நடை எனக்குப் பிடித்திருக்கிறது.
உங்கள் தளத்திலிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியவனாய் பின்னு}ட்டத்தை முடிக்கிறேன்.
பணத்துக்குப் பறக்கும் பெற்றோரால் தம் குழந்தைகளுதரமுடியாத பெரும் பரிசு ஆரத்தழுவலும் அன்பு முத்தங்களும்தான்!!!என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள்
அருமையான கதை. குழந்தைகளின் உலகமே வேறு...
நான் பிறந்த நாள் கொண்டாடும் வழக்கமில்லை. ஆயினும் பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன தங்களுக்கு நன்றிகள் பல நண்பரே..
அன்புடன்
சூர்யா
நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கருத்து சொல்ற குழந்தைங்க கதையெல்லாம் மலையேறிப் போச்சு!
புசுசா ட்ரை பண்ணுங்க!
நன்றி இறக்குவானை நிர்ஷன், நானானி, butterfly Surya, வால்பையன்
Post a Comment