கடவுளை மற..மனிதனை நினை..

30 November 2009

அப்பா அம்மா விளையாட்டு

9:45:00 AM Posted by புலவன் புலிகேசி 29 comments

சிறுவயது சில்லிகோடு
பத்து வயது பம்பரம்

பருவப் பெண்ணாடும் பல்லாங்குழி
அறியா வயது அப்பா

அம்மா விளையாட்டு
அனைத்தும் ஆட

வேண்டும் என்று
ஆசை வந்தது அவளை

மீண்டும் பார்த்த போது

28 November 2009

டரியல் (28-நவம்பர்-09)

4:24:00 PM Posted by புலவன் புலிகேசி 22 comments

வேட்டைக்காரன் படத்தின் பாடல்கள் கேட்பதற்கு கொடுமையாக இருந்ததால் இது நாள் வரை விருப்பமில்லாமல் இருந்தேன். ஆனால் என்னுடன் இருக்கும் நண்பன் ஒருவன் அறையில் அப்படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த போது அவனை திட்டிவிட்டு அமர்ந்தேன். அப்போது அப்படத்தின் ஒரு பாடலில் வரும் பெண்குரல் என்னைக் கவர்ந்தது. அந்த பாடல் " கரிகால சோழன் போல" என்ற பாடல். பாடல் என்னவோ சுமார் ரகம் தான் என்றாலும் அந்த பெண்குரல் காதில் கேட்டு கொண்டே இருக்கிறது. அந்த குரலுக்கு சொந்தக்காரர் "சங்கீதா ராஜேஷ்வரன்".

------------------------------------------

சமீப்த்திய ஜூனியர் விகடனை படித்த போது கிடைத்த தகவல் மனதிற்கு இன்னும் பலம் சேர்த்தது. ஆம் "பிரபாகரன் உயிரோடிருக்கிறார்" என்ற குறுந்தகடு இப்போது கனடா, ஆஸ்திரேலியா அயர்லாந்து போன்ற நாடுகளில் ரகசியமாக பரவி வருகிறதாம். அந்த தகடில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், இறுதிகட்ட போர் நடைபெற்றுகொண்டிருந்த மே 11ம் தேதி புலிகள் நடத்திய மிகப்பெரிய ஊடறுப்பு தாக்குதலில் 900க்கும் அதிகமான சிங்கள படையினர் கொல்லப் பட்டது நாமறிந்ததே. அப்போதுதான் தலைவரின் மகன் "சார்லஸ் ஆண்டனி" தலைவருக்கு விருபமில்ல்லாத போதும் நான் பார்த்து கொள்கிறேன் புறப்படுங்கள் என்று வற்புறுத்தினாராம்.

சிங்கள மருத்துவர் ஒருவர் தான் புலிகளின் ஆஸ்தான மருத்துவராம். தப்பிக்கும் போது தலைவருக்கு ஏற்பட்ட குண்டடி காயத்தை அந்த மருத்துவர் தான் குணபடுத்தியிருக்கிறாராம். தலைவர் அவரை "சிங்கள புலி" என்றுதான் அழைப்பாராம். இப்போது தலைவர், பொட்டு அம்மன்,சூசை மற்றும் அந்த "சிங்கள புலி" மருத்துவர் ஆகியோர் ஆப்பிரிக்க கண்டத்தின் அருகிலுள்ள ஒரு தீவில் இருக்கிறார்களாம். இவைதான் அந்த குறுந்தகடின் செய்திகளாம். நிச்சயம் தலைவர் வருவார்....

---------------------------------------------


இன்று
"கந்தசாமி" திரைப்படம் 100வது நாளாம். சுவரொட்டியையும், ஒரு ஆங்கில நாளிதழில் வந்த விளம்பரத்தையும், பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டது.விக்ரமையும் "வீராசாமி" டி.ராஜேந்திரன் ஆக்கி விட்டார்களோ...? என்ன கொடுமை சரவணன் இது......

--------------------------------------------

26/11 நம்மால் மறக்க முடியாத ஒரு நாளாக தீவிரவாதிகளால் மாற்ற பட்டிருக்கிறது. டிஸ்கவரி தொலைகாட்சியில் இது பற்றிய ஒரு தொகுப்பை பார்த்தேன். இந்த தாக்குதலில் தப்பித்த ஒரு வெளிநாட்டு பெண் சொன்னது என்னவென்றால், "அங்கு தாக்குதல் நடத்திய அனைவரும் இளம் வ்யதினர். மேலும் அவர்கள் அனைவரும் மூளைசலவை செய்யப் பட்டவர்கள். பாவம் அவர்கள்" என்றார். அதற்காக அவர்களை சும்மா விட்டு விட முடியுமா? ஆனால் இன்னும் கசாவிற்கு தண்டணை வழங்க படவில்லையே. அவனை ஒரு பெரிய கதாநாயகன் அந்தஸ்த்தில் வைத்து நமது ஊடகங்களும் காசு பார்க்கின்றன. ஒரு வார இதழில் நான் படித்த செய்தி (?) இது. "கசாவிற்கு பிரியாணி என்றால் பிடிக்குமாம். இந்திய உணவு வகைகளில் இட்லிதான் அவருக்கு பிடித்த உணவாம்". இதைத்தான் விசாரிப்பார்களா இந்த பத்திரிகையாளர்கள்???

-------------------------------------------

இந்த வார டரியல் நம்ம "சிறகுகள்" பாலவாசகன்தான். அவரின் ஒரு பதிவில் வந்த கவிதையை படித்தேன்..அடா அடா அடா நண்பர் எங்கேயோ சிக்கிருக்காரு. படிச்சிப் பாருங்க கண்டறியாத காதல். உங்களுக்கே புரியும். வாழ்த்துக்கள் பாலவாசகன்.

-----------------------------

27 November 2009

தமிழினத் தலை(வா)...

2:05:00 PM Posted by புலவன் புலிகேசி 20 comments

தமிழினத் தலைவா உனக்கு
நேற்று பிறந்த நாள்

உன் மீது பாசங்கொண்ட
தமிழர் பலர் நீ
இறந்து விட்டாய் என
நினைத்து

கண்ணீர் விட்டு கதறி
கொண்டிருக்கிறார்கள்
அங்கே நீ இல்லை
என்று எண்ணி

புத்தம் (?) தழுவிய சிங்களத்தான்
நம் சகோதரிகளை தழுவி
சகோதரனை கொன்று
குவிக்கிறான்

நீ இல்லை என்று
எண்ணி தமிழக பெரும்(கரும்)புள்ளி
தமிழன் மீது பாசமிருப்பதாய்
நடிக்கின்றான்

வீறு கொண்டு எழுந்து
வருவாய் என என்னை
போன்ற பல தமிழனுக்கு
தெரியும்.

விரைவில் வா....

புகைப்பட உதவி: இளந்தமிழன்

26 November 2009

புகையும் காதல்....

9:08:00 AM Posted by புலவன் புலிகேசி 34 comments
2010 சனவரி 13 சென்னை எழும்பூர் புகைவண்டி நிலையம்:. மயிலாடுதுறைக்கு செல்லும் வண்டி 8வது நடைமேடையில் இருந்து 10 மணி 30நிமிடத்திற்கு புறப்படும் என்ற அறிவிப்பைக்.கேட்டு கொண்டே ஆனந்த விகடன் வாங்கிக கொண்டிருந்தான் வேலு.

வேலு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளன். பொங்கல் திருநாள் விடுமுறையுடன் சேர்த்து தனக்கு பெண் பார்க்கும் ஏற்பாட்டிற்காகவும் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு செல்வதற்கு ஆயத்தமாக எக்மோர் நிலையத்திற்கு வந்து சேர்ந்தான். மயிலாடுதுறைக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அகலப்பாதை பணிகள் முடிந்து இன்றுதான் முதல் முறை புகைவண்டி இயக்கப்படுகிறது.

9 மணி 30 நிமிடம்: வண்டியில் ஏறி தனது இருக்கையை தேடிப்பிடித்து அமர்ந்து விகடனை படிக்கத் தொடங்கினான். வெளியில் ஒட்டப்பட்டிருந்த பயணிகள் இருக்கை விபரத்தை பார்த்து கொண்டிருந்த 4 பெண்கள் தனியாக நின்று கொண்டிருந்த ஐந்தாமவளிடம் "ஏய் சந்தியா அந்த 6வது இருக்கை(சீட்) ஒரு பையன்டி" என்றதும் "இதே வேலையா போச்சு உங்களுக்கு வாங்கடி உள்ள" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் சந்தியா.

தனது இருக்கையின் எதிரே அமர்ந்திருந்த வேலுவுக்கு வணக்கம் (ஹாய்) சொல்லிவிட்டு அமர்ந்தாள் சந்தியா.பின்னால் வந்த தோழிகள் "என்ன சந்தியா எங்களுக்கு முன்னாடியே வந்து மச்சான கவுத்துட்ட போல" என்று சொல்லி கொண்டே வந்து இருக்கைகளில் அமர்ந்தனர். இந்த ஐந்துப் பெண்களும் சத்தியபாமா கல்லூரியில் மென்பொருள் பொறியியல் இறுதியாண்டு மாணவிகள்.

அதில் ஒருத்தி வேலுவிடம் "மச்சான் எங்க போறீங்க" என்றாள். விகடனை விலக்கி மயிலாடுதுறை என்றான். "ஏய் சந்தியா நீதான் முதல்ல ஏறுன கடைசி வரைக்கும் மச்சான் கூட போகப் போற! வண்டியில சொன்னன்டி" என்றவளை சந்தியா அதட்டினாள். சந்தியாவுக்கு மயிலாடுதுறை, மற்ற 4 பேரும் செல்லும் வழியில் உள்ள சிதம்பரத்தில் இறங்கி விடுவர்.

அனைவரும் கேலி செய்த போதும் புன்னகையயும் வெட்கத்தையும் மட்டும் பதிலாக அளித்து விட்டு அமைதியாக .ஆர். ரகுமான் இசையை அலைபேசி உதவியில் கேட்டு கொண்டிருந்த சந்தியாவின் மவுனம் அவனுக்குப் பிடித்திருந்தது. முதல் பார்வையில் காதலை சொன்னவர்கள் குறைவுதான். வேலுவும் அந்த ரகம் தான்.

பயணத்தின் போது வைத்திருந்த உணவு பண்டத்தை பகிர்ந்து கொண்டிருந்த சந்தியா "நீங்களும் எடுத்துக்குங்க" என்று வேலுவிடம் சொன்னாள். தோழிகள் மீண்டும் இருவரையும் இணைத்து கேலி செய்ய பயணம் கேலி, கிண்டல் கொஞ்சம் உறக்கத்துடன் சென்று கொண்டிருக்க சிதம்பரம் வந்தது. வேலுவிடமும் சந்தியாவிடமும் கேலி கிண்டலுடன் தோழிகள் விடை பெற்றனர்.

சிதம்பரம் தாண்டிய பின் சந்தியா "என்னுடைய தோழிகள் இவ்வளவு கேலி செய்த போதும் பொறுமையாகவும், மவுனமாகவும் அவர்களுக்கு பதில் சொன்னீங்களே...உங்களுக்கு கோபமே வராதா?" என்றாள். அதற்கு புன்னகையை பதிலாக அளித்து விட்டு இவன் .ஆர்.ரகுமான் (இப்போது ஆனந்த விகடன் அவள் கையில்) பாடல் கேட்க ஆரம்பித்தான். அவனின் அந்த பொறுமை அவளுக்கு பிடித்திருந்தது. உண்மையில் சொன்னால் அவளும் வேலு ரகம் தான்.

ஊர் வந்ததும் இருவரும் இறங்கி காதலை சொல்லாமல் புகைவண்டி சினேகிதர்களாக பிரிந்தனர். பொங்கல் திருநாள் முடிந்து மூன்றாவது நாள் வேலுவுக்கு பெண் பார்க்கும் படலமாக பெண் வீட்டிற்கு சென்றனர். கையில் காபியுடன் வந்த பெண்ணைப் பார்த்து விட்டு அம்மாவிடம் "பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசனும்" என்றான்.

இருவரும் வீட்டின் பின்புறமிருக்கும் கிணற்றடியில், வேலு அவளிடம் "சந்தியா நான் உன்னை காதலிக்கிறேன்" என்று தன் புகைவண்டி காதலை சொன்னதும் சந்தியா வெட்கத்தை சம்மதமாக கொடுத்து விட்டு உள்ளே ஓடினாள்.

பி.கு: இந்த சிறுகதையை “செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.

23 November 2009

இறப்பில் மகிழ்ச்சி

11:34:00 AM Posted by புலவன் புலிகேசி 32 comments
இருந்த வரை வேலைதேடி
அலைந்தவன் இறந்த பின்
வேலை கொடுத்தான்
வெட்டியானுக்கு.பேருந்தில் அடிபட்டு இறந்த
பெண்ணைப் பார்த்ததும்
மகிழ்ச்சி ஓடிப்போன தன்
மகள் இல்லையென்று.அனாதை இல்லத்தில் 50பைசா
இனிப்பில் மகிழ்ச்சி பணக்காரன்
வீட்டில் 50 லட்சமிருந்தும்
இல்லை.பள்ளியை இடித்து கோவில்
கட்டினான். குழந்தைகளுக்கு
கோவில் வாசலில்
பிச்சையிட்டான்.

21 November 2009

டரியல் (2)

9:16:00 AM Posted by புலவன் புலிகேசி 29 comments
இந்த வாரமும் மகிழ்ச்சியான வாரம் தான். என்னுடைய "ராமன் இன்றும் ரமனாக.." என்ற சிறுகதையும், "எது வெற்றி..?" என்ற கவிதையும் இளமை விகடன் மற்றும் விகடனின் முகப்பில் வெளி வந்தது.

எது வெற்றி..?

சாதிக்க பிறந்தவன்தான்
மனிதன் என்றான்

முயற்சித்து தோற்றுபோனேன்

தோல்விதான் வெற்றியின்
முதல்படி என்றான்


படியேறி தோற்றேன்

முயன்றால் முடியாதது
இல்லை என்றான்

முயன்று வெற்றி பெற்றேன்

என்னால் முடியாததை நீ
எப்படி செய்தாய் உன்
வெற்றி சந்தேகத்திற்குரியது
என்றான்
புரிந்தது உண்மையில் வெற்றி
பெற்றுவிட்டேன் என்று!

-----------------------------------------------

சென்ற வாரம் சொன்ன ஊட்டி பயணத்தை ரத்து செய்து விட்டேன். ஆனந்த விகடனில் வந்த ஊட்டி பற்றிய செய்தியில், ஊட்டியின் தற்போதைய அழிவுக்கு முக்கிய காரணம் மக்கள் தான் எனப் படித்தேன். உண்மைதான் வெல்ல்நீர் ஓடும் பகுதிகளை தடுத்து வீடு, உணவகம், தங்குமிடங்கள் உருவாக்கப் பட்டதே முக்கிய காரணம் என்கிறது செய்தி. அதனால் தேங்கும் தண்ணீர் நிலப்பரப்புகளை இளகுவாக்கி நிலச்சரிவை ஏற்படுத்தி விட்டதாம். இதில் முகான்மை என்னவென்றால் புரட்சி பேசும் கோயம்புத்தூர் குசும்பு நடிகர் தான் அங்குள்ள நிலப்பரப்புகளை கூறு போட்டு விற்பதில் பெரும்புள்ளியாம்.

-------------------------------------------------

தமிழ் பிறந்திருக்கிறது முதல் பகுதியில் பாரதி சொன்னதாக நான் சொன்னது "மெல்ல தமிழினி சாகும்". இந்த கவி வரிகளில் பாரதி சொல்லியிருப்பது ஏதோவொரு மடந்தை சொன்னதாகத்தானே தவிர அவரே சொல்லவில்லை. இது தெரிந்திருந்தும் நம்மில் பலர் பாரதி சொன்னதாகத்தான் சொல்கிறோம். மன்னார் அமுதனுடன் கூகுல் பேசியில் விவாதித்த பின் மற்றிய விடயமிது.

--------------------------------------------------2012 படம் பார்த்தேன். ஒரு வேளை இந்த படத்தை தமிழில் எடுத்திருந்தால் விஜய்தான் நடித்திருப்பார் எனத் தோன்றியது. அந்த படத்தின் கதாநாயகன் நம்ம விஜய்யை விட பெரிய ஆளா இருப்பார் போல. பூகம்பம் வந்து பூமி பிளந்து விழுந்தவர் மீண்டும் எழுந்து வந்து புறப்பட்ட விமானத்தில் தவ்விப் பிடித்து உட்காருவது, இறுதி காட்சியில் சுனாமியில் இறந்து விட்டார் என அனைவரும் நினைத்து கொண்டிருக்கும் போது குருவி விஜய் கூவத்துலேர்ந்து வந்த மாதிரி பிழைத்து வருவது எப்பா முடியலடா. டொமினிக் குருவி படம் பாத்துருப்பார் போல......???

----------------------------------------------------
இந்த வார டரியல் நம்ம "வானம்பாடிகள்" ஐயாதான். ஐயா எழுதுன "மனுஷி!" சிறுகதை என் மனதை வெகுவாக பாதித்தது. வரதட்சனை கொடுமைகள் பற்றியும் அந்த கிழவியின் மனநிலை பற்றியும் ஒரு அழகான சிறுகதை. படிக்கலைன்னா படிச்சிப் பாருங்க.

18 November 2009

ராமன் இன்றும் ராமனாக...

10:50:00 AM Posted by புலவன் புலிகேசி 30 comments
ராமுவுக்கும் சீதாவுக்கும் திருமணம் நடந்தது.

காதல் திருமணம் தான். ஆனால், இரு வீட்டார் சம்மதத்துடன்.

இவர்கள் திருமணத்துக்கும், ஏன் காதலுக்கும் கூட அனுமார் போல் ஒரு நண்பன்தான் காரணம். அவன்தான் பரத்.

மூவரும் கல்லூரி நண்பர்கள். பரத்தும் சீதாவும் நல்ல நண்பர்கள். இருவரும் நண்பர்கள் என்பதை விட அண்ணன் - தங்கை போல. அதனால் தான் பரத்தின் உதவியுடன் அவளை காதலித்துத் திருமணம் செய்ய முடிந்தது.

தன் சொந்தத் தங்கையின் திருமணம் போல் முன்னின்று திருமணத்தை நடத்தி விட்டு ஊர்த் திரும்பினான்.

முதலிரவு அறையில் ராமுவும் சீதாவும்.

"பரத் மாதிரி ஒரு நண்பன் கிடைக்க நாம கொடுத்து வச்சிருக்கனும் இல்ல," என்றான் ராமு.

"ம்.. என் கூடப் பொறந்தவன் கூட இந்த அளவுக்கு என் திருமணத்துக்காகக் கஷ்டப்பட்டிருக்க மாட்டான்," என்றாள் சீதா.

"நான் ஒன்னு சொன்னா தப்பா நெனைக்க மாட்டியே?" என்றான் தயக்கத்துடன்.

"ம்.. சொல்லு" என்றாள்.

"எங்க அப்பா அம்மா சொந்தக் காரங்களுக்குலாம் நீயும் பரத்தும் பழகுறது புடிக்கல. அதனால..." என இழுத்தான்.

'ராமாயண காலம் முதல் இன்று வரை ராமன் திருந்தவே இல்லை,' என மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் சட்டென ராமுவிடம், "நேத்தே பரத் எங்கிட்ட இனிமே நாம பேசவோ சந்திக்கவோ வேணாம்-னு சொல்லிட்டுதான் ஊருக்குப் போனார்," என்றாள்!

இந்த சிறுகதை இளமை விகடனில் வெளிவந்துள்ளது.

உங்கள் வாக்குகளை தமிழ்மணத்திலும் தமிழிஸிலும் மறக்காமப் போடுங்க

17 November 2009

தேநீர் அருந்தகத்தில் தமிழ் - தமிழ் பிறந்திருக்கிறது... (2)

4:03:00 PM Posted by புலவன் புலிகேசி 31 comments
இதன் முதல் பகுதியை படிக்கவில்லை என்றால் படித்துவிட்டுத் தொடருங்கள். தொலைக்காட்சியைத் தொடர்ந்து ஊடகங்களில் அடுத்து இடம் வகிப்பதுசெய்தித்தாள்கள். ஒரு பிரபலமான தமிழ் செய்தித்தாளின் விளம்பரத்தைக் கூடஅவர்களால் ஆங்கிலம் கலக்காமல் எடுக்க முடியவில்லை. "நம்பர் ஒன் நம்பர்ஒன் தமிழில்..........நம்பர் ஒன்" என்றுதான் எடுத்துள்ளனர்.

பலத் தமிழ் நாளிதழ்கள் இன்று வியாபார நோக்கத்தில்மட்டுமே வெளி வருகின்றன. இன்று நகர்ப் புறங்களில்வசிக்கும் தமிழர்களில் எத்தனை பேர் தமிழ் நாளிதழ்வாங்கிப் படிக்கிறோம். ஏன் எனது அறையில் கூடஆங்கில நாளிதழ் தான். தமிழ் நாளிதழை தேனீர்அருந்தகங்களில்தான் பெரும்பாலும் காணமுடிகிறது.

தேனீர் அருந்தக உரிமையாளர்கள் அவர்களுக்கேத் தெரியாமல் தமிழ்வளர்க்கிறார்களே என்று ஒரு மகிழ்ச்சி. அதற்காக அனைவரும் புராணகால தமிழ்பேச வேண்டும் என்று அர்த்தமல்ல. நம்மிடையே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தமிழை இறவாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமைநமக்கிருக்கிறது.


நமக்குத் தெரிந்த நல்ல தமிழில் தொடர்ந்து பேசினால்உயிர்வலியில் துடிக்கும் தமிழுக்கு குருதிகொடுத்ததற்குச் சமம். இன்றைய காலகட்டத்தில்தமிழுக்கு குருதி கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. ஆம்முதன் முதலில் தமிழுக்காக மட்டும் ஒருதொலைக்காட்சி ஒளிபரப்பு (இரண்டரை ஆண்டுகாலமாக). ஆனால் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும்தொடர்ந்து பார்க்க நம்மில் யாருக்கும் ஆர்வமில்லை.

காரணம் அதில் திரைப்பட நிகழ்ச்சிகளோ, பொழுதுபோக்கு அம்சங்களோஇல்லை. இதில் பலரால் விரும்பப் படும் நிகழ்ச்சி "சொல் விளையாட்டு". அதன்தொகுப்பாளர்கள் பேசும் தமிழ் இனிமையாகத்தான் இருக்கிறது. அந்ததொலைக்காட்சி வேற்று மொழி கலக்காத பொழுதுபோக்கு அம்சங்களை சேர்த்துதமிழுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கலாம் (மக்கள் தொலைக்காட்சிக்குநன்றிகள்).

அடுத்து விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியானதமிழ் பேச்சு எங்கள் மூச்சு". என்ன ஒரு அருமையானநிகழ்ச்சி அந்த நிகழ்ச்சியின் மூலம் கூட நம்மால் தமிழ்கற்று கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. தமிழைப்பற்றி மழலைகள் சொல்லும் விடயங்கள் நம்மில்பலருக்குத் தெரியாமலிருக்கிறது.

அந்த மழலைகளின் தமிழ் உச்சரிப்புகளை கேட்கும்ஒவ்வொருவருக்கும் நாம் ஏன் தமிழை விடுத்து வேற்று மொழியை தேவையற்றஇடங்களில் பேச வெண்டும்? என்ற உணர்வு நிச்சயம் வரும். இது போன்றநிகழ்வுகளும் தமிழார்வம் மிக்க குழந்தைகளும் கொடுத்த மருத்துவ உதவிகளால்தமிழ் உயிர்ப் பிழைத்து மறுபிறவி எடுத்திருக்கிறது. ஆம் "தமிழ் பிறந்திருக்கிறது". அந்த தமிழை குழந்தை போல் பாவித்து வளர்க்க வேண்டிய கடமை ஒவ்வொருதமிழனுக்கும் இருக்கிறது.

இது பற்றி அடுத்தப் பதிவில் விவாதிக்க விரும்புகிறேன்.

பி.கு:
இந்தப் பதிவில் நானே எத்தனை இடங்களில் தமிழ்க் கொலை செய்திருக்கிறேன்எனத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

16 November 2009

தமிழ் பிறந்திருக்கிறது... (1)

10:26:00 AM Posted by புலவன் புலிகேசி 38 comments

உலகின் பழமையான மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று என்பதில் நம் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு ஆங்கிலம் அல்லது சமசுகிருதம் கலக்காமல் நல்ல தமிழ் பேச அல்லது எழுதத் தெரியும்?

எவனோ ஒரு மடந்தை சொன்னதாக பாரதி சொன்னது போல் "தமிழ் இனி மெல்லச் சாகும்" என்ற சொல் பலித்து விட்டது. இன்றைய நிலையில் தமிழ் விபத்துக்குள்ளாகி உயிருக்குப் போரடுபவன் போல "அவசர சிகிச்சைப் பிரிவில்" சேர்க்கப்பட்டுப் பல வருடமாகிறது. இன்னும் சுயநினைவில்லாமல் தான் கிடக்கிறது.

இக்காலக் குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் தமிழின் மிக அழகான, ஒவ்வொரு தமிழரின் முதல் வார்த்தையான "அம்மா" என்ற சொல்லை உச்சரிக்கின்றன. இப்போதெல்லாம் "மம்மி" தான்.

5 வயதில் பாலர் பள்ளி சென்று சத்துமாவு உருண்டை, முட்டை எனச் சத்தான உணவுண்டு தமிழில் கற்று, பலருடன் சாதி, மதம், பணக்காரன், ஏழை என வித்தியாசமில்லாமல் கூடிவிளையாடும் போது கிடைக்கும் ஆரோக்கியமும், ஒற்றுமையும் 3 வயதில் முன்கல்வி (PreKG) கற்கும் குழந்தைகளிடம் இல்லை.

தமிழ் மொழியை அழிப்பதில் ஊடகங்களில் முதன்மையான தொலைக்காட்சிக்கு முகான்மையானப் பங்கு இருக்கிறது. தொலைபேசியில் உரையாடும் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள் பேசுவதெல்லாம் தமிழ் தானா? அவர்களில் பலருக்கு "" என்னும் எழுத்தை உச்சரிக்கத் தெரியவில்லை. அவர்கள் நிகழ்ச்சியின் போது பெரும்பாலும் உபயோகிக்கும் வார்த்தைகளில் சில கீழே...

"ஹலோ"
"வெல்கம் பேக் டூ ஆப்டர் பிரேக்"
"ஒரு சின்ன கமர்சியல் பிரேக்", " வில் கேட்ச் யூ அதர் எந்த் ஆப் பிரேக்"
"அன் டில் தென் பை பை ப்ரம்"
"உங்க டி.வி வால்யூம் கம்மிப் பண்ணுங்க"
"எங்கிருந்து கால் பண்றீங்க"
"நீங்க யார லவ் பண்றீங்க"
"நம்ம ரெகுலர் காலர்"

இதே வாக்கியங்களைத் தமிழில் உச்சரிக்கும் போது எவ்வளவு அழகு என்பதைப் பாருங்கள்..

"வணக்கம்"
"ஒரு விளம்பர இடைவேளை முடிந்து மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி"
"சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்"
"மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது"
"உங்கள் தொலைக்காட்சியின் ஒலியைக் குறைத்து விட்டுப் பேசுங்கள்"
"எங்கிருந்து அழைக்கிறீர்கள்"
"நீங்கள் யாரைக் காதலிக்கிறீர்கள்"
"நமது தொடர் அழைப்பாளர்"

பி.கு: என்னடா இவன் "தமிழ் பிறந்திருக்கிறது" என்று தலைப்பு வைத்து விட்டு அழிவைப் பற்றி எழுதுறானேன்னு குழப்பம் வேண்டாம். அடுத்த தொடரில் இது பற்றி பார்க்கலாம். இந்தப் பதிவில் நானே எத்தனை இடங்களில் தமிழ்க் கொலை செய்திருக்கிறேன் எனத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

14 November 2009

டரியல் (1)

10:04:00 AM Posted by புலவன் புலிகேசி 29 comments
வால்பையன் அருணின் குவியல்களைப் படித்து பிடித்துப் போனதால் நாமும் அதைப் போல் ஒன்று எழுதலாமே என யோசித்ததன் விளைவுதான் இந்த "டரியல்" (புலிகேசில அப்புடித்தான் பேரு வைப்போம்).

வாரத்தின் சனிக்கிழமைகளில் இதைத் தொடர்ந்து எழுதலாம் எனமுடிவெடுத்திருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் எனக்கு நிகழ்ந்த நிகழ்வுகள், இந்தப் பதிவுலகில் நான் ரசித்தப் பதிவுகள் மற்றும் நான் போட்ட சண்டைகள் பற்றி எழுதலாம் என இருக்கிறேன்.

----------------

இந்த முதல் வாரம் எனக்கு மகிழ்ச்சியான வாரம். மலிக்காவிடம் விருது, இளமைவிகடனில் "கவிதைகள்" பிரிவில் எனது முதல் கவிதை. அலுவலகத்தில் ஒருபுராஜக்ட்டுக்காக இன்று செல்லவிருக்கும் விருந்து என நன்றாக போய்கொண்டிருக்கிறது.

திசம்பர் நான்காம் தேதி ஊட்டி மற்றும் முதுமலை செல்லலாம் என்று ஒருஅறிவாளி நண்பனின் ஆலோசனையில் பயணசீட்டு பதிவு செய்து ரத்து செய்வதாவேண்டாமா? என்ற குழப்பத்தில் போய்க் கொண்டிருக்கிறது.

----------------

நண்பர் விழியில் விழுந்தவன் பிரபு-வின் ஒரு அருமயானக் கவிதை. உங்களுடன் பகிர்ந்த்து கொள்ளலாம் என்று இதோ.

தமிழ் உசத்திதான்

தமிழ் மாநாடுகள்
எங்கும் பிரமாண்டமாய்...!

தமிழுக்கு காட்டும் இரக்கம் கூட
தமிழனுக்கு இல்லையே?

ஆம்..,

தமிழ் வாழ
தமிழர்கள் இருக்கிறார்கள்..

ஆனால்
தமிழன் வாழ...?

உண்மையிலேயே தமிழ் உசத்திதான் போலும்... பிரபு


-------------------

13 November 2009

காதல்... பெண் மீது அல்ல...(யூத்புல் விகடனில் வந்த எனது முதல் கவிதை)

9:10:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments

என்னுயிர் நீத்தேனும் தேச
மக்களைக் காப்பேன் என
உறுதி எடுத்துக் கொண்டு
இராணுவத்தில் சேர்ந்தேன்

என்னுயிர் போனதும் தோட்டா
முழக்கத்துடன் அடக்கம் செய்து
வீரவணக்கம் செய்து விட்டு
மறந்து விடுவர்

எனத் தெரிந்தும் உயிர்க்
கொடுக்கத் துணிந்து விட்டேன்
காதலுக்காக...
என்னைப் பெற்ற
என் தேசத்தின் மீது!

*

யூத்புல் விகடனில் வந்த எனது முதல் கவிதை

12 November 2009

பதிவுலக விருது

9:41:00 AM Posted by புலவன் புலிகேசி 22 comments
வலைப்பூ உலகில் நானும் என் முதல் விருதைப் பெற்று விட்டேன். முதல் விருது வழங்கி என்னை ஊக்குவித்தவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றி.
நான் பெற்ற இந்த விருதினை எனக்குப் பிடித்த சில பதிவர்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். பாலாஜி, வானம்பாடிகள், வென்னிற இரவுகள், ஹேமா, ஆகியோர் என்னுடன் சேர்ந்து இந்த விருதினைப் பெற்று விட்டனர். அதனால் அவர்களுக்கு என்னால் கொடுக்க இயலவில்லை. பின் வருபவர்களுக்கு இந்த விருதினைக் கொடுக்க விரும்புகிறேன்.
34 வயதிலேயேத் தன்னை வயதானவர் என்று சொல்லிக் கொண்டு நல்ல பல கவிதைகள், சிறுகதைகள், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நண்பர் "பிரபாகர்".


தமிழ் இலக்கியங்கள், இதிகாசங்கள் என்றால் அனைவரும் சலிப்புடன் வேண்டாம் என ஒதுக்குவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதே இலக்கிய இதிகாசங்களை வாழ்வியலோடு ஒப்பிட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தமிழை வளர்க்கும் தமிழர் "இரா.குணசீலன்".

அழகாகப் பல கவிதைகளை எழுதி விட்டு இப்போது ஈழத்து சிறுகதையை விவரித்துக் கொண்டிருக்கும் "தியா".கவிதைகளுக்கு ஒரு வலை, விவசாயத்திற்கு ஒரு வலை வைத்து இரண்டயும் அழகாய் வழங்கி வரும் நண்பர் "விஜய்".


சமூகப்பார்வைக் கொண்டு திருமணம், கல்வி, பேருந்துப் பிரச்சினைகளை விவரித்த "ஊடகன்".நண்பர்களே விருதினைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த வலையுலகிலிருந்து பல எழுத்தாளர்கள், இயக்குனர்கள், ச்மூக ஆர்வலர்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கின்றனர். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். பதிவுலகிற்கு நன்றிகள்...

11 November 2009

சென்னையில் மழை மனிதர்கள்..

9:00:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments
  சென்னையில் மழை என்றால் உண்மையில் மகிழ்ச்சியடைய வேண்டிய நாம் பொறுப்பற்ற அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

  2008 மழையை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். 4 நாட்கள் அலுவலகங்களும், கால வரையின்றி பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டது, அரங்கநாதன் கீழ்பாலத்தில் பேருந்து மூழ்கியது, மழை நீரில் மிதந்த குடிசைகள், கையில் பணமிருந்தும் உணவுக்காக அலைந்த என்னைப் போன்ற பேச்சிலர்ஸ், பிச்சைக் கிடைக்காமல் பட்டினியாயிருந்த பிச்சைக்காரர்கள், கொஞ்சம் மழை பெய்தாலும் மிதக்கும் வியாசர்பாடி, மழைக்கு பலியானோர் இவை அனைத்தும்  மழை என்றதும் கண்முன் வந்து போகிறது (ஒவ்வொரு ஆண்டுமே).

  வெயில் காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யாமல் "மழையால் உயிரிழந்தவர்களுக்கு மழையில் இறங்கி உதவி செய்த கலக்டர் மற்றும் அதிகாரிகள்" என ஊடகங்களில் பெயர் வாங்கும் கலக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள்.

  மழையில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கும், குடும்ப அட்டை வைத்திருப்பவருக்கும் நிவாரன உதவி(?). அந்த நிதியில் பாதி அரசியல்வாதியிடம். மீதி நிதியைக் கொடுக்க லஞ்சம் கேட்கும் கேடுகெட்ட அதிகாரிகள்(?). போலியாக நிதிபெற்ற பொதுமக்கள். 

சென்னையை விட அதிகம் பாதிக்கப்படும் கிராமமக்கள். அங்கும் அதேபோல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளூம் (இதைப் பற்றி விவரிக்க வேண்டுமானால் இந்த ஒரு பதிவு பத்தாது).

இதை எல்லாம் தேர்தலின் போது ஐந்தாண்டு சாதனைகளாக கூறிக்கொள்ளும் தந்திர அரசியல்வா(வியா)திகள். எல்லாம் தெரிந்திருந்தும் வேறு வழியில்லாமல் வாக்களிக்கும் பொதுமக்கள்.

 இவர்கள் அனைவரும் காலம் காலமாகவே "பரினாமவளர்ச்சியடையா மழை மனிதர்கள்".