கடவுளை மற..மனிதனை நினை..

23 November 2009

இறப்பில் மகிழ்ச்சி

11:34:00 AM Posted by புலவன் புலிகேசி 32 comments
இருந்த வரை வேலைதேடி
அலைந்தவன் இறந்த பின்
வேலை கொடுத்தான்
வெட்டியானுக்கு.பேருந்தில் அடிபட்டு இறந்த
பெண்ணைப் பார்த்ததும்
மகிழ்ச்சி ஓடிப்போன தன்
மகள் இல்லையென்று.அனாதை இல்லத்தில் 50பைசா
இனிப்பில் மகிழ்ச்சி பணக்காரன்
வீட்டில் 50 லட்சமிருந்தும்
இல்லை.பள்ளியை இடித்து கோவில்
கட்டினான். குழந்தைகளுக்கு
கோவில் வாசலில்
பிச்சையிட்டான்.

32 விவாதங்கள்:

jrg said...

nice...

வெண்ணிற இரவுகள்....! said...

//இருந்த வரை வேலைதேடி
அலைந்தவன் இறந்த பின்
வேலை கொடுத்தான்
வெட்டியானுக்கு.

//
நல்ல வரி
//பள்ளியை இடித்து கோவில்
கட்டினான். குழந்தைகளுக்கு
கோவில் வாசலில்
பிச்சையிட்டான். //
நல்ல சிந்தனை

க.பாலாசி said...

//பேருந்தில் அடிபட்டு இறந்த
பெண்ணைப் பார்த்ததும்
மகிழ்ச்சி ஒடிப்போன தன்
மகள் இல்லையென்று.//

//பள்ளியை இடித்து கோவில்
கட்டினான். குழந்தைகளுக்கு
கோவில் வாசலில்
பிச்சையிட்டான். //

நச்சென்ற சிந்தனைகள் நண்பா....

ரசித்தேன்.

இளவட்டம் said...

:-)))))

கலகலப்ரியா said...

//இருந்த வரை வேலைதேடி
அலைந்தவன் இறந்த பின்
வேலை கொடுத்தான்
வெட்டியானுக்கு//

அருமை...! எல்லாமே..!

வானம்பாடிகள் said...

ஒவ்வொன்றும் யதார்த்தம் சொல்லும் கவிதைகள்.
/மகிழ்ச்சி ஒடிப்போன தன்
மகள் இல்லையென்று./

மகிழ்ச்சி இருந்திருக்க முடியாது. நிம்மதி இருந்திருக்கலாம்.

முனைவர்.இரா.குணசீலன் said...

எல்லாக் கவிதைகளுமே அருமையென்றாலும்...

அனாதை இல்லத்தில் 50பைசா
இனிப்பில் மகிழ்ச்சி பணக்காரன்
வீட்டில் 50 லட்சமிருந்தும்
இல்லை.


இந்தக்கவிதை மட்டும் ஏனோ மிகவும் ஈர்ப்பதாகவுள்ளது..
காரணம் அக்கவிதையில் பளிச்சிடும்
உண்மை!
எளிமை!

அகல்விளக்கு said...

//இருந்த வரை வேலைதேடி
அலைந்தவன் இறந்த பின்
வேலை கொடுத்தான்
வெட்டியானுக்கு.
//

அருமையான சிந்தனை...

பிரபாகர் said...

ஒவ்வொரு சிந்தனையும் ரசிக்கும் படியும் அழகையும் இருக்கிறது புலிகேசி.

அருமை.

பிரபாகர்.

ஊடகன் said...

நல்லா இருக்கு நண்பரே

ஹேமா said...

கடைசிப் பந்தி மிகவும் பிடிச்சிருக்கு.

ராமலக்ஷ்மி said...

எல்லாம் அருமை.

//அனாதை இல்லத்தில் 50பைசா
இனிப்பில் மகிழ்ச்சி பணக்காரன்
வீட்டில் 50 லட்சமிருந்தும்
இல்லை.//

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

D.R.Ashok said...

அட அடா..

அன்புடன் மலிக்கா said...

அத்தனையும் அருமை புலிகேசி..

சிறு பிழை எழுத்தில் [ஒடிப்போன] ஓடிப்போன திருத்திவிடுங்கள்..

magesh said...

Notices us to think huge by a very small lines.

venkat said...

//பள்ளியை இடித்து கோவில்
கட்டினான். குழந்தைகளுக்கு
கோவில் வாசலில்
பிச்சையிட்டான். \\

அன்புடன் அருணா said...

/பள்ளியை இடித்து கோவில்
கட்டினான். குழந்தைகளுக்கு
கோவில் வாசலில்
பிச்சையிட்டான். /
பளீரென க்ன்னத்தில் அறைந்தது போலிருந்தது!

கவிதை(கள்) said...

மனது கனக்கிறது அநாதை கவிதைக்கு

எனது தம்பிக்கு வாழ்த்துக்கள்

விஜய்

அபிஷேகா said...

அழகான சிந்தனை, யதார்த்தம் எளிதாக வடிக்கப்பட்டிருக்கின்றது வாழ்த்துக்கள்

மன்னார் அமுதன் said...

மிகவும் அருமை புலிகேசி. முதல் இரண்டு கவிதைகளையும் படித்தவுடன் புல்லரித்துவிட்டது. வாழ்த்துக்கள். நான்குமே அருமை.

பேநா மூடி said...

// இருந்த வரை வேலைதேடி
அலைந்தவன் இறந்த பின்
வேலை கொடுத்தான்
வெட்டியானுக்கு.//

நாலுமே சூப்பர்... அதுல இது தான் பெஸ்ட்...

ஈ ரா said...

அசத்தலான வரிகள்..

ஸ்ரீராம். said...

முதல் இரண்டும் கருத்தைக் கவர்கிறது...

விக்னேஷ்வரி said...

எல்லாமே ரொம்ப எதார்த்தமா இருக்கு.

Balavasakan said...

ஒவ்வொரு வரிகளும் சுளீர் சுளீர் எளறு இருக்கிறது நண்பரே...

சி. கருணாகரசு said...

//இருந்த வரை வேலைதேடி
அலைந்தவன் இறந்த பின்
வேலை கொடுத்தான்
வெட்டியானுக்கு.//

மிக ரசிதேன்...தொடர்க புலி.

புலவன் புலிகேசி said...

அலுவல் காரணமாக நேற்று உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை..அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..

மலிக்கா பிழையை சுட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன்.

இன்றைய கவிதை said...

சூப்பர்ங்க்ணா!

-கேயார்

Anonymous said...

migavum Arumai.

Thodarattum....

கமலேஷ் said...

நல்ல கவிதைகள்...

Iniyal said...

உங்கள் அனைத்து பதிவுகளிலும் சமூகத்திற்கான அக்கறை வெளிபடுகிறது,
முதல் இரண்டு கவிதைகளும் அருமை. எதற்காக புலவன் புலிகேசி என்று எழுதுகிறீர்கள் எதுவும் தனி காரணம் உண்டா, சிவகாமியின் சபதம் நினைவுக்கு வருகிறது. வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

தனிப்பட்ட காரணம் எதுவும் கிடையாது..வடிவேலு நடித்த 23ம் புலிகேசி மிகப் பிடிக்கும். நாம் எழுதப் போறோம் என்பதால் புலவனை சேர்த்து "புலவன் புலிகேசி" என வைத்து விட்டேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.