கடவுளை மற..மனிதனை நினை..

21 November 2009

டரியல் (2)

9:16:00 AM Posted by புலவன் புலிகேசி 29 comments
இந்த வாரமும் மகிழ்ச்சியான வாரம் தான். என்னுடைய "ராமன் இன்றும் ரமனாக.." என்ற சிறுகதையும், "எது வெற்றி..?" என்ற கவிதையும் இளமை விகடன் மற்றும் விகடனின் முகப்பில் வெளி வந்தது.

எது வெற்றி..?

சாதிக்க பிறந்தவன்தான்
மனிதன் என்றான்

முயற்சித்து தோற்றுபோனேன்

தோல்விதான் வெற்றியின்
முதல்படி என்றான்


படியேறி தோற்றேன்

முயன்றால் முடியாதது
இல்லை என்றான்

முயன்று வெற்றி பெற்றேன்

என்னால் முடியாததை நீ
எப்படி செய்தாய் உன்
வெற்றி சந்தேகத்திற்குரியது
என்றான்
புரிந்தது உண்மையில் வெற்றி
பெற்றுவிட்டேன் என்று!

-----------------------------------------------

சென்ற வாரம் சொன்ன ஊட்டி பயணத்தை ரத்து செய்து விட்டேன். ஆனந்த விகடனில் வந்த ஊட்டி பற்றிய செய்தியில், ஊட்டியின் தற்போதைய அழிவுக்கு முக்கிய காரணம் மக்கள் தான் எனப் படித்தேன். உண்மைதான் வெல்ல்நீர் ஓடும் பகுதிகளை தடுத்து வீடு, உணவகம், தங்குமிடங்கள் உருவாக்கப் பட்டதே முக்கிய காரணம் என்கிறது செய்தி. அதனால் தேங்கும் தண்ணீர் நிலப்பரப்புகளை இளகுவாக்கி நிலச்சரிவை ஏற்படுத்தி விட்டதாம். இதில் முகான்மை என்னவென்றால் புரட்சி பேசும் கோயம்புத்தூர் குசும்பு நடிகர் தான் அங்குள்ள நிலப்பரப்புகளை கூறு போட்டு விற்பதில் பெரும்புள்ளியாம்.

-------------------------------------------------

தமிழ் பிறந்திருக்கிறது முதல் பகுதியில் பாரதி சொன்னதாக நான் சொன்னது "மெல்ல தமிழினி சாகும்". இந்த கவி வரிகளில் பாரதி சொல்லியிருப்பது ஏதோவொரு மடந்தை சொன்னதாகத்தானே தவிர அவரே சொல்லவில்லை. இது தெரிந்திருந்தும் நம்மில் பலர் பாரதி சொன்னதாகத்தான் சொல்கிறோம். மன்னார் அமுதனுடன் கூகுல் பேசியில் விவாதித்த பின் மற்றிய விடயமிது.

--------------------------------------------------2012 படம் பார்த்தேன். ஒரு வேளை இந்த படத்தை தமிழில் எடுத்திருந்தால் விஜய்தான் நடித்திருப்பார் எனத் தோன்றியது. அந்த படத்தின் கதாநாயகன் நம்ம விஜய்யை விட பெரிய ஆளா இருப்பார் போல. பூகம்பம் வந்து பூமி பிளந்து விழுந்தவர் மீண்டும் எழுந்து வந்து புறப்பட்ட விமானத்தில் தவ்விப் பிடித்து உட்காருவது, இறுதி காட்சியில் சுனாமியில் இறந்து விட்டார் என அனைவரும் நினைத்து கொண்டிருக்கும் போது குருவி விஜய் கூவத்துலேர்ந்து வந்த மாதிரி பிழைத்து வருவது எப்பா முடியலடா. டொமினிக் குருவி படம் பாத்துருப்பார் போல......???

----------------------------------------------------
இந்த வார டரியல் நம்ம "வானம்பாடிகள்" ஐயாதான். ஐயா எழுதுன "மனுஷி!" சிறுகதை என் மனதை வெகுவாக பாதித்தது. வரதட்சனை கொடுமைகள் பற்றியும் அந்த கிழவியின் மனநிலை பற்றியும் ஒரு அழகான சிறுகதை. படிக்கலைன்னா படிச்சிப் பாருங்க.

29 விவாதங்கள்:

கவிதை(கள்) said...

நிலச்சரிவு மற்றும் நில அரிப்பை தடுக்க வெட்டிவேர் மிகச்சிறந்த ஒரு பயிராகும்.

அதை பற்றிய ஒரு பதிவு இதோ

http://maravalam.blogspot.com/2009/11/blog-post_08.html

இலவச அரசு விழிக்குமா

ஈரோடு கதிர் said...

மனுஷி அருமையான கதைதான்

பூங்குன்றன் வேதநாயகம் said...

இந்த வார 'டரியல்' நிறைய சமுக சிந்தனை நெடியுடன் அமர்க்களமாக இருக்குங்கோ.

ராமலக்ஷ்மி said...

கவிதை அருமை.

வானம்பாடிகளின் ’மனுஷி’ படித்தேன். நல்ல கதை. சுட்டிக்கு நன்றி.

க.பாலாசி said...

கவிதை சிறப்பாக இருக்கிறது நண்பரே....நேற்றே இளமைவிகடனில் படித்துவிட்டேன். நல்ல கவிதை.

மற்ற டரியலாக்கிய செய்திகளனைத்தும் நன்றாகவே இருக்கிறது.

மனுஷி சிறுகதை இன்னும் நான் படிக்கவில்லை. ஆர்வம் ஏற்படுகிறது.

ஊடகன் said...

இந்த வார டரியலில்,

௨௦௧௨ விமர்சனம் தூள்( உணமியில் இது ஒரு விஜயகாந்த், விஜய் நடிக்க வெடிய மொக்கை படம் தான் )

விகடன் கவிதை நல்லா இருந்தது........

Sivaji Sankar said...

நல்ல கவிதை...

//மெல்ல தமிழினி சாகும்"//

வாங்க சஞ்சீவி மூலிகை தேடுவோம்...

முனைவர்.இரா.குணசீலன் said...

எது வெற்றி..?" என்ற கவிதையும் இளமை விகடன் மற்றும் விகடனின் முகப்பில் வெளி வந்தது.மகிழ்ச்சி...
வாழத்துக்கள் நண்பரே..

வானம்பாடிகள் said...

பாராட்டுக்கள் புலிகேசி. கவிதை அருமை. மனுஷியைச் சுட்டியமைக்கு நன்றியும்

Balavasakan said...

//என்னால் முடியாததை நீ
எப்படி செய்தாய் உன்
வெற்றி சந்தேகத்திற்குரியது
என்றான்
புரிந்தது உண்மையில் வெற்றி
பெற்றுவிட்டேன் என்று!//

அருமை நண்பரே...

பேநா மூடி said...

2012 விமர்சனம் அருமை.. என்னோட விமர்சனத்த படிச்சிட்டீங்களா ..

ஜெட்லி said...

//கோயம்புத்தூர் குசும்பு நடிகர் //

சத்யராஜ்??

பிரபாகர் said...

விகடனிலேயே படித்துவிட்டேன் நண்பா. அருமையாய் எழுதுகிறீர்கள்... நன்றாயிருக்கிறது. வானம்பாடிகள் அய்யாவின் கதையும் அற்புதம்..

பிரபாகர்.

நாஞ்சில் பிரதாப் said...

//விஜய் கூவத்துலேர்ந்து வந்த மாதிரி பிழைத்து வருவது எப்பா முடியலடா. டொமினிக் குருவி படம் பாத்துருப்பார் போல......???//

ஹஹஹ அதெப்படி தல அவ்வளவு கரிட்டா சொல்லுறிங்க.

mix said...

நண்பர்கள் கவனத்திற்கு

தமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....

ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
காணொளி தேடல் | வலைப்பூக்கள் | இங்கே நீங்கள் இருக்கிறீர்களா?

இன்றைய கவிதை said...

பதிவுகள அனைத்தும் படிக்கும்படியாய் இருந்தன!
சில சொற்பிழைகள் இருந்த போதும்...

-கேயார்

கலகலப்ரியா said...

அருமையான பகிர்வு...!

Anonymous said...

ஆதவனைப்பார்க்கப்போனது என் போதாதகாலம்!

தற்போதைய தமிழ் படம் பார்ப்பவர்களை நினைத்து நான் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
உலகமே முன்னுக்கு போய்கொண்டிருக்கும்பொழுது, நாம் மட்டும் நடிகர் நடிகையரை பணக்காரர்கள் ஆக்குவதற்காகவே, சுத்த டப்பாவான தமிழ் படங்களை ஏன் பார்க்கவேண்டும்? சமீபத்தில் 'ஆதவன்' படம் பார்த்தேன். கலைஞர் தொலைக்காட்சியில் அந்த படத்தை புகழோ புகழ் என புகழ்ந்து தள்ளியிருந்தார்கள். அந்த படத்தின் தயாரிப்பளரான உதயநிதி ஸ்டாலினை நோபல் பரிசு வாங்கிய விஞ்ஞானி அளவுக்கு புகழ்ந்து தள்ளியிருந்தார்கள்.இந்த சிறிய வயதிலேயே,தன் சொந்தப் பணத்தை (?) வைத்து தாயாரிப்பளாராக உயர்ந்து வந்தது, மிகவும் ஆச்சரியமான விஷயமே! சூர்யாவைத்தவிர வேறு யாருமே இந்த வேடத்தில் நடிக்கமுடியாதெனவும் கதை விட்டிருந்தார்கள். இப்படி ஒருபடத்தை ரவிகுமார் தவிர வேறு எந்த இயக்குனராலும் இந்த நூற்றாண்டில் இயக்கியிருக்கமுடியுமா என திரைப்பட பிரபலங்களே ஆச்சரியப்பட்டு பேட்டி கொடுத்திருந்தார்கள்.
இவ்வளவு பீடிகையோடு இந்தப்படத்தை பார்க்கப்போனால்...............!
15 நிமிடத்தில் நான் வெளியே வந்துவிட்டேன்.
தயவுசெய்து தொலைக்காட்சி, பத்திரிகைகள் விடும் கதைகளை நம்பி பணத்தையும் நேரத்தையும் விரையம் செய்யவேண்டாம்!
டொமினிக் சவுதி
dompower@gmail.com

திருப்பூர் மணி Tirupur mani said...

சூப்பர்..!

சி. கருணாகரசு said...

கவிதையும் (தன்னம்பிக்கை கவிதை)..... மற்றும் நொறுக்கு செய்திகளும் நல்லா இருந்த்தது. வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

அருமையான பகிர்வு...!

thenammailakshmanan said...

//என்னால் முடியாததை நீ
எப்படி செய்தாய் உன்
வெற்றி சந்தேகத்திற்குரியது
என்றான்
புரிந்தது உண்மையில் வெற்றி
பெற்றுவிட்டேன் என்று//

கை கொடுங்க புலவரே யார் அது உங்க வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப் படுவது நிஜமாவே வெற்றி அடைஞ்சிட்டீங்க

ரோஸ்விக் said...

எப்புடிய்யா இப்படியெல்லாம் எழுதுறீங்க?? சந்தேகமா இருக்கே..
.
.
.
.
.
அப்படியோவ்...இப்ப உங்க வெற்றி புரிந்ததா?? :-)) கலக்குங்க நண்பா...வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

வெற்றியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்...

தொடர்ந்து எழுது தோழனே
துவழும் எழுத்துக்களும் ஒருநாள் தூண்டுகோளாகும்...

ஸ்ரீ said...

வாழ்த்துகள்.

சந்தான சங்கர் said...

என்னால் முடியாததை நீ
எப்படி செய்தாய் உன்
வெற்றி சந்தேகத்திற்குரியது
என்றான்
புரிந்தது உண்மையில் வெற்றி
பெற்றுவிட்டேன் என்று!//

அருமை புலிகேசி
இளமை விகடன் பிரசுரத்திற்கு
வாழ்த்துக்கள் நண்பரே...

ஸ்ரீராம். said...

மற்றவர்களின் பொறாமையில் நம் வெற்றி புலப்படுகிறது... நல்ல கணிப்பு.
கோயம்புத்தூர் குசும்பு நடிகர்...... ஊருக்குத்தான் புரட்சிப் பேச்சு போலும்...
மெல்லத் தமிழினி......."கவிஞர்" கனிமொழி கூட முன்பு இப்படி தவறாக ஒரு கூட்டத்தில் பேசியதாக ஞாபகம்.
2012 - விஜய்..... நல்ல நகைச்சுவை.

RAD MADHAV said...

பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

நசரேயன் said...

டரியல் நல்லாவே இருக்கு