கடவுளை மற..மனிதனை நினை..

18 June 2011

அவன் இவன் - எஸ்.ரா வின் கிழிந்த முகத்திரை

7:18:00 AM Posted by புலவன் புலிகேசி , , 21 comments
ஒட்டு மீசை ஜமினின் 60வது பிறந்தநாளில் பெண் வேடமிட்டு 10 நிமிடம் குத்தாட்டம் போடுகிறார் விசால். அவ்வாறு தொடங்குகிறது படம். ஆட்டத்தின் இறுதியில் இரண்டு பெண்களை எட்டி உதைக்கிறார். இதற்கு தியேட்டரில் சிரிப்பு சத்தமும், கைத் தட்டல் சத்தமும் ஒலிக்கிறது. கேட்டால் பெண்கள் அடி வாங்குவது நகைச்சுவையாம். இதற்கு படம் பார்க்க வந்த பெண்களும் கை தட்டி சிரித்தனர்.

படத்தில் கதை என்று சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை. விஷாலும், ஆர்யாவும் அண்ணன் தம்பிகள் மற்றும் திருடர்கள். இருவரில் யார் திறமையான திருடன் என்ற போட்டியுடன் தொடங்குகிறது படம். அந்தப் போட்டியில் ஆர்யா வெற்றி பெறுகிறார். அந்த வெற்றியை தன் தாயுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு கொண்டாடி விசாலையும் , அவர் அம்மாவையும் (ஏன் நம்மையும் சேர்த்து தான்) வெறுப்பேற்றுகிறார்.

அந்த ஊர் ஜமீனுக்கு குடும்பம் என்பதே கிடையாது. அதனால் இந்த இருவரையும் தன் மகன்களாக நினைக்கிறார். இவர்களும் அவர் மீது பாசம் கொள்கின்றனர். வழக்கம் போல் இருவருக்கும் காதலிகள் காமர்சியலாகத் திணிக்கப் பட்டிருக்கின்றனர். ஆர்யாவை டுடோரியல் காலேஜில் படிக்கும் ஒரு பெண்ணும், விஷாலை காவல் துரையை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலிக்க வைக்கப் படுகிறார்கள் (ஏன் எதுக்குன்னுலாம் கேக்கக் கூடாது).படிக்கப் போகும் பெண்களிடம் போலி உண்டியல் வைத்து "சொரிமுத்து அய்யனாருக்கு" உண்டியல்ல காசு போடுங்க எல்லாரும் பாசாகிடுவிங்கன்னு சொல்லி அவங்கள மிரட்டி காசப் புடுங்குறார். அதில் கதாநாயகி கவரிங் வளையலை போட்டு செல்கிறார். மறு நாள் விஷயம் தெரிந்து ஆர்யா அவர்களை வழி மறித்து. கதாநாயகியுடன் வரும் பெண்களை எல்லாம் தலையிலும் முதுகிலும் ஓங்கி அடிக்கிறார். அதே ஆர்யா காட்டில் காவலர்களிடமும், இறுதியில் ஆர்கேவிடமும் சரமாரியாக அடிவாங்குகிறார். ஆண்களிடம் எதிர்த்து நிற்க முடியாதவனிடம் கூட பெண்கள் அடி வாங்க வேண்டுமாம் (பாலாவின் ஆணாதிக்கத் திமிர் இரண்டாவது இடத்தில் பளிச்சிடுகிறது.) .

காவல்துறையை முழுக்க காமெடி துறையாக்கி வைத்திருக்கிறார் பாலா. அந்தத் துறையில் பணிபுரியும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார் விசால். அந்தப் பெண்ணிடம் "நாங்கப் போடுற பேன்டுல ஜிப் இருக்கும். அது மாதிரி நீங்க போடுற பேன்டுல ஜிப் இருக்குமா? அப்புடியே இருந்தாலும் எதுக்கு?" என்பது போன்ற எஸ்.ரா-வின் வக்கிர வசனம் பேசுகிறார். வாக்கி டாக்கியைத் தொலைத்த அந்தப் பெண் இன்னொரு காவலாளியுடன் விசாலைத் தேடி வரும் போது அவர் டாய்லெட் போய்க் கொண்டிருக்கிறார். அப்போது அவன் அம்மாவிடம் வந்து "அம்மா மாவு மாவா போவுதும்மா" என்று சொன்னதும் "அத வச்சி இவளுங்களுக்கு வடை சுட்டா குடுக்க முடியும்" என முகம் சுளிக்க வைக்கும் எஸ்.ரா-வின் வசனம் மீண்டும் ஒலிக்கிறது.

இப்படியாகப் போய்க் கொண்டிருக்க படத்தில் வில்லன் வருகிறான். வில்லனாக நடித்திருக்கும் ஆர்கே மாடுகளை பிடித்து அடிமாட்டுக்கு அனுப்பி லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறான். ஒரு நாள் இதை அந்த ஊர் ஜமினான ஐரிஸ் பார்த்து விட்டு ப்ளு கிராசிடம் காட்டிக் கொடுக்க மாடுகள் பறிமுதல் செய்யப் பட்டு ஆர்கே கைது செய்யப் படுகிறார்.
ஜெயிலில் இருந்து வெளியில் வரும் ஆர்கே ஐரிசை அடித்து இழுத்து சென்று அம்மணமாக்கி நிற்க வைத்து அடிக்கிறான். அப்போது "ஏண்டா நாங்க மாட்ட வேட்டுரதக் கேக்குற நீ குர்பானிங்கற பேருல வருசா வருஷம் ஒட்டகத்த கொண்டு வந்து வெட்டித் திங்கிரானுவளே அவனுங்கள கேக்க வேண்டியது தான" என இசுலாமியர்களை நக்கலடிக்கும் எஸ்.ரா வின் வசனம் பேசுகிறார். பின்னர் அவரைக் கொன்று மரக்கிளையில் தூக்கிலிடுகிறான்.

இதைப் பார்த்து கொதித்துப் போகும் ஆர்யாவை ஆர்கே புரட்டி எடுக்கிறார். ஆனால் விசாலிடம் அடி படுகிறார். ஆர்கேவை இறந்து போன ஜமினுடன் சேர்த்து வைத்து எரித்து விடுகின்றனர். படம் முழுக்க எஸ்.ராவின் காது கூசும் வசனங்கள் ஒலிக்கின்றன. அத்துடன் படம் முடிகிறது.

படத்தின் ஒரு காட்சியில் விசால நாடகம் போடுகிறார். அதில் சாமி வேடத்தில் வருகிறார். "பக்தர்களிடம் காட்டும் கோபத்தை என்னிடம் காட்டலாமா?" என பார்வதியைப் பார்த்து வசனம் பேச ஆர்யா "பக்தர்கள்னா உனக்கு என்ன இளிச்ச வாயனுங்க்களா" என்றும், பின்னர் "தியானம் செய்யும் ஒருவனிடம், சிவன் வந்து பக்தா உனது தியானத்தை மெச்சினோம் உனக்கு என்ன வேண்டும் கேள்" எனும் போது "அவனுக்கு என்ன வேணும்னே தெரியல நீயெல்லாம் ஒரு கடவுளா?" என ஆர்யா பேசும் வசனங்கள் அருமை.

"கௌரவத் தோற்றம் சூர்யா" எனப் போட்டார்கள். அதற்கு பதில் "விளம்பரத் தோற்றம் சூர்யா" எனப் போட்டிருக்கலாம். பயபுள்ள வழக்கம் போல மேடை கிடகிச்சா பேசுற வசனத்தைப் பேசி அகரத்துக்கு விளம்பரம் பண்ணிட்டு போகுது.

பி.கு: முதலில் வசனகர்த்தாவின் பெயரை ஜெமோ எனத் தவறுதலாக வெளியிட்டு விட்டேன். மன்னிக்கவும்.

01 June 2011

சச்சின் ஒரு போலிச் சாமியார்(!)

11:44:00 PM Posted by புலவன் புலிகேசி , 6 comments


சச்சினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள் இப்போதாவது புரிந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை. "கிரிக்கெட் ஒரு மதம் என்றால் சச்சின் அங்கு கடவுளாம்". அதுவும் சரிதான் காசு இருந்தாதான் கடவுளையே தரிசிக்க முடியும்ங்கற காலம் தான் இது.

ஐ.பி.எல்லில் விளையாடிய கடவுள் தேச விளையாட்டிற்கு ஓய்வு கேட்கிறது. காசுக்காக விளையாடும் போது அந்த ஓய்வு தேவைப் படவில்லை. அதிலேயே தெரிகிறது அதன் லட்சணம். கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்தால் நாம் வல்லரசாகி விடுவோம் என போலிக் கனவில் வாழும் நம் மக்கள் இருக்கும் வரை இது போன்ற போலிக் கடவுள்களுக்கு பஞ்சமிருக்காது.

இன்றும் கூட இந்த மக்கள் சச்சினுக்கு வயதாகி விட்டது. அதனால் அவருக்கு ஓய்வு தேவைதான் என சொல்கிறது. தான் நினைத்த கடவுளை நியாயப் படுத்தும் முட்டாள் தனமான வேலையை செய்ய அது தயங்குவதுமில்லை.

கவாஸ்கர் போல் சிலருக்கு வந்திருக்கும் கோபம் கூட சச்சின் அடுத்து அடிக்கும் 50 அல்லது 100 களில் மறைந்து போகும். இல்லாத கடவுள் மீது இதே மக்களுக்கு அவ்வப்போது வந்து மறையும் கோபம் தான் அது. இவர்கள் இருக்கும் வரை சச்சின் போன்ற போலிக் கடவுள்கள் முளைக்கத்தான் செய்வார்கள்.