கடவுளை மற..மனிதனை நினை..

18 June 2011

அவன் இவன் - எஸ்.ரா வின் கிழிந்த முகத்திரை

7:18:00 AM Posted by புலவன் புலிகேசி , , 21 comments
ஒட்டு மீசை ஜமினின் 60வது பிறந்தநாளில் பெண் வேடமிட்டு 10 நிமிடம் குத்தாட்டம் போடுகிறார் விசால். அவ்வாறு தொடங்குகிறது படம். ஆட்டத்தின் இறுதியில் இரண்டு பெண்களை எட்டி உதைக்கிறார். இதற்கு தியேட்டரில் சிரிப்பு சத்தமும், கைத் தட்டல் சத்தமும் ஒலிக்கிறது. கேட்டால் பெண்கள் அடி வாங்குவது நகைச்சுவையாம். இதற்கு படம் பார்க்க வந்த பெண்களும் கை தட்டி சிரித்தனர்.

படத்தில் கதை என்று சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை. விஷாலும், ஆர்யாவும் அண்ணன் தம்பிகள் மற்றும் திருடர்கள். இருவரில் யார் திறமையான திருடன் என்ற போட்டியுடன் தொடங்குகிறது படம். அந்தப் போட்டியில் ஆர்யா வெற்றி பெறுகிறார். அந்த வெற்றியை தன் தாயுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு கொண்டாடி விசாலையும் , அவர் அம்மாவையும் (ஏன் நம்மையும் சேர்த்து தான்) வெறுப்பேற்றுகிறார்.

அந்த ஊர் ஜமீனுக்கு குடும்பம் என்பதே கிடையாது. அதனால் இந்த இருவரையும் தன் மகன்களாக நினைக்கிறார். இவர்களும் அவர் மீது பாசம் கொள்கின்றனர். வழக்கம் போல் இருவருக்கும் காதலிகள் காமர்சியலாகத் திணிக்கப் பட்டிருக்கின்றனர். ஆர்யாவை டுடோரியல் காலேஜில் படிக்கும் ஒரு பெண்ணும், விஷாலை காவல் துரையை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலிக்க வைக்கப் படுகிறார்கள் (ஏன் எதுக்குன்னுலாம் கேக்கக் கூடாது).



படிக்கப் போகும் பெண்களிடம் போலி உண்டியல் வைத்து "சொரிமுத்து அய்யனாருக்கு" உண்டியல்ல காசு போடுங்க எல்லாரும் பாசாகிடுவிங்கன்னு சொல்லி அவங்கள மிரட்டி காசப் புடுங்குறார். அதில் கதாநாயகி கவரிங் வளையலை போட்டு செல்கிறார். மறு நாள் விஷயம் தெரிந்து ஆர்யா அவர்களை வழி மறித்து. கதாநாயகியுடன் வரும் பெண்களை எல்லாம் தலையிலும் முதுகிலும் ஓங்கி அடிக்கிறார். அதே ஆர்யா காட்டில் காவலர்களிடமும், இறுதியில் ஆர்கேவிடமும் சரமாரியாக அடிவாங்குகிறார். ஆண்களிடம் எதிர்த்து நிற்க முடியாதவனிடம் கூட பெண்கள் அடி வாங்க வேண்டுமாம் (பாலாவின் ஆணாதிக்கத் திமிர் இரண்டாவது இடத்தில் பளிச்சிடுகிறது.) .

காவல்துறையை முழுக்க காமெடி துறையாக்கி வைத்திருக்கிறார் பாலா. அந்தத் துறையில் பணிபுரியும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார் விசால். அந்தப் பெண்ணிடம் "நாங்கப் போடுற பேன்டுல ஜிப் இருக்கும். அது மாதிரி நீங்க போடுற பேன்டுல ஜிப் இருக்குமா? அப்புடியே இருந்தாலும் எதுக்கு?" என்பது போன்ற எஸ்.ரா-வின் வக்கிர வசனம் பேசுகிறார். வாக்கி டாக்கியைத் தொலைத்த அந்தப் பெண் இன்னொரு காவலாளியுடன் விசாலைத் தேடி வரும் போது அவர் டாய்லெட் போய்க் கொண்டிருக்கிறார். அப்போது அவன் அம்மாவிடம் வந்து "அம்மா மாவு மாவா போவுதும்மா" என்று சொன்னதும் "அத வச்சி இவளுங்களுக்கு வடை சுட்டா குடுக்க முடியும்" என முகம் சுளிக்க வைக்கும் எஸ்.ரா-வின் வசனம் மீண்டும் ஒலிக்கிறது.

இப்படியாகப் போய்க் கொண்டிருக்க படத்தில் வில்லன் வருகிறான். வில்லனாக நடித்திருக்கும் ஆர்கே மாடுகளை பிடித்து அடிமாட்டுக்கு அனுப்பி லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறான். ஒரு நாள் இதை அந்த ஊர் ஜமினான ஐரிஸ் பார்த்து விட்டு ப்ளு கிராசிடம் காட்டிக் கொடுக்க மாடுகள் பறிமுதல் செய்யப் பட்டு ஆர்கே கைது செய்யப் படுகிறார்.




ஜெயிலில் இருந்து வெளியில் வரும் ஆர்கே ஐரிசை அடித்து இழுத்து சென்று அம்மணமாக்கி நிற்க வைத்து அடிக்கிறான். அப்போது "ஏண்டா நாங்க மாட்ட வேட்டுரதக் கேக்குற நீ குர்பானிங்கற பேருல வருசா வருஷம் ஒட்டகத்த கொண்டு வந்து வெட்டித் திங்கிரானுவளே அவனுங்கள கேக்க வேண்டியது தான" என இசுலாமியர்களை நக்கலடிக்கும் எஸ்.ரா வின் வசனம் பேசுகிறார். பின்னர் அவரைக் கொன்று மரக்கிளையில் தூக்கிலிடுகிறான்.

இதைப் பார்த்து கொதித்துப் போகும் ஆர்யாவை ஆர்கே புரட்டி எடுக்கிறார். ஆனால் விசாலிடம் அடி படுகிறார். ஆர்கேவை இறந்து போன ஜமினுடன் சேர்த்து வைத்து எரித்து விடுகின்றனர். படம் முழுக்க எஸ்.ராவின் காது கூசும் வசனங்கள் ஒலிக்கின்றன. அத்துடன் படம் முடிகிறது.

படத்தின் ஒரு காட்சியில் விசால நாடகம் போடுகிறார். அதில் சாமி வேடத்தில் வருகிறார். "பக்தர்களிடம் காட்டும் கோபத்தை என்னிடம் காட்டலாமா?" என பார்வதியைப் பார்த்து வசனம் பேச ஆர்யா "பக்தர்கள்னா உனக்கு என்ன இளிச்ச வாயனுங்க்களா" என்றும், பின்னர் "தியானம் செய்யும் ஒருவனிடம், சிவன் வந்து பக்தா உனது தியானத்தை மெச்சினோம் உனக்கு என்ன வேண்டும் கேள்" எனும் போது "அவனுக்கு என்ன வேணும்னே தெரியல நீயெல்லாம் ஒரு கடவுளா?" என ஆர்யா பேசும் வசனங்கள் அருமை.

"கௌரவத் தோற்றம் சூர்யா" எனப் போட்டார்கள். அதற்கு பதில் "விளம்பரத் தோற்றம் சூர்யா" எனப் போட்டிருக்கலாம். பயபுள்ள வழக்கம் போல மேடை கிடகிச்சா பேசுற வசனத்தைப் பேசி அகரத்துக்கு விளம்பரம் பண்ணிட்டு போகுது.

பி.கு: முதலில் வசனகர்த்தாவின் பெயரை ஜெமோ எனத் தவறுதலாக வெளியிட்டு விட்டேன். மன்னிக்கவும்.

21 விவாதங்கள்:

Ramprasath said...

// ஜெமோவின் கிழிந்த முகத்திரை
// :))))

Anonymous said...

anne!.. dialogue S.Raa.. not J.Mo

rajamelaiyur said...

ஜெமோ மேல உங்களுக்கு என்ன கோபம் ?

rajamelaiyur said...

நல்ல அலசல் ஆனால் சினிமாவை சினிமாவாக மட்டும் எப்பொழுது நாம் பார்க்க போகிறோம் என தெரியவில்லை

புலவன் புலிகேசி said...

நன்றி அனானி. அவர் எஸ்.ரா. டைப்பும் போது தவறுதலாக யோசிக்கப் பட்டு விட்டது.

shortfilmindia.com said...

டைட்டில் கார்டு பாக்கலையா? ஜெ.மோ இல்லை எஸ்.ரா வசனம்.

புலவன் புலிகேசி said...

//"என் ராஜபாட்டை"- ராஜா says:
June 18, 2011 8:30 AM
நல்ல அலசல் ஆனால் சினிமாவை சினிமாவாக மட்டும் எப்பொழுது நாம் பார்க்க போகிறோம் என தெரியவில்லை//

திரை நட்சத்திரங்களுக்கு கொடி பிடிப்பதை நிறுத்தும் போது.....

Unknown said...

என்ன நடக்குது

sanjeev said...

athu verum poluthu pokku...!! atha pathi pesi neenga polutha pokkathinga... :(

PremaVenus said...

Vityaasama padam edukkiren pervazhi endru padam paarkkiravargalai saavadikkum indha bala pondra directorkal ellam eppo thirunthuvaarkalo.........

Anonymous said...

இந்த ப்ளாகுக்கு கமெண்ட் மாடரேஷன் இருக்கா # ஒரு விவாதம் பண்ணாலம் தான்

Anonymous said...

///Your comment has been saved and will be visible after blog owner approval./////

முடிஞ்சுது ..,நான் வரேன் ..,கருத்த சுதந்திரமா பதிவு பண்ண கூட உரிமை தராத புலவர் ..,ஆணாதிக்கம் ,பத்தி பேசும் தகுதியை நீங்கள் இழந்துவிடீர்கள் ..,

காமராஜ் said...

எதிர்பார்ப்புத்தான் ஏமாற்றத்தின் தாய்தந்தை.

வில்லனின் விநோதங்கள் said...

குர்பானி பற்றி வசனமென்றால் இசுலாமியர்களை பற்றி நக்கலடிக்கும் எஸ்.ராவின் வசனம்.

இதுவே சிவன் - பார்வதி நக்கலடித்தால் ஆர்யா பேசும் வசனங்கள் அருமை.

இல்லாத ஆண்டவா இவங்க மதநல்லிணக்கத்துல கொள்ளிக்கட்டையை வையப்பா.........

Anonymous said...

//Repeatuuuuuu.............

//குர்பானி பற்றி வசனமென்றால் இசுலாமியர்களை பற்றி நக்கலடிக்கும் எஸ்.ராவின் வசனம்.

இதுவே சிவன் - பார்வதி நக்கலடித்தால் ஆர்யா பேசும் வசனங்கள் அருமை.

இல்லாத ஆண்டவா இவங்க மதநல்லிணக்கத்துல கொள்ளிக்கட்டையை வையப்பா.........//

புலவன் புலிகேசி said...

எதனால் இந்தியாவில் இந்து மதம் அதிக விமர்சனத்திற்குள்ளாகிறது என்றால் இந்தியாவில் பெரும்பான்மை மிக்க மதம் அது. அதொடில்லாமல் மக்களை மடையர்களாக்கும் மூட நம்பிக்கைகள் அதிகம் கொண்ட மதமும் அது. எல்லா மதமும் விமர்சனத்திற்குரியவை தான் அதில் மறுப்பேதுமில்லை. ஆதிக்கம் செலுத்தும் மதங்களை தான் அதிகம் விமர்சிக்க முடியும்.

மேலும் அந்த குர்பானி வசனம் இசுலாமிய வெறுப்பின் வெளிப்பாடாகத்தான் தோன்றுகிறது.

வில்லனின் விநோதங்கள் said...

// எதனால் இந்தியாவில் இந்து மதம் அதிக விமர்சனத்திற்குள்ளாகிறது என்றால் இந்தியாவில் பெரும்பான்மை மிக்க மதம் அது. //

சூப்பர்ரு

// அதொடில்லாமல் மக்களை மடையர்களாக்கும் மூட நம்பிக்கைகள் அதிகம் கொண்ட மதமும் அது.//

என்ன ஒரு சிந்தனை

// எல்லா மதமும் விமர்சனத்திற்குரியவை தான் அதில் மறுப்பேதுமில்லை.//

நியாயஸ்தராம்மாம்...

// ஆதிக்கம் செலுத்தும் மதங்களை தான் அதிகம் விமர்சிக்க முடியும்.//

இஸ்சு இட்டு?

// மேலும் அந்த குர்பானி வசனம் இசுலாமிய வெறுப்பின் வெளிப்பாடாகத்தான் தோன்றுகிறது //

மறுபடி மதநல்லிலக்கணம்.

சூப்பர் தலைவா...

உங்க பதில்கள் 100% நேர்மையாக இருந்தது.

suvanappiriyan said...

//எதனால் இந்தியாவில் இந்து மதம் அதிக விமர்சனத்திற்குள்ளாகிறது என்றால் இந்தியாவில் பெரும்பான்மை மிக்க மதம் அது. அதொடில்லாமல் மக்களை மடையர்களாக்கும் மூட நம்பிக்கைகள் அதிகம் கொண்ட மதமும் அது. எல்லா மதமும் விமர்சனத்திற்குரியவை தான் அதில் மறுப்பேதுமில்லை. ஆதிக்கம் செலுத்தும் மதங்களை தான் அதிகம் விமர்சிக்க முடியும்.

மேலும் அந்த குர்பானி வசனம் இசுலாமிய வெறுப்பின் வெளிப்பாடாகத்தான் தோன்றுகிறது.//

உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

'பரிவை' சே.குமார் said...

Nalla alasal...

Anonymous said...

இது அமெரிக்காவில் போய் ஏன் இந்து மதத்தை மட்டும் கிண்டல் அடிப்பதில்லை என்று கேட்பது போல் உள்ளது ! அப்படத்தில் .....மனிதத்தன்மையே இல்லாத, பேசாத ஒருவன் பேசும் மிக சில வசனங்களில் ஒன்று இஸ்லாத்தை கிண்டல் செய்கிறது ! எப்பொழுதும் பேசும் ஆர்யா பேசுவது 'நீ நெனைக்கிறதே கடவுளுக்கு தெரியல்லன்னா அப்புறம் அது என்ன கடவுள் !' இப்போ சொல்லுங்க ...'எது திணிக்கப்பட்ட வசனம் ' !! சரியான ஆட்டு மூளைங்க ! - Vazhuthi

நவீன் said...

ஒஹ் நீங்க தான் முதல்ல ஜெமோவ திட்டிட்டு அப்புறம் எஸ்ரா பக்கம் வந்தவரா ....யாரையாவது திட்டுனம்னே படத்த பாத்துட்டு அதுல யார் இருக்காங்கன்னு கூட தெரியாம நாம பிரபலம் ஆகணும்னு அந்த படத்த பத்தி திட்டுறது சில பேரின் கொள்கை முடிவு நீங்களும் அப்படி தான ....உங்கள படிக்கும்போது சாரு நியாபகம் தான் வந்திச்சி ...சார் இனி ஹாலிவுட் விமர்சனம் பண்ணுங்க உலக அளவில் பெமாஸ் ஆயிடலாம் (ஆனா அதுல யார் யார் இருக்காங்கன்னு தெரிஞ்சி திட்டுங்க )....இதெல்லாம் ஒரு வேலை ,,,,,