கடவுளை மற..மனிதனை நினை..

27 November 2010

2050-ல் தமிழ்மொழி பாடநூல்

5:10:00 PM Posted by புலவன் புலிகேசி , 12 comments
கடவுள் வாழ்த்து
மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
திருக்குவளை தீய சக்தியே போற்றி
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
கனிமொழியின் தந்தையே போற்றி
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
தளபதியின் தந்தையே போற்றி
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
சிங்களவனை வாழவைத்த சிற்பியே போற்றி
ஈழத்தை அழித்த இதயமே போற்றி போற்றி

மொழி வரலாறு.
தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.
தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.
20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன. 2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.
21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.

கணிதம்.
அடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.

பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.

1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது. 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.

புவியியல்
உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி, கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.

தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.

வரலாறு
தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.

கருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.

திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.

தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.

அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.

பட்டத்து இளவரசியான தங்கையும் தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்....

---மின்னஞ்சலில் வந்தது. சிலவற்றை சென்சார் செய்து வெளியிட்டிருக்கிறேன்.

அயோத்தி தீர்ப்பு – நீதித்துறை பேசும் காவி மொழியை அம்பலமாக்கும் அரங்ககூட்டம்!

8:44:00 AM Posted by புலவன் புலிகேசி , No comments

அயோத்தி தீர்ப்பு சரியா? என்ற கேள்வி வரும் போது பலரது பதில் சரியோ தப்போ பிரச்சினையின்றி வழங்கப் பட்டத் தீர்ப்பு என்ற பதில் தான் வருகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க இந்து மதத்தின் நம்பிக்கையில் வழங்கப் பட்டத் தீர்ப்பு மட்டுமே. இந்தத் தீர்ப்பு குறித்த விடயங்களை அம்பலப் படுத்தும் கூட்டம் ஒன்று நாளை நடக்கிறது.

நிகழ்ச்சி நிரல்:

அரங்கக்கூட்டம்

தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர், செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

கருத்துரை :

”நீதித்துறை பேசும் காவி மொழி” திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.

“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை”திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்”திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

விவாத அரங்கம் :

வாக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு! அனைவரும் வாரீர்!

நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி

இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.

தோழமையுடன் அழைக்கும்,

மனித உரிமை பாதுகாப்பு மையம்

தொடர்புக்கு :
க.சுரேஷ் – 98844 55494
வினவு – 97100 82506

__________________


20 November 2010

இசுலாமியமும் பெண்ணடிமையும்

7:25:00 AM Posted by புலவன் புலிகேசி , , 30 comments

பெண்ணை அடிமையாக வைத்திருக்கும் பழக்கம் எல்லா மதங்களிலும் இருக்கின்றன. ஆனால் இசுலாமியம் அதில் சற்று விஞ்சி நிற்கிறதோ எனத் தோன்றுகிறது. சமீபத்தில் நான் சந்தித்த இரண்டு நிகழ்வுகளை இதற்கு உதாரணமாகத் தருகிறேன்.

நிகழ்வு-1

சென்ற மாதம் எனக்கு நெருங்கிய இசுலமிய நண்பனுக்குத் திருமணம் நடைபெற்றது. அவன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவன். எங்களால் திருமணத்திற்கு செல்ல இயலவில்லை. அதன் பின் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆண், பெண் நண்பர்கள் அனைவரும் புறப்பட்டு சென்றோம்.

அது ஆந்திராவில் உள்ள கத்வால் என்ற இடம். அதிகாலை 4 மணிக்கு இரயில் கத்வாலை சென்றடைந்தது. எங்களை அழைத்து செல்வதற்காக மாப்பிள்ளையின் இரண்டு தம்பிகள் வந்திருந்தனர். ஆண்கள் அனைவரும் அருகிலுள்ள ஒரு லாட்ஜில் தங்க வைக்கப் பட்டோம். பெண்கள் மாப்பிள்ளையின் இல்லத்திலேயேத் தங்க வைக்கப் பட்டனர்.

அவர்கள் வீட்டில் தங்க வைக்கப் பட்ட அனைத்துப் பெண்களுக்கும் சில விதிமுறைகள் வகுக்கப் பட்டன. யாரும் இங்கிருந்து செல்லும் வரை வெளியில் செல்ல அனுமதி இல்லை. அதோடு இல்லாமல் அவர்கள் வீட்டுப் பெண்கள் யாரையும் ஆண்கள் இருக்கும் இடங்களுக்குள் செல்ல அனுமதிப்பதில்லை. அதே போல் இந்தப் பெண்களும் நடத்தப் பட்டனர். அவர்கள் சகஜமாக வெளியில் செல்ல அனுமதி இல்லை.

வீட்டிற்குள்ளேயே முடக்கி வைக்கப் பட்டனர். நண்பர்கள் நாங்கள் மதிய உணவுக்கு மாப்பிள்ளை வீட்டிற்கு அழைக்கப் பட்டோம். அப்போது கூட எங்கள் தோழிகள் எங்களை சந்திக்க அனுமதிக்கப் படவில்லை. எல்லாம் முடிந்து மாலை மாப்பிள்ளை அழைப்புக்கு நாங்கள் லாட்ஜில் இருந்து புறப்பட்டு சென்றோம்.

அங்கு சென்றால் இசுலாமிய திருமணங்களில் நடப்பது போலவே நடுவில் திரை வைத்து மணப்பெண் மற்றும் பெண்கள் ஒரு புறமும், மாப்பிள்ளை மற்றும் ஆண்கள் இன்னொரு புறமும் அமர வைக்கப் பட்டனர். மேலும் பெண்கள் உள் செல்ல தனி வழி அமைக்கப் பட்டது. ஆண்கள் அனைவரும் சகஜமாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தனர். ஆனால் பெண்களுக்கு 144 போடப் பட்டது.

இருக்கும் இடத்தை விட்டு வெளியில் வரக் கூடாது. எந்த ஆணுடனும் நின்று பேசக் கூடாது. இது அவர்கள் வீட்டு பெண்களுக்கு மட்டுமல்ல வரவேற்பிற்கு வந்திருந்த மற்ற மதத்துப் பெண்களுக்கும் சேர்த்து விதிக்கப் பட்ட சட்டம். வரவேற்பிற்கு சென்ற ஆண் நண்பர்கள் யாரும் திருமணப் பெண்ணை இறுதி வரைப் பார்க்க வில்லை.

அங்கிருந்த இரண்டு நாட்களும் எங்கள் தோழிகள் வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டனர் என்று கூட சொல்லலாம். வெளியிலிருந்து வந்த இசுலாமியர் அல்லாதப் பெண்களுக்கே இந்த கதி என்றால் அவர்கள் வீட்டுப் பெண்களின் நிலை என்னவாக இருக்கும்?

நிகழ்வு-2

கடந்த புதன் கிழமை நட்பு ஒருவரின் திருமணத்திற்காக ஈரோடு செல்ல காலை 6:15 கோவை விரைவு இரயிலில் புறப்பட்டேன். எனது இருக்கையைத் தேடிப் பிடித்து அமர்ந்தேன். எனக்கு அருகில் ஒரு பெண் வந்து அமர்ந்தார். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம்.

அவர் பெயரை வைத்து அவர் ஒரு இசுலாமியப் பெண் என்பதைப் புரிந்து கொண்டேன். மேலும் அவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி என்பதையும் அறிந்து கொண்டேன். அதன் பின் அவர் என்னிடமும் அருகிலுள்ள இருக்கைகளில் உள்ளவர்களுடனும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார்.

பல விடயங்களை சகஜமாக சிரித்து பேசி வந்து கொண்டிருந்தார். அவர் சேலத்தை சேர்ந்தவர். சேலம் இரயில் நிலையம் வந்த போது எங்களிடம் விடை பெற்று கீழிறங்கினார். இரயில் சற்று நேரம் அங்கே நின்றது. சன்னல் வழியே பார்த்த போது அந்தப் பெண் இசுலாமியப் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து கொண்டிருந்தார். பின்னர் கண் மட்டும் தெரியுமாறு அதனை அணிந்து வந்து கண்களால் சிரித்து "பை" என்றார். எனக்குப் பாவமாகத் தோன்றியது.

இசுலாமியப் பெண்கள் பயத்தின் காரணமாகவே அந்த அங்கியை அணிகிறார்களோ? என்ற கேள்வி எழுந்தது. அந்தப் பெண்ணின் சந்தோசப் பேச்சுகள், அரட்டைகள், சிரிப்புகள் எல்லாம் இரயிலோடு முடிந்தது.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சொல்லப் பட்ட கோட்பாடுகள் இசுலாமிய குரானில் இருக்கின்றனவா? எனத் தெரியவில்லை. அப்படி இருந்தால் இசுலாம் ஒரு பெண்ணடிமை மதமே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி இல்லை என்றாலும் அந்த மதத்து ஆண்களால் பெண்கள் அடிமைகளாக பாவிக்கப் படுகின்றனர் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


15 November 2010

யார் இந்த ஐரோம் ஷர்மிளா?

நேற்று அசுரன் எழுதிய "பன்னியக் குளிப்பாட்டி அதுக்கு குதிரை என்று பெயர் வை!!" என்ற நல்ல பதிவைப் படித்தேன். அதன் பின் சிலருடனான விவாதங்களுக்குப் பின்னர் "ஐரோம் ஷர்மிளா" யார்? என்பது பலருக்குத் தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். அவர்களுக்காக இந்தப் பதிவு.

1972-ல் பிறந்த இந்த ஐரோம் சாரு ஷர்மிளா மணிப்பூரின் இரும்புப் பெண் என அனைவராலும் அழைக்கப் படுபவர். நவம்பர் 4, 2000 முதல் இன்று வரை இவர் உண்ணா விரதம் இருந்து வருகிறார். இவர் அப்படி இருக்கக் காரணம் என்ன? ஜனநாயக் நாடு என சொல்லப் படும் இந்தியாவில் உள்ள மணிப்பூரில் என்ன நடக்கிறது?

செப்டம்பர் 11, 1958 முதல் அருணாச்சலப்ரதேஷ், அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், நாகாலந்து, திரிபுரா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் Armed Forces (Special Powers) Act (AFSPA) நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டத்தின் முலம் இராணுவத்திற்கு வழங்கப் பட்டிருக்கும் உரிமைகள் பொது மக்களைக் கொன்று குவிக்கலாம் எனும் அளவில் இருக்கிறது.

*** இந்த சட்டத்தின் படி பொது வெளியில் 5 பேர் சேர்ந்து நின்றால் அவர்களை சுட்டு வீழ்த்தலாம்.
*** மேலும் யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எவ்வித பிடி வாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம். அவர்களை சுட்டு வீழ்த்தவும் அதிகாரம் உண்டு.
*** இதற்காக அவர்கள் எங்கு வேண்டுமானாலும் எவ்வித உத்தரவுமின்றி தேடுதல் வேட்டை நிகழ்த்தலாம்.
*** இராணுவ அதிகாரிகள் மீது எவ்விதமான வழக்கும் பதிவு செய்ய இயலாது.


இதனை பயன்படுத்தி இராணுவம் அப்பவிப் பொதுமக்களையும் கொன்று குவித்திருக்கிறது. நவம்பர் 1, 2000 ம் ஆண்டு மணிப்பூரில் உள்ல "மலோம்" எனும் நகரத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பத்து அப்பாவி பொதுமக்களை இராணுவம் சுட்டுக் கொன்றது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த போதும் "AFSPA" அதற்கு இடமளிக்கவில்லை. அப்போது 28 வயதே ஆன ஐரோம் ஷர்மிளா இந்த சட்டத்திற்கு எதிரக போர்க் கொடி தூக்கினார். தனது உண்ணாவிரதத்தை நவம்பர் 4, 2000 அன்று துவக்கினார். இந்த சட்டம் அமலில் இருக்கும் மாநிலங்களில் இருந்து நீக்கப் பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

நவம்பர் 6, 2000 அன்று அவர் IPC 309 பிரிவின் கீழ் "தற்கொலை முயற்சி" செய்வதாகக் கூறி போலீசாரால் கைது செய்யப் பட்டார். தண்ணீர் தவிர வேறு ஆகாரங்களை உட்கொள்வதில்லை என்பதில் ஷர்மிளா உறுதியாக இருந்து வருகிறார். ஆனால் கைது செய்யப் பட்ட ஒருவர் உயிரைக் காப்பது காவல் துறையின் வேலை என்பதால் வலுக்கட்டாயமாக அவருக்கு "Nasogastric intubation" (அதாவது மூக்கின் வழியே ஒரு ப்ளாஸ்டிக் ட்யூப் உபயோகித்து நீர் வகை உணவுகளை அளித்தல்) செய்தது.

இதன்பின் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அவர் தற்கொலை முயற்சி எனும் பிரிவில் கைது செய்யப் பட்டு இன்றுவரை சிறையிலிருக்கிறார். ஜீன் 6, 2005ம் ஆண்டு ஜீவன் ரெட்டி கமிசன் இந்த சட்டம் குறித்தான தனது கருத்துக்களைத் தெரிவித்தது. ஆனால் மன்மோகன் சிங் அரசு அதை ஒன்றரை ஆண்டுகள் வரை கிடப்பில் போட்டது. அதன் பின் ப்ரணாப் முகர்ஜி ரெட்டி கமிசன் அளித்த சட்டத் திருத்தக் கருத்துக்களை நிராகரித்தார்.

அத்துடன் அவர் இது போன்ற மாநிலங்களில் இராணுவம் இத்தகைய அதிகாரங்கள் இன்றி செயல் பட முடியாது என கருத்தும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2, 2006 ல் ஷர்மிளா விடுவிக்கப் பட்டது 4 மாத காலங்கள் டெல்லிக்குத் தப்பிச் சென்று அங்குள்ள மாணவர்கள், சமூக அமைப்புகளுடன் கை கோர்த்து ஒரு போராட்ட ஊர்வலம் நடத்தினார்.

அவரது உண்ணாவிரதம் டெல்லியிலும் தொடர்ந்ததால் டெல்லி போலீசாரால் மீண்டும் தற்கொலை முயற்சி பிரிவின் கீழ் கைது செய்யப் பட்டார்.அவர் பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடித்டங்கள் அனுப்பினார். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இன்று வரை தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வரும் இரும்புப் பெண் ஐரோம் ஷர்மிளாவை நம்மில் பலருக்குத் தெரியாது. காரணம் நமது மீடியாக்களின் கையாலாகாத் தனம் மட்டுமல்ல. நமக்கு அவர் ஒரு சினிமா நாயகியாக இருந்திருந்தால் தெரிந்திருக்கும். ஆனால் அவர் சமூக நாயகியாக அல்லவா இருக்கிறார். எப்படி அவரைத் தெரிந்து கொள்ள முடியும்?

14 November 2010

காதலி எனும் ஒற்றைச் சொல்

8:28:00 AM Posted by புலவன் புலிகேசி , 10 comments



கவிதை எழுத யோசித்தால்
கண்ணெதிரில் வந்து
நிற்கிறாள்

முத்தமிட எத்தணிக்கையில்
முகந் திருப்பி ஓடிப்
போகிறாள்

எதிர்பாரா சூழலில் இச்
என்று இதழ் பதித்துச்
செல்கிறாள்

எட்ட நின்று எதிர் வீட்டுப்
பெண்ணை ரசிக்கையில் எங்கிருந்தோ
அலைபேசியில் அதட்டுகிறாள்

என்னை முழுதாய் ஆக்கிரமித்த அவளை
காதலி என ஒற்றைச் சொல்லில்
முடித்தல் தகுமோ!?

13 November 2010

ஈழத்தமிழர்களின் தாய் சோனியா!

6:04:00 AM Posted by புலவன் புலிகேசி , , 11 comments
சோனியா காந்தி பிரதமர் பதவியையே ஏற்க மறுத்து தியாக உணர்வோடு மக்கள் பணியாற்றி வருபவர். குறிப்பாக இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாயாக செயல்பட்டு வரும் நிகரற்ற தலைவியாவார். - தங்கபாலு

ஒரு இனத்தையே அழிப்பதற்கு இராணுவத்தை அனுப்பி வைத்த சிங்களர்களின் சேவகியான சோனியா காந்தி தாய் தான் தமிழனுக்கு அல்ல.

தயாநிதி அழகிரி திருமணத்திற்காக தமுக்கம் மைதானத்தில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கிறது. சுமார் 5 லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் போட்டு மைதானம் முழுதும் குளிரூட்டப்படுகிறது. திருமணத்தன்று மதுரையில் உள்ள 40 திருமண மண்டபங்களில் விருந்து நடக்கவிருக்கிறது.

என் பேரன் திருமணத்தை இவ்வளவு சிம்பிளாக நடத்த நிதியுதவி (வரி) அளித்த தமிழக மக்களுக்கு இந்த பாசத்தலைவனின் மனமார்ந்த நன்றிகள். - கருணாநிதி

யாழ்ப்பாணம் நாவட்குழி பகுதியில் 300 வீடுகளைக் கொண்ட குடியிருப்புப் பகுதியில் 1992-ம் ஆண்டு முதல் தமிழர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்போது இங்குள்ள தமிழ்க் குடும்பங்களை ராணுவம் நேற்று விரட்டியடித்தது. மேலும் இங்கு யாருக்கும் வழங்கப்படாமல் இருந்த வீடுகளையும் சிங்களர்களுக்கே கொடுத்தனர் ராணுவத்தினர்.

எங்கப்பா இலங்கை தமிழர்களின் தாய் சோனியாவை காணோம்?

ராஜா விவகாரத்தில் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி, யாரைப் பற்றியும் குறை சொல்லலாம். ஆனால், அதுவே இறுதியானதென்று எடுத்துக் கொள்ள முடியாது. - கருணாநிதி

அய்யா! 23ம் புலிகேசி அவர்கள் குறை சொல்லவில்லையப்பா! குற்றம் சாட்டியுள்ளனர். எல்லாவற்றையும் சமாளித்து பேச்சால் மக்களை மடையர்களாக்கும் திறமை உனக்கு மட்டுமே!


சாதி என்னும் போர்வைக்குள் ஒளிந்து கொள்ள இவிங்க ஆதரவு வேற. என்ன கொடுமை சார் இது?