சோனியா காந்தி பிரதமர் பதவியையே ஏற்க மறுத்து தியாக உணர்வோடு மக்கள் பணியாற்றி வருபவர். குறிப்பாக இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாயாக செயல்பட்டு வரும் நிகரற்ற தலைவியாவார். - தங்கபாலு
ஒரு இனத்தையே அழிப்பதற்கு இராணுவத்தை அனுப்பி வைத்த சிங்களர்களின் சேவகியான சோனியா காந்தி தாய் தான் தமிழனுக்கு அல்ல.
தயாநிதி அழகிரி திருமணத்திற்காக தமுக்கம் மைதானத்தில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கிறது. சுமார் 5 லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் போட்டு மைதானம் முழுதும் குளிரூட்டப்படுகிறது. திருமணத்தன்று மதுரையில் உள்ள 40 திருமண மண்டபங்களில் விருந்து நடக்கவிருக்கிறது.
என் பேரன் திருமணத்தை இவ்வளவு சிம்பிளாக நடத்த நிதியுதவி (வரி) அளித்த தமிழக மக்களுக்கு இந்த பாசத்தலைவனின் மனமார்ந்த நன்றிகள். - கருணாநிதி
யாழ்ப்பாணம் நாவட்குழி பகுதியில் 300 வீடுகளைக் கொண்ட குடியிருப்புப் பகுதியில் 1992-ம் ஆண்டு முதல் தமிழர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்போது இங்குள்ள தமிழ்க் குடும்பங்களை ராணுவம் நேற்று விரட்டியடித்தது. மேலும் இங்கு யாருக்கும் வழங்கப்படாமல் இருந்த வீடுகளையும் சிங்களர்களுக்கே கொடுத்தனர் ராணுவத்தினர்.
எங்கப்பா இலங்கை தமிழர்களின் தாய் சோனியாவை காணோம்?
ராஜா விவகாரத்தில் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி, யாரைப் பற்றியும் குறை சொல்லலாம். ஆனால், அதுவே இறுதியானதென்று எடுத்துக் கொள்ள முடியாது. - கருணாநிதி
அய்யா! 23ம் புலிகேசி அவர்கள் குறை சொல்லவில்லையப்பா! குற்றம் சாட்டியுள்ளனர். எல்லாவற்றையும் சமாளித்து பேச்சால் மக்களை மடையர்களாக்கும் திறமை உனக்கு மட்டுமே!
11 விவாதங்கள்:
தங்கபாலூலூலூ
தங்கபாலு தமிழ்நாட்டுல தானே இருக்காரு... #டவுட்டு
கொடுத்த காசுக்கு மேலேயே கூவுறானுங்கய்யா.....
நிறைய விசயங்களா சகிச்சுக்க வேண்டியிருக்கு... நான் தமிலேண்டா
என் பேரன் திருமணத்தை இவ்வளவு சிம்பிளாக நடத்த நிதியுதவி (வரி) அளித்த தமிழக மக்களுக்கு இந்த பாசத்தலைவனின் மனமார்ந்த நன்றிகள். - கருணாநிதி//
:)
பாவம் தங்கபாலு.... அவருக்கு பதவியதக்க வைக்க எதாவது பேசணும்... நாம செம்மறி ஆட்டுக்கூட்டந்தானே எல்லாத்தையும் மறந்துட்டு அவங்களையே தூக்கி வச்சிப்போம்.
திருமணத்தில் இன்னும் எவ்வளவோ இருக்கு அதுக்குள்ளே நன்றி சொல்லிட்டா எப்படி ???
ஐயோ...ஐயோ !
(இந்த ஐயோவை...
சந்தோஷமா,துக்கமா,நக்கலா எடுத்துக்கலாம்.)
நெத்தியடி
நெத்தியடி
இந்திய தமிழர்கள் வெட்கப்பட வேண்டிய பேச்சு .தன்மானம் கெட்டதங்க பாலு.
தயாநிதி அழகிரி திருமணத்திற்காக தமுக்கம் மைதானத்தில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கிறது. சுமார் 5 லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் போட்டு மைதானம் முழுதும் குளிரூட்டப்படுகிறது. திருமணத்தன்று மதுரையில் உள்ள 40 திருமண மண்டபங்களில் விருந்து நடக்கவிருக்கிறது.
வளர்ப்பு மகன் கல்யாணம் தான் ஞாபகம் வருது ...சகுனம் சரியில்ல
Post a Comment