கடவுளை மற..மனிதனை நினை..

11 October 2010

மொதலாளி

9:11:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 17 comments

கம்பி மேல் நடந்தாள்
ஒரு சிறுமி

அப்பாவின் காமிராவில் பிடித்தாள்
இன்னொரு சிறுமி

கையில் தட்டேந்தி நடந்தான்
ஒரு சிறுவன்

கையில் ஐஸ்க்ரீமுடன் கடந்தான்
இன்னொரு சிறுவன்

ஏன் இந்த முரண்
என யோசிக்கையில்

கையில் தடேந்திய சிறுவன்
கேட்டான்

"மொதலாளி" காசு போடுங்க.

17 விவாதங்கள்:

Chitra said...

மனதை கனக்க செய்யும் நிகழ்வுகள்!

Anonymous said...

பொர்ச்சி வாழ்க.

சசிகுமார் said...

முதலாளி துவத்தில் சிக்கி இருக்கும் நாம் எப்போது மீள்வோம்.

thiyaa said...

இது சென்னையில் அன்றாட நிகழ்வு

ஸ்ரீராம். said...

"அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி, அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி, பொன்னான உலகென்று பெயருமிட்டால்..."

"பொன் நகை அணிந்த மாளிகைகள், புன்னகை மறந்த மண் குடிசை..."

இந்த இரண்டு பாடல்களின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. மாற்ற முடியாத வித்தியாசம் இது.

sathishsangkavi.blogspot.com said...

Wav.... Super......

பனித்துளி சங்கர் said...

இறுதி வரியில் மொத்தக் கவிதைக்கான அர்த்தமும் புரிகிறது . மிகவும் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி

ஜெயசீலன் said...

நல்ல படைப்பு...

இந்த ஏற்றத்தாழ்வுகளை களைய கல்வி ஒன்றே வழி... கொடுமையென்னவென்றால் அதற்கு தான் பணம் நிறய தேவை.... :(

ராவணன் said...

கம்யூட்டரில் கவிதை எழுதினான் ஒருவன்...
எச்சில் இலையை உண்டான் ஒருவன்...

இதைப் போல கவிதைகள் ஆயிரம் இருக்கு...நீங்கள் என்ன செய்தீர்கள்?

சொம்மா... சொம்மா... பிகில் காட்டவேண்டாம்.

'பரிவை' சே.குமார் said...

மொத்தக் கவிதையும் கடைசி ஒரு வரியில்...
அருமைங்க... வாழ்த்துக்கள்.

Anonymous said...

// சொம்மா... சொம்மா... பிகில் காட்டவேண்டாம்.


//

சீக்கிரமே புரட்சி வரும்.அப்பத் தெரியும் எங்களைப் பற்றி.

ம.தி.சுதா said...

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு...

roshaniee said...

கடந்ததும் கேட்டதும் மனதை இறுக்கியது .

பாலா said...

கேலிக்காக கேட்கவில்லை. சீரியசாவே கேட்கிறேன். அவர்கள் பிச்சைஎடுப்பதற்கு முழுக்க முழுக்க முதலாளிகள்தான் காரணமா?

Umapathy said...

உணர்ந்து இருக்கிறேன்
உணருகிறேன்
உரைக்கிறது

ஏற்றத்தாழ்வுகள்
என்னையும் ஏங்க வைக்கும்
நேற்றும்
இன்றும்
நாளையும்?

Anonymous said...

சுவிசில் நடக்கும் ஊழல்களை தட்டிக்கேட்க வருகிறான் தம்பி!
www.thambi.tk

Anonymous said...

@anony.... puratchi varuma????? buslaya trainlaya... poi polaikkara valiya paaru