கடவுளை மற..மனிதனை நினை..

26 October 2009

தெய்வக் குத்தமாகிப் போச்சே........??? பகுதி-1

4:00:00 PM Posted by புலவன் புலிகேசி 44 comments

* வண்ணான் தொட்டால் தீட்டு என்றவன் திருநாளில் புது சட்டை அணிந்தான்.

சட்டையைத் தானே உருவாக்கினானோ???

* சாணியக் கொடுத்து சந்தனம் என்றால் ஒப்புக்கொள்ள மறுத்தவன் கல்லைக் காட்டிக் கடவுள் என்றதும் ஒப்புக்கொண்டான்.


* பொங்கல் திருநாளில் பானையில் ஊற்றப்பட்ட கோமியத்தை (மாட்டுக் கழிவு) பார்த்தக் குழந்தை ஏனென்று கேட்டது. சம்பிரதாயம்
என்றாள் அதன் விபரம் தெரியாத அம்மா.....

மாட்டுக் கழிவு மனிதனுக்கு உணவா???

* மாட்டுத் தொழுவத்திலிருந்து வெளியேறி கையில் ஒட்டியிருந்த மாட்டுசானத்தைக் கழுவி சுத்தம் செய்து விட்டு சாமி அறைக்கு வந்தவன்....

மாட்டுச்சாண சாம்பலை எடுத்து நெற்றியில் பூசி வாயில் போட்டுக் கொண்டான்.
* 6 வயது குழந்தைக்கு கால் நடக்க முடியாமல் போன போது தெய்வக் குத்தம் என்று சொல்லி குழந்தைக்கு மொட்டைப் போட்டான்.

தெய்வம் போலியோ சொட்டு மருந்து எனத் தெரியாதவன்.

44 விவாதங்கள்:

க.பாலாசி said...

நீங்க தொட்டிருக்கிற விசயங்கள் மிகவும் சிந்தனைக்குறியது. அற்புதமான பார்வை...

//தெய்வம் போலியோ சொட்டு மருந்து எனத் தெரியாதவன்.//

செம டச்....

நல்ல சிந்தனை இடுகை...வாழ்த்துக்கள் நண்பா...

இப்படிக்கு நிஜாம்.., said...

அற்புதம் நண்பரே! கால் நடை உலவிடும் வீதியில் எங்களின் கால்களை அபகரித்தீர்.,வௌவ்வாள் நுழைகிற கோவிலில் எங்களின் வாசலை அடைத்து விட்டீர் என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.

வெண்ணிற இரவுகள்....! said...

nalla sindhanai sirantha padhivu ...
dei tamil translater work aagala

அகல் விளக்கு said...

//* 6 வயது குழந்தைக்கு கால் நடக்க முடியாமல் போன போது தெய்வக் குத்தம் என்று சொல்லி குழந்தைக்கு மொட்டைப் போட்டன்.

தெய்வம் போலியோ சொட்டு மருந்து எனத் தெரியாதவன்.//

அருமையான சிந்தனை...

அகல் விளக்கு said...

புது டெம்ளேட் கூட அழகாயிருக்கிறது நண்பா.

மலரகம்(நாகங்குயில்) said...

மிகவும் அருமை நண்பரே..
மூடப்பழக்கத்தையும், பகுத்தறிவையும், விஞ்ஞானத்தையும்,உங்களின்
இந்த ஒரே இடுகையில் சூப்பரா தொட்டு இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் புலிகேசி.

விடுத‌லைவீரா said...

நண்பரே அருமையான கட்டுரை.தொடரட்டும் உங்கள் பகுத்தறிவு கட்டுரைகள்

பிரபாகர் said...

கருத்துக்கள் நல்லாருக்கு. இன்னும் நிறைய எழுதுங்க புலிகேசி...

பிரபாகர்.

Balavasakan said...

ம் ம் ..... என்ன செய்வது ........
எத்தனை வசிட்டர்கள் எத்தனை விசுவாமித்திரர்கள்
ஊரெங்கும் சாமியார்கள் விட்ட வெடிபுளுகில்தான் அரைவாசி வெங்காயமாகி போனது எம் சமூகம்.

கதிர் - ஈரோடு said...

நல்ல இடுகை

அப்பாதுரை said...

நல்ல சிந்தனை.
போலியோ சொட்டு மருந்து...
தெய்வமென
இன்று நாம் சொல்லுவோம். போகட்டும்.
தெய்வக் காட்டேரியைக் கிழிக்க வந்த ஒளியென
நாளை பிள்ளை சொல்ல வேண்டும்.
தூண்டிலில் சிக்குவது சுறாவாகட்டும்.

வினோத்கெளதம் said...

எல்லாமே சிந்தனையை தூண்டும் கருத்துக்கள்..அருமை..

Subankan said...

கலக்கல்!

வானம்பாடிகள் said...

மன்னிக்கவும். பசும் சாணமும், பசு கோமயமும் சிறந்த கிருமி நாசினி. அதனால்தான் நம் முன்னோர்கள் பசும் சாணமிட்டு தரை மெழுகினார்கள். கோமயத்தைத் தெளித்தார்கள். திரு நீறு என்பது வெறும் சாணச் சாம்பலல்ல. அதற்கும் மருத்துவ குணம் உண்டு. இவை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட்டவை. மற்றவை அருமை.

kanagu said...

summa nach-nu irundhudunga.... kalakkal :)

M.S.E.R.K. said...

Suuuuper!!!!!!!!!!!

Anonymous said...

// பசும் சாணமும், பசு கோமயமும் சிறந்த கிருமி நாசினி. அதனால்தான் நம் முன்னோர்கள் பசும் சாணமிட்டு தரை மெழுகினார்கள். கோமயத்தைத் தெளித்தார்கள். திரு நீறு என்பது வெறும் சாணச் சாம்பலல்ல. அதற்கும் மருத்துவ குணம் உண்டு. இவை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட்டவை.//

நல்லது. அதனால் நாம் சாப்பிடும் முன்னால் மாட்டு சாணியையும், கோமியத்தையும் கலந்து கையைக் கழுவிக்கொண்டு சாப்பிடலாமா? டாக்டர் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன் ஒரு பக்கெட்டில் இவைகளை வைத்துக்கொள்ளலாமா? அருமையான, செலவில்லாத யோசனை!

Da VimCi Code said...

nice

புலவன் புலிகேசி said...

நன்றி க.பாலாசி, இப்படிக்கு நிஜாம், வெண்ணிற இரவுகள், அகல் விளக்கு, மலரகம்(நாகங்குயில்), ராமலக்ஷ்மி , விடுத‌லைவீரா, பிரபாகர்

புலவன் புலிகேசி said...

//ஊரெங்கும் சாமியார்கள் விட்ட வெடிபுளுகில்தான் அரைவாசி வெங்காயமாகி போனது எம் சமூகம்.//

சரியாக சொன்னீர்கள் பாலவாசகம். நன்றி.....

புலவன் புலிகேசி said...

நன்றி கதிர் - ஈரோடு, அப்பாதுரை , வினோத்கெளதம் , Subankan

புலவன் புலிகேசி said...

நன்றி வானம்பாடிகள் ஐயா,

//பசும் சாணமும், பசு கோமயமும் சிறந்த கிருமி நாசினி. //

உண்மைதான் ஐயா, அதற்காகத்தான் அதன் விபரம் தெரியாத அம்மா...என்று சொல்லியுள்ளேன். மருந்தை உணவாக அருந்த முடியாது என்பதே கருத்து....

புலவன் புலிகேசி said...

நன்றி கனகு, M.S.E.R.K, Anonymous , Da VimCi Code

அன்புடன் மலிக்கா said...

மனிதன் மூடநம்பிக்கைக்கு அடிமையாகிவிட்டான்,
அவனின் அறியாகுணம்தான் அவனை ஆட்டிவைப்பதென்பதை அவன் உணருவதே இல்லை,,

தாங்களின் எழுத்துக்களால் அறியாமையென்னும் அறிவை கலைந்தெறியுங்கள், அறிந்துகொள்ளட்டும் அறியாமை மானுடம்..

jrg said...

This is very wonderful thought...

ஆடிப்பாவை said...

சமூக எதார்ததம்...
இவ்வலைக்கு வந்ததில் மகிழ்ச்சி..

ஊடகன் said...

ஐயா, மாட்டின் கோமியதிளிருந்துதான் அம்மை நோய்க்கு மருந்து எடுக்கிறார்கள்....
அது ஒரு எதிர்ப்பு சக்தியாக பயன்பெறுகிறது..... அதேபோல் பால் கரப்பவர்களுக்கு அம்மை வராது....ஏனெனில் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி மாட்டின் மடியிளிருண்டு கிடைக்கிறது...
நீங்கள் அறிந்துகொண்டுதான் எழுதினீர்களா...?

மாட்டின் கோமியத்தை நேராக மருந்தாக கொடுத்தால் சாப்பிட மாடீர்கள், அதையே மாதிரயாகவோ அல்லது ஊசியாகவோ கொடுத்தால் எடுதுகொல்வீர்கள்.............
என்ன கொடுமை ஐயா இது..........?

புலவன் புலிகேசி said...

நன்றி ஆடிப்பாவை

புலவன் புலிகேசி said...

//மாட்டின் கோமியத்தை நேராக மருந்தாக கொடுத்தால் சாப்பிட மாடீர்கள், அதையே மாதிரயாகவோ அல்லது ஊசியாகவோ கொடுத்தால் எடுதுகொல்வீர்கள்.............
என்ன கொடுமை ஐயா இது..........?//

நல்ல விஷயம் தான்....
மாட்டின் கோமியத்தை குடிப்பீர்களா?? மருந்து என்பது தேவைப்படும் பொது மட்டும் எடுத்துக்கொள்ளப் பட வேண்டும். உங்களுக்கு அம்மைப் போட்டால் மாத்திரை சாப்பிடுவீரா கோமியம் குடிப்பீரா???

ஊடகன் said...

//மருந்து என்பது தேவைப்படும் பொது மட்டும் எடுத்துக்கொள்ளப் பட வேண்டும்//

ஐயா, ஒரு தடுப்பூசியாக நோய் வருவதற்கு முன் குடிப்பது என்று வைத்து கொள்ளலாம்....
எவரும் தினமும் கோமியத்தை கலப்பதில்லை( உங்களின் பதிவிலே அது உள்ளது( பொங்கல் திருநாளில்)).........

தயவுசெய்து உங்கள் பதிவை நன்றாக படித்து புரிந்துவிட்டு பதில் அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.......

புலவன் புலிகேசி said...

சரி தடுப்பூசி என்றே வைத்துக் கொள்வோம். என் இரண்டாவது கேள்விக்கு பதில்

//"உங்களுக்கு அம்மைப் போட்டால் மாத்திரை சாப்பிடுவீரா கோமியம் குடிப்பீரா???"//

ஊடகன் said...

//உங்களுக்கு அம்மைப் போட்டால் மாத்திரை சாப்பிடுவீரா கோமியம் குடிப்பீரா???//

ஐயா, அம்மை நோய்க்கு மருந்து இதுவரை இல்லை, ஆனால் தடுப்பு மருந்து உள்ளது( அது மட்டிளிருந்துதான் கண்டுபிடிக்கபடுகிறது ).......

எனக்கு அம்மை நோய் வந்தால் கோமியத்தை தான் குடிப்பேன், குடித்திருக்கிறேன்( இந்த மருந்து அறிவியல் பூர்வமாக உண்மை) , அம்மை நோய்க்கென்று தனியாக மாத்திரை இல்லை(அவ்வாறாக வந்தால் அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு சாப்பிடுவீர்கள் போலும்).....

செயற்கை மருத்துவத்தின் மீது உள்ள நம்பிக்கை, ஏன் உங்களிடம் இயற்கை மருத்துவத்தின் மீது இல்லை.........?

எதையுமே வெள்ளைக்காரன் சொன்னால் நம்பிக்கை என்று சொல்வீர்கள், தமிழன் சொன்னால் மூட நம்பிக்கை என்று சொல்வீர்களா.........? இந்த நிலைக்கு ஒரு தமிழனாக நான் வருந்துகிறேன் நண்பரே.........!

ஈ ரா said...

சில விஷயங்களில் எனக்கு மாறுபாடு எனினும், தங்கள் வரிகளை மிகவும் ரசித்தேன்..

புலவன் புலிகேசி said...

see this, here is the medicine

http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/001592.htm

//எதையுமே வெள்ளைக்காரன் சொன்னால் நம்பிக்கை என்று சொல்வீர்கள், தமிழன் சொன்னால் மூட நம்பிக்கை என்று சொல்வீர்களா.........? இந்த நிலைக்கு ஒரு தமிழனாக நான் வருந்துகிறேன் நண்பரே.........!//

உண்மையில் வருந்தத் தக்க விஷயம். இத்தகையப் பாட்டி வைத்தியங்கள் பாட்டி வைத்தியங்கலாகவே அழிந்து விட்டன... அதை எந்த தமிழனும் எந்த அரசாங்கமும் உலக மருத்துவத்துறைக்கு எடுத்து சொல்லவில்லை....வெள்ளைக்காரன் எடுத்து சென்று நிரூபித்திருக்கிறான். இது யார் தவறு???

ஊடகன் said...

//வெள்ளைக்காரன் எடுத்து சென்று நிரூபித்திருக்கிறான். இது யார் தவறு???//

ஒரு பகுத்தறிவாளரான நீங்களே முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறீர்கள்.......
முன்பு மாட்டின் கழிவு கூடாது என்றீர்கள், பின்பு அதை ஏற்றுகொள்கிறீர்கள்.....

நீங்கள் தான் தமிழன் கண்டுபிடித்த இந்த கண்டுபிடிப்பை சற்று முன்பு மூடநம்பிக்கை என்றீர்கள், இது முழுக்க முழுக்க உங்களை போல் உள்ள தவறான பகுதறிவாலர்களால் தான் தமிழன் தோற்றுபோகிறான்....

ஒரு தமிழனே GREEN CARD வைத்திருந்தாள் தான் நோபல் பரிசு தருகிறார்கள்.......
ஒரு தமிழனே ஆங்கில படத்துக்கு இசை அமைத்திருந்ததால் தான் ஆஸ்கார் தருகிறார்கள்.......

முதலில் தமிழனை தமிழனே அங்கீகரித்தால் தான் தமிழன் வெற்றியடைய முடியும்....

புலவன் புலிகேசி said...

//முன்பு மாட்டின் கழிவு கூடாது என்றீர்கள், பின்பு அதை ஏற்றுகொள்கிறீர்கள்.....//

அந்தக் கழிவு மருந்தாகப் பயன்படுவது தெரியும் அதற்காக அதை குடிக்கலாம் என நான் ஏற்றுக் கொள்ளவே இல்லை..நான் ஏற்றுக் கொண்டேன் என எங்கும் குறிப்பிடவில்லை.

//முதலில் தமிழனை தமிழனே அங்கீகரித்தால் தான் தமிழன் வெற்றியடைய முடியும்....//

என்னுடைய கேள்விக்கு இது பதில் இல்லையே.....இத்தகைய வைத்தியங்களையும் கண்டுபிடிப்புகளும் உண்மையானால் அதை உலக அளவில் கொண்டு செல்லாமல் ஒரு குறுகிய வட்டத்திற்குள் விட்டது யார் தவறு?? இது தான் என் கேள்வி...

சும்மா கமென்ட் பண்ணனும் நு பண்ணாதீங்க. எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க.
மருந்து இருக்கா நு கேட்டீங்க அதற்கு நிரூபணம் கொடுத்தேன். அதே போல நிரூபணம் கொடுக்க முடியாமல் பேசியே காலத்தை கடத்துவது ஒரு தமிழனுக்கு அழகல்ல.......

இளந்(இழந்த)தமிழன் said...

யப்பா புலிகேசி , ஊடகா ரெண்டுபேரும் சண்டை போடாம ஒரு ஓரமா நில்லுங்கப்பா!
எப்ப பாத்தாலும் வெளையாட்டுத்தனம்.....

விக்னேஷ்வரி said...

வித்தியாசமான யோசனை. நல்லாருக்கு.

Anonymous said...

இதுகுத்தான் நம்ப ஆளுங்கள பாத்தா எல்லோரும் தள்ளி உக்காருராங்கோ! என்ன சொன்னாலும் திருந்தமாடானுங்கப்பா. போங்க.... எதையாவது துன்னுங்க ... என்னத்தையாவது குடியுங்க! ராகு கேது பாம்புங்க நெலாவ முளுங்கும் ... பாத்து கன்னத்துல போட்டுகுங்க! அம்ம வந்தா... மாரியாத்தாவுக்கு கூழு வூத்துங்க! இன்னும் எவ்வளோ தமாசு இருக்குதோ எல்லாம் பண்ணுங்கோ!
புலவரே, சும்மா இவங்க கூட பேசினு இருந்தா வேலைக்கு ஆவாது. போட்டுத்தாக்கு! இதே மாதிரி, ஏதாவது ஒன்னு சொல்லிகினே இருப்பார்கள். கண்டுக்காதே!

ஸ்ரீராம். said...

கருத்தைக் கவரும் முயற்சி

ஹேமா said...

அட நேத்து வராமப் போய்ட்டேனே !நல்லாப் பிந்திட்டேன்.

நல்ல சிந்தனை புலிகேசி.
அருமையான விஷயங்களைத் தொட்டு எங்களையும் யோசிக்க வைக்கிறீர்கள்.இப்போதும் இப்படியான மூடப்பழக்கங்களோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

சந்தான சங்கர் said...

புலி வருது
புலி வருதுன்னு
சொன்ன மேட்டேரெல்லாம்
புலிகேசி வந்து
புளிஞ்சிட்டார்யா..

வாங்க புலி....

மா.குருபரன் said...

சூப்பருங்க புலிகேசி... தொடருங்கள் உங்கள் எழுச்சியை...