கடவுளை மற..மனிதனை நினை..

24 October 2009

வணக்கத்திற்குரிய இராணுவவீரன்.!!!!

8:16:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments
அவன் பெயர் முருகன். மயிலாடுதுறையில் பிறந்து B.Sc கணிதம் முடித்து தேசத்தின் மீதுள்ளப் பற்றினால் இராணுவ வீரனானான். அவனுக்கு தமிழழகி என்ற பெண்ணுடன் ஒரு வருடத்திற்கு முன் திருமணம் ஆனது.

Sep:25 அன்று காலை அவன் கல்கத்தா இராணுவத் தளத்தில் பயிற்சியில் இருந்த போது தான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. அவன் தந்தை பேசினார். "டேய் முருகா உனக்கு மவன் பொறந்துருக்காண்டா.." என்றார்.

பதில் பேசும் முன் அவன் உயர் அதிகாரியின் குரல் "All Cadets Alert" பதில் பேசாமல் வைத்துவிட்டு அவர் முன் சென்று நின்றான்.சென்னையிலுள்ள "தமிழ்மண் மருத்துவமனையில்" தீவிரவாதிகள் ஊடுருவி மக்களை சிறைபிடித்த்துள்ளதாகவும் உடனே புறப்படுமாறும் உத்தரவிட்டார்.

தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் பிரசவப் பகுதியிலிருந்த கடைசித் தீவிரவாதியை சுட்டுக் கொன்றுவிட்டு எந்த மனிதச் சேதமும் இன்றி தன் மக்களைக் காப்பாற்றிய பெருமிதத்தோடு சென்னை இராணுவத் தளம் வந்தபோது சட்டென்று நினைவுத் திரும்பியவனாய் ஓடினான்.

தொலைபேசியை எடுத்துத் தந்தையை அழைத்து "எந்த மருத்துவமனை" என்றான். தந்தைப் பதற்றத்துடன் "சென்னைத் தமிழ்மண் மருத்துவமனை" என்றதும் மீண்டும் அதே அதிகாரியின் குரல் "All Cadets Alert".

மும்பையில் தீவிரவாதிகளின் ஊடுருவல் உடனேப் புறப்படுங்கள் என்று உத்தரவிட்டார். எப்படியாவது குழந்தையையும் தமிழழகியையும் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த முருகன் நேரே அந்த உயர் அதிகாரியை நோக்கிச் சென்று.....

சல்யுட் அடித்துவிட்டு நேராகச் சென்று இராணுவ விமானத்தில் ஏறி மும்பைப் புறப்பட்டுச் சென்றான்.

வீர வணக்கம்..
இந்தப் பதிவினை நம் தேசத்திற்காக இன்னுயிர் நீத்த மற்றும் போராடிக் கொண்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்...உங்கள் வாக்குகளையும் கருத்துரைகளையும் தெரிவியுங்கள்....

27 விவாதங்கள்:

கதிர் - ஈரோடு said...

அவர்களுக்கு ஆயிரம் வணக்கங்கள்

Balavasakan said...

வணக்கம் புலவரே நான் எப்படி எனது தளத்தில் பதிவுகள் பதிவு செய்யப்படும் பகுதியை அகலமாக்க (உங்களுடையது போல) என்ன செய்ய வேண்டும் template மற்றம் செய்தால் எனது சைடு பார் எல்லாம் நான் மீண்டும் அமைக்க வேண்டி வருமா சில templateகள் மிக அகலம் சில மிக ஒடுக்கம் ஒரு வழி சொல்லுங்களேன் நீங்கள் மென்பொருள் பொறியியலாளர் தானே ...vsvskn@gmail .com ஒரு உதவியாக இந்த முகவரிக்கு உங்கள் பதிலை அனுப்பி யையுங்கள்

க.பாலாசி said...

//சென்னை இராணுவத் தளம் வந்தபோது சட்டென்று நினைவுத் திரும்பியவனாய் ஓடினான்.//

ஆரம்பத்தில் மயிலாடுதுறையில் நடந்துபோலவே ஆரம்பித்து பிறகு இதுபோலவும் நடந்திருக்கும் என்று எண்ணம் உண்டாகுமாறு முடித்துள்ளீர்கள். உண்மைதான் இதைபோன்ற கடமையின் நிமித்தமாக எத்தனையோ வீரர்கள் நமக்காக உழைக்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்றுமே கடமைப்பட்டுள்ளோம்.

நல்ல இடுகை சிந்தனையுடன். வாழ்த்துக்கள் நண்பா...

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பதிவு புலிகேசி

வானம்பாடிகள் said...

நல்ல சிறுகதை. பாராட்டுக்கள்.

mix said...

நண்பர்கள் கவனத்திற்கு

Tamil

Web Submit

Tamil News Submit

English

Top Blogs

Cinema

Cine Gallery

ஈ ரா said...

இதைப்போல தோழ்ர்கள் தோளில் தான் இந்த தேசம் தாங்கப்படுகிறது...

வாழ்த்துக்கள்..

நிகழ்காலத்தில்... said...

முடிவு எதிர்பாராதது..

வாழ்த்துக்கள்

பிரபாகர் said...

பொறுப்பான ராணுவ வீரர்களின் நிலையை விளக்குகிறது இச்சிறுகதை. அருமை புலிகேசி.

பிரபாகர்.

நெஞ்சின் அடியில்.... said...

நல்ல சிறுகதை புலவரே.....உண்மை கதை போலவே இருந்தது...வாழ்த்துக்கள்!!!

வினோத்கெளதம் said...

Simply Superb..

ஜெட்லி said...

//நல்ல சிறுகதை புலவரே.....உண்மை கதை போலவே இருந்தது...வாழ்த்துக்கள்!!!

//
+1....

அன்புடன் மலிக்கா said...

நல்ல இடுகை நல்ல எண்ணம்,
வாழ்த்துக்கள் புலிகேசி..

ஸ்ரீராம். said...

நினைந்து நினைந்து நெகிழ வேண்டிய விஷயங்கள். சாதா பொது ஜனமோ அவர்கள் தியாகத்தில் கிடைக்கும் நிம்மதியான பொழுதுகளில் அவர்களை நினைப்பது கூட இல்லை

புலவன் புலிகேசி said...

நன்றி கதிர் - ஈரோடு, க.பாலாசி, வெண்ணிற இரவுகள்....! , வானம்பாடிகள், ஈ ரா , நிகழ்காலத்தில்., பிரபாகர் , நெஞ்சின் அடியில், வினோத்கெளதம், ஜெட்லி, அன்புடன் மலிக்கா, ஸ்ரீராம்.

புலவன் புலிகேசி said...

// Balavasakan said...
வணக்கம் புலவரே நான் எப்படி எனது தளத்தில் பதிவுகள் பதிவு செய்யப்படும் பகுதியை அகலமாக்க (உங்களுடையது போல) என்ன செய்ய வேண்டும் template மற்றம் செய்தால் எனது சைடு பார் எல்லாம் நான் மீண்டும் அமைக்க வேண்டி வருமா சில templateகள் மிக அகலம் சில மிக ஒடுக்கம் ஒரு வழி சொல்லுங்களேன் நீங்கள் மென்பொருள் பொறியியலாளர் தானே ...vsvskn@gmail .com ஒரு உதவியாக இந்த முகவரிக்கு உங்கள் பதிலை அனுப்பி யையுங்கள்//

நிச்சயம் அனுப்பி வைக்கிறேன்....

யாழிசை said...

மிக மிக அருமையான பதிவு.மனதை கவர்ந்தது

யாழிசை said...

மிக மிக அருமையான பதிவு.மனதை கவர்ந்தது

யாழிசை said...

மிக மிக அருமையான பதிவு.மனதை கவர்ந்தது

யாழிசை said...

மிக மிக அருமையான பதிவு.மனதை கவர்ந்தது

காமராஜ் said...

red salute

சந்தான சங்கர் said...

வணக்கத்திற்குரிய
ராணுவ வீரன்தான்...

ஜெய்ஹிந்த்...

jrg said...

nice story...

ஊடகன் said...

//தொலைபேசியை எடுத்துத் தந்தையை அழைத்து "எந்த மருத்துவமனை" என்றான். தந்தைப் பதற்றத்துடன் "சென்னைத் தமிழ்மண் மருத்துவமனை" என்றதும் மீண்டும் அதே அதிகாரியின் குரல் "All Cadets Alert".//

கதை வடிவில் ஒரு நிசத்தை எழுதியுள்ளீர்கள்..............
என்னை மிகவும் பாதித்த வரிகள்..............

கவிதை(கள்) said...

ஜெய் ஹிந்த்

பா.ராஜாராம் said...

நல்ல நடை மக்கா!அருமையான பதிவு.

kavya said...

nice story