கடவுளை மற..மனிதனை நினை..

19 September 2010

கொலுசு

7:58:00 AM Posted by புலவன் புலிகேசி , 13 comments

கொலுசொலி

அவள் பாதங்களால் இசையமைக்கும்
காதல் பாடல்.

புன்னகை

இதழால் சிந்தினால் புரிந்திருப்பேன்
ஆனால் கண்ணால் சி(சீ)ந்துகிறாள்.

தேநீர்

"தேன் போன்ற நீர் என்றாள்"
உண்மைதான் உன்னுடன்
அருந்துகையில் மட்டும்.

போலி

நான் அவளை ரசிக்கையில்
போலியாக முறைத்தாள்
நான் திரும்பிய பின்
எதிர் பார்த்து ஏங்கினாள்.

17 September 2010

கம்ப இராமாயணமும் பதிவர் சந்தேகமும்

10:39:00 PM Posted by புலவன் புலிகேசி , , 83 comments
ஜானகிராமன் அவர்கள் ஃபோரத்தில் எழுப்பிய சந்தேகங்கள்

// மேலாடை என்பது தமிழ் சமூகத்தில் கடந்த 3 நுற்றாண்டுகளாகத் தான் பழக்கத்தில் வந்திருக்கும் விஷயம். கம்பர் காலத்தில் மேலாடை அவ்வளவு முக்கியப் பொருள் அல்ல. வெறும் ஆபரணங்களே கழுத்தை அலங்கரிக்கும். அவர்களுக்கு மார்பு என்ற அவயம் கண், காது மூக்கு போன்ற ஒரு உறுப்பு என்ற அளவில் மட்டுமே மதிப்பு. இப்போ, இந்த காலத்தில், ஒரு வாலிபன் தன் நண்பனிடம், "மச்சான், என்னோட காதலியின் கண் ரொம்ப ஷார்ப்டா... அவ ஒரு முறை பார்த்தா என்னால ரெண்டு நாள் துங்கமுடியாது"ன்னு சொல்றான்னு வச்சிக்குங்க, அவன் ஆபாசமாக பேசுகிறான் என்றா சொல்வீர்கள்? அந்த காலத்துல இது இயல்புங்க. அந்த காலத்தில் மார்பென்பது எளிமையான, காமமற்ற அழகை வெளிப்படுத்தும் அவயம். கம்பர் மட்டுமில்ல, சுந்தரர், அமிராமிபட்டர், ஆண்டாள் என ஏறக்குறைய பெரும்பாலான கவிகள் இந்த அவயத்தை நலம் வியந்து பாடியிருப்பார்கள். இதை வைத்து, //இது போன்ற உவமைகள் நண்பனிடம் சொல்லப்படுவதாக காமம் சொட்டும் காம காவியங்களில் கூடப் படித்திருக்க முடியாது. ஆனால் இந்த கம்ப இராமாயணத்தில் படிக்கலாம்.// என்று எப்படி சொல்லாம்?//

ஆடைகள் அணிவதோ அல்லது அவைகளற்றிருப்பதோ ஒரு பிரச்சினையில்லை. மேலும் நான் சொல்லியிருந்த அந்த ஒரு பாடலை வைத்து மட்டும் சொல்லப்பட்டதுமல்ல. இங்கு கம்பன் சொட்டியிருக்கும் காமரசங்கள் நிகழ்வுகளுக்கு உகந்தவைகளாக இல்லை என்பதுதான் கருத்து. உதாரணத்திற்கு பின்வரும் பாடலை எடுத்துக் கொள்ளுங்கள்

"இயல்வுறு செயல்வினாவா
யிருகையு மெயினர் தூண்டத்
துயல்வன துடுப்பு வீசித்
துவலை கண் மகளீர் மென்றூ
கயல்வுறு பரவை யல்கு
லொளி புறத்தளிப்ப வுள்ளத்
தயர்வுறு மதுகை மைந்தர்க்
கயா உயிர்ப் பளித்த தம்மா!"

அதாவது வீரர்கள் மனசோர்வு பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் துன்ப நீக்கத்தை உண்டாக்கிற்று ஒரு பொருள் அது எது? அல்குல்(பெண்ணின் மறைவிடம்).

அயோத்தியிலே மன்னன் மாண்டான். அப்போது அங்கு செல்வதற்காக தசரதனின் திருமனைவியார் அவரது பாங்கியருடன் விம்மியழுதவாறு செல்கின்றனர். உடன் பரதன் மற்றும் அவனது படை வீரர்களும் இருக்கின்றனர். அப்போது வீரர்கள் வேகமாக துடுப்பு போட்டவாறு செல்ல நீரானது தசரதன் மனைவி மற்றும் பாங்கியர் மீது விழ அவர்கள் அணிந்திருந்த மெல்லிய ஆடையானது (இதிலிருந்து அவர்கள் ஆடை அணிந்திருந்ததாக கம்பர் கூறுகிறார்) நீரில் நனைந்து அவர்களின் மறைவிடத்தைக் காட்டியது. அதைக் கண்ட சோர்ந்திருந்த வீரர்கள் புத்துணர்வடைந்தனர் என்பதே இப்பாடலின் பொருள்.

ஒரு அரசன் வீழ்ந்திருக்க துணைவியர் மற்றும் உடனிருப்போரின் மறைவிடத்தை பார்த்து வீரர்கள் மகிழ்வுற்றனராம். இது என்ன நியாயம். அதோடு விட்டு விடவில்லை அந்த கம்பர் "பரவை அல்குல்" என அந்த மறைவிடத்திற்கு ஒரு வர்ணனை வேறு வைக்கிறார். இவை சரி என சொல்கிறீர்களா?


//முதல்ல நீங்க உண்மையிலேயே கம்ப ராமாயணத்தின் மூலப் புத்தகத்தைப் படிச்சிருக்கீங்களா? மனதைத் தொட்டு சொல்லுங்க. கடவுள் மறுப்பு கொள்கையில் நம்பிக்கைக் கொண்ட அண்ணாவுடைய பார்வையை மட்டும் படிச்சிட்டு எப்படி முழு புத்தகமும் காமப் புத்தகம் என்று உங்களால் சொல்லமுடிகிறது? //

நான் மூலப் புத்தகம் படித்ததில்லை. ஆனால் மேலே சொல்லியிருக்கும் பாடல் அயோத்தியா காண்டம், குகப்படலம் 56வது செய்யுளில் உள்ளது. முடிந்தால் படித்துப் பாருங்கள். மேலும் இது அண்ணாவின் பார்வை அல்ல. அதில் இடம் பெற்ற பாடல்களுக்கான விளக்கங்கள் மட்டுமே.

இதற்கு மேல் உங்கள் வாதங்களை தனி மனித தாக்குதல்கள், திசைத் திருப்புதல் இன்னொன்றை தொடர்பு படுத்ததல் இன்றிநேர்மையாக முன் வைக்கலாம். பதில் சொல்ல நான் தயார். பிஸ்கோத்துகளுக்கு இடம் இல்லை.

கம்பரசம் (இராமாயணம் 18+ க்கு மட்டும்)


இந்துக்களின் தெய்வ காவியமாகப் போற்றப்படக் கூடிய நூல் கம்ப இராமாயணம். ஆனால் இது அத்தகையப் போற்றுதலுக்கெல்லாம் தகுதியான நூலா எனப் பார்த்தால் நிச்சயம் இல்லை என்றே தோன்றுகிறது. இது பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் படிக்கக் கூடாத ஒரு ஆபாச நூலாகத் தோன்றுமளவு இருக்கிறது கம்பனின் வர்னனைகள்.

"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்" என சொல்வார்கள். இது போன்ற கவிதான் பாடுமோ என ஒரு அச்சம் ஏற்படுகிறது. இலக்கிய நடையில் எழுதினால் ஆபாசம் கூட அற்புதமாகத் தெரியுமோ என்னவோ!

ஒரு கடவுள் காவியத்தில் இத்தனை ஆபாசங்களா? என்பதை அறிஞர் அண்ணா எழுதிய "கம்பரசம்" எனும் நூலைப் படித்ததும் எழுந்த கேள்வி இது.


இந்த நூலில் அவர் சுயமாக எந்தக் கற்பனைக் குதிரையயும் அவிழ்த்து விட்டு மிகைப்படுத்திக் கூறவில்லை. மாறாக தெய்வ காவியமான "இராமாயணத்தில்" கம்பனால் சொட்டப் பட்ட காமரசம் மிகும் பாடல்களைத் தொகுத்து அதற்கான விளக்கங்களை தெளிவு பட எழுதியிருக்கிறார்.

உதாரணத்திற்கு அந்நூலில் இருந்து ஒரு விளக்கம். இராமாயணத்தில் இது அமையப் பெற்ற இடத்தைப் பார்த்தால் காறித்துப்பத் தோன்றுகிறது. மன்மதக் காவியங்களில் கூட நாயகன் நாயகியைக் குறித்து இத்தனை ஆபாசமாக நண்பனிடம் கூற மாட்டான். இங்கு தெய்வமாக போற்றப் படும் இராமன் தன் மனையாட்டி சீதாவை கண்டறிய அனுமனுக்கு அடையாளம் கூறுகிறான்.

"செப்பென்பன் கலசம் என்பன்
செவ்விள நீரும் தேர்வன்
துப்பொன்று திரள்சூ தென்பன்
சொல்லுவன் தும்பிக் கொம்பை
தப்பின்றிப் பகலின் வந்த
சக்கரவாகம் என்பன்
ஒப்பொன்றும் உலகின் காணேன்
பல நினைத்து உலைவன் இன்னும்."

அதாவது இராமன் கூறுகிறார் "என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கைக்கு உவமை தேடித் தேடிப் பார்க்கிறேன், ஒன்றும் பொருத்தமாக இல்லை. உலகிலேயே ஒரு பொருளும் இல்லை அவைகட்கு இணை. என்ன செய்வேன்!" என சோகிக்கிறார். "செப்புக் கலசமோ!" "செவ்விளநீரோ!" என தன் மனைவியின் கொங்கைகளுக்கு உவமை தேடுகிறார் அந்தக் கடவுள்(?).

அதிலும் இந்த உவமைகளை அவர் சொல்லுவது கட்ட பிரம்மச்சாரியாகக் கருதப்படும் அவரின் நண்பன் அனுமனிடம். இது போன்ற உவமைகள் நண்பனிடம் சொல்லப்படுவதாக காமம் சொட்டும் காம காவியங்களில் கூடப் படித்திருக்க முடியாது. ஆனால் இந்த கம்ப இராமாயணத்தில் படிக்கலாம்.

இது வெறும் சாம்பிள் மட்டும் தான். இதை விட கொடுமையான ஆபாச வர்ணனைகள் எல்லாம் நிரம்பி வழியும் காவியம் தான் இந்த "இராமாயணம்". அதிலும் அத்தகைய ஆபாசங்கள் வைக்கப் பட்ட இடங்கள் படிப்பவர்களை நிச்சயம் காறித் துப்ப வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அனைவரும் படித்துப் பாருங்கள் இந்தக் கம்பரசத்தை. புரிந்து கொள்ளுங்கள் இது கடவுள் காவியமா? அல்லது காம காவியமா? என்பதை.

14 September 2010

அட இன்னா ஆத்தா வெவஸ்த்தை இது

12:47:00 AM Posted by புலவன் புலிகேசி , 42 comments
நேத்து இன்னாடான்னா

நம்ம கண்ணாத்தா கூட நேத்து கொஞ்சம் மெர்சலாயிருச்சிப்பா. அட ஒன்னுமில்லப்பா கண்ணாத்தாளுக்கு வேண்டப்பட்ட ரெண்டு பேரு தெரு வழியாப் போய் கிட்டிருந்த புள்ளைய கிண்டல் பண்ணி புட்டானுங்க. அந்த புள்ள கண்ணாத்தாளுக்கும் தெரிஞ்ச புள்ள தாம்பா. தெருவுல நின்னு பாத்துக் கிட்டிருந்த கண்ணாத்தா "அவனுங்க நம்ம பயளுவ அப்புடில்லாம் பண்ண மாட்டானுவன்னு சொன்னுச்சி".

"ஏன் கண்ணாத்தா நீயும் அங்கதான நின்னு பாத்துக் கிட்டிருந்த"ன்னு கேட்டதுக்கு நான் எங்க பாத்தான் அந்த புள்ள நின்னு கிட்டிருந்திச்சி இந்தப் பயளுவளும் கூட இருந்தாய்ங்க என்ன பேசினானுங்கன்னு கேக்கலையேப்பா. ஆனா அந்த புள்ள இவனுவளத் திட்டுச்சி அது மட்டும் கேட்டுச்சிப்பா" ன்னு சொல்லுச்சி. சரி வா நியாயத்த அங்க இருந்தவங்கக் கிட்டக் கேட்டுத் தெரிஞ்சிக்க ஆத்தான்னு சொன்னா

"அந்த பயளுவ அப்புடி பட்டவய்ங்க இல்ல. ரொம்ப நல்ல பயலுவ" யார்க் கிட்டயும் கேட்டுத் தெரிஞ்சிக்க அவசியமில்லன்னு படார்னு சொல்லிருச்சி. அட என்னா ஆத்தா நீ அங்க என்ன பிரச்சினை நடந்து கிட்டிருக்கு அந்தப் பொண்ணு திட்டுனத மட்டும் காதுல வாங்கிருக்க, ஆனா அவனுவ பேசுனது கேக்கலங்கற. என்னோட செல் போனுல இருக்கு கேக்கறியா?ன்னு கேட்டா அதுவும் முடியாதுங்கற. ஏன் ஆத்தா இவ்ளோ கொழப்பத்துல இருக்க?

அதுக்கப்பறம் எந்த பதிலும் பேசாம ஆத்தா பேயோட்டப் போயிருச்சி.

இன்னிக்கி இன்னாடான்னா

நேத்து அவிங்கத் தப்பு பண்ணிருக்க மாட்டாங்கன்னு சொன்ன ஆத்தா "அவிங்கத் தப்பு பண்ணுனாங்க ஆனா ஏன் பண்ணுனாங்க? அந்த புள்ளயும் இவிங்கக் கிட்ட சண்டப் போட்டுக் கிட்டுதான இருந்துச்சி. அதனாலதான் அப்புடி"ன்னு சொல்லுது.

அதோட உடாம நியாயம் கேக்க வந்த மனுசங்களையெல்லாம் திட்டித் தீத்துருச்சி. ஆனா அந்தப் பயளுவ செஞ்சது தப்புதானன்னு அன்னிக்கி இப்புடி செஞ்சாங்க, நேத்து அப்புடி செஞ்சாங்கன்னு சொல்லுதே தவர அந்தப் பயளுவ செஞ்சத சொல்லவே மாட்டேங்குது. ஒத்துக்கவும் மாட்டேங்குது.

"அந்தப் பொட்டப் புள்ளைக்கு என்ன திமிரிருந்தா இந்தப் பயளுவள நடு ரோட்டுல நாலு பேர சேத்துக் கிட்டு திட்டிருக்கும்"னு கேட்டுது ஆத்தா.

ஏன் ஆத்தா பொட்டப் புள்ளையா இருந்தாப் பயளுவ என்ன சொன்னாலும் கேட்டுக் கிட்டு போவனுமா என்ன? எதித்து கேட்டாத் திமுருன்னு வேற சொல்லுற. அது பொட்டப் புள்ளங்கறதால அத பாலியல் ரீதியா பகடி செஞ்சிப் பேசி பழித் தீத்துக்குறது சரின்னு வேற சொல்லுற. இதுவே நானோ இல்ல வேற எவனோ ரோட்டுல போறப்ப உன்னைய கிண்டல் செஞ்சா சும்மா உட்டுருவியா? உன் கூட்டாளிங்கள கூட்டிட்டு வந்து பேயாடிற மாட்ட?

என்ன ஆத்தா இது ஒனக்கொரு நியாயம், ஊருக்கொரு நியாயம். நீ பேசாம அடுத்த வருச எலக்சன்ல நின்னு மந்திரியாயிரு. உன்ன மாதிரி கேக்குற கேள்விக்கு பதில் சொல்லாம எதிர்க் கட்சிய பகடி செஞ்சி (ஐயாவும் அம்மாவும் போல) ஏமாத்துற ஆளுங்க நெறைய பேரு கட்சியிலத் தேவப் படுறாங்களாம்.

அரசியல் தெரியனும்னா எல்லாரும் ஆத்தாவ காண்டாக்ட் பண்ணுங்கப்பா. அந்த "அம்மா"-வ விட பெரிய ஆளா வரலாம்.

13 September 2010

கலகலா, வானம்பாடி, அதுசரி - எனக்கு காசு வேணும்

2:15:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 16 comments

இந்தப் பதிவின் காரணம் புரிய இப்பதிவில் நடைபெற்ற விவாதங்களைப் பார்க்கவும்."பதிவரசியலில் ஒரு மனுஷியாக வெட்கப்படுகிறேன்.."

முகிலனுக்கும், அரவிந்துக்கும் ஆதரவு, நட்பு என்பதால் கலகலப்ரியா வினவு மற்றும் மாதவராஜின் கட்டுரைகளுக்கு எதிராக ஒரு பதிவெழுதியிருந்தார். சரி இந்த புனைவு பிரச்சினையில் இவரின் நிலைப்பாடும், கருத்தும் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் என அங்கு விவாதத்தைத் துவக்கினேன்.

அவர்கள் வினவில் சொல்லப்பட்ட துகிலுரித்தல், வன்புனர்வு வார்த்தைகளைப் படித்தார்களாம். ஆனால் அந்தப் புனைவைப் படிக்கவில்லையாம். பிரச்சினை அந்தப் புனைவு குறித்ததுதான். நான் அங்கு கேட்டது வேறு ஒன்றும் அல்ல.

"இந்தப் புனைவு குறித்த உங்களின் நேரடியான கருத்து என்ன?" என்பதை மூவரும் விளக்கவும். இறுதி வரை ப்ரியா சொன்னது போல் "சந்தைக்கு போவனும் ஆத்தா வையும் காசு குடு" ரேஞ்சுக்கு கேட்டுப் பாத்தாச்சு. திசைத் திருப்பும் வேலைதான் நடை பெற்றது.

நான் கேள்விப்படாத ஒரு நாவல் பெயர் சொல்லி அதில் வரும் கதாபாத்திரத்துக்கு நடைபெற்றது சரியா? தவறா? என எதிர் கேள்வி. இவர்கள் எல்லாம் மனசாட்சிக்கு நேர்மையாக எப்போது பதிலளிப்பார்கள் எனத் தெரியவில்லை.

இதில் ப்ரியாவிடம் அந்தப்புனைவைப் படித்துவிட்ட்டு அவரின் நிலைப்பாட்டை சொல்லுமாறு கேட்டால் அவர்ன் பதில் கீழே.

//இல்லை ... நான் படிக்கப் போறதில்லை.. இந்தப் ப்ரச்சன பற்றிய தெளிவு... எனக்கு இப்பவே இருக்கு...

முகிலன் மற்றும் அரவிந்த் போன்றவர்கள் மோசமானவர்கள் அல்ல...

சொல்லப் போனா உங்களை விடவும் அவர்கள் நாகரீகமானவர்கள்...

உங்களைப் போல அவங்களையும் எனக்கு இடுகை மூலமாதான் தெரியும்...

அதனால... அவங்க ஒரு பொம்பளை சேலையை உருவி இருக்க மாட்டாங்க...

வன்புணர்வு இல்லவே இல்லை...

அப்படி யாராவது சொன்னா அவங்க நாக்கைப் புடுங்கலாம்... //

படிக்க மாட்டாங்களாம். ஆனா அவங்க கட்சிக் காரர்கள்(அடச்சே எனக்கும் அவங்கள மாதிரியே வருதே) நல்லவங்கன்னு நம்பறாங்களாம். நான் கேட்டது நல்லவரா? கெட்டவரா? (நாயகன் கமல் இல்லப்பா) இல்லை. புனைவு சரியா? தப்பா?

எனக்கு இந்த மூனு பேரோட கருத்தை எதிர்கேள்விகள் வைத்து மழுப்பாமல், விலகிச்செல்லாமல், திசைத் திருப்பாமல் தெரிந்து கொள்ள ஆசை. இது நியாமான ஆசை என்றே கருதுகிறேன்.

அதனால எனக்கு இவங்க மூனு பேர் கிட்டருந்து காசு(கருத்து) வேணும். மனசட்சியுடன் நேர்மையாய் திரியும் இவர்கள் பதில் சொல்லலாம்.

12 September 2010

அப்துல்லாவின் கண்டனமும் வலைப்பதிவர் குழுமமும் - என் சந்தேகங்களும்

10:18:00 PM Posted by புலவன் புலிகேசி , , 12 comments
//ஒரு குழுமம் என்பது தனிப்பட்ட முறையில் சிலர் தங்களுக்குள் பகிந்து கொள்ளும் ஒரு அமைப்பு.// -அப்துல்லா

அப்ப குழுமம் என்பது தனிப்பட்ட நபர்களுக்கானது. இங்கு தனிப்பட்டவர்கள் என்பவர்கள் யார் என விளக்கினால் நலம்.

//இந்த குழுமத்தில் நான் இட்ட சில மடல்களை என் முன்னனுமதியின்றி வினவு தளத்தின் பின்னூட்டத்தில் வெளியிட்ட சகோதரி சாந்தி அவர்களுக்கு என் வன்மையான கண்டனங்கள். அதிலும் ஒரு மெயிலில் என்னுடைய கைபேசி எண் வருவதுபோல காப்பி&பேஸ்ட் செய்து இருக்கின்றார். ரம்ஜான் பண்டிகை அன்று தங்கள் சுயஅடையாளத்தைத் தொலைத்த பொறுக்கிகள் சிலர் எனக்கு போன் செய்து கொச்சையான மொழியில் திட்டுகின்றனர். மீண்டும் நான் அழைத்தால் அது பொதுதொலைபேசியாக இருக்கின்றது. எவர் என்று தெரியவில்லை.எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு???// -அப்துல்லா

சந்தேகமே வேண்டாம். முழுக்க நீங்கள் தான். அந்தக் குழுமம் ஒன்றும் உங்களின் கூகுல் சாட் இல்லை. உங்கள் அலைபேசி எண் வெளிப்படையாகக் கூற. கூகுல் சாட்டிலிருந்து கூட சுட்டு விடும் இந்த காலகட்டத்தில் அப்படிப்பட்ட ஒரு குழுமத்தில் அலைபேசி எண் கொடுத்திருக்கிறேன் என்பது எந்த விதத்தில் சரி?

அது வலைப்பதிவர் குழுமம். எல்லா வலைப்பதிவர்களும் உபயோகப் படுத்தும் ஒரு பொது வெளி. நீங்கள் சொல்வது போல் தனிப்பட்ட நபர்கள் மட்டும் பங்கு கொள்ளும் இடமல்ல. அப்படி இருக்கையில் அதில் தொலைபேசி எண் கொடுத்தது சரியா?

//இந்தக் குழுமத்தின் நிர்வாகி கேபிள் அவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நம்பகத்தன்மையற்ற இந்தக் குழுமத்தில் இனியும் தொடர எனக்கு விருப்பம் இல்லை.என்னை நீக்கவும்.// -அப்துல்லா

இந்தக் குழுமத்தில் இணையும் போது உங்களுக்குத் தெரியாதா? இங்கு இத்தகைய செக்யூரிட்டிகள் இல்லை என்று. இது நம்பகத்தன்மையற்ற குழுமம் என்பதை விட நிர்வாகிகளே இல்லாத குழுமம். வெறும் கும்மியடிப்பதற்கு மட்டும் பயன்படும் ஒரு இடம். அப்படி இருக்கையில் எந்த செக்யூரிட்டியை எதிர் பார்த்து உங்கள் அலைபேசி எண்ணை அங்கு கொடுத்தீர்கள்? இதற்கு யார் பொறுப்பு என நினைக்கிறீர்கள்?

இந்தக் கண்டன மடலைக்கூட அந்த குழுமத்தில்தான் வெளியிட்டிருக்கிறீர்கள். அதற்கு காரணம் என்ன? என விளக்கினாலும் நலம். இல்லை இது நாங்க நாலு பேரு மட்டும் இருக்குற குழுமம். இது ஒன்னும் பொது வெளியில்லைன்னு சொன்னீங்கன்னா எனக்கு சிரிப்புத்தான் வரும்.


08 September 2010

இந்தியாவின் "நாணயம்" - ஓர் அடையாளம்

10:53:00 PM Posted by புலவன் புலிகேசி , 15 comments
எனக்கு மின்னஞ்சலில் வந்த படம் இது. இதுதான் உண்மை நிலையும்.

இப்படத்தில் ஒரு தவறு என்னவென்றால் ஏழைகளின் எண்ணிக்கை குறைவாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் படம் சொல்லும் விடயம் முழுக்க உண்மை.

07 September 2010

நான் அடிமை இல்லை - முனியம்மா

9:34:00 AM Posted by புலவன் புலிகேசி , , 12 comments

பெண்கள் அடிமைகளாக வாழ்வதில்லை. எல்லோரும் முன்னேறியிருக்கிறார்கள். இன்னும் பெண்ணடிமையைப் பற்றி பேசுகிறாயே? என பல பெண்களே என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் நகர்ப்புற பெண்களின் உடை, வேலைக்கு செல்லுதல் போன்ற விடயங்களை வைத்து மேலோட்டமாகவே யோசிக்கிறார்கள். ஆனால் இன்றும் பெண்கள் அடிமை போல் நடத்தப் படுவது அன்றாட செய்தித் தாள்களில் கிடைக்கப் பெறுகிறது.

அப்படி ஒரு சம்பவம் தான் இது. கிருஷ்ணகிரியில் 15வயது சிறுமிக்கு பால்ய திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடை பெற்று வந்திருக்கிறது. அந்த பெண்ணின் பெயர் முனியம்மா. பள்ளிப் படிப்பு கூட முடியாத பருவத்தில் திருமண ஏற்பாடு. தனக்கு நிகழப் போகும் கொடுமையை ஏற்றுக் கொண்டு அடிமையாக வாழ அவருக்கு விருப்பமில்லை.

அவருக்கு பார்த்த மாப்பிள்ளை சுந்தரத்தின் வயது 32. என்ன செய்யலாம்? என யோசித்த அந்த சிறுமி தனது திருமணப் பத்திரிகையை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஃபேக்ஸ் மூலம் அனுப்பி உதவி கோரினார். நேரில் விரைந்தவர்கள் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரை எச்சரித்து விட்டு அச்சிறுமியின் முடிவுக்கு பாராட்டுக் கூறியுள்ளனர்.

இன்றும் பலப் பெண்கள் தனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி விட்டு அடிமையாக வாழத் துணிகிறார்கள். இது துணிச்சல் என்பதை விட கோழைத்தணம் என்றே சொல்ல வேண்டும். இன்று பலரால் பெண்கள் முன்னேற்றமடைந்து விட்டார்கள் என நினைக்கப் படும் நகர்ப் புற பெண்களிலும் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்.

இன்றைய கால கட்டத்தில் கணக்கிட்டால் விருப்பமின்றி நடந்த திருமணங்கள் நிச்சயம் அதிகமாக இருக்கும். இன்றும் வரதட்சினை கொடுமையால் பெண் தற்கொலை போன்ற செய்திகள் தினசரிகளை அலங்கரித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் இது போன்று எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் தனக்கு நிகழவிருந்த கொடுமையை எதிர்த்து வெற்றி பெற்ற சிறுமி முனியம்மாளுக்கு எனது சல்யூட் மற்றும் வாழ்த்துக்கள்.