கடவுளை மற..மனிதனை நினை..

12 September 2010

அப்துல்லாவின் கண்டனமும் வலைப்பதிவர் குழுமமும் - என் சந்தேகங்களும்

10:18:00 PM Posted by புலவன் புலிகேசி , , 12 comments
//ஒரு குழுமம் என்பது தனிப்பட்ட முறையில் சிலர் தங்களுக்குள் பகிந்து கொள்ளும் ஒரு அமைப்பு.// -அப்துல்லா

அப்ப குழுமம் என்பது தனிப்பட்ட நபர்களுக்கானது. இங்கு தனிப்பட்டவர்கள் என்பவர்கள் யார் என விளக்கினால் நலம்.

//இந்த குழுமத்தில் நான் இட்ட சில மடல்களை என் முன்னனுமதியின்றி வினவு தளத்தின் பின்னூட்டத்தில் வெளியிட்ட சகோதரி சாந்தி அவர்களுக்கு என் வன்மையான கண்டனங்கள். அதிலும் ஒரு மெயிலில் என்னுடைய கைபேசி எண் வருவதுபோல காப்பி&பேஸ்ட் செய்து இருக்கின்றார். ரம்ஜான் பண்டிகை அன்று தங்கள் சுயஅடையாளத்தைத் தொலைத்த பொறுக்கிகள் சிலர் எனக்கு போன் செய்து கொச்சையான மொழியில் திட்டுகின்றனர். மீண்டும் நான் அழைத்தால் அது பொதுதொலைபேசியாக இருக்கின்றது. எவர் என்று தெரியவில்லை.எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு???// -அப்துல்லா

சந்தேகமே வேண்டாம். முழுக்க நீங்கள் தான். அந்தக் குழுமம் ஒன்றும் உங்களின் கூகுல் சாட் இல்லை. உங்கள் அலைபேசி எண் வெளிப்படையாகக் கூற. கூகுல் சாட்டிலிருந்து கூட சுட்டு விடும் இந்த காலகட்டத்தில் அப்படிப்பட்ட ஒரு குழுமத்தில் அலைபேசி எண் கொடுத்திருக்கிறேன் என்பது எந்த விதத்தில் சரி?

அது வலைப்பதிவர் குழுமம். எல்லா வலைப்பதிவர்களும் உபயோகப் படுத்தும் ஒரு பொது வெளி. நீங்கள் சொல்வது போல் தனிப்பட்ட நபர்கள் மட்டும் பங்கு கொள்ளும் இடமல்ல. அப்படி இருக்கையில் அதில் தொலைபேசி எண் கொடுத்தது சரியா?

//இந்தக் குழுமத்தின் நிர்வாகி கேபிள் அவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நம்பகத்தன்மையற்ற இந்தக் குழுமத்தில் இனியும் தொடர எனக்கு விருப்பம் இல்லை.என்னை நீக்கவும்.// -அப்துல்லா

இந்தக் குழுமத்தில் இணையும் போது உங்களுக்குத் தெரியாதா? இங்கு இத்தகைய செக்யூரிட்டிகள் இல்லை என்று. இது நம்பகத்தன்மையற்ற குழுமம் என்பதை விட நிர்வாகிகளே இல்லாத குழுமம். வெறும் கும்மியடிப்பதற்கு மட்டும் பயன்படும் ஒரு இடம். அப்படி இருக்கையில் எந்த செக்யூரிட்டியை எதிர் பார்த்து உங்கள் அலைபேசி எண்ணை அங்கு கொடுத்தீர்கள்? இதற்கு யார் பொறுப்பு என நினைக்கிறீர்கள்?

இந்தக் கண்டன மடலைக்கூட அந்த குழுமத்தில்தான் வெளியிட்டிருக்கிறீர்கள். அதற்கு காரணம் என்ன? என விளக்கினாலும் நலம். இல்லை இது நாங்க நாலு பேரு மட்டும் இருக்குற குழுமம். இது ஒன்னும் பொது வெளியில்லைன்னு சொன்னீங்கன்னா எனக்கு சிரிப்புத்தான் வரும்.


12 விவாதங்கள்:

மின்னுது மின்னல் said...
This comment has been removed by the author.
மின்னுது மின்னல் said...

இந்தக் கண்டன மடலைக்கூட அந்த குழுமத்தில்தான் வெளியிட்டிருக்கிறீர்கள். அதற்கு காரணம் என்ன?
//

அறிவாளிகள் காசு தொலைந்த இடத்தில்தான் தேடுவார்கள்
முட்டாள்கள் தொலைந்த இடத்தை விட்டு வெளிச்சம் இருக்கும் இடத்தில் தேடுவார்கள்

:)))

புலவன் புலிகேசி said...

தொலைந்த இடத்தில் காசு இருக்கும். அங்கு மட்டும் தேடினால் போதும் என நினைப்பது முட்டாளா? அறிவாளியா?

சே.குமார் said...

என்ன பிரச்சினை என்பதை அறியேன். இருந்தும் அவரின் கருத்துக்கு உங்கள் பதில் நச்.

smart said...

//நீங்கள் சொல்வது போல் தனிப்பட்ட நபர்கள் மட்டும் பங்கு கொள்ளும் இடமல்ல. அப்படி இருக்கையில் அதில் தொலைபேசி எண் கொடுத்தது சரியா//

நீங்க குறிப்பிடுவது போல அது பொதுவாக யாரும் பார்க்கமுடியாது மெம்மபர்கள் மட்டுமே வாசிக்கமுடியும்ன்னு தெரியாதா? இல்லை தெரியாதமாதிரி நடிக்கிறீங்களா?

புலவன் புலிகேசி said...

அட என்னா பாஸ் அதுக்கூடவாத் தெரியாம இருப்போம். அந்தக் குழுமத்துல யார் வேணா சேரலாம். அப்படி தரமா நிர்வகிக்கப் படுற குழுமம் அது.

புன்னகை தேசம். said...

:)


nalla pathil pulikesi..

ithu maathiri niraya joke pannuvaanga...


mathaar photo profile la ulagam poora suthum pothu therilayam..


:)))

sema comedy panraanga...

avanga puthisali thanathai avangaley torch aDICHU ...:))

Anonymous said...

அந்தக் குழுமமே ஒரு சிலரின் விளம்பரத்துக்காக உருவானதுதான். அதையும் சாந்தி அவர்கள் அம்பலப் படுத்தியிருக்கிறார். அதற்கு பதில் சொல்லாமல் ”வேற விதமா முயற்சி பண்ணுங்கப்பா” என்று பரோட்டா கொத்தியிருக்கிறது அந்த குழுமத்தின் மாடரேட்டர்களில் ஒன்று...

Anonymous said...

அடப்பாவமே... அப்ப அவருக்கு ஃபோன் பண்ணி அசிங்கமா பேசுனது நீங்கதானா??
இல்லைன்னு சொன்னா உங்களுக்கு மட்டும் ஏன் தனியா துடிக்கிது??

Anonymous said...

மணிஜீ...... said...

நண்பர்களுக்கு

சத்தியமாக நாம் இலக்கியம் எழுதி கிழிக்கப்போவதில்லை. இந்த ஃபோரம் கருத்து பகிர்தல் மற்றும் கும்மிகளுக்காகவே. விருப்பம் இருப்பவர்கள் இணைந்திருக்கலாம். குழுமத்தை குறை சொல்பவர்கள் ,வெளியேறி விட்டு சொல்லுங்கள்.சும்மா அவன் கையை பிடிச்சு
இழுத்தான். இவன் என்னை பார்த்து கண் அடிச்சான்னு புலம்பல்கள் வேண்டாம்..விருப்பமிலாதவர்கள் ப்ளீஸ்..........

மணிகண்டன் said...

குழுமம் பொதுவெளி குறித்தான உங்கள் கருத்தில் முற்றிலும் உடன்படுகிறேன். இதை இவ்வளவு புரிந்துக்கொள்ளாமல் இருந்ததற்காக வெட்கப்படுகிறேன். நன்றி புலிகேசி. உங்களிடம் நான் கடமைப்பட்டுள்ளேன். மறுபடியும் தேங்க்ஸ்.

மதார் said...

Once upon a time long long ago en profile la photo vachurunthen marukala but appo ennai yarukum theriyathu nan pirabalam ila . Safety parthu appuram eduthuten . Nampikaiyin adipadaiyil oruvaruku naan en photo ungal moolama pala peruku poga vendum anupunga enru ethum nan solaliye . Avanga ennai nampi anupiya photo innamum ennai thandi yarukum pogala.