கடவுளை மற..மனிதனை நினை..

11 October 2010

மொதலாளி

9:11:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 17 comments

கம்பி மேல் நடந்தாள்
ஒரு சிறுமி

அப்பாவின் காமிராவில் பிடித்தாள்
இன்னொரு சிறுமி

கையில் தட்டேந்தி நடந்தான்
ஒரு சிறுவன்

கையில் ஐஸ்க்ரீமுடன் கடந்தான்
இன்னொரு சிறுவன்

ஏன் இந்த முரண்
என யோசிக்கையில்

கையில் தடேந்திய சிறுவன்
கேட்டான்

"மொதலாளி" காசு போடுங்க.

06 October 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்! - தினமணிக்கு என் பாராட்டுக்கள்

6:38:00 AM Posted by புலவன் புலிகேசி , , 13 comments

பொதுவாக எந்திரன் குறித்த எதிர்ப்புகள் வலைப்பதிவர்களால் மட்டுமே எழுதப் பட்டுக் கொண்டிருந்தது. பிரபல செய்தி ஊடகங்கள் அனைத்தும் எந்திரனுக்கு சொம்பு தூக்கிகளாகவே செயல் பட்டு வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தினம் ஒரு செய்தி எந்திரன் குறித்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்த எந்திரன் ரிலீஸின் அட்டகாசங்களை யார் தைரியமாக வெளியில் சொல்வது என அனைத்துப் பத்திரிகைகளும் ஊமைகளாகவே செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க பாக்ஸ் ஆஃபீஸில் முதலிடம், இந்தியாவில் வேறெந்த படமும் ரிலீசாக முடியாத நிலை, சன் தொலைக்காட்சியின் எரிச்சலூட்டும் தொடர் விளம்பரங்கள் என எந்திரன் குறித்த சிந்தனைக்குள் மக்கள் முடங்கிப் போய்க் கொண்டிருக்கின்றனர்.

இந்த எந்திரனின் ஏகாதிபத்திய கொள்கைகள் குறித்து நேற்றைய தினமணி இணையதளத்தில் ஒரு கட்டுரை படித்தேன். உண்மையில் பாராட்டுதலுக்குரிய ஒரு கட்டுரை அது.

அதில் குறிப்பிட்டுள்ள ஒரு முக்கியமான செய்தி

"மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?"

என் நண்பர்களிடம் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க நாம் ஏன் துணை போக வேண்டும் என கேட்டதற்கு, காசு போட்டவன் இப்புடித்தான் சம்பாதிப்பான் என மிகச் சாதாரணமான பதில் கிடைத்தது. மக்கள் இன்னும் முதலாளித்துவத்தின் அடிமைகளாகத்தான் இருந்து வருகிறார்கள்.

அவர்கள் அனைவரையும் அதற்குள் முடக்கி வைக்கும் வேலைகளை மும்முரமாக செய்து கொண்டிருக்கும் அனைத்து மீடியாக்களுக்கு மத்தியில் தைரியமாக இந்தக் கட்டுரைய எழுதிய தினமணி கட்டுரையாளருக்கும், தினமணிக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.