கடவுளை மற..மனிதனை நினை..

25 March 2010

ஐ.பி.எல் எதிர்க்கப் பட வேண்டிய ஒன்று

12:27:00 AM Posted by புலவன் புலிகேசி 37 comments
இந்தியாவைப் பொறுத்த வரை கிரிக்கெட் என்பது ஒரு அரசியல் விளையாட்டாகத்தான் இருந்து வருகிறது. இன்று அதை மேலும் ஒரு வியாபாரமாக்கி மக்களை மயக்கும் வித்தைதான் இந்த ஐ.பி.எல். இங்கு சூதாட்டம் மட்டுமே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அந்த மாய வித்தையில் மக்களின் கண்கள் மறைக்கப் பட்டு ஏமாற்றப் ப்டுகிறார்கள். அதோடில்லாமல் அங்கு திரைப்படங்களின் குத்துப் பாடல்கள் போல் பெண்களின் கவர்ச்சி நடனம்.

ஐ.பி.எல்லில் விளையாடும் வீரர்கள் காசுக்காக ஏலம் விடப்படுகின்றனர். அவர்களின் ஏலத் தொகை பல கோடிகளைத் தாண்டி மக்களை வியக்க வைத்திருக்கிறது. சமீபத்தில் புதிதாக சேர்க்கப் பட்ட இரண்டு அணிகள் கூட ஆயிரத்து ஐநூறு கோடிகளுக்கு மேல் ஏலம் விடப் பட்டிருக்கிறது.

இவ்வளவு விலைக் கொடுத்து இதை வாங்குபவர்களின் வியாபாரத்தில் லாபம் எப்படி வரக்கூடும் எனக் கேட்டால் கிடைக்கும் காரணங்கள்

டிக்கெட் விற்பனை

விளம்பரங்கள்

ஸ்பான்சர்கள்

இவற்றிலிருந்து லாபம் கிடைத்து விடுகிறது என மக்களை நம்ப வைக்க முடியாது. நிச்சயம் அங்கு சூதாட்டம் பெரும்பங்காற்றக் கூடும். இல்லையென்றால் அதை இவ்வளவு சிறப்பான வியாபரமாக செய்வதென்பது அசாத்தியமான ஒன்று. இது மக்கள் அனைவரும் அறிந்ததே.

ஐ.பி.எல் அணிகள் பந்தயக் குதிரைகள் போன்றவை. அதிகம் பணம் கட்டப் பட்ட குதிரையை தோற்க வைப்பதுதான் போட்டி நடத்துபவர்களின் குறியாக இருக்கும். இந்த சூதாட்டத்தில் பலர் ஜெயித்திருக்கலாம். காரணம் அவர்களால் பந்தயம் கட்டப் பட்ட குதிரை விலை மதிப்பில் குறைவாக இருந்திருக்கும்.

மொத்தமாகப் பார்க்கும் போது முப்பது பேருக்கு லாபம் என்றால் என்பது பேருக்கு நஷ்டம் இருக்கும். இவை முன்னரே முடிவு செய்யப் பட்டு விடும். இந்த முப்பது பேரின் லாபத்தை வைத்து பந்தயம் நேர்மையாக நடந்தேறியதாக தம்பட்டமடித்து மக்களின் கண்கள் மறைக்கப் படும்.

மக்களும் அந்தப் போட்டிகளுக்கு ஆதரவாக இந்தியன் என்பதை மறந்து நான் சென்னை, கல்கத்தா, மும்பை ஆதரவாளன் என்ற பிரிவினைக்குள் சிக்கி மாற்றி மாற்றி ஆதரவு என்ற பெயரில் பணத்தை வாறி இறைக்கிறார்கள். இதில் ஆரோக்கியமான போட்டி என்பது எந்த அணிகளூக்கிடையேயும் நிச்சயம் கிடையாது.

இதை ஒரு பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டு ரசிக்க வேண்டும் என சொல்வது மக்களை மடையர்களாக்கும் வேலை. எனக்குப் பிடித்த பல வீரர்கள் கூட இங்கே காசுக்கு விலைபோனவர்கள். இத்தனையும் தெரிந்தும் சில நண்பர்கள் தமிழன் விளையாடும் போட்டிகளை விரும்பிப் பார்ப்பேன் என்றனர். தமிழனாக இருந்தாலும் ஐ.பி.எல்-ல் என்ன காசில்லாமலா விளையாடுகிறான்.

ஐ.பி.எல் காசுக்காக மட்டுமே! அது ஒரு வியாபாராம்! வீரர்களை போல் மக்களும் அதில் விலைபோவது நிச்சயம் தவறு!

37 விவாதங்கள்:

முகிலன் said...

//இவற்றிலிருந்து லாபம் கிடைத்து விடுகிறது என மக்களை நம்ப வைக்க முடியாது. நிச்சயம் அங்கு சூதாட்டம் பெரும்பங்காற்றக் கூடும். இல்லையென்றால் அதை இவ்வளவு சிறப்பான வியாபரமாக செய்வதென்பது அசாத்தியமான ஒன்று. இது மக்கள் அனைவரும் அறிந்ததே.
//

இதை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஸ்பான்சர்கள் மூலமாகவே லாபம் ஈட்டிவிட முடியும். இந்திய கிரிக்கெட் அணியை ஸ்பான்சர் செய்யும் சகாரா ஒரு வருடத்திற்கு இந்திய அணிக்கு செலவிடும் ஸ்பான்ஸர்ஷிப் தொகை - 100 கோடி (1 பில்லியன்) டாலர்கள். இதை வைத்து கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

பிரபாகர் said...

முகிலனின் கருத்துதான் எனக்கும் புலிகேசி...

பிரபாகர்.

ர‌கு said...

இந்த‌ வ‌கை போட்டிக‌ள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற‌ நாடுக‌ளில் கூட‌ இருக்கிற‌து. ஆனால் ந‌ம்ம‌வ‌ர்க‌ள், ருசி க‌ண்ட‌ பூனை போல் அணிக‌ளை அதிக‌மாக்கி, போட்டிக‌ளை அதிக‌மாக்கி, ஐபிஎல் என்ற‌ பொன் முட்டை ச‌ப்ளைய‌ரை மொத்த‌மாக‌ அவுட்டாக்க‌ பார்க்கிறார்க‌ள்

ஒரு தொட‌ரில் 94 போட்டிக‌ள் என்ப‌து "அள‌வுக்கு மிஞ்சினால்........." என்ற‌ள‌வில்தான் முடியும் என்றே நினைக்கிறேன்

thenammailakshmanan said...

கிரிக்கெட் என்றாலே சூதாட்டம்தான்

எனவே கிரிக்கெட்டுக்கே எனது எதிர்ப்பு

புலவன் புலிகேசி said...

//முகிலன் said...

//இவற்றிலிருந்து லாபம் கிடைத்து விடுகிறது என மக்களை நம்ப வைக்க முடியாது. நிச்சயம் அங்கு சூதாட்டம் பெரும்பங்காற்றக் கூடும். இல்லையென்றால் அதை இவ்வளவு சிறப்பான வியாபரமாக செய்வதென்பது அசாத்தியமான ஒன்று. இது மக்கள் அனைவரும் அறிந்ததே.
//

//

இதை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஸ்பான்சர்கள் மூலமாகவே லாபம் ஈட்டிவிட முடியும். இந்திய கிரிக்கெட் அணியை ஸ்பான்சர் செய்யும் சகாரா ஒரு வருடத்திற்கு இந்திய அணிக்கு செலவிடும் ஸ்பான்ஸர்ஷிப் தொகை - 100 கோடி (1 பில்லியன்) டாலர்கள். இதை வைத்து //

//பிரபாகர் said...

முகிலனின் கருத்துதான் எனக்கும் புலிகேசி...

பிரபாகர்.
//

முகிலன் இங்கேயே உதைக்கிறதே...ஒஇந்திய அணிக்கே 100 கோடிதான் ஸ்பான்ஸர். அப்படியானால் இங்கே மொத்தம் 10 அணிகள். அணிகளின் விலை 1500 கோடிக்கு மேல். ஒவ்வொரு அணிக்கும் தனித் தனியே ஸ்பான்சர்ஷிப் பெற்றாலும் அணீக்கு 1500 கோடியெல்லாம் எப்படி கிட்டும்...???

புலவன் புலிகேசி said...

//ர‌கு said...

இந்த‌ வ‌கை போட்டிக‌ள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற‌ நாடுக‌ளில் கூட‌ இருக்கிற‌து. ஆனால் ந‌ம்ம‌வ‌ர்க‌ள், ருசி க‌ண்ட‌ பூனை போல் அணிக‌ளை அதிக‌மாக்கி, போட்டிக‌ளை அதிக‌மாக்கி, ஐபிஎல் என்ற‌ பொன் முட்டை ச‌ப்ளைய‌ரை மொத்த‌மாக‌ அவுட்டாக்க‌ பார்க்கிறார்க‌ள்

ஒரு தொட‌ரில் 94 போட்டிக‌ள் என்ப‌து "அள‌வுக்கு மிஞ்சினால்........." என்ற‌ள‌வில்தான் முடியும் என்றே நினைக்கிறேன்
//

இங்குதான் ரகு உண்மை உடைக்க படுகிறது...

சைவகொத்துப்பரோட்டா said...

அளவுக்கு மீறினால் கதைதான், கிரிக்கெட்டுக்கும்.

முகிலன் said...

//முகிலன் இங்கேயே உதைக்கிறதே...ஒஇந்திய அணிக்கே 100 கோடிதான் ஸ்பான்ஸர். அப்படியானால் இங்கே மொத்தம் 10 அணிகள். அணிகளின் விலை 1500 கோடிக்கு மேல். ஒவ்வொரு அணிக்கும் தனித் தனியே ஸ்பான்சர்ஷிப் பெற்றாலும் அணீக்கு 1500 கோடியெல்லாம் எப்படி கிட்டும்...??//

100 கோடி டாலர் = 4500 கோடி ரூபாய்.

ஐபிஎல்-லில் ஒரு டீம் 100 மில்லியன் டாலர் (ஆவரேஜ்/இயர்) என்று வைத்துக் கொண்டாலும் 10 X 100 = 1 பில்லியன் டாலர் தான்.

இந்தியக் கிரிக்கெட் அணிக்கு ஒரே ஒரு ஸ்பான்ஸர். இங்கே ஐ.பி.எல்-லைப் பாருங்கள்? சட்டையில் ஒட்ட இடம் இல்லாத அளவுக்கு ஸ்பான்சர்.
அதோடு சிக்ஸுக்கு ஒரு ஸ்பான்சர், கேட்சுக்கு ஒரு ஸ்பான்ஸர், மொமெண்ட் ஆஃப் சக்ஸஸுக்கு ஒரு ஸ்பான்ஸர்.

+ ஸோனி ஐ.பி.எல் ஒளிபரப்புக்கு 10 வருடத்துக்கு கொடுத்த தொகை = 10.4 பில்லியன் டாலர்.
+ டி.எல்.எஃப் டைட்டிலுக்கு (DLF IPL) கொடுத்த தொகை வருடத்துக்கு 40 கோடி X 5 வருடம்

கொஞ்சம் கூட்டிக் கழிச்சிப் பாருங்க..

பயங்கர லாபம்.

ஆனால் ரகு சொன்ன மாதிரி 94 போட்டி ஒரு சீசனுக்கு என்றால் கீழ்க்கண்ட ஆபத்துகள் உண்டு.

1. விளையாடும் வீரர்கள் ஓவர் விளையாட்டால் காயப் படுவதற்கு வாய்ப்பு அதிகம்
2. பார்வையாளர்களுக்கு போரடித்துவிடலாம்.

பார்வையாளர்கள் குறைந்தால் ஸ்பான்சர்ஷிப் குறையும், முதல் போட்ட முதலாளிகள் லாபம் பார்க்க முடியாது. அப்போது, நீங்கள் சொல்வது போல சூதாட்டம் தான் வழியாகிவிடும். மற்றபடி இப்போதே சூதாட்டம் என்பது தேவையில்லாதது போலத்தான் தெரிகிறது.

புலவன் புலிகேசி said...

http://nigazhvugal.com/index.php?option=com_content&view=article&id=3128:--4700--&catid=5:cricket&Itemid=13 இதில் சொல்லப் பட்டிருப்பதைப் பாருங்கள். இது போன்ற லாபம் சேர்ப்பவர்களுக்காக நாம் விளையாட்டை விற்பனை செய்வது நியாயமா? இது போல் இந்த விடயம் அதிக ஆர்வலர்களால் ரசிக்கப் படும் போது சூதாட்டங்களும் சேர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்.

முகிலன் said...

எதில் தான் வியாபாரம் இல்லை?

இப்போது கூகிளாண்டவர் நமக்கெல்லாம் ஓசியாகக் கொடுக்கும் ப்ளாக்கரில் மட்டும் வியாபாரம் ஒளிந்திருக்கவில்லையா? அதற்காக நாம் அதைப் புறந்தள்ள முடியுமா?

விளையாட்டை விளையாட்டாகப் பாருங்கள். உங்களுக்குப் பொழுது போகிறதா இல்லையா என்பதுதான் இங்கே கேள்வி. பொழுது போகவில்லயா? வேறு விளையாட்டையோ அல்லது நித்தியானந்தாவில் லீலைகளையோ பாருங்கள். விளையாட்டைப் பார்ப்பவர்களையோ அல்லது விளையாட்டையோ குறை சொல்லாதீர்கள்.

முகிலன் said...

நீங்கள் கொடுத்த தொடுப்பு வேலை செய்யவில்லை.

முகிலன் said...

ஐ.பி.எல் வியாபாரம் என்பது பட்டவர்த்தனமான ஒன்று. அதை எதிர்த்து நம் நேரத்தை விரயம் செய்யாமல் நம் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டிய விசயங்கள் நிறைய நம்மைச் சுற்றி நடக்கின்றன. அதைச் செய்வோம்.

பின் குறிப்பு: நான் ஐ.பி.எல் பற்றி என் வலைப்பூவில் எழுதுவது கூட முழுக்க முழுக்க வியாபாரம் தான்.. :))

புலவன் புலிகேசி said...

//முகிலன் said...

எதில் தான் வியாபாரம் இல்லை?

இப்போது கூகிளாண்டவர் நமக்கெல்லாம் ஓசியாகக் கொடுக்கும் ப்ளாக்கரில் மட்டும் வியாபாரம் ஒளிந்திருக்கவில்லையா? அதற்காக நாம் அதைப் புறந்தள்ள முடியுமா?

விளையாட்டை விளையாட்டாகப் பாருங்கள். உங்களுக்குப் பொழுது போகிறதா இல்லையா என்பதுதான் இங்கே கேள்வி. பொழுது போகவில்லயா? வேறு விளையாட்டையோ அல்லது நித்தியானந்தாவில் லீலைகளையோ பாருங்கள். விளையாட்டைப் பார்ப்பவர்களையோ அல்லது விளையாட்டையோ குறை சொல்லாதீர்கள்.
//

விளையாட்டில் வியாபாரம் என்பது தவறில்லை முகிலன். விளையாட்டே வியாபாரம் என்பதுதான் தவறு. இந்திய அணியாக விளையாடும் போது அதை ஆதரித்தவன் நான். சினிமா நடிகர்களை போல் ஆகி விட்டனர் ஐ.பி.எல் வீரர்கள். இது முழுக்க முழுக்க காசுக்காக மட்டுமே. வேறெந்த நோக்கமும் இல்லாத ஒரு பொழுது போக்கு.

இதை முக்கியமாக எடுத்துக் கொண்டு விளையாடி காயம் படும் வீரர்கள் இந்தியாவிற்காக விளையாடுவதில்லை. இதெல்லாம் தவறாகத் தோன்றவில்லையா உங்களுக்கு? கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட நீங்கள் இப்படி சொல்வதுதான் வருத்தமளிக்கிறது முகிலன்.

புலவன் புலிகேசி said...

//ஐ.பி.எல் வியாபாரம் என்பது பட்டவர்த்தனமான ஒன்று. அதை எதிர்த்து நம் நேரத்தை விரயம் செய்யாமல் நம் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டிய விசயங்கள் நிறைய நம்மைச் சுற்றி நடக்கின்றன. அதைச் செய்வோம்.//

அப்புடி வாங்க முகிலன். சபாஷ்...இதைச் சொல்லத்தான் இந்தப் பதிவே...மற்ற விடயங்களில் மக்களின் கவனம் செல்லாமல் அவர்களின் மூளைகளை மழுங்கடிக்கும் வேலையைத்தான் இந்த ஐ.பி.எல் செய்து கொண்டிருக்கிறது. இது ஒரு போதை.

முகிலன் said...

//இதை முக்கியமாக எடுத்துக் கொண்டு விளையாடி காயம் படும் வீரர்கள் இந்தியாவிற்காக விளையாடுவதில்லை. இதெல்லாம் தவறாகத் தோன்றவில்லையா உங்களுக்கு? கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட நீங்கள் இப்படி சொல்வதுதான் வருத்தமளிக்கிறது முகிலன்.//

நான் விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்கிறேன். எனக்கு ஐ.பி.எல்-லும் ஒரு விளையாட்டு அவ்வளவே. அது அதிகப்படியான அழுத்தத்தை விளையாட்டு வீரர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் கொடுத்து ஒரு விளையாட்டைக் கெடுக்கும் நிலை வரும்போது அதைக் கண்டிக்கும் வேலையை நான் செய்வேன்.

முகிலன் said...

//அப்புடி வாங்க முகிலன். சபாஷ்...இதைச் சொல்லத்தான் இந்தப் பதிவே...மற்ற விடயங்களில் மக்களின் கவனம் செல்லாமல் அவர்களின் மூளைகளை மழுங்கடிக்கும் வேலையைத்தான் இந்த ஐ.பி.எல் செய்து கொண்டிருக்கிறது. இது ஒரு போதை//

நீங்கள் இதை போதை என்று பார்க்கிறீர்கள். நான் இதை நம்மைச் சுற்றி பல மோசமான விசயங்கள் நடக்கும்போது என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள கிடைத்த ஒரு பொழுதுபோக்காகக் கருதுகிறேன்.

புலவன் புலிகேசி said...

//நீங்கள் இதை போதை என்று பார்க்கிறீர்கள். நான் இதை நம்மைச் சுற்றி பல மோசமான விசயங்கள் நடக்கும்போது என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள கிடைத்த ஒரு பொழுதுபோக்காகக் கருதுகிறேன்.//

இது சரிதான் முகிலன். ஆனால் அதிகப் படியான ஆசுவாசத்தைக் கொடுத்து அந்தப் பிரசீனைகளில் இருந்து விலகிச் செல்லும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறதே...இது தவறுதானே?

வானம்பாடிகள் said...

இந்த விவாதம் முடியவே முடியாது. எவ்வளவு பெட்?:))

D.R.Ashok said...

பெட் 100 ரூபாய்... ஒரு தரம்...

க.பாலாசி said...

எத்தனை கோடி வருமானம் வந்தாலும் உங்கவீட்டு அடும்பும், என்வீட்டு அடுப்பும் நாம் உழைத்தால்தான் எரியும்...

ஜீவன்பென்னி said...

இந்த IPL, கிரிக்கெட் மீதிருந்த வெறுப்பை அதிகமாக்கிவிட்டது. எனக்கு எப்போதும் டெஸ்ட் போட்டிகளில் தான் விருப்பம். கிரிக்கெட்டின் உண்மையான நுணுக்கங்களை அதில்தான் காண முடிகிறது. நான் கிரிக்கெட்டை டிவியில் பார்ப்பதை விரும்புவதில்லை. வெளிநாட்டிற்கு வந்து, கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையை தூங்கிக்கழிக்காமல் காலை 5 மணிக்கு எழுந்து விளையாட சென்றுவிடுவேன். இந்திய அணியே விளையாடினாலும் அதனைத் தவிர்த்து விட்டு விளையாடுவோம். விளையாட்டினை விளையாடும் போது கிடைக்கும் இன்பம் உட்கார்ந்து டிவியில் பார்க்கும் போது கிடைப்பதில்லை. இந்த IPL ஒரு மாயை. ஆனால் இது விரைவில் தெகிட்டிவிடும் என்பது என் எண்ணம்.

விக்னேஷ்வரி said...

நான் உங்களிடம் எப்போதுமே சொல்லுவது. உங்கள் கருத்து சரியானது. ஆனால் அதை சொல்லும் விதம், சாட்சிகளின் ஆழம் குறைவு. இன்னும் திறம்பட எழுதுங்கள்.

Rajamanickam senthil said...

You know, How many business depend with IPL match? How many person get the job (Direct& Indirect) pls stop the Negative thinking.........

புலவன் புலிகேசி said...

//விக்னேஷ்வரி said...

நான் உங்களிடம் எப்போதுமே சொல்லுவது. உங்கள் கருத்து சரியானது. ஆனால் அதை சொல்லும் விதம், சாட்சிகளின் ஆழம் குறைவு. இன்னும் திறம்பட எழுதுங்கள்.
//

நன்றி தோழி...

புலவன் புலிகேசி said...

//Rajamanickam senthil said...

You know, How many business depend with IPL match? How many person get the job (Direct& Indirect) pls stop the Negative thinking.........
//

செந்தில் அது சிலருக்கு உதவி பலரை ஏமாற்றும் ஒன்று... இங்கு வேலை வய்ப்பெல்லாம் கண்துடைப்பு போன்றது...

Anonymous said...

ஒரு பிரச்சினையின் முக்கியமான அம்சம் என்ன என்பதை சரியாக புரிந்துகொள்ளா விட்டால் அல்லது இன்னும் சரியாக சொன்னால் சில நல்ல மனதிற்கு சொந்தக்கார்ர்களால் தரப்படும் நன்முயற்சிகளால் மாத்திரமே இந்த உலகம் தன்னை மாற்றிக் கொண்டு செயல்படும் என்ற நம்பிக்கை மாத்திரமே கொண்டு இருந்தால் இதுதான் நடக்கும்.

கிரிக்கெட் ஐபிஎல் க்கு வந்த பிறகுதான் கெட்டுப் போச்சு ஒன் டே நடந்தபோது இந்தியா பாகிஸ்தான்னு விளையாண்ட போது தேசபக்தி இருந்த்து என்ற புரிதல் தவறானது. தங்களது கிரிக்கெட் பேட்டிலும், பேடிலும், தொப்பியிலும் பாரத மாதா படத்தையோ அல்லது தேசப்படத்தையோ அல்லது தேசிய விலங்கு பறவை அல்லது தேச தந்தை படம் போட்ட டீ சர்ட்டுகளையோ யாரும் அணிந்து விளையாடவில்லை. அரசு வாரியம் அமைத்து தரும் இடத்தில் அவர்கள் பிரதிநிதித்துவபடுத்தும் முதலாளிகளின் லோகோவை அணிந்துதான் அவர்கள் விளையாடினார்கள். இந்தியாவிற்காக விளையாடும் வீர்ர்கள் என இவர்களை சொல்கின்றீர்கள்.

முதலில் கோக கோலா எம்பளம் இவர்களது உடையில் இல்லாமல் இருக்கிறதா அல்லது பெப்சி இல்லாமல் இருக்கிறதா தண்ணீர் தனியார்மயம் என்ற உலக முதலாளிகளின் கவந்த பசிக்கு ஏழைநாடுகளின் தண்ணீரை உறிஞ்சி பாட்டிலில் அடைத்து கேனில் அடைத்து அவர்களிடமே தரமான தண்ணீர் என விற்பனை பொருளாக்கி விட்ட அந்த கம்பெனிகள்தான் இந்திய விவசாயிகளுக்கு நிலத்தடி நீரை தான் உறிஞ்சியதன் மூலமாக கிடைக்க விடாமல் பண்ணியவர்கள். நாட்டின் 80 சதவீதமான விவசாயத்தை நாசமாக்கிய தேச விரோதிகள். இந்த தேச விரோதிகளின் பெயர்களை பனியனில் ஏந்தி விளையாடும் கிரிக்கெட் வீரன் தேசபக்தன் என்றால் சிரிப்புதான் வருகிறது.

ஐபிஎல் இந்த மாயையை உடைத்து மல்லையா டீம், சாருக்கான் டீம், ஸில்பா செட்டி டீம், டிவிஎஸ் டீம் என பல வகையான் முதலாளிகளின் அணியாக ஏற்கெனவே இருந்த்தை மீண்டும் ஒரு முறை தெளிவாக அம்மணமாக காட்டியுள்ளது. அதெயெல்லாம் விட்டு விட்டு அதில ஃசூதாட்டம் இருக்கும் என பார்ப்பது முக்கியமான பாயிண்டை விட்டுவிட்டு உப்புக்கு சப்பற்ற பாயிண்டை பிடித்துக் கொண்டு தொங்குவதாகும்.

இப்போது கூட நம் நாடு ஏன் முன்னேறல அப்படின்னு கேட்டா லஞ்சம் மற்றும் ஊழல்தான் காரணம் என்பார்கள். இது சரியான பதில் அல்ல• அதற்காக அப்படி இல்லை என்றெல்லாம் நான் அவர்கள் பக்கம் வாதிட போகவில்லை. மாறாக சில கோடி அளவில் கூட இது நடக்கிறதுதான். அவ்வப்போது தெரிந்தாலும் பல மறைக்கப்படுவது உண்மைதான். ஆனாலும் அதனை விட முக்கியமானது நாடு சில ஒப்பந்தங்களில் உலக வங்கியிடம் அடிமை சாசனத்தில் கையெழுத்து போட்டுதான் கடன் வாங்குகிறது அதற்கு ஏற்ற முறையில் இந்த நாட்டின் விவசாயத்தை அழிக்க வேண்டும், இயற்கை வளங்களை அன்னிய கம்பெனிகளுக்கு குறைந்த விலையில் கொடுக்க வேண்டும், அங்கு தயாராகும் பொருட்களுக்கு பழக்கப்படும் முகமாக நுகர்வு வெறியை வளர்த்தெடுக்க வேண்டும் என பல விசயங்கள் உள்ளன• இதனை புரிந்து கொள்ள மறுத்தால் நாம் உண்மையான பிரச்சினைகளை கண்டறியாமலே தீர்வு சொல்ல போகும் அதிமேதாவிகளாகத்தான் இருப்போம். இன்னும் நிறைய சொல்ல்லாம். ஆனால் விமர்சனம் செய்வது ஒரு கலை. அதனை ஒரே நாளில் புலிகேசியால் கற்றுக் கொள்ள முடியாது என்ற ஒரு சொல் போதும் என நினைக்கிறேன•

நட்புடன் மணி

தாராபுரத்தான் said...

எனது பதிவை பாராட்டி ஊக்கப்படுத்தியமைக்கு நன்றிங்க தம்பி. இந்த கிரிக்கெட் வியாபாரத்தால் தமிழக கிராமங்களின் இன்றைய நிலை குறித்து ஒரு பதிவைப் போட என்னை தூண்டி விட்டு விட்டீர்கள்.நன்றி.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நீங்கள் சொல்வது சற்று வேதனைக்குரிய நிஜம்!!
விளையாட்டுகள் கூட வினையாகிப்போவது வருந்த தக்க ஒன்றே!!

புலவன் புலிகேசி said...

@Anonymous

நண்பரே நீங்கள் சொல்லும் முதலாளித்துவம், நாட்டை விற்பது எல்லாம் சரிதான்...அதைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பவனல்ல நான்..சிறு சிறு விடயங்களில் நம்மில் ஏற்படும் மாற்றங்கள் அந்த பெரிய விடயத்தை எதிர்க்கும் கருவி. அதை விடுத்து வாங்க எல்லாரும் போய் அதை எதிர்ப்போம்னு கூப்புட்டா ஒருத்தரும் வர மாட்டாங்க...நம்மையும் நம்மை சுற்றியுள்ள சிறு சிறு தவறுகளை சரி செய்ய முயலுங்கள்..தானாகவே அந்த முதலாளித் துவம் அழியும் நாள் வரும்.

புலவன் புலிகேசி said...

//தாராபுரத்தான் said...

எனது பதிவை பாராட்டி ஊக்கப்படுத்தியமைக்கு நன்றிங்க தம்பி. இந்த கிரிக்கெட் வியாபாரத்தால் தமிழக கிராமங்களின் இன்றைய நிலை குறித்து ஒரு பதிவைப் போட என்னை தூண்டி விட்டு விட்டீர்கள்.நன்றி.
//

நன்றிங்க ஐயா..எழுதுங்க..

புலவன் புலிகேசி said...

//ஆனால் விமர்சனம் செய்வது ஒரு கலை. அதனை ஒரே நாளில் புலிகேசியால் கற்றுக் கொள்ள முடியாது என்ற ஒரு சொல் போதும் என நினைக்கிறேன•

நட்புடன் மணி//

பெரிய விமர்சகன் எனப் பெயர் வாங்கும் நோக்கில் நான் எழுதுவதில்லை. அப்படி ஒரு பெயரும் எனக்கு வேண்டாம். அப்படிப்பட்ட கலையும் எனக்கு தேவை இல்லை. எப்படியெல்லாம் மனிதனாக வாழ முடியும் என்பது மட்டுமே என் நோக்கம். அதற்கான முயற்சியில் எனக்குத் தெரிந்தவற்றை சொல்கிறேன்.

திவ்யாஹரி said...

எனக்கு அந்த டான்ஸ் ஆடுகிற பெண்கள் தான் பிடிக்கல.. தேவை இல்லாத ஒன்று என தோன்றுகிறது..

ஸ்ரீராம். said...

எதிர்க்கப் பட வேண்டிய ஒன்றுதான்...ஆனால் யார் எதிர்ப்பது? என்ன எதிர்த்தாலும் கூட்டமாக உட்கார்ந்து ரசிக்கிறார்களே...

Vetrimagal said...

Well said . This too is becoming like the mind numbing TV serials.

It is more of gambling!

mag said...

Yes. good Comments. IPL, Its one of the like international Smuggling(Match fixing) game. So it should be ignored...

Anonymous said...

விமர்சனம் என்பது சரி செய்வதற்கான டூல் எனப் புரிந்து கொண்டீர்களா. குறைகளை களைவதன் மூலம்தான் தங்களை நீங்கள் உடப்ட முன்னேற்றி வருகிறீர்கள். உங்களுக்கு ஒரு தோல்வி நேர்ந்தால் அதில் சிறு தவறுகளை மாத்திரம் திருத்த உங்களுக்குள் நீங்கள் போராடுவதில்லை. ஆனால் நாட்டில் உள்ள பொதுப்பிரச்சினையான விவசாயிகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுங்கள் என்றால் அதற்கு நேரமில்லை அதை விட முக்கியம் ஐபிஎல் ஆ அல்லது இந்திய அணியா என்ற மிக முக்கியமான பிரச்சினைக்கு பிரீயாரிட்டி கொடுக்கிறீர்கள். சுயநலம் என்று வரும்போது உண்மையான தீர்வுக்காக உழைப்பதும், பொதுநலன் என வரும்போது நமக்கு உகந்த முறையில் அல்லது நமக்கு வாய்ப்பு ஏற்படும்போது மாத்திரம் நமக்கு பிரச்சினை ஏற்படாத வரையில் தவறுகளை சுட்டிக் காண்பிப்போம் என்ற உங்களது மனநிலை மிகவும் அபாயகரமானது. நீங்கள் விரும்பும் தருணங்களில் நீங்கள் முன்வைக்கும் ஆராய்ச்சியற்ற தீர்வுகளுக்கு தங்களை தங்களது வாழ்வை ஒப்புக்கொடுக்க வேண்டிய ஜ்னநாயக உரிமையை இந்த நாட்டின் விவசாயிகளுக்க வழங்கிய அறிவுஜீவிகளே உங்களைப் பிள்ளைகளாகப் பெற்ற தேசம் உருப்பட்ட மாதிரிதான்..

அது என்னங்க நோக்கம். மனிதனாக வாழ்வது. எப்படி விதர்பா விவசாயிகள் தற்கொலையை விட ச்ச்சின் க்கு விமர்சனம் செய்வது உங்களுக்கு கவலை அளிக்கும் விசயமாக பட்டதோ அப்போதே உங்களது மனித தன்மை கொடி கட்டி பறக்க துவங்கி விட்டது. அப்புறம் மனிதம், மாற்றம் னு எல்லாம் எதுக்குங்க வெட்டிப் பேச்சு..

உங்களிடம் இருந்து மாற்றத்தை துவங்குங்கள் அல்லது சிறிய அளவில் முயற்சி செய்யுங்கள் என்ற உங்களது வாதம் கூட உங்களது வாதம் அல்ல• மக்களை ஒடுக்கி ஏமாற்றும் ஆளும் வர்க்கமும், அவர்கள் பிரதிநிதித்துவபடுஃத்தும் உலக முதலாளிகளும் விரும்பும் இத்தகைய தீர்வுகளை காசு வாங்காமலே கூவுவதற்கு உங்களைப் போன்ற அறிவுஜீவிகளை தனது ஊடகங்களை மூலமாக பயிற்றுவித்திருக்கிறது உலக முதலாளியம். ஏன்னு கேக்குறீங்களா.. இங்கதான் நீங்களும் நீங்கள் குறிப்பிட்ட சாருவின் ரசிகனும் வேறுபடுகிறீர்கள்.

சின்ன வயசுல நாலு மாடு தனியா இருக்கும்போது சிங்கம் வந்து அடிச்சு சாப்பிடும் கத படிச்சிருஃப்பீஃங்க அதுக்குதான் மக்கள் ஒரு குறிப்பிட்ட சரியான எதிரியை புரிந்து கொண்டு தங்களுக்குள் சேர்ந்து ஒரு அமைப்பாகி ஒரு திட்டத்தின் அடிப்படையில் எதிரயை எதிர்க்க கிளம்பி விடக் கூடாது என்பற்காக இதுதான் சாத்தியம் என்று உங்களை நம்ப வைத்து அதனை காசு கொடுக்காமலே பிரச்சாரம் பண்ண வைத்திருக்கிறான். இதை உணர உங்களுக்கு ஒரு உலகப் பார்வை இருக்க வேண்டும். ஆனால் என்ன சொல்வீர்கள். அது எனக்கு தேவ இல்லை. முதலில் நான் என்னை திருத்திக் கொஃள்கிறேன். அப்புறம் நாட்ட திருத்திறேன் என்பீர்கள். இதுவும் அவர்கள் உங்களுக்கு ஊடகம் மூலம் சொல்லித் தந்த்துதான். கிளி ஜோசியம் கேட்கப் போகும் இடத்தில் உள்ள கிளியின் நிலையில் இருக்கிறீர்கள் தாங்கள். ஏன் உங்கள திருத்தணும் என்றால் பிரச்சினை வெளியில்தான் இருக்கிறது நமக்குள் இல்லை என நீங்கள் புரியும் தருணத்தில் எதிரிக்கு எதிராக மனநிலை உங்களுக்கு வந்துவிடும் என்பதால் அவன் அதை உங்களது மூளையில் போதை போல சுயமுன்னேற்ற நூல்கள் நபர்கள் மூலமாக ஏற்றுகிறான். இப்போது உங்களுக்கு காய்ச்சல் வருகிறது. டாக்டரிடம் போகிறீர்கள். அவர் உங்களிடம் டயாக்னைஸ் பண்ணாமல் நல்லா சாப்பிடுங்க, சத்தான விசயம் சாப்பிடுங்க சரியாயிடும்னு சொன்னா கேட்டுட்டு வருவீங்களா... சமூகத்துக்கு மாத்திரம் அத சொல்றீங்கள்.

பிரச்சினைகள் பல இருந்தாலும் எதிரி ஒருவன்தான் என்பதை புரிந்துகொள்ள தவறினால் நிலைமை பரிதாபத்திற்குரியதுதான். விவசாயிகள், சிறு தொழில்கள், காய்கறி வியாபாரிகள், ஐடி தொழிலாளிகள், நுகர்வு வெறி, நெசவு தொழிலாளர் பிரச்சினைகள் என எதை எடுத்தாலும் வலியாரால் மிதிபடும் எளியாரின் பக்கம் இருக்க வேண்டுமென்றால் வலியார் ஒருவர்தான் என புரியவைக்க முடிய்தால் எளியாரை ஒன்றிணைத்து போராடுவதும் வெல்வதும்தான் நீண்ட காலத்திற்கு நன்மை பயக்கும் தீர்வாக முடியும். ...
-mani

BONIFACE said...

சேவாக் அடுச்சு ஆடினா சென்னை ரசிகர்கள் அவன திட்டுறாங்க , டேய் அவன் நம்ம இந்தியாகாரன் டா லூசு பயலுகலா!!!!