கடவுளை மற..மனிதனை நினை..

26 March 2010

சென்னை வலைப்பதிவர் சங்கம் ஆரம்பம் - அனைவரும் வாரீர்

7:23:00 AM Posted by புலவன் புலிகேசி 22 comments

வலைப்பதிவில் எழுதி வரும் சென்னை மக்களுக்காக ஒரு குழுமம் ஆரம்பிக்க முடிவு செய்திருக்கிறார்கள் அதற்காக லோகோக்கள் உருவாக்கப் பட்டு கருத்துக்களும் கேட்கப் பட்டிருக்கிறது. எனது தெரிவு இந்த லோகோ.

அப்பறம் உண்மைத்தமிழன் சொன்னது போல் எழுத்தாளர் என்ற வார்த்தை நமக்கு வேண்டாம் என நினைக்கிறேன். அதை மட்டும் இந்த லோகோவில் மாற்றம் செய்து வெளியிடலாம் எனக் கருதுகிறேன். சென்னை என்றில்லாமல் அனைத்து வலைப்பதிவர்களும் வரவேற்கப் படுகிறார்கள்.


நிகழ்ச்சி நிரல்:

நாள் : 27/03/10

கிழமை ; சனிக்கிழமை

நேரம் : மாலை 6 மணி

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6. முனுசாமி சாலை,
மேற்கு கே.கே.நகர்.
சென்னை:

தொடர்புக்கு
மணிஜி :9340089989
M.M.Abdulla -9381377888
cablesankar -9840332666
லக்கிலுக்: 9841354308
நர்சிம் ; 9841888663
பொன்.வாசுதேவன் : 9994541010

22 விவாதங்கள்:

Vijis Kitchen said...

வாழ்த்துக்கள். நல்ல பணி. என்ன சென்னை எழுத்தாளார்கள் மட்டும் தான வெளிநாட்டில் வாழும் சென்னை இந்தியருக்கும் பங்கு உண்டா. வெளிநாட்டில் வாழும் இந்திய இணைய எழுத்தாளார்க்களுக்கு என்ன ஸ்பெஷல் நியூஸ் சொல்லுங்க. நாங்க தான் அங்கு வந்து பங்கு பெற முடியாது அட்லீஸ்ட் எங்களை சேர்த்து கொள்வீர்களா, நாங்களும் எங்களுக்கு தெரிந்த முடிந்த உதவியை செய்கிறோம். வாழ்க மக்கள் வாழ்க சென்னை.

புலவன் புலிகேசி said...

விஜி இந்த அமைப்புதான் சென்னை வலைப்பதிவர் பெயரில். ஆனால் அனைவருக்கும் சேர்ந்து ஆரம்பிக்க வேண்டியது.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

என்ன சென்னை எழுத்தாளார்கள் மட்டும் தான வெளிநாட்டில் வாழும் சென்னை இந்தியருக்கும் பங்கு உண்டா. வெளிநாட்டில் வாழும் இந்திய இணைய எழுத்தாளார்க்களுக்கு என்ன ஸ்பெஷல் நியூஸ் சொல்லுங்க. நாங்க தான் அங்கு வந்து பங்கு பெற முடியாது அட்லீஸ்ட் எங்களை சேர்த்து கொள்வீர்களா,//

எல்லோருக்குமான அமைப்பாகவே இருக்கும்ங்க..:)) சந்திப்பு முடிந்து விவரமாய் பதிவில் வரும்.

--

புலவரே சந்திப்போம்..:)

சசிகுமார் said...

அப்படியா ஆரம்பிசிடாங்கையா, ஆரம்பிசிடாங்கையா நல்ல முயற்சி, தல சென்னை வேணாம் தல, நம்மால நாமே பிரித்துகொள்வது போல் இருக்கிறது. அப்படி இல்லைனா தமிழ் வலைப்பதிவர்கள் சங்கம் என்று பேர மாத்தி வச்சிப்போம். சங்கம் செழித்து வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வானம்பாடிகள் said...

நெக்ஸ்டு நாம ம்ம்ம்ம்மீட் பண்ணுவோம்:))

Chitra said...

வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

How can we register too?

Anonymous said...

why v should be registered

க.பாலாசி said...

நிகழ்வு சிறப்புற வாழ்த்துக்கள்...

LK said...

ithu nyayama dharma adukuma, ennai mathiri saturday work panra makkal ellam eppadi varuvom, sunday vachhathan enna

நர்சிம் said...

பகிர்விற்கு நன்றி பாஸ்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////////////【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
என்ன சென்னை எழுத்தாளார்கள் மட்டும் தான வெளிநாட்டில் வாழும் சென்னை இந்தியருக்கும் பங்கு உண்டா. வெளிநாட்டில் வாழும் இந்திய இணைய எழுத்தாளார்க்களுக்கு என்ன ஸ்பெஷல் நியூஸ் சொல்லுங்க. நாங்க தான் அங்கு வந்து பங்கு பெற முடியாது அட்லீஸ்ட் எங்களை சேர்த்து கொள்வீர்களா,//

எல்லோருக்குமான அமைப்பாகவே இருக்கும்ங்க..:)) சந்திப்பு முடிந்து விவரமாய் பதிவில் வரும்.

--

புலவரே சந்திப்போம்..:) /////////////


நான் கேட்க நினைத்த அதே கேள்விகளை நண்பர் ஷங்கரே கேட்டு இருக்கிறார் . சரியான பதில் தாருங்கள் புலிகேசி நண்பரே !விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் !

Cable Sankar said...

கண்டிப்பாக வந்து விடுகிறேன்..:)

சே.குமார் said...

நிகழ்வு சிறப்புற வாழ்த்துக்கள்...

சுசி said...

நல்ல தேர்வு புலவரே.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

உங்கள் எல்லோரையும் நேரில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே.

அன்புடன் அருணா said...

என் சார்பில் ஒரு பூங்கொத்து பார்சேஏஏஏஏஏஏல்!!!

வேலன். said...

சென்னை வலைப்பதிவர் சங்கம் என்றில்லாமல் தமிழ் வலைப்பதிவர் சங்கம் என பெயர் மாற்றிக்கொள்ளலாம்.தலைமையிடம் சென்னையாக இருக்கட்டும்.என்ன சொல்கின்றீர்கள்..?
வாழ்க வளமுடன்,
வேலன்.

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள்...

Sukumar Swaminathan said...

வந்துடுவோம் பாஸ்...

மங்குனி அமைச்சர் said...

ஆஜர் சார்

Veliyoorkaran said...

என்ன பிரச்சனை உங்கள் நண்பர் வெண்ணிற இரவுகளுக்கு..எதோ நாங்கள் உங்கள் நண்பர் போலவும் ரெட்டைவால்ஸ் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதும் போலவும், சச்சின் தேசத்ரோகி, போலவும் இயக்குனர் ராமின் காட்சி வலைப்பூவில் பின்னூட்டம் போடுகிறார்...என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பிதற்றுகிறார்..இது சரியல்ல புலிகேசி..அவர் தங்கள் நண்பர் என்பதாக அறிந்தோம்...தங்கள் மேல் எனக்கு மரியாதை உண்டு...தங்கள் நண்பர் மீதும்...கெடுத்து கொள்ள வேண்டாம் என சொல்லுங்கள்..!!! விவாதிக்க வேண்டுமெனில் எங்கள் வலைபூவிற்கு வரசொல்லுங்கள்.. அவரை காட்சியிலேயே வைத்து கிழித்து தொங்கவிடுவதற்கு எங்களுக்கு வெகு நேரம் ஆகாது..!!..அவர் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள சொல்லுங்கள்...!!!

http://kaattchi.blogspot.com/2010/03/bloggers.html

தீபிகா சரவணன் said...

www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.