கடவுளை மற..மனிதனை நினை..

14 November 2010

காதலி எனும் ஒற்றைச் சொல்

8:28:00 AM Posted by புலவன் புலிகேசி , 10 commentsகவிதை எழுத யோசித்தால்
கண்ணெதிரில் வந்து
நிற்கிறாள்

முத்தமிட எத்தணிக்கையில்
முகந் திருப்பி ஓடிப்
போகிறாள்

எதிர்பாரா சூழலில் இச்
என்று இதழ் பதித்துச்
செல்கிறாள்

எட்ட நின்று எதிர் வீட்டுப்
பெண்ணை ரசிக்கையில் எங்கிருந்தோ
அலைபேசியில் அதட்டுகிறாள்

என்னை முழுதாய் ஆக்கிரமித்த அவளை
காதலி என ஒற்றைச் சொல்லில்
முடித்தல் தகுமோ!?

10 விவாதங்கள்:

Anonymous said...

//எட்ட நின்று எதிர் வீட்டுப்
பெண்ணை ரசிக்கையில் எங்கிருந்தோ
அலைபேசியில் அதட்டுகிறாள்//

அங்க காதல் பண்ணிகிட்டு இங்க எட்ட நின்ன ரசிக்கிற உங்களை அதட்டிமட்டுமா விட்டுட்டாங்க..

முழுசாய் ஆக்கிரமித்தலுக்கு பெயர் தான் காதல்

ஆக்கிரமித்தவளுக்கு பெயர் தான் காதலி..

ஒற்றைச் சொல் போதாது என எண்ணுகிறீர்களா?

சே.குமார் said...

அது எப்படித் தகும்?
என்னமா யோசிக்கிறீங்கய்யா...
நல்லாத்தான் இருக்கு காதல்.

வெறும்பய said...

ஒரு வேளை இடம் மாறி வந்திட்டனோ...


கவிதையெல்லாம் கலக்குறீங்க...

ஜோதிஜி said...

எனக்கும் வெறும்பய சொன்னது போல் தோன்றுகிறது.................????

Priya said...

மிக அழகான காதல் கவிதை!

பிரியமுடன் பிரபு said...

NICE

Manoj said...

Superappu!!!

திகழ் said...

அருமை

முனைவர்.இரா.குணசீலன் said...

கவிதை - காதலி

அம்பாளடியாள் said...

அழகிய காதல்க் கவிதை வாழ்த்துக்கள் நன்றி பகிர்வுக்கு .......