கடவுளை மற..மனிதனை நினை..

17 November 2009

தேநீர் அருந்தகத்தில் தமிழ் - தமிழ் பிறந்திருக்கிறது... (2)

4:03:00 PM Posted by புலவன் புலிகேசி 31 comments
இதன் முதல் பகுதியை படிக்கவில்லை என்றால் படித்துவிட்டுத் தொடருங்கள். தொலைக்காட்சியைத் தொடர்ந்து ஊடகங்களில் அடுத்து இடம் வகிப்பதுசெய்தித்தாள்கள். ஒரு பிரபலமான தமிழ் செய்தித்தாளின் விளம்பரத்தைக் கூடஅவர்களால் ஆங்கிலம் கலக்காமல் எடுக்க முடியவில்லை. "நம்பர் ஒன் நம்பர்ஒன் தமிழில்..........நம்பர் ஒன்" என்றுதான் எடுத்துள்ளனர்.

பலத் தமிழ் நாளிதழ்கள் இன்று வியாபார நோக்கத்தில்மட்டுமே வெளி வருகின்றன. இன்று நகர்ப் புறங்களில்வசிக்கும் தமிழர்களில் எத்தனை பேர் தமிழ் நாளிதழ்வாங்கிப் படிக்கிறோம். ஏன் எனது அறையில் கூடஆங்கில நாளிதழ் தான். தமிழ் நாளிதழை தேனீர்அருந்தகங்களில்தான் பெரும்பாலும் காணமுடிகிறது.

தேனீர் அருந்தக உரிமையாளர்கள் அவர்களுக்கேத் தெரியாமல் தமிழ்வளர்க்கிறார்களே என்று ஒரு மகிழ்ச்சி. அதற்காக அனைவரும் புராணகால தமிழ்பேச வேண்டும் என்று அர்த்தமல்ல. நம்மிடையே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தமிழை இறவாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமைநமக்கிருக்கிறது.


நமக்குத் தெரிந்த நல்ல தமிழில் தொடர்ந்து பேசினால்உயிர்வலியில் துடிக்கும் தமிழுக்கு குருதிகொடுத்ததற்குச் சமம். இன்றைய காலகட்டத்தில்தமிழுக்கு குருதி கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. ஆம்முதன் முதலில் தமிழுக்காக மட்டும் ஒருதொலைக்காட்சி ஒளிபரப்பு (இரண்டரை ஆண்டுகாலமாக). ஆனால் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும்தொடர்ந்து பார்க்க நம்மில் யாருக்கும் ஆர்வமில்லை.

காரணம் அதில் திரைப்பட நிகழ்ச்சிகளோ, பொழுதுபோக்கு அம்சங்களோஇல்லை. இதில் பலரால் விரும்பப் படும் நிகழ்ச்சி "சொல் விளையாட்டு". அதன்தொகுப்பாளர்கள் பேசும் தமிழ் இனிமையாகத்தான் இருக்கிறது. அந்ததொலைக்காட்சி வேற்று மொழி கலக்காத பொழுதுபோக்கு அம்சங்களை சேர்த்துதமிழுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கலாம் (மக்கள் தொலைக்காட்சிக்குநன்றிகள்).

அடுத்து விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியானதமிழ் பேச்சு எங்கள் மூச்சு". என்ன ஒரு அருமையானநிகழ்ச்சி அந்த நிகழ்ச்சியின் மூலம் கூட நம்மால் தமிழ்கற்று கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. தமிழைப்பற்றி மழலைகள் சொல்லும் விடயங்கள் நம்மில்பலருக்குத் தெரியாமலிருக்கிறது.

அந்த மழலைகளின் தமிழ் உச்சரிப்புகளை கேட்கும்ஒவ்வொருவருக்கும் நாம் ஏன் தமிழை விடுத்து வேற்று மொழியை தேவையற்றஇடங்களில் பேச வெண்டும்? என்ற உணர்வு நிச்சயம் வரும். இது போன்றநிகழ்வுகளும் தமிழார்வம் மிக்க குழந்தைகளும் கொடுத்த மருத்துவ உதவிகளால்தமிழ் உயிர்ப் பிழைத்து மறுபிறவி எடுத்திருக்கிறது. ஆம் "தமிழ் பிறந்திருக்கிறது". அந்த தமிழை குழந்தை போல் பாவித்து வளர்க்க வேண்டிய கடமை ஒவ்வொருதமிழனுக்கும் இருக்கிறது.

இது பற்றி அடுத்தப் பதிவில் விவாதிக்க விரும்புகிறேன்.

பி.கு:
இந்தப் பதிவில் நானே எத்தனை இடங்களில் தமிழ்க் கொலை செய்திருக்கிறேன்எனத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

31 விவாதங்கள்:

வெண்ணிற இரவுகள்....! said...

மக்கள் தொலைக்காட்சி பார்க்க வேண்டிய தொலைக்காட்சி எல்லாமே தமிழ் .சினிமா நம்பி இல்லை அதுவே ஆறுதல் .....தொலைக்காட்சி என்றால் சினிமா தானா????மக்கள் தொலைகாட்சிக்கு வாழ்த்துக்கள்

ஊடகன் said...

இந்த மொழிகலப்பு எப்படி வந்தது என்பதை லின்குவா பிராங்கா என்பார்கள்..... அதாவது ஒரு நாட்டின் அதிக படியான மக்களால் ஏற்ற்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ள மொழியையே அப்படி கூறுவார்கள், அதனாலே இன்று தமிழர்களிடமும், மற்ற அனைத்து மாநிலத்திலேயும் ஆங்கிலமொழி பெருன்பான்மையாக கலந்துள்ளது..........

இது ஒரு வகையான அடிமைத்தனமே....... இது இந்திய மொழிகளை அழிக்க கூடிய திறனை கொண்டது..........

இந்த மொழியையும், மொழிகலப்பையும் என்னுடைய கட்டுரையில் ஈர்கனவே எழுதியுள்ளேன்........அனைவரும் பாருங்கள்.......

http://oodagan.blogspot.com/2009/10/1.html

வானம்பாடிகள் said...

/தமிழ் நாளிதழை தேனீர்அருந்தகங்களில்தான் பெரும்பாலும் காணமுடிகிறது./

மற்றோர் இடம் முடி திருத்தும் நிலையம்.

மக்கள் தொலைக்காட்சியின் சேவை உண்மையிலேயே பாராட்டுக்குறியது. நல்ல இடுகை. தொடருங்கள்.

கலகலப்ரியா said...

வெரி குட் .. ஆ... நாசமா போச்சு... மிக நன்று புலிகேசி.. =))...

பிரபாகர் said...

நல்ல விஷயங்களை பகிர்கிறீர்கள். மிக்க சந்தோசம் நண்பரே... வாழ்த்துக்கள்....

பிரபாகர்.

க.பாலாசி said...

//நம்மிடையே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தமிழை இறவாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமைநமக்கிருக்கிறது.//

உண்மைதான்.. நமது தலையாய கடமையும் கூட. தாங்கள் சொல்வதுபோல் தேநீர் நிலையங்கள், முடிதிருத்தும் இடங்கள், மற்றம் கிராமத்து நூலகங்கள் போன்றவை தமிழ் வளர்ப்பில் முக்கிற பங்காற்றுகின்றன. இதில் மக்கள் தொலைக்காட்சியும் ஒன்று...

நல்ல இடுகை நண்பா...

ஸ்ரீ said...

நல்ல பதிவு.

சி. கருணாகரசு said...

சரியான...அக்கறையுள்ள‌ பதிவு.
உங்களுக்கும்... மக்கள்தொலைக்காட்சிக்கும் பாராட்டுக்கள்.

அகல்விளக்கு said...

பொழுது போக்கு அம்சங்களை நம்பி இல்லாமல் தமிழ் வளர்க்க முயலும் தொலைக்காட்சிக்கு நம்மால் முடிந்த அளவு ஒத்துழைப்பு தருவோம்.

ஜெட்லி said...

நண்பரே என் நண்பர்களுக்கு(தமிழர்கள் தான்) பல
பேருக்கு தமிழை படிக்க தெரியவில்லை...கேட்டால்
நான் பள்ளியில் ஹிந்தி படித்தேன், பிரெஞ்சு படித்தேன்
என்கிறார்கள்..... இதெற்கெல்லாம் யார் காரணம்??

அரசு தான், நம் தமிழர்களின் மனதில் தமிழ் படித்தால்
அதிக மார்க் வாங்க முடியாது என்ற காரணத்தால்
பல பேர் ஹிந்தியை தேடி செல்கின்றனர்......
இதற்க்கு ஒரு பிறக்குமா...??

Balavasakan said...

இதைச்சொல்ல மறந்திட்டீங்க தலைவா...யூதபுல் விகடன்.ஏன் இளமை பொங்கும் விகடன் என பெயரிடக்கூடாது.
அது என்ன குட் பிளாக்

கருப்பு பூனை said...

நல்ல பதிவு, இன்னும் ஒரு செய்தி மக்கள் தொலைகாட்சியின் அலுவலகத்தினுள் தமிழை தவிர பிற மொழிகளில் பேசினால் 500 ரூபாய் அபராதம்...


மக்கள் தொலைகாட்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல பல....

(Mis)Chief Editor said...

திரும்பவும் சொல்கிறேன்.

நம்முடைய convenience-க்குத்தான் மொழி இருக்க வேண்டுமே ஒழிய,
compulsory-யாய் இருக்கக்கூடாது!

-பருப்பு ஆசிரியர்

இன்றைய கவிதை said...

கலக்கிட்டீங்க!
அருமையான, ஆதங்கமான பதிவு!

-கேயார்

ஹேமா said...

மக்கள் தொலக்காட்சி இங்கு முன்பு பார்க்கக் கூடியதாய் இருந்தது.பார்த்திருக்கேன்.அருமையா இருக்கு பதிவு புலவரே.

தியாவின் பேனா said...

ஆமாம் நானும் பார்த்தேன் ஆனால் பார்த்ததுடன் சரி .
ஆனால் நீங்கள்
அதை பதிவிலிட்டுள்ளீர்கள் இதனால் பார்க்காத பலர் சார்பில் நன்றி

பிரியமுடன்...வசந்த் said...

நம் இனமடா நீ...

புலவன் புலிகேசி said...

நன்றி வெண்ணிற இரவுகள்,ஊடகன்,வானம்பாடிகள்,கலகலப்ரியா,பிரபாகர்,க.பாலாசி,ஸ்ரீ,சி. கருணாகரசு,அகல்விளக்கு,

புலவன் புலிகேசி said...

நன்றி ஜெட்லி

//நம் தமிழர்களின் மனதில் தமிழ் படித்தால்
அதிக மார்க் வாங்க முடியாது என்ற காரணத்தால்
பல பேர் ஹிந்தியை தேடி செல்கின்றனர்......
இதற்க்கு ஒரு பிறக்குமா...??//

நிச்சயம் வழி பிறக்கும். தமிழ் கட்டாயப் பாடமாக்கப் பட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறது.

புலவன் புலிகேசி said...

//Balavasakan said...

இதைச்சொல்ல மறந்திட்டீங்க தலைவா...யூதபுல் விகடன்.ஏன் இளமை பொங்கும் விகடன் என பெயரிடக்கூடாது.
அது என்ன குட் பிளாக்
//

உண்மைதான் தல..நன்றி...

புலவன் புலிகேசி said...

//கருப்பு பூனை said...

நல்ல பதிவு, இன்னும் ஒரு செய்தி மக்கள் தொலைகாட்சியின் அலுவலகத்தினுள் தமிழை தவிர பிற மொழிகளில் பேசினால் 500 ரூபாய் அபராதம்...


மக்கள் தொலைகாட்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல பல....
//

தகவலுக்கு நன்றிகள்...

புலவன் புலிகேசி said...

//(Mis)Chief Editor said...

திரும்பவும் சொல்கிறேன்.

நம்முடைய convenience-க்குத்தான் மொழி இருக்க வேண்டுமே ஒழிய,
compulsory-யாய் இருக்கக்கூடாது!

-பருப்பு ஆசிரியர்
//

அப்படியென்றால் பல ஆங்கில வழி பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிப்பது கட்டாயமில்லையா?? ஆனால் இங்கு தமிழை யாரும் கட்டாயப் படுத்தி படிக்க சொல்லவில்லை.

தமிழ் மாமியார் மருமகள் சண்டை போல் ஆகிவிட்டது. எப்படி மனைவி வந்ததும் பலர் தாயை மறந்து விடுவது போல ஆங்கிலம் வந்ததால் தமிழை மறந்து திரிகின்றனர். அது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது.

புலவன் புலிகேசி said...

நன்றி இன்றைய கவிதை,ஹேமா,தியாவின் பேனா,பிரியமுடன்...வசந்த்

யோ வொய்ஸ் (யோகா) said...

“வெல் யு போஸ்ட் ஏ குட் போஸ்ட், சான்சே இல்ல, நைஸ் கெமிஸ்ட்ரி இன் திஸ் போஸ்ட்”

இந்திய தொலைக்காட்சி அறிப்பாளர்கள் மாதிரி பேசி பார்த்தேன். இந்த கொடுமை இப்போ இலங்கை அறிவிப்பாளர்களிடமும் தொற்றியுள்ளது கவலையான விடயம்.

அன்புடன் மலிக்கா said...

எனக்கும் மக்கள் தொலைகாட்டி பிடிக்கும் தமிழுக்காக..

நானும் தமிழை அடிக்கடி வருத்தப்படுத்துகிறேன் அடித்தலிட்டு அடித்தலிட்டு.. முயன்று முன்னுக்குவரனும் தமிழில் என்எழுத்துக்களில்...

அருமையான பதிவு தோழனே...

thenammailakshmanan said...

//நமக்குத் தெரிந்த நல்ல தமிழில் தொடர்ந்து பேசினால்உயிர்வலியில் துடிக்கும் தமிழுக்கு குருதிகொடுத்ததற்குச் சமம்//

உண்மை புலிகேசி

நன்று சொன்னீர்கள்

முயற்சி செய்கிறேன்

மன்னார் அமுதன் said...

மிக அருமையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்

நிறைய வாசிப்பதன் மூலம் எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கலாம்

வாழ்த்துக்கள்

முனைவர்.இரா.குணசீலன் said...

தலைப்பும் சிந்தனையும் அருமை நண்பரே...

"தமிழ் பிறந்திருக்கிறது". அந்த தமிழை குழந்தை போல் பாவித்து வளர்க்க வேண்டிய கடமை ஒவ்வொருதமிழனுக்கும் இருக்கிறது.


தமிழ் என்னும் குழந்தை பிறந்திருப்பது உண்மைதான்...


வளர்க்கவேண்டியது நம் கடமை என்பதை அழகாக எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள்..
மகிழ்ச்சி..

Sivaji Sankar said...

தமிழ் தெரிஞ்சவங்க ஹிந்தி, ஆங்கிலம் படிக்கிறாங்க..
ஆனா ஹிந்தி, ஆங்கிலம் தெரிஞ்ச வங்க தமிழை கண்டுக்கிறது இல்லை...
ஏன்....
ஏன்னா..,
எனக்கு அதுலதான் ஒரு டவுட்டு....
தெரிஞ்சவங்களே செப்புங்க..

விக்னேஷ்வரி said...

தமிழ்க் குழந்தையைக் காப்பது நம் கடமை. நல்லாருக்கு உங்க எழுத்து நடை.

Iniyal said...

பயனுள்ள பதிவு, குருதி என்ற வார்த்தையை கேட்டும் தான் பல நாட்கள் ஆகிறது, தூய தமிழில் பேச முடியாது, எனினும் தூய தமிழில் பதிவுகள் எழுதலாம், முக்கியமாய் கவிதைகளை எழுதலாம். தமிழுக்கான உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன்.