விஜய் தொலைக்காட்சியிலிருந்து சுடப்பட்ட நிகழ்ச்சி என்பதால் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. ஆனால் மதுரை முத்துவின் நகைச்சுவைகள் பிடிப்பதால் அவர் பேசுவதை மட்டும் கேட்பது வழக்கம்.
அப்படித்தான் சென்ற சனிக் கிழமையும் அந்த நிகழ்ச்சியில் முத்துவின் நகைச்சுவைகளை ரசித்து கொண்டிருந்தேன். பேசி முடிக்கையில் அவர் ஒரு சிறந்த விடயத்தை பற்றி அழகாக கூறுவார். அன்று அவர் தமிழகத்தின் பெருமையாக சொன்ன விடயம் என்னவென்றால்
"தமிழ்நாட்டு பெண்கள் சிறுவயதில் திருமணம் முடித்து கணவனை இழந்தாலும் வேறு ஒருவனை நினைக்காதவர்கள்" என்றார். இதற்கு பெண்கள் உட்பட அனைத்து ரசிகர்களிடமிருந்தும் கைத்தட்டல்கள். எனக்கு ஒரே குழப்பமாகி விட்டது.
உண்மையில் யோசித்தால் இது கைத்தட்டப்பட வேண்டிய விடயமா? நிச்சயமாக இல்லை. சிறு வயது திருமணம் என்பதே சட்டப்படி குற்றம். அதோடில்லாமல் விதவைகள் மறுமணமும் எதிர்க்கப்ப்ட்டிருக்கிறது. ஒரு ஆண் மனைவியை இழந்தால் பெரும்பாலும் மறுமணம் செய்து கொள்கிறான். பெண் செய்து கொண்டால் அது குற்றமாம். அப்படி மறுமணம் செய்யாமல் இருப்பவள் பத்தினியாம்(கிராமப்புறங்களில் இன்றும் நீடிக்கும் நிலை இது).
இது பெண்களை அடிமைப் படுத்தும் கருத்தாகவே எனக்கு தோன்றியது. இது போன்ற சிறுவயது திருமணங்கள் நடப்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் குறைவுதான் என்றாலும் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதும் குறைந்து போய்தான் இருக்கிறது.
அவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. "பெண்களே பெண் அடிமையாதலை ஆதரிக்கிறார்களா?". ஊடகங்களில் இது போன்று பிரபலமானவர்கள் அதிகம் ஆராயமல் கருத்து வெளியிடுவது பலருக்கு அதிருப்தியை தருவதோடு இது போன்ற விடயங்கள் பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மையை கூட ஏற்படுத்தக் கூடும்.
அவர் சொல்ல வந்த கருத்து என்னவோ தமிழ்நாட்டு பெண்கள் கற்பில் சிறந்தவர்கள் என்பதுதான். ஆனால் அதற்கு சுட்டிய உவமை ஆணாதிக்கத்தை மிகைபடுத்தி காட்டியிருக்கிறது. கற்பு என்று ஒன்று உண்டெனில் அது இருபாலருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும்.
பெண்களுக்கு மட்டும் தினிக்கபடுவதாக இருக்க கூடாது. இதை பெருமையாக பேசி பேசியே பெண்ணடிமைத்தனம் வளர்க்கப் பட்டிருக்கிறது. ஆணின் கற்பு
பற்றி அதிகம் பேச்சுக்கள் எழுந்ததில்லை. இதற்கு காரணம் அவன் கருவுறுவதில்லை. ஆணிடம் இல்லாத ஒரு இயல்பு பெண்ணிற்கு இருந்தும் அதை வைத்தே அவள் அடிமைபடுத்த படுவதுதான் கொடுமையான விடயம்.
இன்று பெண்கள் பல துறைகளில் சாதனைகள் புரிந்து வருகிறார்கள், பெண்ணடிமைத்தனம் குறைந்திருக்கிறது. இருந்தாலும் முழுமையாக நீங்காத ஒன்றாகவே இவ்வடிமைத்தனம் இருந்து வருகிறது. சாதனை புரிந்த பெண்களை கேட்டால் நிச்சயம் தெரியும் அந்த சாதனைக்கு தடைக்கலாக இருந்த ஆணாதிக்கம் பற்றி. என்று மாறும் இந்த நிலை? விடை தெரியா கேள்விகளுடன் முடித்திருக்கிறேன்.
அப்படித்தான் சென்ற சனிக் கிழமையும் அந்த நிகழ்ச்சியில் முத்துவின் நகைச்சுவைகளை ரசித்து கொண்டிருந்தேன். பேசி முடிக்கையில் அவர் ஒரு சிறந்த விடயத்தை பற்றி அழகாக கூறுவார். அன்று அவர் தமிழகத்தின் பெருமையாக சொன்ன விடயம் என்னவென்றால்"தமிழ்நாட்டு பெண்கள் சிறுவயதில் திருமணம் முடித்து கணவனை இழந்தாலும் வேறு ஒருவனை நினைக்காதவர்கள்" என்றார். இதற்கு பெண்கள் உட்பட அனைத்து ரசிகர்களிடமிருந்தும் கைத்தட்டல்கள். எனக்கு ஒரே குழப்பமாகி விட்டது.
உண்மையில் யோசித்தால் இது கைத்தட்டப்பட வேண்டிய விடயமா? நிச்சயமாக இல்லை. சிறு வயது திருமணம் என்பதே சட்டப்படி குற்றம். அதோடில்லாமல் விதவைகள் மறுமணமும் எதிர்க்கப்ப்ட்டிருக்கிறது. ஒரு ஆண் மனைவியை இழந்தால் பெரும்பாலும் மறுமணம் செய்து கொள்கிறான். பெண் செய்து கொண்டால் அது குற்றமாம். அப்படி மறுமணம் செய்யாமல் இருப்பவள் பத்தினியாம்(கிராமப்புறங்களில் இன்றும் நீடிக்கும் நிலை இது).
இது பெண்களை அடிமைப் படுத்தும் கருத்தாகவே எனக்கு தோன்றியது. இது போன்ற சிறுவயது திருமணங்கள் நடப்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் குறைவுதான் என்றாலும் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதும் குறைந்து போய்தான் இருக்கிறது.

அவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. "பெண்களே பெண் அடிமையாதலை ஆதரிக்கிறார்களா?". ஊடகங்களில் இது போன்று பிரபலமானவர்கள் அதிகம் ஆராயமல் கருத்து வெளியிடுவது பலருக்கு அதிருப்தியை தருவதோடு இது போன்ற விடயங்கள் பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மையை கூட ஏற்படுத்தக் கூடும்.
அவர் சொல்ல வந்த கருத்து என்னவோ தமிழ்நாட்டு பெண்கள் கற்பில் சிறந்தவர்கள் என்பதுதான். ஆனால் அதற்கு சுட்டிய உவமை ஆணாதிக்கத்தை மிகைபடுத்தி காட்டியிருக்கிறது. கற்பு என்று ஒன்று உண்டெனில் அது இருபாலருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும்.
பெண்களுக்கு மட்டும் தினிக்கபடுவதாக இருக்க கூடாது. இதை பெருமையாக பேசி பேசியே பெண்ணடிமைத்தனம் வளர்க்கப் பட்டிருக்கிறது. ஆணின் கற்பு
பற்றி அதிகம் பேச்சுக்கள் எழுந்ததில்லை. இதற்கு காரணம் அவன் கருவுறுவதில்லை. ஆணிடம் இல்லாத ஒரு இயல்பு பெண்ணிற்கு இருந்தும் அதை வைத்தே அவள் அடிமைபடுத்த படுவதுதான் கொடுமையான விடயம்.இன்று பெண்கள் பல துறைகளில் சாதனைகள் புரிந்து வருகிறார்கள், பெண்ணடிமைத்தனம் குறைந்திருக்கிறது. இருந்தாலும் முழுமையாக நீங்காத ஒன்றாகவே இவ்வடிமைத்தனம் இருந்து வருகிறது. சாதனை புரிந்த பெண்களை கேட்டால் நிச்சயம் தெரியும் அந்த சாதனைக்கு தடைக்கலாக இருந்த ஆணாதிக்கம் பற்றி. என்று மாறும் இந்த நிலை? விடை தெரியா கேள்விகளுடன் முடித்திருக்கிறேன்.
பெண்ணே தடைகளை தகர்த்தெறி
மன்னில் நீயும் ஒரு
மனிதப்பிறவி என்பதை மறந்து
விடாதே.....
மன்னில் நீயும் ஒரு
மனிதப்பிறவி என்பதை மறந்து
விடாதே.....