கடவுளை மற..மனிதனை நினை..

28 February 2010

கிரிக்கெட்டும் நானும் - தொடர்பதிவு

6:31:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments
நண்பர்கள் வெள்ளி நிலா ஷர்புதீன் மற்றும் முகிலன் அழைத்ததால் இத் தொடர்பதிவை எழுதுகிறேன்.இத்தொடர்பதிவின் விதிமுறைகள்1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.*******மூன்றாவது விதிமுறை...

27 February 2010

டரியல் (27-பிப்ரவரி-2010)

7:27:00 AM Posted by புலவன் புலிகேசி 26 comments
அஜீத் என்ன சொன்னா நமக்கென்னங்க? நமக்கு தனிப்பட்ட முறையிலயும், நாட்டுலயும் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு. அவங்க சொன்ன அந்த வார்த்தைகள், அதனால் எழுந்த பிரச்சினைகள் பொது மக்களுக்குத் தேவையற்றது. அவரு சொன்ன மாதிரியே சொல்லனும்னா "மக்களை மக்களா இருக்க விடுங்க". அவருக்காக வருத்தப் படவோ, ஆதரவு கொடுக்கவோ அவுரு...

26 February 2010

பள்ளியும் சமுதாயமும்

5:41:00 AM Posted by புலவன் புலிகேசி , 23 comments
முதன் முதல் அம்மா அப்பாவைப் பிரிந்து எட்டு மணி நேரம் இருந்ததும் அதன் பின் அதையே பழக்கமாக்கியதும் அந்தப் பள்ளிக்கூடம் தான்.ஆரம்பத்தில் எதற்காகப் போகிறோம் என்று எவருக்கும் தெரிந்ததில்லை. அது போலத்தான் பள்ளி வாழ்க்கையை தொடங்கின அந்த இரு சிட்டுகளான ரமேசும், அம்பிகாவும்.பள்ளிகளில் சீருடை வரக்காரணம் அவர்களுக்குள்...

25 February 2010

சச்சினின் 200க்கு எதிராக சாருவின் ரசிகன்

7:35:00 AM Posted by புலவன் புலிகேசி 78 comments
நேற்று நடந்தப் போட்டியில் சச்சின் 200 ரன்களைக்கடந்து உலக சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே. சச்சின் இந்த சாதனையைப் புரிவார் என நேற்று வரை யாரும் நினைக்கவில்லை. ஷேவக்கால் மட்டுமே இது முடியும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேலையில் சச்சின் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தி இந்தியர்களை விளையாட்டுத்துறை...

24 February 2010

கடவுள் யாரைக் காக்கிறான்(ள்)?

7:02:00 AM Posted by புலவன் புலிகேசி , 31 comments
கடவுள் இந்த சொல்லுக்கு என்னப் பொருள் எனக் கேட்டால் பலர் சொல்வது படைத்தல், காத்தல், அழித்தல் செய்பவன்(இங்கும் ஆணாதிக்கம்) கடவுள். சரி விடயத்திற்கு வருவோம் படைத்தல் என்பது கடவுள் செய்தது என்றால் அந்தக் கடவுளை யார்ப் படைத்திருக்கக்கூடும்?பலர் என் விவாதங்களில் கேட்டது கடவுள் இல்லாமலா இவ்வளவு ஜீவராசிகள்...

23 February 2010

சொந்த பந்தங்கள் - 3

6:23:00 AM Posted by புலவன் புலிகேசி , 24 comments
அண்ணன்தன் இளவல் கற்கதன் கல்வி இழந்தான்தமையாளின் மணம் முடிக்கதன் மணம் தள்ளினான்இருவரும் இவன் மறந்துஇன்புற்றிருக்க இவனோதுன்புற்றிருப்பினும் அவர்கள்இன்பத்தில் திளைத்திருக்கிறான்தம்பிஅம்மையப்பனின் செல்லப் பிள்ளைஅதனால் மூத்தவனின் பிள்ளைப்பருவ எதிரி வளர்பருவத்தோழன் வளர்ந்த பின்பங்க...

20 February 2010

பரிசலின் டைரிக்குறிப்பு - புத்தக விமர்சனம்

7:44:00 PM Posted by புலவன் புலிகேசி 18 comments
கேபிளாரின் லெமன்ட்ரீயுடன் நாகரத்னா பதிப்பகம் வெளியிட்ட இன்னொரு புத்தகம் பரிசல் கிருஷ்ணாவின் "டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்". இப்புத்தகம் மொத்தம் பதினேழு சிறுகதைகளை உள்ளடக்கியது. அது பற்றிய விமர்சனம் இது.1) தனிமை-கொலை-தற்கொலைகாதலைக் காட்டிலும் நட்பு உயர்ந்தது என்பதைக் காட்டும் இக்கதை ஆரம்பம் முதல்...

டரியல் (20-பிப்ரவரி-2010)

6:31:00 AM Posted by புலவன் புலிகேசி 20 comments
"வெள்ளி நிலா" என்ற பதிவர்களுக்கான முதல் பத்திரிகை வெளிவந்திருக்கிறது. அதில் என் கதை வெளிவந்து முடிவு மாற்றம் செய்தது குறித்து முன்னரே எழுதியிருந்தேன். அந்த மாற்றம் என்னைக் கேட்காமல் நிகழ்ந்தது. அது குறித்து ஷர்புதீனிடம் நேரடியாக கேட்டேன். "தவறான புரிதலும்,நேரமின்மையும் காரணம் எனக் கூறினார்". அதில் உண்மையிருந்தது.ஆனால்...

18 February 2010

கேபிளாரின் லெமன் ட்ரீ ஒரு 18+ புத்தகம்

11:45:00 PM Posted by புலவன் புலிகேசி 48 comments
இது கேபிளாரின் "லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்" புத்தகத்தின் விமர்சனம். இப்புத்தகத்தில் மொத்தம் 13 சிறுகதைகள். முதல் கதை என்னை உள்ளே இழுத்து சென்றது.1) முத்தம்இச்சிறுகதையை பலர் வார இதழ் ஒன்றில் படித்து விட்டதாக சொன்னார்கள். ஆனால் நான் இப்போதுதான் முதன் முதல் படித்தேன். படித்ததும் கதை மனதில்...

17 February 2010

உறக்கம் தொலைத்த உறவுகள்....

7:36:00 AM Posted by புலவன் புலிகேசி 49 comments
தமிழ் ஒரு நடுத்தரக்குடும்பத்தை சேர்ந்த திருமணமான இளைஞன். அவன் வேலைப்பார்ப்பது ஒரு கால் சென்டரில். இரவில் பணி பகலில் உறக்கம் என இன்பம் தொலைத்து பொருள் தேடும் பலரில் இவனும் ஒருவன். ஞாயிறு, இதுதான் அவனுக்குப் பிடித்த தினம். ஏனென்றால் அன்றுதான் அவன் கண்கள் முழுமையாக ஓய்வெடுக்கும் நாள்.சனி இரவு பணி முடித்து...

16 February 2010

வெள்ளிநிலாவும் மாறிப்போன என் கதையும்

5:37:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments
ராமசாமியும் சோஸ்யக்காரனும்சின்னையன் ஒரு மிகப்பெரிய சோஸ்யக்காரன்னு பேர் வாங்குனவன். இவனோட பொழப்பே அடுத்தவங்க எதிர்காலத்த பத்தி சொல்லி (?) சம்பாதிக்கறதுதான். ராமசாமி சின்னையனோட உதவியாளன்.ராமசாமிக்கு உண்ண உணவும் இருக்க இடமும் தந்தான் சின்னையன். சம்பளம்னு இதுவரை எதுவும் கொடுத்ததில்லை. ராமசாமியும் சாப்பாடும்...

15 February 2010

காதலர் தினத்தில் கிடைத்த காதல் பரிசு

7:42:00 AM Posted by புலவன் புலிகேசி 28 comments
5.30 மணிக்குள் சென்றே ஆக வேண்டும் என முடிவெடுத்தேன். ஆனால் இடையில் நட்பு ஒருவர் வீட்டுக்கு செல்ல வேண்டியக் கட்டாயம். அதனால் 6 மணிக்குத்தான் சென்றேன். (எங்கன்னு யோசிக்காதீங்க கேபிள் & பரிசலின் புத்தக வெளியீட்டு விழாவிற்குத்தான்). உள்ளே நுழையும் இடத்தில் வழியில் நின்று பேசிக் கொண்டிருந்த கேபிள் (ஓனர்னா...