60 ஆனாலும் ஸ்டைல்தான்
அதனால் நாட்டுக்கு என்ன பயன்?
37 என்றாலும் கவர்ச்சிதான்
அதனால் ஏழைகளுக்கு என்ன பயன்?
கட்அவுட் வைத்து பாலாபிசேகம்
செய்து உழைத்த காசை
ஒரு நாளில் தீர்த்துவிட்டு
அடுத்த வேலை சோற்றுக்கு
அடுத்தவனிடம் கையேந்தும் நிலை
ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும்
இயல்பு தான்
அதற்காக தலைவர் வந்து உனக்கு
சோறு போட்டாரா?
நாட்டின் வறுமையை படங்களில்
ஒழிக்கும் தலைவன்
உண்மையில் அது பற்றி
யோசித்தாவது இருப்பாரா?
180 கோடியில் அவர்கள்
படத்தில் ஒழிப்பது ஏழ்மையை
நிஜத்தில் உருவாக்குவது ஏழையை!
48 விவாதங்கள்:
அப்படி போடு தலைவா
Supper.
//60 ஆனாலும் ஸ்டைல்தான்
அதனால் நாட்டுக்கு என்ன பயன்?
//
என் ஸ்டைலால நாட்டுக்கு எவ்வளவு பயன்னு போஸ்டர் அடிச்சி ஒட்டுனாரா?
//37 என்றாலும் கவர்ச்சிதான்
அதனால் ஏழைகளுக்கு என்ன பயன்?
//
என் கவர்ச்சியால ஏழைகளுக்கு இன்ன பயன்னு டிவியில பேட்டி குடுத்தாரா?
//கட்அவுட் வைத்து பாலாபிசேகம்
செய்து உழைத்த காசை
ஒரு நாளில் தீர்த்துவிட்டு
//
இதையெல்லாம் செய்யலைன்னா நீ என் ரசிகன் இல்லைன்னு பேப்பர்ல விளம்பரம் குடுத்தாரா?
//அடுத்த வேலை சோற்றுக்கு
அடுத்தவனிடம் கையேந்தும் நிலை
ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும்
இயல்பு தான்
அதற்காக தலைவர் வந்து உனக்கு
சோறு போட்டாரா?
//
நீ இப்பிடியெல்லாம் செய், நான் உனக்கு சோறு போடுறேன்னு சொன்னாரா? நீயா செஞ்சிட்டு அப்புறம் அதுக்கு அந்தாள் மேல ஏன்யா பழி போடுறீங்க?
//நாட்டின் வறுமையை படங்களில்
ஒழிக்கும் தலைவன்
உண்மையில் அது பற்றி
யோசித்தாவது இருப்பாரா?
//
கரெக்டுண்ணே, யோசிச்சு ஒரு இடுகையாவது போட்டிருப்பாரா?
//180 கோடியில் அவர்கள்
படத்தில் ஒழிப்பது ஏழ்மையை
நிஜத்தில் உருவாக்குவது ஏழையை!
//
இந்தப் படம் வெளியானதால் ஏழையானேன் அப்பிடின்னு ஒரு ஆளைக் காட்டுங்க பாஸு.
இந்தப் படம் வந்ததால வசதியானேன்னு படத்தை வாங்கி வெளியிடும் வினியோகஸ்தன்ல இருந்து, தியேட்டருக்கு வெளிய பொட்டுக்கடலை விக்கிறவன் வரைக்கும் காட்ட முடியும்..
ஒரு முட்டாள் ரசிகன் பாலாபிஷேகம் பீராபிஷேகம் பண்ணி நாசமாப் போன்னான்னா அதுக்கு ரஜினி என்ன அய்யா செஞ்சாரு?
எதுடா ஹாட்டுன்னு பாத்து அதுல இடுகை எழுதுரதைத் தவிர இந்தியாவோட ஏழ்மையை ஒழிக்க என்ன செஞ்சீங்க பாஸ் நீங்க. முதல்ல அதைப் பட்டியலிட்டுட்டு அதுக்கப்புறம் ரஜினியோட முதுகுல அழுக்கு இருக்குன்னு சுட்டிக் காட்டுங்க.
ஐயா முகிலன் அவர்களே! நான் முன்னரே எதிர் பார்த்ததுதான். இதைப்பற்றி எழுதினாலே ஹிட்சுக்காக் எழுதிருக்கான் அப்புடின்னு சொல்லுவீங்கன்னு. சொல்லிட்டு போங்க அது பத்தி கவலையில்லை. ஆனால் உங்கள் கேள்விக்கான பதில்கள் இங்கே
பதிவின் கரு புரியாமல் கருத்திட்டிருக்கிறீர்கள். இது முழுக்க முழுக்க ரசிகனுக்கான பதிவு. இப்படி எல்லாம் நீ செய்வதால் உனக்கு எதுவும் பலனில்லை என்பதே கருத்து. அதை முதலில் புரிது கொள்ளும்.
//இந்தப் படம் வெளியானதால் ஏழையானேன் அப்பிடின்னு ஒரு ஆளைக் காட்டுங்க பாஸு.
இந்தப் படம் வந்ததால வசதியானேன்னு படத்தை வாங்கி வெளியிடும் வினியோகஸ்தன்ல இருந்து, தியேட்டருக்கு வெளிய பொட்டுக்கடலை விக்கிறவன் வரைக்கும் காட்ட முடியும்.. //
நன்றிங்க உங்களோட நடுத்தர சிந்தனைக்கு. நீங்க சொல்ற வினியோகஸ்தர்கள் எல்லாம் பரம் ஏழைகள் அப்படித்தானே. அப்பறம் தியேட்டருக்கு வெளியே கடலை விக்கிறவன் சம்பாதிக்கறது தெரிஞ்ச உங்களுக்கு படம் பார்க்க கடன் வாங்கி செலவு செய்யும் ஏழை ரசிகனைத் தெரிய வில்லை. நல்லதுங்க.
//ஒரு முட்டாள் ரசிகன் பாலாபிஷேகம் பீராபிஷேகம் பண்ணி நாசமாப் போன்னான்னா அதுக்கு ரஜினி என்ன அய்யா செஞ்சாரு? //
இந்த மாதிரி எல்லாம் செஞ்சா நீங்க என் ரசிகனே இல்லைன்னு பேட்டி கொடுக்க சொல்லுங்க பாப்பம்.
//எதுடா ஹாட்டுன்னு பாத்து அதுல இடுகை எழுதுரதைத் தவிர இந்தியாவோட ஏழ்மையை ஒழிக்க என்ன செஞ்சீங்க பாஸ் நீங்க. முதல்ல அதைப் பட்டியலிட்டுட்டு அதுக்கப்புறம் ரஜினியோட முதுகுல அழுக்கு இருக்குன்னு சுட்டிக் காட்டுங்க//
நண்பரே நான் ஒரு சாதாரண மனிதனாகத்தான் பார்க்கப் படுகிறேன். ஆனால் உங்கள் ரஜினியோ கடவுள் அளவில் பார்க்கப் படுகிறார். நானும் அவரும் ஒன்றா? அது என்ன எதாவாது கேள்வி கேட்டால் உடனே நீ என்ன செஞ்சன்னு கேக்கறது. நான் ஒன்னும் செய்யவில்லை. எனக்காக எந்த ஏழையும் கடன் வாங்குவதில்லை.
தம்பி புலிகேசி,
ரசிகனுக்கு அட்வைஸ்னா அது ரசிகனுக்கு மட்டும் இருக்கணும். அதை விட்டுட்டு இங்க ரஜினியைப் பத்தி ஏன் பேசணும்?
நேத்து வந்த சுண்டு சுளுவானுக்கெல்லாந்தான் ரசிகன்ங்கிற பேர்ல கட்டவுட் வச்சி பாலாபிஷேகம் செஞ்சிக்கிட்டு இருக்காங்க. ஏன் த்ரிஷாவுக்குக் கூட ரசிகையர் மன்றம் வச்சி ஆண்களுக்கு நாங்களும் சமம்னு பெண்களும் பாலாபிஷேகம் செஞ்சாங்க.
அவங்களையெல்லாம் பொதுவா எழுத வேண்டியதுதான? அது சரி விலை போற குதிரை மேல தான காசைக் கட்ட முடியும்?
//நேத்து வந்த சுண்டு சுளுவானுக்கெல்லாந்தான் ரசிகன்ங்கிற பேர்ல கட்டவுட் வச்சி பாலாபிஷேகம் செஞ்சிக்கிட்டு இருக்காங்க. ஏன் த்ரிஷாவுக்குக் கூட ரசிகையர் மன்றம் வச்சி ஆண்களுக்கு நாங்களும் சமம்னு பெண்களும் பாலாபிஷேகம் செஞ்சாங்க.
அவங்களையெல்லாம் பொதுவா எழுத வேண்டியதுதான? அது சரி விலை போற குதிரை மேல தான காசைக் கட்ட முடியும்//
ஆனா எங்க அதிகமா நடக்குது? எப்ப அதிகமா நடக்குது? அந்த நேரத்துக்கேத்தா மாதிரிதான் சொல்ல முடியும். ரஜினிங்கற மாஸ் உங்களுக்கு பிடிச்ச அளவுக்கு ஏழை ரசிகர்களின் ஏழ்மை புரியவில்லை என நினைக்கிறேன்.
என்ன பண்ணலாம்ங்கிறீங்க? புலி.. கொஞ்சம் கால் பண்ணுங்க.. உங்க நம்பர் மிஸ ஆயிருச்சு..
Ippa enna pannanumnu solreenga? Over scene odambukku agathu.
கேபிள் அண்ணே மற்றும் முத்துக்குமார் எந்திரனுக்காக நீங்க ஒன்னும் செய்யாம இருங்க அது போதும்.
Enthiran padam nanga paakarathula ungalukku enna pirachana?
//Muthukumar says:
August 18, 2010 9:02 AM
Enthiran padam nanga paakarathula ungalukku enna pirachana?//
உங்கள் மாதிரி ஆளுங்க பாத்துட்டு பேசாம போனா ஒன்னும் பிரச்சினை இல்லை. ஆனா அதப்பத்தி மாஸ் கிரியேட் பண்ண வேண்டாம்னு சொல்றேன்.
we are not creating any mass here. Only u are criticizing the movie and hero before it comes to theater :-)
//Muthukumar says:
August 18, 2010 9:10 AM
we are not creating any mass here. Only u are criticizing the movie and hero before it comes to theater :-)//
முற்றிலும் உண்மை. தனிமனிதனுக்கு குடை பிடித்து சொந்தக் காசை வீணடித்து கடனாளியாக வேண்டாம் என்பதற்காக.
Rajini padam paathu kadanaali aaiyitangala...peruketha mathiri nalla comedy panreenga.
//Muthukumar says:
August 18, 2010 9:14 AM
Rajini padam paathu kadanaali aaiyitangala...peruketha mathiri nalla comedy panreenga.//
நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கங்களை வைத்து முடிவு செய்யாதீர்கள். ஏழை என்ற ஒரு வர்க்கம் தான் நம் நாட்டில் 50 சதம் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
ஐயன்மீர்,
தாங்கள் புகழ் விரும்பாப் புண்ணியவானாக இருப்பின் எந்திரன்- ஏழைப் பங்காளன் என்று தலைப்பு வைத்ததன் காரணம் என்னவோ?
எந்திரன் - ஏழையாக்க வந்தவன் என்றே வைத்திருக்கலாமே?
//முகிலன் says:
August 18, 2010 9:23 AM
ஐயன்மீர்,
தாங்கள் புகழ் விரும்பாப் புண்ணியவானாக இருப்பின் எந்திரன்- ஏழைப் பங்காளன் என்று தலைப்பு வைத்ததன் காரணம் என்னவோ?
எந்திரன் - ஏழையாக்க வந்தவன் என்றே வைத்திருக்கலாமே//
அப்புடி வச்சாத்தானய்யா படிக்கவே வர்ராங்க. இத நெறைய பேர் படிக்கனும். புகழ் முக்கியமல்ல. நல்லத சொல்லவும் விளம்பரம் தேவைப்படுதே. என்ன செய்வது?
nambittom...
//அப்புடி வச்சாத்தானய்யா படிக்கவே வர்ராங்க. இத நெறைய பேர் படிக்கனும். //
இதைத்தான் ஹிட்ஸுக்கு எழுதுவது என்று சொல்கிறோம். :)))
//முகிலன் says:
August 18, 2010 9:50 AM
//அப்புடி வச்சாத்தானய்யா படிக்கவே வர்ராங்க. இத நெறைய பேர் படிக்கனும். //
இதைத்தான் ஹிட்ஸுக்கு எழுதுவது என்று சொல்கிறோம். :))//
இந்த விசயத்துக்கு அது தேவை என்றே நினைக்கிறேன். அதில் தவறில்லை. வெறுமனே ஹிசை மட்டும் நோக்காக கொண்டு எழுதுவதானால் இதே எந்திரனைப்பற்றி ஆஹா ஓஹோ என்றெழுதி ஓட்டும் ஹிட்சும் வாங்கலாம்.
எந்திரன் படத்திற்காகவும் பாடல் வெளி ஈட்டு விழவிர்காகவும் செலவிட்ட தொகையை பயனுள்ள விஷயங்களுக்கு செலவிட்டு இருந்தால் அருமையாய் தான் இருந்திருக்கும், அனால் நம்மால் இதை எல்லாம் தடுக்க முடிகிறதா, பின் எதற்காக பேசுகிறோம், இது தான் என்ஆதங்கம்.
அருமையாக சொல்லிவிட்டீர்கள். முப்பது வருஷங்களாக திருந்தாத கூட்டம். மறக்காமல் இந்த பதிவை உங்களது பேரனுக்கு பத்திரமாக எடுத்து வையுங்கள். அவனும் பதிவு போட்டு புத்தி சொல்லட்டும். இதைப் படித்த பின்னராவது சம்பந்தப்பட்வர்கள் திருந்துவார்கள் என்று நினைக்கிறேன்.
/நானும்
அவரும் ஒன்றா? அது என்ன
எதாவாது கேள்வி கேட்டால்
உடனே நீ என்ன
செஞ்சன்னு கேக்கறது ./
Oruthara vimarsanam panradhuku munnala adhuku naama thagudhiyanu parkanum. Adanaladhan indha kelvi.
Rajini padam parkanum adhuku 100 ruba kadan kodunganu unga kita yaravadhu ketta avaruku indha advice pannunga.
Inga kudika kadan vangaravanga dhan adhigam. Adhuku eadavadhu seiunga.
3 or 4 varushathuku 1 murai varum rajini padathala kadan padaranganu solradu overunga. Uzhaichu kalaichu pora makkaluku Rajini padam oru relaxation. Idhudhan unmai.
/mrs.krishnan says:
August 18, 2010 11:29 AM
/நானும்
அவரும் ஒன்றா? அது என்ன
எதாவாது கேள்வி கேட்டால்
உடனே நீ என்ன
செஞ்சன்னு கேக்கறது ./
Oruthara vimarsanam panradhuku munnala adhuku naama thagudhiyanu parkanum. Adanaladhan indha kelvi.//
neenga solratha paatha rajiniya vimarasanam pannanumna athukku nanum rajiniya irukkanum pola........kotumainga
//3 or 4 varushathuku 1 murai varum rajini padathala kadan padaranganu solradu overunga. Uzhaichu kalaichu pora makkaluku Rajini padam oru relaxation. Idhudhan unmai.//
3oh 4oh kadan vangama varumai kottukku keela irukkaravan intha padam paakka mudiyathu. neenga solrathellaam natuthtara, metukudi varkangalukkuthan porunthum.....
தெளிவான ஆதங்கம் நண்பரே. கண்ணை மூடினால் உலகமே இருண்டு விட்டதாக இருப்பவர்களுக்கு இந்த பகல் கொள்ளை மிகச் சாதாரணமாக இருக்கலாம். 150 கோடி முதலீடு செய்து மொத்தமாக எத்தனை கோடி சுருட்ட இருக்கிறார்களோ?, என்பதை எல்லோரும் சிந்திக்க மாட்டார்கள் என்பதற்கு மேலே உள்ள சில மறுமொழிகளே உதாரணம். விநியோகஸ்தர் முதல் பொட்டுக்கடலை விற்பவர் வரை லாபம் சம்பாதிக்கலாம். ஆனால் அத்தனை லாபத்திற்கும் யாருடைய காசு சுரண்டப்படுகிறது என்பதை யோசிப்பதற்கும் ஒரு மனசு வேண்டும் போல!
கலாநிதி மாறன், ஷங்கர் தொடங்கி திரையரங்கில் பொட்டுகடலை விற்பவர் வரை ரஜினி என்பவரை வைத்து "தொழில்" செய்கிறார்கள். இதுவும் ஒருவகையான விபச்சாரமே!!!
//நண்பரே நான் ஒரு சாதாரண மனிதனாகத்தான் பார்க்கப் படுகிறேன். ஆனால் உங்கள் ரஜினியோ கடவுள் அளவில் பார்க்கப் படுகிறார். //
ippa enna ungalayum Kadavul nu paakkanuma????
//கேபிள் அண்ணே மற்றும் முத்துக்குமார் எந்திரனுக்காக நீங்க ஒன்னும் செய்யாம இருங்க அது போதும்.//
ivanga onnum Pannala...Thalaivar nadichurukkaar...shankar direct pannirukkaar...
//எந்திரன் படத்திற்காகவும் பாடல் வெளி ஈட்டு விழவிர்காகவும் செலவிட்ட தொகையை பயனுள்ள விஷயங்களுக்கு செலவிட்டு இருந்தால் அருமையாய் தான் இருந்திருக்கும், அனால் நம்மால் இதை எல்லாம் தடுக்க முடிகிறதா, பின் எதற்காக பேசுகிறோம், இது தான் என்ஆதங்கம்.//
Mothalla Politics la irukkavangala pathi sollungappa... Avanga evvalavo Meeting , Maanadu nu podraanga...adhellam patriyum kooralaame...
//அருமையாக சொல்லிவிட்டீர்கள். முப்பது வருஷங்களாக திருந்தாத கூட்டம். மறக்காமல் இந்த பதிவை உங்களது பேரனுக்கு பத்திரமாக எடுத்து வையுங்கள். அவனும் பதிவு போட்டு புத்தி சொல்லட்டும். இதைப் படித்த பின்னராவது சம்பந்தப்பட்வர்கள் திருந்துவார்கள் என்று நினைக்கிறேன்.
//
Oh...30 varushama indha maadhiri Karuthu sollittu irukkaangale, adhai solreengala????
Iyyaa... ungalada samudhaya akkaraiya madhikkaren..Aanaa Unga Padhivu , Yelaigal Kadan vaangi Abishegam pannaranga....apdi , ipdi nu eludhareenga...
Neenga sonna andha varumai kottukku keela irukkavanga, Broadband connection vaangi - 2 GB speed la - browse panni unga blog padippaaanga.apdi dhaane....
ponga sir...Neenga unga velaiya paarunga....ellaarum avanga avanga velaiya paakkaraanga..
Ungalukku adhunaala enna prachanai????
Sorry...Speed Mbps :)
Oruthara vimarsanam
panradhuku munnala
adhuku naama
thagudhiyanu parkanum.
Adanaladhan indha kelvi.//
neenga solratha paatha
rajiniya vimarasanam
pannanumna athukku
nanum rajiniya irukkanum
pola........kotumainga/
Sorry. Nan thagudhinu sonnadu ungaluku puriala. Oruthara parthu nee enna senchurukanu kekkanumna naama adhu sambandhama eadavadu seidhirukanum. Aduku naama avaraga vendam.
Ungaluku makkal mela akkarai irukalam. Aana neenga solra yezhai makkaluku peria pozhudupokku eaduvum illai. Cinema dhan avanga main entertainment. Adhaum parkadhenu sonna matra visham ellame idhai vida costlydan.
Varumai kotuku keela irukaravangaluku dhan indha pathivunnu sonna, ticketke kadan vaangaranganu neenga solra avanga, kandippa netla idhai padika poradhum illai.
//60 ஆனாலும் ஸ்டைல்தான்
அதனால் நாட்டுக்கு என்ன பயன்?//
adhu polave
'UNGA KARUTHU NALLADHUDAN BLOGLA SOLLI ENNA PAYAN?'
Mukilan sir solra payandhano?
அறுபது வருடங்கள் மேல் ஆண்ட
புனிதர் நாங்களே என்ற வேடம் பூண்ட
பொல்லாத பொய்யர்கள் கொண்ட
புரட்சி பேசும் அராஜக ஆதிக்ககாரர்களை
அழுக்கிதே என்று மக்கள் உணர்ந்து
ஆத்திரத்துடன் அடித்து துரத்திய
அழுகிப்போன ஆட்ச்சிமுரைக்கு
புரட்சி பாவாடை போட்டு
பாரதத்தில் வந்து பம்மாத்து காட்டுவதில் என்ன பயன்?
லட்சம் உயிர்களை கொன்ற ஸ்டாலினுக்கும்
மிச்சமானவர்களை தின்ற மாவோவிற்கும்
வெட்கமிலாமல் வந்தனம் செய்யும் வெட்டிப்பயல்கள்
வக்கணையாக பாரதம் தரும் வளங்களை உண்டு
வன்மத்துடன் வாயடிப்பதால் என்ன பயன்?
கொலைகளத்தில் குத்தகை எடுக்கும் இந்த கெட்டவர்கள் சொல்லுகிறார்கள்
கோடிகணக்கான பணத்தை சினிமாவில் விட்டவன் கெட்டவனாம்
ஆனால் கோடிகணக்கான பிணத்தை சத்தமிலாமல் புதைத்தவன் நல்லவனாம்
நாட்டின் வறுமையை படங்களில் ஒழிக்கும் ஒருவன் அயோக்கியனாம்
ஆனால் நாட்டையே கொலை செய்யும் கயவன் புரட்சியாளனாம்
படத்தில் வரும் நடிப்பு நாம் மறந்து போவது
ஆனால் நீங்கள் செய்த புரட்சிகளால் மானுடம் அன்றோ மரத்து போனது!
மாட்டிக்கொண்டால் கொலைகாரன்
மாட்டாவிடில் புரட்சியாளன்!
//அறுபது வருடங்கள் மேல் ஆண்ட
புனிதர் நாங்களே என்ற வேடம் பூண்ட
பொல்லாத பொய்யர்கள் கொண்ட
புரட்சி பேசும் அராஜக ஆதிக்ககாரர்களை
அழுக்கிதே என்று மக்கள் உணர்ந்து
ஆத்திரத்துடன் அடித்து துரத்திய
அழுகிப்போன ஆட்ச்சிமுரைக்கு
புரட்சி பாவாடை போட்டு
பாரதத்தில் வந்து பம்மாத்து காட்டுவதில் என்ன பயன்?
லட்சம் உயிர்களை கொன்ற ஸ்டாலினுக்கும்
மிச்சமானவர்களை தின்ற மாவோவிற்கும்
வெட்கமிலாமல் வந்தனம் செய்யும் வெட்டிப்பயல்கள்
வக்கணையாக பாரதம் தரும் வளங்களை உண்டு
வன்மத்துடன் வாயடிப்பதால் என்ன பயன்?
கொலைகளத்தில் குத்தகை எடுக்கும் இந்த கெட்டவர்கள் சொல்லுகிறார்கள்
கோடிகணக்கான பணத்தை சினிமாவில் விட்டவன் கெட்டவனாம்
ஆனால் கோடிகணக்கான பிணத்தை சத்தமிலாமல் புதைத்தவன் நல்லவனாம்
நாட்டின் வறுமையை படங்களில் ஒழிக்கும் ஒருவன் அயோக்கியனாம்
ஆனால் நாட்டையே கொலை செய்யும் கயவன் புரட்சியாளனாம்
படத்தில் வரும் நடிப்பு நாம் மறந்து போவது
ஆனால் நீங்கள் செய்த புரட்சிகளால் மானுடம் அன்றோ மரத்து போனது!
மாட்டிக்கொண்டால் கொலைகாரன்
மாட்டாவிடில் புரட்சியாளன்!
//
இதை நான் எழுதலை. ஆனா இப்பிடியெல்லாம் எழுதிடுவேனொன்னு
பயமா இருக்கு
நிஜத்தில் உருவாக்குவது ஏழையை!
நச்!
நீங்கள் சொல்லி இருப்பது முற்றிலும் உண்மையான கருத்து தோழரே. எப்போது சினிமா போதையில் இருந்து வெளியில் வருகிறார்களோ அன்றுதான் அவர்களுக்கு புதிய வாழ்க்கை தொடங்கும்.காரணம் பொதுப்பிரச்சனைகளை பற்றி இவர்கள் சிந்திப்பதே இல்லை. அது தவறு என்று சுட்டி காட்டினால் நீ என்ன செய்தாய் என்று திருப்பி நமக்கே கேள்வி வருகிறது.அவர்கள் அறிவுக்கு எட்டியது அவ்வளவுதான். அதை பற்றி கவலைபடாமல் தொடர்ந்து எழுதுங்கள்.பொதுப்பிரச்சனை பற்றி நாம் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் வருகிறோம்.தமிழுக்காக உழைக்கிறோம் அதனால் நமக்கு என்ன பயன்? பயனை எதிர்பார்த்து நாம் செயல்படவில்லை என்பதை இவர்கள் உணரவேண்டும். இவர்கள் குருட்டு நம்பிக்கையை விட்டு பொதுவாழ்வில் தங்களை அர்பணித்து செயல்பட வேண்டும். அப்போதுதான் தமிழன் தமிழனாக வாழ முடியும்..தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்...
எந்திரனுக்காக...காசு செலவழித்தது முதலில் 4 ரூபாய் (தினகரன் - எந்திரன் ஸ்பெஷல்)
மற்ற நாட்களில் 2 ரூபாய் -
எந்திரன்'னுக்காக பேப்பரில் 2 ரூபாய் அதிகம் வசூலித்த சன் குழுமம், 200 கோடியை வசூலிக்க தெரியாதா ? படத்தை பார்க்கணும்ன்னு ஆசைப்பட்டா உங்க பாக்கட்ல தான் 500 ரூபாய் குறையும்....செலவு செய்வது, செய்யாதது..உங்கள் கையில், பணமும் உங்கள் பையில்...
(சினிமா விளம்பரம் படிக்க எப்பவும் தினத்தந்தி... வியாபரத்திற்கு தினமலர் (திருப்பூர் & கோவை))
Why to blame Rajini alone? Its just business and he know the Tricks to gain from that business. We should realise and limit ourselves from being creating lot of hypes about a film. Not only for Rajini, its for all the actors. Definitely, we are Cine Crazy People and wasting lot of time thinking about these actors.
oru o/c tv kaga otta kuthinangalae. Avangala poie kelungapa. Yen pa endhirana kekareenga. Avar padam dhanae nadicharu?
kodumai da samy.
ரஜினி அதைச் செய்தாரா, இதைச் செய்தாரா என்ற கேள்வியே அர்த்தமற்றது, ஏனெனில், நீங்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசு செய்ய வேண்டிய வேலையை ஒரு சாதாரண நடிகனிடம் எதிர் பார்க்கிறீர்கள். நீங்க உங்க பிரச்சினைகளைச் சொல்ல வேண்டிய இடம் தமிழக அரசிடமே தவிர, ஒரு மூன்றாம் மனிதரான நடிகரிடமல்ல. ரஜினி என்பவர் ஒரு நடிகர், நடிப்பு அவரது தொழில். அவர் நடிப்பது பணம் சம்பாதிக்க, சமூக சேவை செய்ய அல்ல. இதுக்கு மேல அவரைப் பத்தி யாரு என்ன சொன்னாலும் அது அவரோட ஆசை அல்லது கற்பனை. ரஜினி குசேலன் படத்துல தெரியாத் தனமா ஒரு உண்மையை கக்கினாரு, "நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்..... என்று முத்து படத்தில் பேசியது அந்தப் படத்தின் டைரக்டர் சொல்லிக் கொடுத்தது, நடிகன் என்ற முறையில் நான் பேசினேன், அதற்க்கு உள்ளர்த்தம் கற்பித்துக் கொண்டது உங்க தப்பு"- பின்னால் இது நமது ரசிகக் கண்மணிகளின் எதிர்ப்பால் நீக்கப் பட்டது. உண்மை இதுதான். ரஜினி என்ற மனிதரை நடிகனாகப் பார்க்காமல், ஏழைப் பங்காளனாகவும், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகவும், சமூக நீதிக்காகப் போராடுபவராகவும் பார்த்தது ரசிகனின் தப்பு. அதற்க்கு அவர் மேல் குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. இன்னொன்று, இயக்குனர் ஷங்கர், இவர் ஊழலை ஒழிக்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றும் படமெடுக்கிறார் என்று நீங்கள் நினைத்தால் மறுபடியும் பெரிய தப்பைச் செய்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் அவரே வரி பாக்கி, வரி ஏய்ப்பு போன்ற வேலைகளைச் செய்வதாக செய்திகள் அடிபடுகின்றன. மொத்தத்தில், தவறான இடத்தில் இல்லாத விஷயத்தை எதிர்பார்க்கிறீர்கள், இது உங்க தப்பு, எந்திரன் பட நடிகனோ, இயக்குனரோ, தயாரிப்பாளரோ இதில் எந்த வகையிலும் சம்பத்தப் படாதவர்கள்.
"முகிலன்" ....யு ஆர் கரெக்ட் ...
ஏதோ பதிவு போடணும்கிறதுக்காக போடுறிங்க ...
"புலிகேசி" சொல்லுற ஏழை எல்லாம் இங்க வந்து.. இவரோட பதிவை படிக்கபோறது இல்லை ...
"முகிலன்" ....யு ஆர் கரெக்ட் ...
ஏதோ பதிவு போடணும்கிறதுக்காக போடுறிங்க ...
"புலிகேசி" சொல்லுற ஏழை எல்லாம் இங்க வந்து.. இவரோட பதிவை படிக்கபோறது இல்லை ...
புலிகேசி நண்பா,
1000 ருபாய்க்கு டிகெட் வித்தாலும்,
அதை முதலில் போய் வாங்குவதற்கு என்றே ஒரு சில(பல) பைத்தியங்கள் இருக்குது.
அவங்களை திருத்தனும்னா, படைச்ச பிரம்மன் வந்தாலும் முடியாது. நீங்க என்னதான் சொன்னாலும் எதிர்மறையாகத்தான் பேசுவாங்க. நமக்கும் பகுத்தறிவு இருக்குன்னு நினைக்கிறதில்ல.
இதுல சன் பிச்சர்ஸ் ஐ பத்தி சொல்லியே ஆகனும். எரியற வீட்டுல புடுங்கறது லாபம் னு
நினைக்கறவங்க. ரசிகன் என்னும் போதையில் இருப்பவனிடம் பணம் பறிப்பவர்கள். இந்த சன் பிச்சர்ஸ்க்கு தமிழ், தமிழ் நாட்டு மேல அக்கறை இருந்தா, ஆடியோ கேசட்டை தமிழ் நாட்டுலயே ரிலீஸ் பன்னலாமே? அதை விட்டுட்டு ஏதோ ஒரு
வெளிநாட்டுக்கு போய் கேசட்டை ரிலீஸ் பண்ணிட்டு இங்க வந்துட்டாங்க.
தமிழ்நாட்டை (இந்தியாவை)மதிக்காத சன் பிச்சர்ஸ்க்கு தைரியம் இருந்தால் வெளிநாட்டில் மட்டும் ரிலீஸ் பண்ணமுடியுமா? முடியாது.
அப்படியே ரிலீஸ் செய்தாலும் தமிழ் நாட்டில் கலவரங்கள் நடக்கலாம், ரஜினி ரசிகர்கள் பாதி பேர் தற்கொலை செய்து நேரிடலாம்.
எந்திரன் படம் ரிலீஸ் ஆகும் போது கவனியுங்கள்:
ரஜினியும் சரி, ஷங்கரும் சரி, ரசிகர்களை சந்திக்க வெளிநாட்டுக்கு போயிருவாங்க. பிறகு தான் தமிழ் ரசிகர்கள். அவங்களுக்கு தமிழ் மக்களோட பணம் மட்டும் தான் வேணும். அவங்க எதிர்பார்க்கிறது அது மட்டும்தான். அது கூட புரியல ஒரு சில மக்கு பசங்களுக்கு.
ரஜினி. ரஜினியை பத்தி சொல்ல என்ன இருக்கு. அவரை ஏன் தலையில் தூக்கிவெச்சி கொண்டாடுராங்கன்னு தெரியல. அவர் ஒரு நிழல் நாயகன். நிழல் நம் கூடவே இருக்கும் ஆனால் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்ல. மீசை நரைச்சாலும் ஆசை நரைக்காதுன்னு சொல்லுவாங்க. அது ரஜினிக்கு ரொம்ப பொருந்தும். வேறு என்ன சொல்ல.
ரசிகர்களாம் ரசிகர்கள். அறிவு கெட்டவங்க. நான் எங்கோ ஒரு புத்தகத்தில் படித்தது: " நாம் ஏதோ ஒருவனுக்கு ரசிகன் என்றால் நம் சுயமரியாதையில் ஒரு குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம்". அது எல்லாம் அவங்களுக்கு புரியாது.
சினிமா ன்பது ஒரு பொழுது போக்கு சாதனம். அதை பொழுதுபோக்காக எடுத்துக்கொள்ளலாம். வீண் கொண்டாட்டங்கள், வீண் செலவுகள் தேவையில்லாதது.
500 ருபாய் "முதலீடு" போட்டு படம் பாக்க போறவனுக்கு, 3 மணி நேரத்தில 500 ரூபாயும் நஷ்டம். தேவையா? யோசிக்க வேண்டாமா?
ரசிகன் என்னும் வார்த்தையே எனக்கு கெட்ட வார்த்தையா தெரியுது
கடைசியா எல்லோருக்கும் சொல்லும்
ஒரு வாசகம். என் அப்பா அடிக்கடி சொல்வார்.
" புத்தி இருந்தா பிழைச்சிக்க "
நண்பர்களே.. என் கருத்தை இங்கே சொல்ல விழைகிறேன்.. ரஜினி எனும் மனிதர் தனிப்பட்ட முறையில் ரசிகர்களுக்கு பல நல்ல காரியங்கள் செய்துள்ளார்.. சவரக் கடையில் பணிபுரியும் அவரது ரசிகன் ஒருவர் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.. ஆனால் ரஜினி இப்போது ஒரு வட்டத்துக்குள் மாட்டி விட்டார்.. என்னவென்றால், ரஜினி என்னும் பெயரை வைத்துக் கோடிக கணக்கில் பணம் பார்க்கின்றனர்.. அப்போது ரஜினி சும்மா இருக்க முடியாது.. ஏனெனில் அந்த லாபத்திற்கு முதல் காரணம் ரஜினி தான். நீங்கள் எந்தத் தொழில் செய்தாலும் அதில் லாபம் அடைய வேண்டும் என்று தான் விரும்புவீர்கள்.. அதே தத்துவம் தான்..
திருந்த வேண்டியது நாம் தான். நாம் கொடுப்பதினால் தான் அவர்கள் வாங்குகிறார்கள்.
மற்றபடி, பல லட்சக் கணக்கான ஏழை மக்களின் வரிப் பணத்தை ஏமாற்றி, நிலங்களை அபகரித்து, பல்வேறு வகையில் லஞ்சம் பெற்று பணக்காரராக ஆகியிருக்கும் மக்கள் பல பேர் உள்ளனர். ரஜினி அப்படி இல்லை. அவர் உழைப்பினால் மக்கள் இரண்டரை மணி நேரம் சந்தோஷமாக இருக்கின்றனர் என்பதை நாம் உணர வேண்டும். இதைச் சொல்வதினால் நான் ரஜினி ரசிகன் இல்லை. ஆனால் அந்த இரண்டரை மணி நேரத்திர்காகக் காத்திருக்கும் அந்த மக்களின் சந்தோஷத்தை, களிப்பை, கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளால் தர முடியாது. ரஜினி இடத்தில் நம்மை வைத்து யோசித்தால், இன்னும் எப்படி பணம் பண்ணலாம் என்று தான் யோசிக்கத் தோன்றும்..
ரஜினி என்பவர் லாபம் சம்பாரிக்கிறார்..
காசு கொடுத்துப் படம் பார்ப்பவர்களும் அன்றைக்கு சந்தோஷமாக இருக்கின்றனர்.
அவரை ஏய்த்து பிழைப்பவர்களும் மாஸ் வளையத்துக்குள் வந்து சந்தோஷமாகவே இருக்கின்றனர்..
ஏழை நடுத்தர வர்க்க மக்களைக் குடிக்க வேண்டாம் என்று சொல்லலாமே..? அது முடியாதல்லவா.. அது போலத்தான் இதுவும் ஒரு போதை..
நாமாக திருந்தினால் தான் உண்டு..
யப்பா....
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பெரிய ஹிட் (ரஜினி படம் மாதிரியே) பதிவு போட்டாச்சு.... நிறைய கமெண்ட்ஸ் வாங்கியாச்சு....
ராம்கி சொன்ன மாதிரி, இதோட நிறுத்திடாம, இளைய தளபதி (அதாங்க உதயநிதி) கமலை வச்சு “மன்மத அம்பு”ன்னு ஒரு ”சின்ன” படம் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்ல 60 நாளா எடுக்கறாராம்...
அப்படியே அந்த சின்ன தளபதிய பத்தியும், அந்த சின்ன படத்த பத்தியும் பதிவு எழுதுனீங்கன்னா, சந்தோசம்....
இந்த வார கோட்டா முடிஞ்சுதா!!
yethuku sir unga time waste panringa..... thappu namakita eruku sir... nega venumna paruga adutha padathuku ehavida periya banner vaipom... ehavida pathu madangu athigama dhul kelapuvom illa...
Post a Comment