கடவுளை மற..மனிதனை நினை..

17 August 2010

ரஹ்மானும் காமன்வெல்த்தும் - கொடுமைடா!

2:25:00 AM Posted by புலவன் புலிகேசி , , 12 comments

"நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் காமன்வெல்த் போட்டி. எனவே அதுகுறித்து தவறான, அவதூறான செய்தியை வெளியிட்டால் அது நாட்டுக்குத்தான் அவப் பெயரைத் தேடித் தரும்."

---என்ன சொல்ல வர்ராருன்னா, யாரு கொள்ளையடிச்சாலும், எத்தனை பேரு வீடிழந்தாலும் இந்தியாவுல காமன்வெல்த்துங்கற ஏழைகள் கலந்துகிட்டு விளையாடுற போட்டி நடக்குது. அதப்பத்தி மட்டும் எழுதுங்க. அப்பதான் ஏழைங்க சந்தோசமா இருக்க முடியும்.

"எனவே மீடியாக்கள் எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவின் புகழை சீர்குலைக்கும் வகையில் காமன்வெல்த் போட்டிகள் குறித்து மீடியாக்களில் செய்தி வருவது எனக்கு வேதனை தருகிறது."

---ஏண்ணே! உண்மையை வெளியில சொன்னா புகழ் சீர்குலையுதாண்ணே! நீங்க ரொம்ப நல்லவருண்ணே. நல்லாவே சொம்படிக்கிறீங்க. பேமெண்ட் ரொம்ப ஜாஸ்தியா குடுத்துட்டாங்களோ?


"நான் லண்டனில் இருந்தபோது காமன்வெல்த் போட்டிகள் குறித்து மோசமான செய்திகள் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பாசிட்டிவான சிந்தனையுடன் இதை நாம் அணுக வேண்டும்."

---இன்னா சொல்றாருன்னா ஒரு பெரிய ஆபத்து வரும்போது அதுல உள்ள பாஸிடிவ்வை மட்டும் எடுத்துக்குங்க. அதை நெகட்டிவ்வாவோ இல்ல சரியான கோணத்துலயோ பாக்காதீங்க. இதனால எவ்வளவு ஊழல் நடந்தாலும், எத்தனை ஏழைகள் வீடிழந்தாலும் பரவாயில்லை. பணக்கார முதலாளிகள் சுகமாக வாழ வேண்டும். அதனால அந்த பாஸிடிவ்வை மட்டும் எடுத்து கிட்டு மத்தத மறந்துருங்க. வெளிய சொல்லாதீங்க. ஒரு தடவை விதர்பாவுல இருந்து யோசிச்சி பாருங்கண்ணே!

"எனவே டெல்லி காமன்வெல்த் போட்டிகள் குறித்த நல்ல விஷயங்களை செய்திளாக மீடியாக்கள் வெளியிட வேண்டும் என்றார் ரஹ்மான்."

---நல்ல விசயம்னு எதண்ணே சொல்றீங்க! பெப்ஸி, கோக் எல்லாம் ஸ்பான்சர்சா மாறி காசு பாத்து விவசாயிங்க வயத்துல அடிப்பாங்களே அந்த நல்ல விசயமா?

அல்லது

---90 ரூ மதிப்புள்ள முதலுதவிப் பெட்டியை 5000 ரூ வாடகைக்கு எடுத்ததா கணக்கு காட்டி பாவம் தன்னோட குடும்ப வயித்து பொழப்புக்காக எங்க வரிப்பணத்துல எடுத்துக்கிட்டு சந்ததிய வளக்குறாங்களே அந்த நல்ல விசயமா இருக்குமோ?

ரஹ்மானின் இசை மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதற்காக அந்தத் தனி மனிதன் சொல்வதற்கு ஆமாம் சாமி போட்டுக்கிட்டிருக்க நான் ஒன்றும் முட்டாள் ரசிகன் அல்ல. பணம் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம். நாம் சொன்னால் நம் ரசிகர்கள் கேட்பார்கள் என்ற அயோக்கியத்தனம் மட்டுமே இங்கு வெளிப்பட்டிருக்கிறது. அவரின் இந்த பேச்சுக்கு என் கண்டனங்கள்.

12 விவாதங்கள்:

அழகிய அனானி said...

ரஹ்மானையே விமர்சனம் பண்ணிடீங்களா? ரஹ்மானேயே???? ம்ம்ம்ம ஒரு சனியன் சடை பின்னி, ஸ்டெத்தாஸ்கோப்பு மாட்டிகிட்டு வரும்.. அப்ப தெரியும் சேதி.. கிக்கிக்கிக்கிக்கி

முகிலன் said...

நானும் என் கண்டனங்களை இங்கே பதிந்து கொள்கிறேன்.

அழகிய அனானி said...

Oscar winner A R Rahman, who has composed the theme song of the Commonwealth Games, said today (August 16) that he was pained by the negative publicity for the mega sporting event.

Appealing to the media to present a positive image of the Games, Rahman said: "It is my humble request to you (media) to present a positive image of the Games to the international community."

"Hundreds of people are working day and night for making the Games successful. People across the world are asking if India will be able to hold them successfully… so kindly bring a positive image to the Games," the music maestro told reporters during a function in New Delhi.

Commonwealth Games Organising Committee chief Suresh Kalmadi quoted Prime Minister Manmohan Singh's Independence Day address in which he said the Oct 3-14 Games would be a "national festival".

"With 30 days to go for the opening of the Games village, we are confident of a great Games," Kalmadi said.

With the delay in preparations and corruption allegations in the biggest sporting event being organised in India since the 1982 Asiad Games, Manmohan Singh issued clear instructions that the facilities for the Games be made ready in time and meet international standards.

--

நீங்கள் எழுதியது வரிகள் ஆங்கில ஊடகங்களில் இல்லையை

புலவன் புலிகேசி said...

//It is my humble request to you (media) to present a positive image of the Games to the international community."
//

ஆமாம் இதுக்கு என்ன அர்த்தமாம்???? (அ) தமிழாக்கம்????

http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=14&Value2=6812&value3=I

http://thatstamil.oneindia.in/news/2010/08/16/commonwealth-games-media-news-rahman.html

இது ரெண்டும் தமிழில்....

கோவி.கண்ணன் said...

//ரஹ்மானின் இசை மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதற்காக அந்தத் தனி மனிதன் சொல்வதற்கு ஆமாம் சாமி போட்டுக்கிட்டிருக்க நான் ஒன்றும் முட்டாள் ரசிகன் அல்ல. பணம் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம். நாம் சொன்னால் நம் ரசிகர்கள் கேட்பார்கள் என்ற அயோக்கியத்தனம் மட்டுமே இங்கு வெளிப்பட்டிருக்கிறது. அவரின் இந்த பேச்சுக்கு என் கண்டனங்கள்./

நானும்.

Rajesh Krishnamoorthy said...

குடுத்த காசுக்கு மேலையே கூவுராருடா இவரு....

தேனம்மை லெக்ஷ்மணன் said...

உண்மையான ஆதங்கம் புலவரே

வெறும்பய said...

நானும் என் கண்டனங்களை இங்கே பதிந்து கொள்கிறேன்.

hamaragana said...

அன்புடன் வணக்கம்: ரகுமான் கூறியதற்காக சரி என்று எடுத்து கொள்வதா ?? அப்போ சுயமா சிந்திக்க தெரியாதா என்ன ??ரகுமான் தன்மையனவர்தான் நல்லவர்தான் ,ஆஸ்கார் அவார்ட் வாங்கியவர்தான் ""தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக்கொள்ள முடிமா""" நானும் என கண்டனத்தை பதிவு செய்கிறேன்...

Jayaseelan said...

நல்லா சொன்னிங்க நண்பா... நானும் கண்டிக்கிறேன்...

சே.குமார் said...

ரஹ்மான் காமன்வெல்த் போட்டிக்கான பாடலை பாட இருக்கிறார். அதனால் அவர் சொம்பு தூக்குவது தப்பில்லை. இந்தியாவின் மானத்தை வெளி நாட்டில் ஏலம் விடாமல் இருக்க பத்திரிக்கை தர்மம் காக்க வேண்டும் என்று சொல்லும் அவர் அந்த சுரேஷ் களவாணி... ஐயோ கை சிலிப்பாயிடுச்சு... கிட்ட போயி நீ செஞ்சது நாட்டுக்கு தலை குனிவை மட்டுமல்ல உலக அரங்கில் கேவலத்தை வாங்கித்தந்து விட்டது என்று சொல்ல முடியுமா?

விடுங்க புலவன்... பணம் பத்தல்ல... நூறும் செய்யும்.

துளசி கோபால் said...

நானும் என் கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்:(