காதல் திருமணம் தான். ஆனால், இரு வீட்டார் சம்மதத்துடன்.
இவர்கள் திருமணத்துக்கும், ஏன் காதலுக்கும் கூட அனுமார் போல் ஒரு நண்பன்தான் காரணம். அவன்தான் பரத்.
மூவரும் கல்லூரி நண்பர்கள். பரத்தும் சீதாவும் நல்ல நண்பர்கள். இருவரும் நண்பர்கள் என்பதை விட அண்ணன் - தங்கை போல. அதனால் தான் பரத்தின் உதவியுடன் அவளை காதலித்துத் திருமணம் செய்ய முடிந்தது.
தன் சொந்தத் தங்கையின் திருமணம் போல் முன்னின்று திருமணத்தை நடத்தி விட்டு ஊர்த் திரும்பினான்.
முதலிரவு அறையில் ராமுவும் சீதாவும்.
"பரத் மாதிரி ஒரு நண்பன் கிடைக்க நாம கொடுத்து வச்சிருக்கனும் இல்ல," என்றான் ராமு.
"ம்.. என் கூடப் பொறந்தவன் கூட இந்த அளவுக்கு என் திருமணத்துக்காகக் கஷ்டப்பட்டிருக்க மாட்டான்," என்றாள் சீதா.
"நான் ஒன்னு சொன்னா தப்பா நெனைக்க மாட்டியே?" என்றான் தயக்கத்துடன்.
"ம்.. சொல்லு" என்றாள்.
"எங்க அப்பா அம்மா சொந்தக் காரங்களுக்குலாம் நீயும் பரத்தும் பழகுறது புடிக்கல. அதனால..." என இழுத்தான்.
'ராமாயண காலம் முதல் இன்று வரை ராமன் திருந்தவே இல்லை,' என மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் சட்டென ராமுவிடம், "நேத்தே பரத் எங்கிட்ட இனிமே நாம பேசவோ சந்திக்கவோ வேணாம்-னு சொல்லிட்டுதான் ஊருக்குப் போனார்," என்றாள்!
இந்த சிறுகதை இளமை விகடனில் வெளிவந்துள்ளது.
உங்கள் வாக்குகளை தமிழ்மணத்திலும் தமிழிஸிலும் மறக்காமப் போடுங்க
உங்கள் வாக்குகளை தமிழ்மணத்திலும் தமிழிஸிலும் மறக்காமப் போடுங்க
30 விவாதங்கள்:
நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்
விஜய்
நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்
விஜய்
வாழ்த்துக்கள்........
அற்புதமான கதை நண்பா ....நான் விகடனிலேயே படித்து விட்டேன் வாழ்த்துக்கள்
உண்மைதான் புலிகேசி
இன்னும் ராமன் பெயரில்
நடப்பதெல்லாம் பற்றிக்கொண்டு
வருகிறது.
இந்த நிலை கிராமப்புறங்கள்ல இன்னும் அதிகமாக இருக்கிறது. நகரத்தில் இந்நிலை மாறிவருகிறது.
நல்ல கதை....இளமை விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்....நண்பா....
வாழ்த்துக்கள் நண்பரே...
விகடனிலேயே படித்தேன். நன்றாய் இருக்கிறது. யதார்த்தமாய் இருக்கிறது. வாழ்த்துக்கள், நிறைய எழுதுங்கள்...
பிரபாகர்.
கலக்குங்கள் புலிகேசி...
கடுகு சிறுத்தாலும்.... அருமை புலிகேசி.
அருமை நண்பா ....
ராமாயண காலம் முதல் இன்று வரை ராமன் திருந்தவே இல்லை,' என மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் சட்டென ராமுவிடம், "நேத்தே பரத் எங்கிட்ட இனிமே நாம பேசவோ சந்திக்கவோ வேணாம்-னு சொல்லிட்டுதான் ஊருக்குப் போனார்," என்றாள்!//
கதை அருமை நண்பரே..
நறுக்கென்று இருந்தது
வாழ்த்துகள் புலவரே....! மறக்காமல் உமது பொற்க்கிழியை பெற்றுக்கொள்ளும். :-)
நல்ல கதை....இளமை விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்
இளமை விகடனில் வெளியீடு!
அதுவே தரத்தின் குறியீடு!
வாழ்த்துக்கள்!
-கேயார்
ரெண்டு விஷமத்தனங்கள் கதையில்...
ராமு, சீதா, பரத் என ராமாயண கதாபாத்திரங்களின் பெயர்களையே வைத்தது...
//ராமாயண காலம் முதல் இன்று வரை ராமன் திருந்தவே இல்லை//
ராமாயணத்தை முழுவதுமாய்ப் படித்தவர்கள் நிச்சயம் இதை ஏற்க மாட்டார்கள்.
-பருப்பு ஆசிரியர்
இளமை விகடனில் வந்துள்ளதா
பொற்கிழி கிடைத்ததா புலவரே
வாழ்த்துக்கள்
அசத்துறீங்க
ரொம்ப நாளாக உங்களுக்கு என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை புலவரே.திறக்க காணோம்.ஆச்சர்யம்.இன்று திறக்க வாய்த்தது.அந்தந்த தருணத்தின் சந்தோசம்,எதையும் பகிர முடியலை மக்கா.மேலும்,எனக்கு கணினி அறிவு சொற்பமே.அறவே இல்லை எனலாம்.இப்பதான் வாய்த்திருக்கிறது.
ஏற்கனவே வாசித்து பிரமித்ததுபோல்,இப்பவும் பிரமிக்கிறேன்.இளமை விகடனுக்கு வாழ்த்துக்கள்.
உண்மை
short and sharp!
congrats!
ஏன் இந்த மனித இனம் இன்னும் இப்படி?
ரொம்ப நல்லாருக்குங்க. எல்லாரும் பக்கம் பக்கமா எழுதும் போது ஒரே பக்கத்துல 'நச்'ன்னு சொல்லிட்டீங்க. வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்..! தலைப்பு நல்லா இருக்கு..!
தாமதத்திற்கு மன்னிக்கவும் புலவரே...
மீண்டும் எனது வாழ்த்துக்கள்.
தொடருங்கள்
நல்ல பதிவு.வாழ்த்துகள்.
கதை வெகு அருமை புலவா...
நன்றாக எழுதி இருக்கிங்க.. தொடர்ந்தும் எழுதுங்கள்.
வாழ்த்துகள் புலவரே.குட்டியாய்ச் சொல்லி தலையில் ஒரு குட்டுக் கொடுத்திருக்கிறீர்கள்.அசத்தல்.
நல்ல கதை, வாழ்த்துகள்!
Post a Comment