உலகின் பழமையான மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று என்பதில் நம் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு ஆங்கிலம் அல்லது சமசுகிருதம் கலக்காமல் நல்ல தமிழ் பேச அல்லது எழுதத் தெரியும்?
எவனோ ஒரு மடந்தை சொன்னதாக பாரதி சொன்னது போல் "தமிழ் இனி மெல்லச் சாகும்" என்ற சொல் பலித்து விட்டது. இன்றைய நிலையில் தமிழ் விபத்துக்குள்ளாகி உயிருக்குப் போரடுபவன் போல "அவசர சிகிச்சைப் பிரிவில்" சேர்க்கப்பட்டுப் பல வருடமாகிறது. இன்னும் சுயநினைவில்லாமல் தான் கிடக்கிறது.
இக்காலக் குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் தமிழின் மிக அழகான, ஒவ்வொரு தமிழரின் முதல் வார்த்தையான "அம்மா" என்ற சொல்லை உச்சரிக்கின்றன. இப்போதெல்லாம் "மம்மி" தான்.
5 வயதில் பாலர் பள்ளி சென்று சத்துமாவு உருண்டை, முட்டை எனச் சத்தான உணவுண்டு தமிழில் கற்று, பலருடன் சாதி, மதம், பணக்காரன், ஏழை என வித்தியாசமில்லாமல் கூடிவிளையாடும் போது கிடைக்கும் ஆரோக்கியமும், ஒற்றுமையும் 3 வயதில் முன்கல்வி (PreKG) கற்கும் குழந்தைகளிடம் இல்லை.
தமிழ் மொழியை அழிப்பதில் ஊடகங்களில் முதன்மையான தொலைக்காட்சிக்கு முகான்மையானப் பங்கு இருக்கிறது. தொலைபேசியில் உரையாடும் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள் பேசுவதெல்லாம் தமிழ் தானா? அவர்களில் பலருக்கு "ழ" என்னும் எழுத்தை உச்சரிக்கத் தெரியவில்லை. அவர்கள் நிகழ்ச்சியின் போது பெரும்பாலும் உபயோகிக்கும் வார்த்தைகளில் சில கீழே...
"ஹலோ"
"வெல்கம் பேக் டூ ஆப்டர் எ பிரேக்"
"ஒரு சின்ன கமர்சியல் பிரேக்", "ஐ வில் கேட்ச் யூ அதர் எந்த் ஆப் த பிரேக்"
"அன் டில் தென் பை பை ப்ரம்"
"உங்க டி.வி வால்யூம் கம்மிப் பண்ணுங்க"
"எங்கிருந்து கால் பண்றீங்க"
"நீங்க யார லவ் பண்றீங்க"
"நம்ம ரெகுலர் காலர்"
இதே வாக்கியங்களைத் தமிழில் உச்சரிக்கும் போது எவ்வளவு அழகு என்பதைப் பாருங்கள்..
"வணக்கம்"
"ஒரு விளம்பர இடைவேளை முடிந்து மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி"
"சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்"
"மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது"
"உங்கள் தொலைக்காட்சியின் ஒலியைக் குறைத்து விட்டுப் பேசுங்கள்"
"எங்கிருந்து அழைக்கிறீர்கள்"
"நீங்கள் யாரைக் காதலிக்கிறீர்கள்"
"நமது தொடர் அழைப்பாளர்"
பி.கு: என்னடா இவன் "தமிழ் பிறந்திருக்கிறது" என்று தலைப்பு வைத்து விட்டு அழிவைப் பற்றி எழுதுறானேன்னு குழப்பம் வேண்டாம். அடுத்த தொடரில் இது பற்றி பார்க்கலாம். இந்தப் பதிவில் நானே எத்தனை இடங்களில் தமிழ்க் கொலை செய்திருக்கிறேன் எனத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

37 விவாதங்கள்:
நம்மால் ஆங்கிலம் கலக்காமல் பேச முடியாது ஒரு வரி கூட,என்பதே உண்மை நண்பா....
சரியாய் சொன்னாய்
//நானே எத்தனை இடங்களில் தமிழ்க் கொலை செய்திருக்கிறேன் எனத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.//
பிழைகளைச் சொல்லும் எண்ணம் இல்லை; ஆனால் கட்டுரையின் முடிவில் நீங்களே கேட்டுக்கொண்டதனால் சில ஒற்றுப் பிழைகளை மட்டும் சொல்கிறேன்.
எத்தனைப் பேருக்கு - எத்தனை பேருக்கு
நல்லத் தமிழ் - நல்ல தமிழ்
சேர்க்கப்பட்டு பல - சேர்க்கப்பட்டுப் பல
எத்தனைக் குழந்தைகள் - எத்தனை குழந்தைகள்
என சத்தான - எனச் சத்தான
முதன்மையானத் தொலைக்காட்சிக்கு - முதன்மையான தொலைக்காட்சிக்கு
உங்களை சந்திப்பதில் - உங்களைச் சந்திப்பதில்
உங்கள்த் தொலைக்காட்சியின் - உங்கள் தொலைக்காட்சியின்
அடுத்தத் தொடரில் - அடுத்த தொடரில்
கட்டுரை நன்று; வாழ்த்துகள்.
நல்ல சிந்தனை நண்பரே...
ஓலைச்சுவடிகள் கட்டுரையின் கருத்துக்கு வலுவாக உள்ளது..
நன்றி Blogger வெண்ணிற இரவுகள், அ. நம்பி
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. அனைத்தையும் திருத்தி விட்டேன்
முக்கியப் பங்கு.../
முக்கியம் என்பதே வடமொழிச்சொல் தான் நண்பரே..
இணையான சொல் - முகான்மையான, முதன்மையான, தனித்துவமான போன்ற தமிழ்ச்சொற்களைக் குறிப்பிடலாம்..
தமிழ்சார்ந்த உங்களின் கட்டுறையை பாராட்டுகிறேன். ஊடகங்கள் தவிர்த்து நமது பேச்சு வழக்கிலேயே பல ஆங்கில வார்த்தைகள் அகப்பட்டு கிடக்கின்றன. அதையும் நாம் திருத்திக்கொள்ளவேண்டும்.
நல்ல சிந்தனைக் கட்டுறை. வாழ்த்துக்கள் நண்பா....
நன்றி பாலாசி, குணசீலன்.
//முக்கியம் என்பதே வடமொழிச்சொல் தான் நண்பரே..
இணையான சொல் - முகான்மையான, முதன்மையான, தனித்துவமான போன்ற தமிழ்ச்சொற்களைக் குறிப்பிடலாம்..//
மாற்றியமைத்து விட்டேன். நன்றி...
கலி காலம் சாமி.... என்ன பண்ணுறது...,
எல்லா ஊடகமும் முக்கியத்துவம் கொடுத்தா தானே முடியும்..,
தமிழ் நாளிதழ்களில் கூட..சண்டே போனஸ், யூத்புல்... , ....ரிப்போர்டர்... ன்னு தானே விக்கிறாங்க....
//சரி கூகிள் சார் கிட்ட தமிழ்ல கேட்டா எத டைப் பண்ணாலும் பலான பலானதா வருது....
எல்லா தப்பையும் செஞ்சுபுட்டு வளரலென்ன எப்படி சாமி வளரும்...//
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
காத்திருக்கிறோம் உன் பாதைக்கு படிகட்டாக..
நண்பா தவறாக என்ன வேண்டாம்..
தவறெனில் மன்னிக்கவும்..
நல்ல சிந்தனை. முழுதாக முடியாவிட்டாலும் முடிந்த வரை முயற்சி செய்தல் நல்லது தானே. வாழ்த்துகள்.
//"பாதையை தேடாதே.. உருவாக்கு"
காத்திருக்கிறோம் உன் பாதைக்கு படிகட்டாக..//
நிச்சயம்...
//நண்பா தவறாக என்ன வேண்டாம்..
தவறெனில் மன்னிக்கவும்..//
இதில் தவறாக நினைக்க ஒன்றுமில்லை. நானும் தமிழ் கற்க வெண்டியிருக்கிறது. உண்மையில் சொன்னால் நன்றிகள்.எனது பதிவுகளிலுன் தமிழல்லாத வார்த்தைகள் இடம் பெற்றுதான் இருக்கின்றன. மாற்றி கொள்ள முயற்சிக்கிறேன்.
//நல்ல சிந்தனை. முழுதாக முடியாவிட்டாலும் முடிந்த வரை முயற்சி செய்தல் நல்லது தானே. வாழ்த்துகள்.//
உண்மை ஐயா..அந்த முயற்சி மேலும் தமிழ் அழியாமல் காக்க உதவும்.
தமிழ்ச்சொற்களாக மாற்றியமைத்தமைக்கு மகிழ்ச்சி நண்பரே
//"வணக்கம்"
"ஒரு விளம்பர இடைவேளை முடிந்து மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி"
"சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்"
"மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது"
"உங்கள் தொலைக்காட்சியின் ஒலியைக் குறைத்து விட்டுப் பேசுங்கள்"
"எங்கிருந்து அழைக்கிறீர்கள்"
"நீங்கள் யாரைக் காதலிக்கிறீர்கள்"
"நமது தொடர் அழைப்பாளர்"//
அருமை!
உண்மைதான்... ஆங்கில அல்லது வடமொழிக் கலப்பற்றுப் பேச முடியவில்லை.! ஆனால் தொலைக்காட்சியில்... ஆங்கிலத்தில் சில தமிழ்ச் சொற்களைக் கலக்கிறார்கள்.. =)).. மிகவும் எரிச்சலூட்டும் விடயம் இது..!
அருமையான பதிவு நண்பரே!
மேலும் நல்ல சிந்தனைகளை சொல்லி இருக்கிறீர்கள்.
தொடர்ந்து வரட்டும் !!
நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்
நல்ல பதிவு நானும் எழுதணும்மனு இருந்தேன்....
நல்ல சிந்தனை
பயனுள்ள இடுகை.......
அருமையாக விவரித்துள்ளீர்கள்........... மொழியை பற்றி என்னுடைய தளத்திலும் சில பதிவுகளை எழுதியுள்ளேன், பாருங்கள்,
இந்திய மொழிகள் அழிவை நோக்கி....!
ஆங்கிலம் - இந்தியாவில் ஊடுருவல்.....!
புலவரே அசத்துங்க.நான் எதிர்பார்த்தது உங்ககிட்ட இருந்து.ஆங்கிலம் கலக்காமல் தமிழ் கதைச்சால் நாகரீகம் இல்லையாம் !
ஆங்கிலம் கலக்காமல் பேசவேண்டும் என்று நினைத்தால் தேவை சிறிது முயற்சி மட்டுமே.நல்ல பதிவு .
உண்மைதான் புலிகேசி
ஆங்கிலம் கலக்காமல் கவிதை எழுத வரவில்லை
வந்து திட்டி விட்டுப் போங்கள்
இள வயதுதான் நீங்கள்.உங்கள் பதிவுகள் பெரும்பாலும் சமூக அக்கறையுடனே இருப்பது மகிழ்ச்சியான விசயம்.தொடருங்கள்.
எல்லா மொழிச் சொற்களையும் ஏற்றுக்கொள்ளும் மொழியே நல்ல மொழி!
தமிழிலும் பேசலாம் என்பதுதான் என்னுடைய கருத்து!
தமிழில்தான் பேசவேண்டும் தமிழ் வார்த்தைகளை உபயோகித்து, என்பதில் எனக்கு உடன்பாடில்லை!
-கேயார்
'உங்கள் டிவி வால்யூமை கம்மி பண்ணுங்க' என்பதில் இருக்கும் நெருக்கம் 'உங்கள் தொலைக்காட்சி ஒலியைக் குறைத்து விட்டு பேசுங்கள்' என்பதில் நிச்சயம் இல்லை நண்பா!
நீங்கள் 'தென்கச்சி சுவாமிநாதன்' பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா? வழக்குத் தமிழில் விளையாடுபவர் அவர். அதில் கூட தேவையான மொழியைக் கலப்பதில் கெட்டிக்காரர்!
உணர்ச்சிகளை ஒதுக்கிவிட்டு உண்மையைப் பாருங்கள், மொழி தானாக வளர்ந்துவிடும்!
-பருப்பு ஆசிரியர்
இந்த வயதில் எனது தம்பியின் பொறுப்பை எண்ணி வியக்கிறேன். நானும் நிறைய திருந்த வேண்டி உள்ளது. அடிப்படை தமிழ் இலக்கணம் கற்க வேண்டும்.
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
விஜய்
//கலகலப்ரியா said... ஆனால் தொலைக்காட்சியில்... ஆங்கிலத்தில் சில தமிழ்ச் சொற்களைக் கலக்கிறார்கள்.. =)).. மிகவும் எரிச்சலூட்டும் விடயம் இது..!//
உண்மைதான் ப்ரியா...இவர்கள் எல்லாம் தாய் மீது பற்றில்லாதவர்கள்
நன்றி கேசவன் .கு ,ஈரோடு கதிர்,பாலவாசகன்,ஸ்ரீராம்,ஊடகன்
//ஹேமா said...
புலவரே அசத்துங்க.நான் எதிர்பார்த்தது உங்ககிட்ட இருந்து.ஆங்கிலம் கலக்காமல் தமிழ் கதைச்சால் நாகரீகம் இல்லையாம் !//
நன்றி ஹேமா..தமிழுக்கு மட்டும்தான் இத்தகைய நிலை..
நன்றி Mrs.Menagasathia ,
//ஸ்ரீ said...
ஆங்கிலம் கலக்காமல் பேசவேண்டும் என்று நினைத்தால் தேவை சிறிது முயற்சி மட்டுமே.நல்ல பதிவு .
//
உண்மையான விடயம்..முயற்சிப்போம்.
//thenammailakshmanan said...
உண்மைதான் புலிகேசி
ஆங்கிலம் கலக்காமல் கவிதை எழுத வரவில்லை
வந்து திட்டி விட்டுப் போங்கள்
//
இதில் திட்டுவதற்கு ஒன்றுமில்லை..திருத்திக் கொள்ள முயற்சிப்போம்.. நன்றி..
//velji said...
இள வயதுதான் நீங்கள்.உங்கள் பதிவுகள் பெரும்பாலும் சமூக அக்கறையுடனே இருப்பது மகிழ்ச்சியான விசயம்.தொடருங்கள்.
//
சமூகத்தின் மீதுள்ள கோபம்..மிக்க நன்றி வேல்ஜி.
//இன்றைய கவிதை said...
எல்லா மொழிச் சொற்களையும் ஏற்றுக்கொள்ளும் மொழியே நல்ல மொழி!
தமிழிலும் பேசலாம் என்பதுதான் என்னுடைய கருத்து!
தமிழில்தான் பேசவேண்டும் தமிழ் வார்த்தைகளை உபயோகித்து, என்பதில் எனக்கு உடன்பாடில்லை!//
நண்பரே நான் மற்ற மொழிகளை எதிர்க்க வில்லை. மற்ற மொழிகளை சரளமாகப் பேச வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வம் தமிழனுக்குத் தமிழில் இருப்பதில்லை என்றுதான் சொல்கிறேன்...
//(Mis)Chief Editor said... உங்கள் டிவி வால்யூமை கம்மி பண்ணுங்க' என்பதில் இருக்கும் நெருக்கம் 'உங்கள் தொலைக்காட்சி ஒலியைக் குறைத்து விட்டு பேசுங்கள்' என்பதில் நிச்சயம் இல்லை நண்பா!//
அப்படிப் பட்ட நெருக்கத்திற்கு தள்ளப் பட்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. கொஞ்சம் பேசித்தான் பாருங்களேன். தமிழின் நெருக்கம் புரியும்..
//உணர்ச்சிகளை ஒதுக்கிவிட்டு உண்மையைப் பாருங்கள், மொழி தானாக வளர்ந்துவிடும்!//
மொழி வளரும் தமிழ் வளராது...
//நீங்கள் 'தென்கச்சி சுவாமிநாதன்' பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா? வழக்குத் தமிழில் விளையாடுபவர் அவர். அதில் கூட தேவையான மொழியைக் கலப்பதில் கெட்டிக்காரர்!//
கேட்டிருக்கிறேன்..அவர் தேவையான இடங்களில் மட்டுமே உபயோகிப்பவர்..
//கவிதை(கள்) said...
இந்த வயதில் எனது தம்பியின் பொறுப்பை எண்ணி வியக்கிறேன். நானும் நிறைய திருந்த வேண்டி உள்ளது. அடிப்படை தமிழ் இலக்கணம் கற்க வேண்டும்.
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
விஜய்
//
நன்றி அண்ணா..நானும் கற்க வேண்டியுள்ளது. எனது கல்லூரி நாளில் வாங்கிய "இலக்கிய வரலாறு" புத்தகத்தை பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். கற்க வேண்டும்.
முனைவர்.இரா.குணசீலன் கூறியது போல உள்ள வடமொழி சொற்களை பலரால் பிரித்தறிய முடியவில்லை என்பது வருத்தம் தான். அது போன்ற சொற்கள் தமிழை தனி பாடமாக படித்தவர்கள் மட்டுமே அறிவர்.
குறைந்தபட்சம் நம் கண்முன் தெரியும் ஆங்கிலக் கலப்பை தவிர்க்கலாம்.
நல்ல பதிவு நண்பா....கலக்குங்க...(யாருக்குத் தெரியும் இந்த கலக்குங்க கூட வேற்று மொழிச் சொல்லாக இருக்கலாம் :-)) )
நன்றி ரோஸ்விக்..
நல்ல பதிவு. அடுத்த பகுதியையும் படித்து விட்டு வருகிறேன்.
Post a Comment