கடவுளை மற..மனிதனை நினை..

20 November 2010

இசுலாமியமும் பெண்ணடிமையும்

7:25:00 AM Posted by புலவன் புலிகேசி , , 30 comments

பெண்ணை அடிமையாக வைத்திருக்கும் பழக்கம் எல்லா மதங்களிலும் இருக்கின்றன. ஆனால் இசுலாமியம் அதில் சற்று விஞ்சி நிற்கிறதோ எனத் தோன்றுகிறது. சமீபத்தில் நான் சந்தித்த இரண்டு நிகழ்வுகளை இதற்கு உதாரணமாகத் தருகிறேன்.

நிகழ்வு-1

சென்ற மாதம் எனக்கு நெருங்கிய இசுலமிய நண்பனுக்குத் திருமணம் நடைபெற்றது. அவன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவன். எங்களால் திருமணத்திற்கு செல்ல இயலவில்லை. அதன் பின் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆண், பெண் நண்பர்கள் அனைவரும் புறப்பட்டு சென்றோம்.

அது ஆந்திராவில் உள்ள கத்வால் என்ற இடம். அதிகாலை 4 மணிக்கு இரயில் கத்வாலை சென்றடைந்தது. எங்களை அழைத்து செல்வதற்காக மாப்பிள்ளையின் இரண்டு தம்பிகள் வந்திருந்தனர். ஆண்கள் அனைவரும் அருகிலுள்ள ஒரு லாட்ஜில் தங்க வைக்கப் பட்டோம். பெண்கள் மாப்பிள்ளையின் இல்லத்திலேயேத் தங்க வைக்கப் பட்டனர்.

அவர்கள் வீட்டில் தங்க வைக்கப் பட்ட அனைத்துப் பெண்களுக்கும் சில விதிமுறைகள் வகுக்கப் பட்டன. யாரும் இங்கிருந்து செல்லும் வரை வெளியில் செல்ல அனுமதி இல்லை. அதோடு இல்லாமல் அவர்கள் வீட்டுப் பெண்கள் யாரையும் ஆண்கள் இருக்கும் இடங்களுக்குள் செல்ல அனுமதிப்பதில்லை. அதே போல் இந்தப் பெண்களும் நடத்தப் பட்டனர். அவர்கள் சகஜமாக வெளியில் செல்ல அனுமதி இல்லை.

வீட்டிற்குள்ளேயே முடக்கி வைக்கப் பட்டனர். நண்பர்கள் நாங்கள் மதிய உணவுக்கு மாப்பிள்ளை வீட்டிற்கு அழைக்கப் பட்டோம். அப்போது கூட எங்கள் தோழிகள் எங்களை சந்திக்க அனுமதிக்கப் படவில்லை. எல்லாம் முடிந்து மாலை மாப்பிள்ளை அழைப்புக்கு நாங்கள் லாட்ஜில் இருந்து புறப்பட்டு சென்றோம்.

அங்கு சென்றால் இசுலாமிய திருமணங்களில் நடப்பது போலவே நடுவில் திரை வைத்து மணப்பெண் மற்றும் பெண்கள் ஒரு புறமும், மாப்பிள்ளை மற்றும் ஆண்கள் இன்னொரு புறமும் அமர வைக்கப் பட்டனர். மேலும் பெண்கள் உள் செல்ல தனி வழி அமைக்கப் பட்டது. ஆண்கள் அனைவரும் சகஜமாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தனர். ஆனால் பெண்களுக்கு 144 போடப் பட்டது.

இருக்கும் இடத்தை விட்டு வெளியில் வரக் கூடாது. எந்த ஆணுடனும் நின்று பேசக் கூடாது. இது அவர்கள் வீட்டு பெண்களுக்கு மட்டுமல்ல வரவேற்பிற்கு வந்திருந்த மற்ற மதத்துப் பெண்களுக்கும் சேர்த்து விதிக்கப் பட்ட சட்டம். வரவேற்பிற்கு சென்ற ஆண் நண்பர்கள் யாரும் திருமணப் பெண்ணை இறுதி வரைப் பார்க்க வில்லை.

அங்கிருந்த இரண்டு நாட்களும் எங்கள் தோழிகள் வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டனர் என்று கூட சொல்லலாம். வெளியிலிருந்து வந்த இசுலாமியர் அல்லாதப் பெண்களுக்கே இந்த கதி என்றால் அவர்கள் வீட்டுப் பெண்களின் நிலை என்னவாக இருக்கும்?

நிகழ்வு-2

கடந்த புதன் கிழமை நட்பு ஒருவரின் திருமணத்திற்காக ஈரோடு செல்ல காலை 6:15 கோவை விரைவு இரயிலில் புறப்பட்டேன். எனது இருக்கையைத் தேடிப் பிடித்து அமர்ந்தேன். எனக்கு அருகில் ஒரு பெண் வந்து அமர்ந்தார். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம்.

அவர் பெயரை வைத்து அவர் ஒரு இசுலாமியப் பெண் என்பதைப் புரிந்து கொண்டேன். மேலும் அவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி என்பதையும் அறிந்து கொண்டேன். அதன் பின் அவர் என்னிடமும் அருகிலுள்ள இருக்கைகளில் உள்ளவர்களுடனும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார்.

பல விடயங்களை சகஜமாக சிரித்து பேசி வந்து கொண்டிருந்தார். அவர் சேலத்தை சேர்ந்தவர். சேலம் இரயில் நிலையம் வந்த போது எங்களிடம் விடை பெற்று கீழிறங்கினார். இரயில் சற்று நேரம் அங்கே நின்றது. சன்னல் வழியே பார்த்த போது அந்தப் பெண் இசுலாமியப் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து கொண்டிருந்தார். பின்னர் கண் மட்டும் தெரியுமாறு அதனை அணிந்து வந்து கண்களால் சிரித்து "பை" என்றார். எனக்குப் பாவமாகத் தோன்றியது.

இசுலாமியப் பெண்கள் பயத்தின் காரணமாகவே அந்த அங்கியை அணிகிறார்களோ? என்ற கேள்வி எழுந்தது. அந்தப் பெண்ணின் சந்தோசப் பேச்சுகள், அரட்டைகள், சிரிப்புகள் எல்லாம் இரயிலோடு முடிந்தது.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சொல்லப் பட்ட கோட்பாடுகள் இசுலாமிய குரானில் இருக்கின்றனவா? எனத் தெரியவில்லை. அப்படி இருந்தால் இசுலாம் ஒரு பெண்ணடிமை மதமே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி இல்லை என்றாலும் அந்த மதத்து ஆண்களால் பெண்கள் அடிமைகளாக பாவிக்கப் படுகின்றனர் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


30 விவாதங்கள்:

இளமுருகன் said...

இங்குள்ள நைஜீரியா நண்பரிடம் கேட்டேன்.அவரும் இஸ்லாம் பெண்களிடம் சற்று கூடுதலான கட்டுபாடுகளை விதித்துள்ளதை ஒப்புக்கொண்டார் .
இளமுருகன்
நைஜீரியா

THATHACHARI said...

PART 1

1950/03/30
இந்து மதத்தில் (ஆரிய மதத்தில்) பெண்கள் நிலை! பெரியார் களஞ்சியம் - தொகுதி : 6
பெண்ணுரிமை

புரபசர் இந்திரா எம்.ஏ., (சாஸ்திரகாவ்ய திரு.வித்யாலங்கார் எம்.ஒ.எல்., முதலிய பட்டம் பெற்றவர்) எழுதிய பழைய இந்தியாவில் பெண்கள் நிலை என்னும் புத்தகத்தில் 11-ஆம் பக்கம் முதல் 26-ஆம் பக்கத்திற்குள் உள்ளவற்றிலிருந்து எடுத்துப் பிரசுரிக்கப்பட்டதாகும். அதாவது அவர்கள் பெண்களைப் பற்றி இந்து மத ஆதாரங்களான வேத சாஸ்திரங்கள், புராண இதிகாசங்கள் ஆகியவைகளிலும், பண்டைய அரசு நீதியிலும் காணப்படுவதைத் தொகுத்துக் குறிப்பிட்டிருப்பதாவது:

1- 'பெண்கள் நிலையற்ற புத்தி படைத்தவர்கள். அவர்கள் நம்பத்தகாதவர்கள்.'(ஊர்வசி புரூரவ முனிவருக்குச் சொன்னது - ரிக்வேதம் - 8-3-17)

2- பெண்கள் நட்பு நீடித்ததல்ல; அவர்கள் கழுதைப்புலியின் தன்மையுடையவர்கள்.(ஊர்வசி புரூரவ முனிவருக்குச் சொன்னது. ரிக்வேதம் - 10-95-10)

3- இந்திரன், நாம் விரும்பும் மனைவிகளைக் கொடுப்பவன்.

(இந்திரன் ரிஷிகள் பிராத்திப்பது. ரிக்வேதம் - 4-17-18)

4- இந்திரா! உன்னை விட மேலானவன் வேறு யாருமில்லை. ஏனெனில், மனைவியில்லாதவருக்கு மனைவிகளை- காதல் கிழத்திகளைத் தருகிறாய்.(ரிக்வேதம் - 5-31-3)

5- வேதகாலத்தில் போரிலே வெற்றி பெற்றவர்களுக்கு அளிக்கும் பரிசுப் பொருள்களில் ஒன்றாகப் பெண்கள் கருதப்பட்டு வந்திருக்கிறார்கள்.

6- வெற்றிக்குப் பிறகு வெற்றியாளர்களால் பெண்கள் கணவரிடமிருந்து பலாத்காரமாகப் பிரிக்கப்பட்டுக் கொள்ளைப் பொருள்களைப் போல் பங்கு போடப்படுவார்கள்.

இந்து மதத்தில் (ஆரிய மதத்தில்) பெண்கள் நிலை – 149.

(பேராசியர் லட்விக் கூறுகிறார். இவைகளுக்கு வேதங்களில் ஆதாரம் இருக்கிறது என்று)

7- ஸ்திரீகள் அலங்காரம் செய்யப்பட்டு வெற்றி வீரர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். (ரிக்வேதம் - 8-48-88)

8- வேதங்களின் காலத்தில் பெண்கள் ஆண்களின் உடைமைப் போல் சொத்துபோல் பாவிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். (புத்தக ஆசிரியர் கருத்து)

9- பொதுவான கணவன் ஒருவன், தன் காதல் கிழத்திகளை வைத்திருப்பது போல் தான் கைப்பற்றிய கோட்டைகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். (இந்திரன் சொல்லியிருக்கிறார். ரிக்வேதம் - 7-2-63)

10- இதே கொள்கையைத் தான் பின்னால் சட்டம் செய்தவர்களும், காவியங்கள் இயற்றியவர்களும் கையாண்டிருக்கிறார்கள். (புத்தக ஆசிரியர்)

11- உடைமைகளில் ஒன்றான பெண்களை மனிதன் கொள்ள வேண்டும்.

12- மூன்று பொருட்களை அதாவது செல்வத்தை, புஸ்தகங்களை, பெண்களை வேறொருவன் ஆதிக்கத்தில் விட்டு வைக்காதே.(யக்ஞய வல்கியர் என்பவரால் வகுக்கப்பட்ட தர்ம நீதி)

13- வேதசாஸ்திரி கட்டளைப்படி, புருஷர்கள் தங்கள் மனைவிகளை பூர்வீக புண்ணியத்தினாலோ அல்லது தெய்வ சங்கற்பத்தாலோ தானடைந்த பொருளாகவே கருத வேண்டும். (பீஸ்மர் கூறிய வாக்கு)

14- பெண்கள் தங்கள் கவுரவத்தைப் படிப்படியாக இழந்து ஆண்களின் போகப் பொருளாக மாறி வந்ததை வேதங்களிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம். (புத்தக ஆசிரியர்)

15- ஒரு கணவன் தன் மனைவியைத் தனக்குத் தொண்டு செய்யவும், பிள்ளைகளைப் பெறவும், கடவுளால் கொடுக்கப்பட்டவள் என்று அதர்வண வேதத்தில் உள்ள ஒரு பாட்டிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

16- மேலும் அவள் (கணவனால்) அவனுடைய போஷ்யா அல்லது அடிமை, கீழ்ப்பட்டவள் என்று அழைக்கப்பட்டவள். (அதர்வண வேதம். 14-1-52)

17- பிற்காலத்திலும் பெண்கள் போகத்திற்குரியவர்களாக மாத்திரம் கருதப்பட்டு வந்திருக்கிறார்கள். (புத்தக ஆசிரியர்)

18- மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவே காமவேட்கையைத் தணிக்கவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள். (என்று உபநிஷத்தர்கள் நினைத்து வந்திருக்கிறார்கள்)

19- மனிதன் தனக்கு உதவிக்காக நீண்ட நாள் கஷ்டப்பட்டான். கடைசியாகத் தன்னுடைய இச்சைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தனக்கு இந்து மதத்தில் (ஆரிய மதத்தில்) பெண்கள் நிலை எல்லா இன்பத்தையும் தரக்கூடிய ஒன்றை மனைவி என்ற உருவத்தில் பெற்றான்.(பிண் ஹதரரயாக 1-4)

20- பின்னால் தர்ம சாஸ்திரங்களில் பெண்களின் நிலை திகைப்பை உண்டு பண்ணும் ஷீண நிலைமைக்குப் போய் விட்டதைக் காணலாம். (ஆசிரியர் கருத்து)

21- அறிவுக்குப் பொருந்தாத முறையில் அவர்கள் மீது இழிவுகள் வசைகள் கற்பிக்கப்படிருக்கின்றன. இவைகளுக்கு அளவேயில்லை.(ஆசிரியர் கருத்து)

22- பெண் குலத்தை இழிவு படுத்துவதில் மகாபாரதமும், காவியங்களும் சிறிதும் பின் வாங்கவில்லை.

23- பெண்கள் தட்டு முட்டுச் சாமான்களைப்போல் கருதப்படுவதால் அவர்களைப் பற்றி அதிகமாகக் கவலை கொள்ளத் தேவையில்லை.(இதற்கு ஆதாரங்கள் பல உண்டு)

24- மனு சொல்லுவதைக் கவனியுங்கள். இந்த உலகில் ஆண்கள் கற்பழிக்கும் இயல்பைப் பெண்கள் பெற்றிருப்பதனால் தான் புத்திசாலிகள் பெண்களுக்கு மத்தியில் தற்காப்புடன் இருக்க வேண்டியவர்களாகிறார்கள்.

CONTINUED....

விழிப்பு said...

Hi,
I do not think you can get away with this post. I can understand how did you feel based on your experiences.
But, you can expect personal bashing from some fundamentalists.

I commend your boldness and happy that you wrote what you felt.

- Vizhippu

tamilan said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

இந்து மதத்தில் (ஆரிய மதத்தில்) பெண்கள் நிலை

.

Thenammai Lakshmanan said...

அவர்கள் பழக்க வழக்கமாக இருக்கலாம்.. அதை அடிமைத்தனம் என்று கூற முடியுமா புலிகேசி

priyamudanprabu said...

இன்னும் - விழவில்லைஇயா ?!??1

எண்ணங்கள் 13189034291840215795 said...

கட்டுப்பாடுகள் இருப்பதை ஒத்துக்கொண்டாலும் அது இறைவனின் கட்டளை என்றே ஏற்கின்றனர்..

ஆனால் அதை விரும்பாதவர்களுக்கு ( ரயில் பெண் போல ) ஏன் கட்டாயப்படுத்தணும்.?

எண்ணங்கள் 13189034291840215795 said...

அங்கிருந்த இரண்டு நாட்களும் எங்கள் தோழிகள் வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டனர் என்று கூட சொல்லலாம். //

:)

சசிகுமார் said...

பெண்களுக்கு மட்டும் இவ்வளவு கட்டுபாடுகளை வைத்து ஆண்களை கண்டுக்காமலே விட்டுடீங்களே.

Prathap Kumar S. said...

போனவாரம் சன்டிவியில் வந்த நிஜம் நிகழ்ச்சியை பாத்திங்களா புலிகேசி.
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காயல்பட்டினத்தில இருக்கும் வினோதங்கள்.

அங்கு சினிமா தியேட்டர் இல்லையாம் -நல்ல விசயம்
காவல்நிலையம் இல்லையாம் - ரொம்ப நல்லவிசயம்.

இனிதான் வருது...

ஊர் தெருவுக்குள்ளேயே பெண்கள் மட்டும் செல்ல தனியாக குறுகியதெருக்கள்,
பெண்கள் கடையில் பொருட்கள் வாங்க தனியாக ஒரு துவாரம்
மணப்பெண் வீட்டீல் மணமகன் வாழ்தல்
பெண்களுக்காக தனியாக ஏடிஎம் சென்டர் வைத்திருக்கிறார்கள்.

இனி ரொம்ப வருசம் போகனும் தலைவரே....அப்பவும் டவுட்டுதான்

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புக்குரிய சகோதரரே,இஸ்லாத்தின் ஆதாரமான- இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆன் மற்றும் இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் ஹதீஸ் எனும் செயல் முறை விளக்கம் பற்றி படித்து விட்டு நீங்கள் கருத்து சொல்வது சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.எனவே பிளீஸ் குரானை படியுங்கள்.மேலும் உங்கள் பார்வைக்கு கீழே ஒரு லிங்க்.நன்றி சகோதரனே.


http://vanjoor-vanjoor.blogspot.com/2009/04/24.html

KANA VARO said...

சிந்திக்க வேண்டிய விடயம்.

Darren said...

இனி ரொம்ப வருசம் போகனும் ....அப்பவும் டவுட்டுதான்..Thodarum அடிமைத்தனம் madhathin peyaral

உமர் | Umar said...

நீங்கள் சில முஸ்லிம்களை பார்த்துவிட்டு கேள்விகளை கேட்கின்றீர்கள். அவர்கள் செய்யும் செயல்களுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது. நீங்கள் இஸ்லாம் பற்றி பேச விரும்பினால் முதலில் எங்களுடைய வேத நூலான குர் ஆனை படிக்கவேண்டும். தயவு செய்து ஒரு முறை முழுவதுமாக படியுங்கள். அப்படி படித்த பிறகும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் வெளியில் பேச கூடாது. எங்கள் மார்க்க அறிஞரோடு பகிரங்க விவாதம் செய்யவேண்டும். ஆனால், குர் ஆன் படித்த நாங்கள், குர் ஆன் குறித்து நீங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டோம். இப்பொழுது கூட பாருங்கள், செங்கொடி ஆதாரம் எங்கே என்று கேட்டவுடன் நாங்கள் அந்தப் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை; தருமி ஒரு உரைகல் தேவை என்று கூறியவுடன் நாங்கள் அந்தப் பக்கமே திரும்பிப்பார்க்கவில்லை. ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முதலில் குர் ஆனை படித்து, இஸ்லாம் பற்றி, தெரிந்து கொள்ளுங்கள். ஆனால், குர் ஆன் அடிப்படையில் கேள்வி கேட்டால் நாங்கள் பதிலளிக்க வர மாட்டோம்.
.
.
.








.
.
.
என்று கூறுவார்கள்.

:-)

----
நீங்கள் குறிப்பிட்டுள்ள முதல் நிகழ்வு, தமிழகத்திலும் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இரண்டாம் நிகழ்வு, பெரும்பாலான கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்லும் இஸ்லாமியப் பெண்களால் மேற்கொள்ளப்பட்டுத்தான் வருகின்றன.

இவற்றை பற்றி ஏற்கனவே, நிறைய இடங்களில் உரையாடிவிட்டேன். ஹ்ம்ம்.

Anonymous said...

//இசுலாம் ஒரு பெண்ணடிமை மதமே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி இல்லை என்றாலும் அந்த மதத்து ஆண்களால் பெண்கள் அடிமைகளாக பாவிக்கப் படுகின்றனர் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.//
இதில் சந்தேகபட தேவையில்லை. பலரால் உணரப்பட்ட உண்மைகள்.

புலவன் புலிகேசி said...

//
தேனம்மை லெக்ஷ்மணன் says:
November 20, 2010 10:36 AM
அவர்கள் பழக்க வழக்கமாக இருக்கலாம்.. அதை அடிமைத்தனம் என்று கூற முடியுமா புலிகேசி

///

அத்தகையப் பழக்கவழக்கங்கள் விதிமுறைகளாக்கப் பட்டதே பெண்களை அடிமையாக்கி வைத்திடத்தான்.

புலவன் புலிகேசி said...

//பயணமும் எண்ணங்களும் says:
November 20, 2010 11:19 AM
கட்டுப்பாடுகள் இருப்பதை ஒத்துக்கொண்டாலும் அது இறைவனின் கட்டளை என்றே ஏற்கின்றனர்..//

இத்தகையக் கட்டுப் பாடுகள் இறைவனின் கட்டளைகள் என்றால் அந்த இறைவனும் ஒரு ஆணாதிக்கவாதியாகத்தான் இருக்க முடியும்.

Anonymous said...

மதம்தான் பெண்களை அடிமை படுத்திவைத்துள்ளது நீங்கள்தான் புரட்சியாளர்களாயிற்றே மதத்தை வெறுப்பவர்களாயிற்றே நீங்களும் ஏன் பெண்களின் சுதந்திரத்தை பறித்து அவர்களை அடிமை படுத்தி வைத்துள்ளீர்கள் என்பதை தெளிவுபடுத்தவும்.
-----SHAH---------

Mohammed Rafi TMH said...

எந்த விஷயங்களையும் முழுதும் புரியாமல், ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளை கண்டு, எந்த தப்பான அபிப்பிராயம் கொள்ளவோ, அதைப் பரப்பவோ கூடாது

கீழேயுள்ள இணைப்பில் பலரது கருத்துக்கள் பகிர்ந்துள்ளதை படித்து பிறகு எனக்கு பதில் தரவும். இஸ்லாம் பிறர் பார்வையில் என்ற தலைப்பில் :

http://rafitmh.blogspot.com

நன்றி

Unknown said...

நண்பர் மன்னிக்க வேண்டும் . உங்களது கட்டுரை இஸ்லாத்தை பற்றி மோசமாக எழுத வேண்டும் என்பதற்காக எழுதியது போல் உள்ளது. நீங்கள் இதை எழுது முன் இஸ்லாத்தை பற்றி சற்று அறிந்த பிறகு எழுதி இருக்கலாம்

Aashiq Ahamed said...

சகோதரர் அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல இறைவன் மனநிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள்வானாக...

----
இசுலாமியப் பெண்கள் பயத்தின் காரணமாகவே அந்த அங்கியை அணிகிறார்களோ? என்ற கேள்வி எழுந்தது
----

இஸ்லாமிய அடிப்படையை சரியாக விளங்காத சில இஸ்லாமிய சகோதரிகள் அப்படி செய்யலாம். ஆனால், இஸ்லாம் ஏன் பெண்களுக்கு ஹிஜாபை (முகம் மற்றும் கை மணிக்கட்டுகளை தவிர்த்து மற்றவற்றை மறைக்கும் விதமாக உடையணியும் முறை) போதிக்கின்றது என்று புரிந்தவர்கள் விரும்பியே அவ்வாறு உடை அணிகின்றனர். உதாரணத்துக்கு இந்த பதிவை பாருங்கள்

http://ethirkkural.blogspot.com/2010/11/blog-post.html

நிறைய பெண்கள் இஸ்லாத்தை தழுவதற்கு ஹிஜாபும் ஒரு காரணமாக இருக்கின்றது என்பது மறுக்க
முடியாத உண்மை.

புர்கா மற்றும் நிகாப் (கண்களை மட்டும் காண்பிக்கும், அல்லது உருவம் முழுவதையும் மறைக்கும் விதமாக உடையணியும் முறை) இஸ்லாத்தில் கட்டாயமில்லாத ஒன்று. பெண்கள் தாங்களாக விரும்பி அப்படி உடையணிந்தால் அது அவர்கள் சம்பந்தப்பட்ட ஒன்று. இறைவனே உள்ளங்களை நன்கு அறிந்தவன்.

----
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சொல்லப் பட்ட கோட்பாடுகள் இசுலாமிய குரானில் இருக்கின்றனவா? எனத் தெரியவில்லை.
----

தெரிந்து கொண்டு விளக்கினால் பதில் சொல்ல ஏதுவாக இருக்கும்.

-----
அப்படி இல்லை என்றாலும் அந்த மதத்து ஆண்களால் பெண்கள் அடிமைகளாக பாவிக்கப் படுகின்றனர் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை
-----

உண்மை. கணிசமான ஆண்கள் அப்படித்தான் நடந்து கொள்கின்றனர். அதனை எதிர்த்து தான் போராடி வருகின்றோம்.

-----
இத்தகையக் கட்டுப் பாடுகள் இறைவனின் கட்டளைகள் என்றால் அந்த இறைவனும் ஒரு ஆணாதிக்கவாதியாகத்தான் இருக்க முடியும்//
-----

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (குரான் 33:35)


தாங்கள் இஸ்லாமை நன்கு ஆராய்ந்து விட்டு விமர்சனம் செய்ய என்னுடைய வாழ்த்துக்கள்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Aashiq Ahamed said...

சகோதரர் அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல இறைவன் மனநிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள்வானாக...

----
இசுலாமியப் பெண்கள் பயத்தின் காரணமாகவே அந்த அங்கியை அணிகிறார்களோ? என்ற கேள்வி எழுந்தது
----

இஸ்லாமிய அடிப்படையை சரியாக விளங்காத சில இஸ்லாமிய சகோதரிகள் அப்படி செய்யலாம். ஆனால், இஸ்லாம் ஏன் பெண்களுக்கு ஹிஜாபை (முகம் மற்றும் கை மணிக்கட்டுகளை தவிர்த்து மற்றவற்றை மறைக்கும் விதமாக உடையணியும் முறை) போதிக்கின்றது என்று புரிந்தவர்கள் விரும்பியே அவ்வாறு உடை அணிகின்றனர். உதாரணத்துக்கு இந்த பதிவை பாருங்கள்

http://ethirkkural.blogspot.com/2010/11/blog-post.html

நிறைய பெண்கள் இஸ்லாத்தை தழுவதற்கு ஹிஜாபும் ஒரு காரணமாக இருக்கின்றது என்பது மறுக்க
முடியாத உண்மை.

புர்கா மற்றும் நிகாப் (கண்களை மட்டும் காண்பிக்கும், அல்லது உருவம் முழுவதையும் மறைக்கும் விதமாக உடையணியும் முறை) இஸ்லாத்தில் கட்டாயமில்லாத ஒன்று. பெண்கள் தாங்களாக விரும்பி அப்படி உடையணிந்தால் அது அவர்கள் சம்பந்தப்பட்ட ஒன்று. இறைவனே உள்ளங்களை நன்கு அறிந்தவன்.

Aashiq Ahamed said...

----
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சொல்லப் பட்ட கோட்பாடுகள் இசுலாமிய குரானில் இருக்கின்றனவா? எனத் தெரியவில்லை.
----

தெரிந்து கொண்டு விளக்கினால் பதில் சொல்ல ஏதுவாக இருக்கும்.

-----
அப்படி இல்லை என்றாலும் அந்த மதத்து ஆண்களால் பெண்கள் அடிமைகளாக பாவிக்கப் படுகின்றனர் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை
-----

உண்மை. கணிசமான ஆண்கள் அப்படித்தான் நடந்து கொள்கின்றனர். அதனை எதிர்த்து தான் போராடி வருகின்றோம்.

-----
இத்தகையக் கட்டுப் பாடுகள் இறைவனின் கட்டளைகள் என்றால் அந்த இறைவனும் ஒரு ஆணாதிக்கவாதியாகத்தான் இருக்க முடியும்//
-----

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (குரான் 33:35)


தாங்கள் இஸ்லாமை நன்கு ஆராய்ந்து விட்டு விமர்சனம் செய்ய என்னுடைய வாழ்த்துக்கள்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

கல்விக்கோயில் said...

மதம் எதுவாக இருந்தாலும் அங்கு மனிதம் வாழ்கிறதா? என்பதே முக்கியம். மனிதனை நெறிப்படுத்தவேதான் மதமே தவிற மதத்தை நெறிப்படுத்த மனிதன் தேவையில்லை.

Riyas said...

அவுத்துப்போட்டு கண்டவனுடன் சுத்துவதுதான் நீங்கள் உங்கள் பெண்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் என்றால்... அந்த சுதந்திரம் இஸ்லாமிய பெண்களுக்கு தேவையேயில்லை....

புலவன் புலிகேசி said...

// Riyas said...
அவுத்துப்போட்டு கண்டவனுடன் சுத்துவதுதான் நீங்கள் உங்கள் பெண்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் என்றால்... அந்த சுதந்திரம் இஸ்லாமிய பெண்களுக்கு தேவையேயில்லை...//

ஏண்ணே! பொண்ணுங்கள அவங்க இஷ்டத்துக்கு வளர விடுங்க. நல்ல விசயங்கள அவங்களும் தெரிஞ்சிக்குவாங்க. அத உட்டுட்டு நீ இப்புடித்தான் இருக்கனும்னு சொல்லி ஆணாதிக்கத்த திணிச்சிப் புட்டு இங்க வந்து சவுண்டக் குடுத்துக் கிட்டு........

'பரிவை' சே.குமார் said...

ரீப்பீட் தேனக்கா...

அடிமைத்தனம் என்பதை எப்படி ஆணித்தரமாக சொல்லமுடியும். ஒவ்வொரு மதத்திலும் சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

Butter_cutter said...

neengal purinthu kondathil thavaru.

dhanish said...

நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை ஏதுமின்றி வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் [கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும்] இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை. ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று?
'ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்'
மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு
அழகான பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது. கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.
குறிப்பாக தமிழக அரசு பெற்றோர்களின் சொத்துக்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அளவிலான உரிமை உண்டு என்று கருணாநிதி ஆட்சியின் போது சட்டமியற்றியது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கியது.

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருமறைக் குர்ஆன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்ணுரிமையைப் பேணினார்கள். பெண்களின் கண்ணியத்தை உயர்த்தினார்கள். அத்தகைய திருக்குர்ஆன் வசனங்கள் சிலவற்றைக் கீழே தந்துள்ளோம்

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 2:228)
அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. (திருக்குர்ஆன் 2:187)
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 9:71)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 24:30)
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (திருக்குர்ஆன் 24:31)

Anonymous said...

Aashiq Ahamed says:
நிறைய பெண்கள் இஸ்லாத்தை தழுவதற்கு ஹிஜாபும் ஒரு காரணமாக இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

எப்போ தொடக்கம் இப்படி நடக்கிறது? பர்தா அணிய சொல்லி தந்தை / சகோதரன் துன்புறுத்தல் என்ற செய்திகளே வருகின்றன.