கடவுளை மற..மனிதனை நினை..

21 January 2010

தன்னம்பிக்(கால்)கை - ஒரு உண்மை சம்பவம்

2:39:00 PM Posted by புலவன் புலிகேசி 41 comments

எங்கள் ஊர் மயிலாடுதுறையில் உள்ளது அந்த இல்லம். அங்கு உள்ள குழந்தைகள், பெரியவர்கள் பெரும்பாலும் மூளை வளர்ச்சி குன்றியவர்கள்.

நான் ஊருக்கு செல்லும் போதெல்லாம் அங்கு செல்வது வழக்கம். அங்குள்ள குழந்தைகளை பார்க்க மன தைரியம் வேண்டும். அங்குள்ள குழந்தைகள் மனநிலை குன்றியவர்கள் மட்டுமல்ல. கண் தெரியாமல், நடக்க முடியாமல், கைகளற்று கஷ்ட படுபவர்கள். 2 வருடங்களுக்கு முன்பு அங்கு சென்ற போது நான் கண்ட குழந்தைதான் பாப்பு. அவளுக்கு இரண்டு கைகளும் கிடையாது.

பெற்றோர் விட்டு சென்றதாக சொன்னார்கள். அவளை பார்த்த பின்புதான் அங்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டேன். பாப்பு மூளை வளர்ச்சியில் குன்றியவள் அல்ல. அவள் ஒரு புத்திசாலி. அவளது தன்னம்பிக்கை நம்மை போன்ற நல்ல உடலமைப்பு பெற்றவர்களுக்கு கூட இருக்குமா என்பது சந்தேகமே.

சென்ற ஆண்டு நடந்த ஒரு நிகழ்வு: வழக்கம் போல் அங்கு நான் சென்ற போது அனைத்து குழந்தைகளும் குளிப்பாட்டப் பட்டு பராமறிப்பாளர்களால் ஆடை மாற்றமும் நிகழ்ந்து கொண்டிருந்த போது பாப்பு ஒரு ஆடையை வாயில் கவ்விக் கொண்டு ஒடி வந்து ஓரிடத்தில் அமர்ந்து தன் கால்களின் உதவியில் அந்த ஆடையை அணிய சிரமப்பட்டு கொண்டிருந்தாள். அவளுக்கு உதவ அருகில் சென்ற என்னிடம் "நாந்தான் போட்டுக்குவேன் என்னை விடு" என்றாள். அதன் பின் அந்த ஆடையை அவளே அணிந்து வந்து என்னிடம் காட்டினாள்.

அவளின் தன்னம்பிக்கைக்கு சான்றாக கடந்த பொங்கலில் நடந்த இன்னொரு நிகழ்வு என்னை நெகிழ வைத்தது. இந்த முறை அவளை சந்தித்த போது அவளிடம் என்னவெல்லாம் படித்தாய் சொல்லு என்றதும் அ, ஆ வில் தொடங்கி, A,B,C,D 1,2,3 என வரிசையாக சொல்லி முடித்தாள். அதன் பின் அவளுக்கு ஒரு முத்தமிட்டு விட்டு புறப்படும் போது யதேச்சையாக என் கைகளை ஓங்கி டாடா என சொல்லிவிட்டு சட்டென சுதாரித்து கைகளை மடக்கி கொண்டு வருத்தப்பட்டேன். ஆனால் அவள் சற்றும் கலங்காமல் கால்களை உயர்த்தி "டாடா" என்றாள். சட்டென அணைத்து இன்னொரு முத்தமிட்டு அங்கிருந்து கலக்கத்துடன் புறப்பட்டோம்.

எங்களுக்கு தன்னம்பிக்கை பாடம் பாப்புவால் கற்று கொடுக்கப் பட்டது.

பி.கு:

இந்த முறை ஒரு நற்செய்தி கிடைத்தது. அரசாங்கம் பாப்புவுக்கு மின்னியல் கைகள்(Electronic Hand) பொருத்த உதவி செய்ய முன் வந்துள்ளதாக கூறினர் அந்த இல்லத்தின் மேற்பார்வையாளர். அதற்கு ஆகும் அத்தனை செலவு மற்றும் உதவிகள் முழுவதையும் அரசே செய்வதாக உறுதியளித்துள்ளதாம்.

அந்த இல்லத்தில் பிடித்த விடயம் என்னவென்றால், நாம் பணமாக கொடுத்தால் அவர்கள் கூறுவது "இந்த பணத்தில் நீங்களே எதாவது பொருளோ பலகாரமோ வாங்கி கொடுங்கள்" என்பர்.

41 விவாதங்கள்:

பேநா மூடி said...

தல..., அருமையா இருக்கு ..., அந்த குழந்தைக்கு இருக்கும் தன்னம்பிக்கை அனைவருக்கும் இருக்க வேண்டியது...,

க.பாலாசி said...

படிக்கும்போதே கண் கலங்குகிறது நண்பா... அந்த குழந்தையின் தன்னம்பிக்கையை எப்படி சொல்வது...கிரேட்..

நான் அந்த இல்லத்திற்கு சென்று இரண்டுவருடங்களுக்கு மேலாகிறது. வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளவும் முடியவில்லை. அடுத்தமுறை பார்க்கவேண்டும்.

அரசாங்கத்தின் உதவி மகிழ்ச்சியளிக்கிறது.

பலா பட்டறை said...

நெகிழ வைத்த பதிவு. நல்ல உள்ளம் புலவரே உங்களுக்கு. வாழ்க.

PPattian : புபட்டியன் said...

நெகிழ்ச்சியான தகவல். பகிர்விற்கு நன்றி புலவரே. பாப்பு எல்லா செல்வங்களும் குறைவற்று பெற என் பிரார்த்தனைகள்.

Sangkavi said...

தோழரே படிக்கும் போதே மனசு வலிக்கிறது...

Anonymous said...

Nandraga irunthathu nanba

ஸ்ரீராம். said...

நல்ல பகிர்வு...நெகிழ்ச்சிப் பதிவு...

வெற்றி said...

நெகிழ்ச்சியான பதிவு நண்பா..எல்லாரும் இன்புற்றிருக்க என்ன வழி என தெரியவில்லை..:((((

ஈரோடு கதிர் said...

நல்ல பகிர்வு

நன்றி முருகவேல்

வானம்பாடிகள் said...

படிக்கையிலேயே சிலிர்க்கிறது அவளின் தன்னம்பிக்கை.:).

அகல்விளக்கு said...

தன்னம்பிக்கை மிளிர்கிறது...

திவ்யாஹரி said...

நானும் ஒரு முறை போனேன் நண்பா.. மீண்டும் போகும் அளவு என் மனம் திடம் இல்லை.. நல்ல பகிர்வு.

ஸ்ரீ said...

Hats off to pappu.

சைவகொத்துப்பரோட்டா said...

பாப்புவுக்கு சபாஷ், நன்றி நண்பா.

Balavasakan said...

வார்த்தைகள் இல்லை நண்பா...?

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

சங்கர் said...

{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{ இந்த முறை அவளை சந்தித்த போது அவளிடம் என்னவெல்லாம் படித்தாய் சொல்லு என்றதும் அ, ஆ வில் தொடங்கி, A,B,C,D 1,2,3 என வரிசையாக சொல்லி முடித்தாள். அதன் பின் அவளுக்கு ஒரு முத்தமிட்டு விட்டு புறப்படும் போது யதேச்சையாக என் கைகளை ஓங்கி டாடா என சொல்லிவிட்டு சட்டென சுதாரித்து கைகளை மடக்கி கொண்டு வருத்தப்பட்டேன். ஆனால் அவள் சற்றும் கலங்காமல் கால்களை உயர்த்தி "டாடா" என்றாள். சட்டென அணைத்து இன்னொரு முத்தமிட்டு அங்கிருந்து கலக்கத்துடன் புறப்பட்டோம். }}}}}}}}}}}}}}}}}}}}}நண்பரே உங்களின் இந்த வரிகளை வாசித்து முடித்த மறு நொடியே என் உள்ளம் கணக்கத் தொடங்கிவிட்டது .

{{{{{{{{{{{ உள்ளம் நல்லா இருந்தால் ஊனம் ஒரு குறையில்லை !
உள்ளம் ஊனப்பட்டால் உடம்பிருந்தும் பயனில்லை ! . }}}}}}}}}}}}}}

என்ற வரிகள் இப்பொழுது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது .

உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் .
அற்புதம் வாழ்த்துக்கள் .!

Anonymous said...

படித்து முடிக்கையில் மனம் கனத்தது!

வினோத்கெளதம் said...

உணர்வுகள் அப்படியே பேசியதுப்போல் இருந்தது

வெ.இராதாகிருஷ்ணன் said...

போராடும் குணமும், தன்னம்பிக்கையும் மனிதம் வளரச் செய்யும், வாழச் செய்யும்.

மனதுக்குள் தன்னம்பிக்கை வளர்ந்தது.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு புலிகேசி. பாப்புவுக்கு மின்னியல் கைகள் விரைவில் கிடைத்து அவள் இன்னும் தன்னம்பிக்கையுடன் வாழ்வில் படித்து முன்னேறிட என் பிரார்த்தனைகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல விசயம்..

உங்கள் பதிவைத் திறக்க மிக நேரமெடுக்கிறது. மற்றும் கமெண்ட் லிங்க் க்ளிக் செய்வதற்குள் புதிய விளம்பரபக்கங்கள் திறக்கின்றன.. கவனிக்க முடியுமா?

சரண் said...

படிச்சதும் சிலிர்ப்பை ஏற்படுத்திய விஷயம் நண்பா. மென்பொருள் துறையில் உள்ளவர்களில் சிலர் பணத்துடன் உடல் நலத்தையும் இழக்க வழிதேடி சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.ஆனால் இது போன்ற இல்லங்களுக்கும் இன்னும் பிற வகையிலும் மென்பொருள் துறையை சேர்ந்தவர்களும் பண உதவி செய்வதுடன், பல விஷயங்களில் வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருவது பற்றி அவ்வப்போது அறிந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இது போன்ற விஷயங்களில் என்னால் இணைந்து கொள்ள முடியாத வருத்தம்தான்.

உங்களுக்கு மயிலாடுதுறையா? எனக்கு திருவாரூர்தான் நண்பரே.

ஜெட்லி said...

நெகிழ்வான பகிர்வு நண்பா.....

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//அந்த இல்லத்தில் பிடித்த விடயம் என்னவென்றால், நாம் பணமாக கொடுத்தால் அவர்கள் கூறுவது "இந்த பணத்தில் நீங்களே எதாவது பொருளோ பலகாரமோ வாங்கி கொடுங்கள்" என்பர்.//

எல்லாவற்றையும் நெகிழ்வுடன் வாசித்த போதும் ;மேற்கண்ட விடயம் சிலிற்பைத் தந்தது. பிணத்திலே கூட பணம் பார்க்கும் கூட்டத்துள் இப்படியுமா?
மிக்க நன்றி!
அனைவருக்கும்.

செ.சரவணக்குமார் said...

நெகிழ்ச்சியான பதிவு நண்பரே. பாப்புவின் தன்னம்பிக்கைக்கு ஒரு ராயல் சல்யூட்.

||| Romeo ||| said...

பாஸ் அடுத்த முறை செல்லும் போது அவளின் இயந்திர கைகளுக்கு என் சார்பாக கை குடுத்து வாழ்த்துக்கள் சொல்லுங்கள் .

Chitra said...

அந்த இல்லத்தில் பிடித்த விடயம் என்னவென்றால், நாம் பணமாக கொடுத்தால் அவர்கள் கூறுவது "இந்த பணத்தில் நீங்களே எதாவது பொருளோ பலகாரமோ வாங்கி கொடுங்கள்" என்பர்.
...............................மனித நேயம் ஊனமாகவில்லை. மழை இன்னும் பொழிவது - நல்லார் - இது போல் உள்ளனர் என்பதாலோ?

ஹேமா said...

தன்னம்பிக்கை இருக்கிறதே பாப்புவிடம்.பிறகென்ன கவலை.
வாழ்த்துக்கள்.உலகில் எங்காவது ஓரிடங்களில் நல்லவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

கலகலப்ரியா said...

:).... (nowadays no words..)

சுசி said...

சொல்ல வார்த்தைகள் இல்லை..

பாப்பு வாழ்க்கை சிறக்கட்டும்.

இனியாள் said...

நெகிழ்ச்சியான பதிவு, உங்களின் இந்த நற்பணி தொடர வாழ்த்துக்கள்.

முனைவர்.இரா.குணசீலன் said...

தன்னம்பிக் (கால்) கை

பலருக்குத் தன்னம்பிக்கை அளிப்பதாகவுள்ளது நண்பரே..

நல்ல இடுகை.

ஜோதிஜி said...

அந்த இல்லத்தில் பிடித்த விடயம் என்னவென்றால், நாம் பணமாக கொடுத்தால் அவர்கள் கூறுவது "இந்த பணத்தில் நீங்களே எதாவது பொருளோ பலகாரமோ வாங்கி கொடுங்கள்" என்பர்.

இவர்கள் மனிதர்கள் அல்ல. மகாத்மாக்கள்.

வாழ்த்துகள் புலவரே.

Kaipulla said...

அழுதுடண்டா தம்பி, பப்பு மாதிரி உலகம் முழுவதும் கோடி கணக்கான பேர் இருக்காங்க, இவங்களுக்கு எல்லாம் நம்ம என்னடா பண்ண போறோம், ஏதாவது பண்ணியே ஆகணும், தாயே பரா சக்தி அவர்கள் குறையை எங்களால் சரி செய்ய முடியாது, அவர்களை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ள எங்களுக்கு கோடான, கோடி செல்வதையும், நேரத்தையுமாவது கொடு....

வரதராஜலு .பூ said...

கண்கள் கலங்கிவிட்டது

நெகிழ்ச்சியான பகிர்வு

//அந்த இல்லத்தில் பிடித்த விடயம் என்னவென்றால், நாம் பணமாக கொடுத்தால் அவர்கள் கூறுவது "இந்த பணத்தில் நீங்களே எதாவது பொருளோ பலகாரமோ வாங்கி கொடுங்கள்" என்பர்.//

நிஜமாகவே கடவுள் இல்லம்தான் இந்த இல்லம்

புலவன் புலிகேசி said...

நன்றி

@பேநா மூடி

@க.பாலாசி

@பலா பட்டறை

@PPattian : புபட்டியன்

@Sangkavi

@Anonymous

@ஸ்ரீராம்

@வெற்றி

@ஈரோடு கதிர்

@வானம்பாடிகள்

@அகல்விளக்கு

@திவ்யாஹரி

@ஸ்ரீ

@சைவகொத்துப்பரோட்டா

@Balavasakan

@அன்புடன் அருணா

@சங்கர்

@Anonymous

@வினோத்கெளதம்

@வெ.இராதாகிருஷ்ணன்

@ராமலக்ஷ்மி

@முத்துலெட்சுமி/muthuletchumi

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல விசயம்..

உங்கள் பதிவைத் திறக்க மிக நேரமெடுக்கிறது. மற்றும் கமெண்ட் லிங்க் க்ளிக் செய்வதற்குள் புதிய விளம்பரபக்கங்கள் திறக்கின்றன.. கவனிக்க முடியுமா?
//

தகவலுக்கு நன்றி இப்போ முயற்சித்து பாருங்கள்..

புலவன் புலிகேசி said...

நன்றி

@சரண்

//சரண் said...

படிச்சதும் சிலிர்ப்பை ஏற்படுத்திய விஷயம் நண்பா. மென்பொருள் துறையில் உள்ளவர்களில் சிலர் பணத்துடன் உடல் நலத்தையும் இழக்க வழிதேடி சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.ஆனால் இது போன்ற இல்லங்களுக்கும் இன்னும் பிற வகையிலும் மென்பொருள் துறையை சேர்ந்தவர்களும் பண உதவி செய்வதுடன், பல விஷயங்களில் வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருவது பற்றி அவ்வப்போது அறிந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இது போன்ற விஷயங்களில் என்னால் இணைந்து கொள்ள முடியாத வருத்தம்தான்.

உங்களுக்கு மயிலாடுதுறையா? எனக்கு திருவாரூர்தான் நண்பரே.
//
அப்படியா..மகிழ்ச்சி நண்பரே.பின் சந்திப்போம்

புலவன் புலிகேசி said...

நன்றி

@ஜெட்லி

@யோகன் பாரிஸ்(Johan-Paris)

@செ.சரவணக்குமார்

@||| Romeo |||

@Chitra

@ஹேமா

@கலகலப்ரியா

@சுசி

@இனியாள்

@முனைவர்.இரா.குணசீலன்

@ஜோதிஜி

@Kaipulla

@வரதராஜலு .பூ

இளமுருகன் said...

இவர்களிடம் கனிவு காட்டுவதும் முடிந்த உதவிகள் செய்வதும் நமது கடமை.ஊனம் உடம்பிற்கு தான் மனதிற்கில்லை என நிருபித்த இவர் நமக்கெல்லாம் ஒரு பாடம்.

Parthiban-blog said...

வணக்கம் நண்பரே.. நானும் மயிலாடுதுறை தான்.. நான் அந்த இல்லத்திற்கு செல்ல விருப்பபடுகிறேன் எனக்கு அந்த இல்லத்தின் முகவரி தெரியபடுத்தவும்...