கடவுளை மற..மனிதனை நினை..

23 January 2010

டரியல்(23-சனவரி-2009)

5:51:00 AM Posted by புலவன் புலிகேசி 21 comments
பொங்கலுக்கு ஊருக்கு போனவன் வியாழக் கிழமைதான் திரும்பி வந்தேன். கிட்டத்தட்ட 3 வருசத்துக்கப்பறம் ஊர்ல ஒரு வாரம் தாங்கினது இப்பதான். அக்காவுக்கு பெண் குழந்தை(ஃபிகரு) பிறந்து ஒரு மாசம் கழிச்சி இந்த பொங்கல்லதான் போய் பாத்தேன். ஊர்ப் பயனங்கள் சிறப்பாக முடிந்தது. ஊரில் இருந்த வரை பல பதிவுகளை படிக்க முடியல. இனிமே படிப்போம்ல. வலைச்சரத்தில் நம்ம "பொங்குமா பொங்கலை" அறிமுகப்படுத்திய நண்பர் "இராதாகிருஷ்ணனுக்கு" நன்றி.

---------------------

நான் எதிர்பார்த்த "வி்ண்ணைத்தாண்டி வருவாயா" பாடல்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சிருக்கு. ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஷ்ரேயா கோசல் குரல்களில் "மன்னிப்பாயா" பாடல் இந்த ஆண்டு இளைஞர்களின் இதயத்துடிப்பாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. தாமரையின் வரிகளில் அனைத்து பாடல்களிலும் தமிழ் மிளிர்கிறது. என்ன இந்த பிளாஸ்தான் அடிக்கடி வந்து ஆங்கில சேவை செஞ்சிட்டு போறாரு. எனக்கு இந்த ஒரு வாரம் கேட்டதில் 3பாடல்கள் மிகவும் பிடித்து போயின. அவை "மன்னிப்பாயா","ஓமனப்பெண்ணே"அப்பறம் முன்னரே ஒரு டரியலில் சொன்ன "ஓசன்னா". கேட்டு பாருங்க.

---------------------

தமிழ்மணம் விருதுகள் நிகழ்ச்சி முடிஞ்சி வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டதை பார்த்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். நம்ம நண்பர்கள் சிலரும் விருது பெற்றிருந்ததை பார்த்தேன். அனைத்து வெற்றியாளர்களுக்கும் புலிகேசியின் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் வலைப்பணி.

---------------------

அப்பறம் இந்த பொங்கல்ல ஆயிரத்தில் ஒருவன் படம் மட்டும்தான் பார்த்தேன். தமிழ் சினிமாவில் இது போன்ற படங்கள் வரவேற்புக்குரியவை. படத்தின் ஒரே ஒரு குறை வக்கிரங்கள் தவிர்க்கப்பட்டிருந்தால் குடும்பத்துடன் பார்க்க இயலும். பலர் இந்த படத்தின் குறைகளை மட்டுமே சொல்லி வருகின்றனர். இதே படம் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டிருந்தால் அவதார் போல தலையில் தூக்கி வச்சி கொண்டாடிருப்பாங்கன்னு நெனைக்கிறேன். தமிழனுக்கு எதிரி தமிழனேதான். பலர் எழுதியிருந்தனர் இந்த படத்துல லாஜிக்கே இல்லைன்னு. எத்தனை ஆங்கிலப் படங்கள் லாஜிக்கோட வந்துருக்கு. ஆங்கிலத்துல எதிர்பாக்காத லாஜிக்க இங்க மட்டும் ஏன் எதிர்பாக்குறீங்க? தமிழ்ல முதல் முயற்சின்றதால சில இடங்களில் சறுக்கல்கள். மற்றபடி படம் அருமை.

---------------------

இந்திய மட்டைபந்து அணித்தலைவர் தோனி. இவரைப் பார்த்தால் எனக்கு ஒரு பழமொழி நியாபகம் வரும். "புது விளக்குமாறு நன்கு பெருக்கும்". வந்த புதிதில் அதிரடியாக விளையாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இப்பல்லாம் இவர் போடும் மொக்கை தாங்க முடியல. சரி விசயத்துக்கு வருவோம். பல நாட்களாக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இவர் அந்த இடத்தை இழக்கப் போகும் நேரமிது. நம்ம மைக் ஹசி இவரை விட 21 புள்ளிகள் மட்டுமே குறைவாக உள்ளார். ஆஸி-பாக் தொடர் முடியறதுக்குள்ள தோனியை 2க்கு தள்ளி விடுவார்.

---------------------

இந்த வார டரியல் நம்ம ஆரூரன் விசுவநாதனின் "நூறா யிரத்தில் ஒருவன்.........". நல்ல தன்னம்பிக்கை தரும் அனுபவ பகிர்வு. படிக்கலைன்னா படிச்சி பாருங்க. நன்றி ஆரூரான்.

---------------------

21 விவாதங்கள்:

பலா பட்டறை said...

ஆயிரத்தில் ஒருவனை கொஞ்சம் தாமதமா பாக்கலாம்னா விடமாட்டீங்க போலருக்கே...:)

பிரபாகர் said...

டரியல் வழக்கம்போல் அருமையாய் இருக்கு. பொங்கல முடிச்சிட்டு வந்துட்டீங்கள்ல! இனிமே கலக்கல்தான்...

பிரபாகர்.

சைவகொத்துப்பரோட்டா said...

//தமிழனுக்கு எதிரி தமிழனேதான்//

உண்மையான ஆனால் வருத்தப்பட வேண்டிய விஷயம். "மன்னிப்பாயா" பாடல் இனிமை.

வெற்றி said...

வி.தா.வ எனக்கும் அதே பீலிங் தான்..

V.A.S.SANGAR said...

வந்திட்டிங்க இனி நாம போக வேண்டியதுதான்

Sangkavi said...

நண்பரே பொங்கல் பொங்குச்சா...

Anonymous said...

//வக்கிரங்கள் தவிர்க்கப்பட்டிருந்தால் குடும்பத்துடன் பார்க்க இயலும்.//

அதனாலத்தான் அவ்வளவா படம் பிடிக்கலைங்க.

ராமலக்ஷ்மி said...

அக்காவின் குழந்தைக்கு வாழ்த்துக்கள்!

உங்களுக்கு சீக்கிரம் பொண்ணு பார்க்கச் சொல்லுங்க:)!

முகிலன் said...

எனக்கென்னவோ தோனி இப்பத்தான் பொறுப்பா விளையாடுற மாதிரி தெரியுது..

அப்பப்ப பழைய தோனிய ரிலீஸ் பண்றாரே பாக்கலையா?

சங்கர் said...

சும்மா சொல்லக்கூடாது டரியல் வழக்கம்போல் அருமையாய் இருக்கு .கலக்குறீங்க போங்க !

க.பாலாசி said...

ஆமா நண்பரே.. ஆயிரத்தில் ஓருவன வச்சி....இந்த வாரம் முழுக்க........ ஸ்ஸப்பா.. முடியல...

வானம்பாடிகள் said...

டரியல் டரியல் எப்பொழுதும் போல்:)

ஜெட்லி said...

ஊரில் இருந்து வந்தவுடன் டரியலா....
ஆ.ஒ. பற்றி உங்கள் கருத்து நன்று...

Chitra said...

நல்லா தொகுத்து தந்திருக்கீங்க. நன்றி.

Balavasakan said...

ம்... நண்பா.. பொங்கல சந்தோசமா கொண்ணடாயிருகிறீங்க... ஒண்ணு தெரியுமா எங்க வீடல பொங்கல் கொண்டாடி எத்தனை வருசமோ தெரியாது எங்கள் சொந்த வீடு யாழ்ப்பாணம் தீவகத்தில் கரம்பன் என்னும் கிராமம் 20 வருடங்களுக்கு மேலாக காடாகி கிடக்கிறது இன்றுவரை வாடகை வீடுகள்தான் அதனால் அம்மா கிச்சினில்தான் பொங்கும் சொந்த வீட்டிலயா இருக்கிறம் பொங்கிப்படைக்க சும்மா ஏதோ கடமைக்கு ன்னு பொங்கி சாப்பிடுவோம் ன்னு அம்மா சொல்லும் நானெல்லாம் எப்ப சொந்த வீட்டுக்குபோய் அதைக்கட்டி அம்மவோட பொங்கல் கொண்டாடுறது.......

விணைத்தாண்டி வருவாயா நான் முனபே சொல்லியதுபோல எனக்கு மன்னிப்பாயா-1 ஓசானா-2 மற்ற எல்லாப்பாடல்களும் -3

ஆயிரத்தில் ஒருவன்- எஸ்கேப்பு

டோனி- ஏன் நண்பா அவரது ஆட்ட வேகம் குறைந்திருந்தாலும் சராசரி நல்ல சராசரிதானே தேவையான நேரங்களில் ஓட்டமெடுக்கிறார் எல்லாரும் அதிரடியாக விளையாடமுடியாது அதுக்கு செவாக் யுவராஜ் ரேய்னா இருக்கிறார்கள் போதாதா நிதானமாக ஆடவும் ஒருவர் தேவைதானே...

அறிமுகம் பாரக்கிறேன்...

வரட்டா...

மீன்துள்ளியான் said...

புலி நேத்து தான் ஆயிரத்தில் ஒருவன் பாத்தேன் .. படம் ரெம்ப பிடிச்சு இருந்தது .. ரெண்டாவது தடவை போகலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் ..

படம் முடியும் பொது தோணின விடயம் "உளுந்த வடைலயே ஓட்டை இருக்குனு சொல்லுற உலகம் இது . எப்போ செல்வா ரெண்டாம் பாகம் வரும்னு"

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு. ஆயிரத்தில் ஒருவன் பற்றி சொன்ன கருத்து பிடித்திருந்தது நண்பா.

Mrs.Menagasathia said...

டரியல் வழக்கம்போல் அருமையாய் இருக்கு.

பிரியமுடன் பிரபு said...

நல்ல பகிர்வு

ஸ்ரீராம். said...

டரியல் ஓகே.... தோனிக்கு இன்னமும் அதிருஷ்டம்தான் கை கொடுக்கிறது....

சுசி said...

உங்க ப்ளாக் அக்கா படிக்கமாட்டாங்கன்ற தைரியம்??