கடவுளை மற..மனிதனை நினை..

06 October 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்! - தினமணிக்கு என் பாராட்டுக்கள்

6:38:00 AM Posted by புலவன் புலிகேசி , , 13 comments

பொதுவாக எந்திரன் குறித்த எதிர்ப்புகள் வலைப்பதிவர்களால் மட்டுமே எழுதப் பட்டுக் கொண்டிருந்தது. பிரபல செய்தி ஊடகங்கள் அனைத்தும் எந்திரனுக்கு சொம்பு தூக்கிகளாகவே செயல் பட்டு வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தினம் ஒரு செய்தி எந்திரன் குறித்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்த எந்திரன் ரிலீஸின் அட்டகாசங்களை யார் தைரியமாக வெளியில் சொல்வது என அனைத்துப் பத்திரிகைகளும் ஊமைகளாகவே செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க பாக்ஸ் ஆஃபீஸில் முதலிடம், இந்தியாவில் வேறெந்த படமும் ரிலீசாக முடியாத நிலை, சன் தொலைக்காட்சியின் எரிச்சலூட்டும் தொடர் விளம்பரங்கள் என எந்திரன் குறித்த சிந்தனைக்குள் மக்கள் முடங்கிப் போய்க் கொண்டிருக்கின்றனர்.

இந்த எந்திரனின் ஏகாதிபத்திய கொள்கைகள் குறித்து நேற்றைய தினமணி இணையதளத்தில் ஒரு கட்டுரை படித்தேன். உண்மையில் பாராட்டுதலுக்குரிய ஒரு கட்டுரை அது.

அதில் குறிப்பிட்டுள்ள ஒரு முக்கியமான செய்தி

"மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?"

என் நண்பர்களிடம் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க நாம் ஏன் துணை போக வேண்டும் என கேட்டதற்கு, காசு போட்டவன் இப்புடித்தான் சம்பாதிப்பான் என மிகச் சாதாரணமான பதில் கிடைத்தது. மக்கள் இன்னும் முதலாளித்துவத்தின் அடிமைகளாகத்தான் இருந்து வருகிறார்கள்.

அவர்கள் அனைவரையும் அதற்குள் முடக்கி வைக்கும் வேலைகளை மும்முரமாக செய்து கொண்டிருக்கும் அனைத்து மீடியாக்களுக்கு மத்தியில் தைரியமாக இந்தக் கட்டுரைய எழுதிய தினமணி கட்டுரையாளருக்கும், தினமணிக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

13 விவாதங்கள்:

mano2005 said...

Am also support my friend pulavan pulikesi... Thanks to thinamani

Anonymous said...

ENDHIRAN A BIG FLOP IN HINDI, TELUGU AND GOING DOWN IN TAMIL. MEDIA AND RAJINI FANS ARE TRYING TO PUSH UP. BUT NO USE, PUBLIC HAS GOT A VERY BAD OPINION ABOUT THIS MOVIE.

WATCH THIS VIDEO IN YOUTUBE. EVEN THE ROBOT RAJINI STUNTS ARE PERFORMED BY HOLLYWOOD ACTOR "ALEX MARTIN". THE LINK IS BELOW :

http://www.youtube.com/watch?v=zWPujmk939s&feature=related

RAJINI HAS DONE NOTHING IN THIS MOVIE. NOW THE PUBLIC HAS REALISED.

எண்ணங்கள் 13189034291840215795 said...

என் நண்பர்களிடம் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க நாம் ஏன் துணை போக வேண்டும் என கேட்டதற்கு, காசு போட்டவன் இப்புடித்தான் சம்பாதிப்பான் என மிகச் சாதாரணமான பதில் கிடைத்தது. மக்கள் இன்னும் முதலாளித்துவத்தின் அடிமைகளாகத்தான் இருந்து வருகிறார்கள்.

---------------------------------------------

இருந்துவிட்டு போனால் கூட பரவாயில்லையே..

அப்படி அடிமையாக இருக்கமுடியாதவர்களை , நற்சிந்தனையுடையவர்களை கேலி பேசுவதுதானே வருத்தம் இங்கே...

தாம் செய்வது தவறு என உணரும் நாள் தொலைவில் இல்லை...

எண்ணங்கள் 13189034291840215795 said...

இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

----------------------------

நியாயமான வரிகள்.. மறுக்க முடியுமா?..

இதைத்தானே கண்டிக்கிறோம்...

நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல்..?

சசிகுமார் said...

வாழ்த்துக்கள் தினமணி

Anonymous said...

hate thisweb sit

Prathap Kumar S. said...

தினமணியின் தைரியமான கட்டுரைக்கு பாராட்டுக்கள்.

விவாதகளம்... said...

தோழர் புலிகேசி அவர்களுக்கு வணக்கம்.

எந்திரனை எதிர்ப்போம்; தினமணியின் கட்டுரையை மறுமதிப்பீடு செய்வோம்! என்ற தலைப்பிலான எனது கட்டுரைக்கான இணைப்பு கீழே பதிந்திருக்கிறேன். நேரமிருக்கையில் அதனைப் பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். நன்றி!

தோழமையுடன்,
து.சுரேஷ்


http://letsdebate1.blogspot.com/2010/10/blog-post_06.html

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

உண்மைதான் ,இவனுங்க அலப்பறை தாங்க முடியல பாஸ்.

Anand said...

True.

jothi said...

பகிர்விற்கு நன்றி,.. எனக்கும் கூட தியேட்டர் போய் பார்க்க ஆசைதான்,. ஆனால் எல்லாப்பக்கமும் எந்திரன் எந்திரன் என சொல்லி எந்திரிக்கவிடாமல் செய்துவிட்டார்கள். DVDயில் பார்த்துக்கலாம்,..

சூப்பர் ஸ்டார் இது மாதிரி ஒரு நாலு படம் பண்ணி அதுல ஏதோ நாலய்ந்து கிராமத்து பள்ளிக்கு சேவை பண்ணினால் உண்மையிலேயே சூப்பர்ஸ்டார். இல்லைன்னா இமயமலைக்கு போகிற கோடீஸ்வரார்,..

jothi said...

அதைவிட கொடுமை பாலபிசேகமும், தாம்பூலத்தட்டும், மொட்டையடித்தாலும், மண்டிபோட்டு மலையேறுதலும்,.. அப்பா,. சாமி முடியலை,..பெரியார் தமிழனுக்கு சொன்ன பகுத்தறிவு நாறிக்கிடக்கிறது,..சொம்பு தூக்கிய தமிழனக்கு என்னத்தை செய்தாரய்யா அவர்???

Anonymous said...

Onnume puriyala, But etho romba arivu poorvama pesureengalo-nu thonuthu.