பெண்கள் அடிமைகளாக வாழ்வதில்லை. எல்லோரும் முன்னேறியிருக்கிறார்கள். இன்னும் பெண்ணடிமையைப் பற்றி பேசுகிறாயே? என பல பெண்களே என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் நகர்ப்புற பெண்களின் உடை, வேலைக்கு செல்லுதல் போன்ற விடயங்களை வைத்து மேலோட்டமாகவே யோசிக்கிறார்கள். ஆனால் இன்றும் பெண்கள் அடிமை போல் நடத்தப் படுவது அன்றாட செய்தித் தாள்களில் கிடைக்கப் பெறுகிறது.
அப்படி ஒரு சம்பவம் தான் இது. கிருஷ்ணகிரியில் 15வயது சிறுமிக்கு பால்ய திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடை பெற்று வந்திருக்கிறது. அந்த பெண்ணின் பெயர் முனியம்மா. பள்ளிப் படிப்பு கூட முடியாத பருவத்தில் திருமண ஏற்பாடு. தனக்கு நிகழப் போகும் கொடுமையை ஏற்றுக் கொண்டு அடிமையாக வாழ அவருக்கு விருப்பமில்லை.
அவருக்கு பார்த்த மாப்பிள்ளை சுந்தரத்தின் வயது 32. என்ன செய்யலாம்? என யோசித்த அந்த சிறுமி தனது திருமணப் பத்திரிகையை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஃபேக்ஸ் மூலம் அனுப்பி உதவி கோரினார். நேரில் விரைந்தவர்கள் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரை எச்சரித்து விட்டு அச்சிறுமியின் முடிவுக்கு பாராட்டுக் கூறியுள்ளனர்.
இன்றும் பலப் பெண்கள் தனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி விட்டு அடிமையாக வாழத் துணிகிறார்கள். இது துணிச்சல் என்பதை விட கோழைத்தணம் என்றே சொல்ல வேண்டும். இன்று பலரால் பெண்கள் முன்னேற்றமடைந்து விட்டார்கள் என நினைக்கப் படும் நகர்ப் புற பெண்களிலும் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்.
இன்றைய கால கட்டத்தில் கணக்கிட்டால் விருப்பமின்றி நடந்த திருமணங்கள் நிச்சயம் அதிகமாக இருக்கும். இன்றும் வரதட்சினை கொடுமையால் பெண் தற்கொலை போன்ற செய்திகள் தினசரிகளை அலங்கரித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஆனால் இது போன்று எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் தனக்கு நிகழவிருந்த கொடுமையை எதிர்த்து வெற்றி பெற்ற சிறுமி முனியம்மாளுக்கு எனது சல்யூட் மற்றும் வாழ்த்துக்கள்.
12 விவாதங்கள்:
முனியம்மாவுக்கு பாராட்டுக்கள்!
வாம்மா முனியம்மா நீ நாட்டின் சிங்கப் பெண் அம்மா
வாழ்த்துக்கள் சொல்லி தான் வரவேற்கும் பதிவர் அம்மா
muniyammavukku paarattukal..rombha thunichalaana samayojitha bhuddhi ulla pen..vazhthukkal
பாலியல் திருமண// ??? பால்ய திருமணம்!!
முனியம்மாவுக்கு பாராட்டு விழாவே நடத்தலாம்........
நீங்க தோலர் ஆனவுடனே புர்ச்சி,பெண்ணடிமைன்னு பிக்கப் பண்ணி எங்கயோ போயிகிட்டு இருக்கீங்க.முதலில் உங்களுக்கு வாழ்த்துகள்.
// என பல பெண்களே என்னிடம் கேட்டிருக்கிறார்கள் //
நீங்க பொம்பளைங்ககிட்ட மட்டும்தான் பேசுவீங்க. சரியோ,தப்போ அவங்க என்ன பண்ணுனாலும் கண்ணை மூடிகிட்டு ஆதரிப்ப்பீங்க. ஆண்களா இருந்தா கம்முனு மூடிக்கிவீங்க. அவங்க பேசணுங்குறதுக்காகத்தான் இவ்வளவும் செய்றீங்க.அப்புறம் உங்ககிட்ட பொம்பளைங்க பேசாமா ஆம்பளைங்களா பேசுவாங்க?? இதில் என்ன அதிசயம்.
Thanks for your comment Anony....
முனியம்மாவுக்கு பாராட்டுக்கள்!
எனது சல்யூட் மற்றும் பூங்கொத்து வாழ்த்துக்கள்.
முனியம்மா இனி அதிகமாவார்கள்..
பெண் முன்னேற்றம் பயப்படதக்க வகையில் வேகத்தோடும் விவேகத்தோடும் இருக்கும்...
இதுவரை அடக்கி வைத்திருந்த சக்தி பூகம்பமாய் வெளிவரும்..
நல்ல கட்டுரை..
அனானிமஸ் கு இடம்தாராமல் இருப்பது இன்னும் அஓரோக்கியமானது என்பது என் கருத்து..
அனானிகள் , மன நோயாளிகள்.. மற்றவரையும் தங்கள் தரத்துக்கு இழுக்கும் அபாயம் உண்டு ஆக தவிருங்கள்..
முனியம்மாவுக்கு பாராட்டுக்கள்!!!
//அனானிமஸ் கு இடம்தாராமல் இருப்பது இன்னும் அஓரோக்கியமானது என்பது என் கருத்து// repetuu...
Post a Comment