நண்பர்களுக்கு வணக்கம்!
நேற்று எந்திரன் குறித்து ஒரு பதிவிட்டிருந்தேன். பலர் வறிந்து கட்டிக் கொண்டு சண்டையிட வந்தனர். முகிலன் எதிர்வினை எழுதி எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.
அப்படி அந்த பதிவில் நான் என்ன தேச விரோதமாகவா எழுதி விட்டேன்? இவர்களுக்கு ஏன் அந்த ஒரு நடிகன் மீது இவ்வளவு பாசம்?
நடிகனுக்காக வறிந்து கட்டிக் கொண்டு வந்த இவர்களில் யாரும் போபால் குறித்து பதிவெழுத அழைத்திருந்த போது வரவில்லை. இதிலேயே புரிகிறது இவர்கள் என்ன ரகம் என்று.
நல்ல விடயங்கள், மக்களுக்கான விடயங்களுக்கு நாங்கள் ஒன்று கூட மாட்டோம். ஆனால் நடிகனைப் பற்றி விமர்சித்தால் கண்டனம் தெரிவிக்க ஒன்று கூடுவோம் என்கின்றனர்.
முதலில் நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நான் ஒன்றும் புரட்சிகர எழுத்தாளன் அல்ல. சொல்லப் போனால் நான் ஒரு எழுத்தாளனே அல்ல. எனக்கு தவறென பட்டால் அதை பதிவிட்டு பலருக்கு சொல்லி வருகிறேன்.
என்னை ஏன் இவர்கள் புரட்சிக்காரன் என சொல்கிறார்கள் எனப் புரியவில்லை. அந்த புரட்சிக்காரன் என்னும் சொல்லைக் கேவலப் படுத்தாதீர்கள். அது அவ்வளவு எளிதில் அடையக் கூடிய இலக்கு அல்ல.
அதில் சிலர் ஒருவரை விமர்சனம் செய்ய நமக்கு என்ன தகுதி இருக்கிறது? என பார்க்க வேண்டும் என எழுதியிருந்தார். அதாவது ஏழ்மையை ஒழிக்க நீ என்ன செய்தாய்? ரஜினியை கேள்வி கேட்கிறாய் என்றார்.
என்னால் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் நான் ஒரு சாதாரண பொதுமக்களில் ஒருவன். ஆனால் நீங்கள் தான் உங்கள் ரஜினியை கடவுளாகப் பார்க்கிறீர்களே! அவரால் ஒன்றும் முடியாதா? அவரை விமர்சனம் செய்ய எனக்கு பொதுமக்களில் ஒருவன் என்ற தகுதி இருக்கிறது.
சிலர் கேட்டிருந்தனர் "நீங்கள் சொல்லும் விடயங்கள் ஏழை ரசிகனுக்கு என்றால் அதை ப்ளாகில் எழுதி என்ன பயன்?".
நண்பர்களே நீங்கள் இது போன்ற வெறும் சினிமா ரசிகனாக இருந்து விடக் கூடாது. சமுதாயத்தில் நமக்கு நிறைய கடமைகள் இருக்கிறது அவற்றை விட இது ஒன்றும் பெரிய விடயமல்ல. சொல்லப் போனால் பைசா பிரயோசனமில்லாத விடயம். இதை ப்ளாகில் எழுதுவதில் எந்த தவறும் இல்லை. ஏழைகளை விட இந்த விடயங்கள் நடுத்தர வர்க்க மக்களுக்கு புரிய வேண்டும்.
நேற்று பதிவுலகில் நான் மிகுந்த மரியாதை வைத்திருந்த ஒரு நபரின் குட்டும் உடை பட்டு போய் விட்டது. அவர் என்ன செய்தார் என்றால் என்னுடைய நேற்றைய பதிவிற்கு தமிழ்மணம், இண்டலி என இரண்டிலும் வாக்களித்து விட்டு முகிலன் எழுதிய எதிர்வினைக்கும் சென்று வாக்களித்து கருத்திட்டிருக்கிறார். இவர்கள் என்ன ரகம் என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.
எந்திரனால் பயன் ஆளும் வர்க்கத்திற்கும், மேட்டுக்குடி வர்க்கத்திற்கும் மட்டுமே. இது புரியவில்லை என்றால் திட்டி விட்டு போங்கள்.
31 விவாதங்கள்:
padam release aagara varaikum itha vache kadaiya ootunga :-)
BTW, I'm not a fan of any hero
நாம் உயிர் வாழ்தல் முக்கியம்.
எந்திரன் பிறகுதான்.
www.avasaramda.blogspot.com
ungalukkaaka - ravi
புலவன் புலிகேசி அவர்களே,
தங்கள் கருத்துக்கள் உண்மை அதன் மூலம் ஒரு ஆதங்கம், இதில் எதிர்ப்பு என்பது ஏதுமில்லை, இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஏழ்மையையும் இல்லாமையும் அரசியலுக்கும் பேர் திரட்டிக்கொள்ளவும் தான் உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள் இதில் நடிகனையோ அல்லது ஒரு அரசியல்வாதியையோ அல்லது பணம் உள்ளவர்களையோ மட்டும் சாடுதல் ஒரு பயனும் தருவதில்லை , உங்கள் கருத்துகள் எனக்கும் உள்ளது ஆயின் இதன் தீர்வு முழுமுதலாய் இந்திய மக்கள் தம்மே தீர்க்கவேண்டிய ஓன்று. சாலையோரத்தில் கடை வைக்காதிருக்க சந்தையும் சந்தைப்போல் இடங்களும் அரசு கொடுத்தும் இன்னமும் சாலையோர கடைகள் இருக்கத்தான் செய்கின்றன இது அரசு சீர் செய்ய வேண்டிய ஓன்று ஆனால் இங்கு அரசு சார்ந்த உடன்பாடிகள் தானே பட்மெடுக்கிறார்கள் பின் நடிகனை சொல்லி என்ன பயன் இவர் இல்லையெனில் வேரொருவர் நடிப்பார் வேரொருவர் பயன்பெறுவார் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துக்கொண்டேயிருக்கும் 100 150 கோடி செலவில் படமெடுக்க முடியுமென்றால் அவர்களே சொல்ப கோடிகளில் நம் தெரு கோடியை சீர் செய்யலாமே. சங்கரின் ஒரு படத்தில் ஒரு கிராமத்திற்க்கே வர்ணம் அடித்திருந்தார் அது போல் திட்டம் தீட்டி ஒவ்வொரு கிராமமாய் ஒவ்வொரு தெருவாய் பட செலவில் ஒரு பகுதியை சீர் அமைக்க செலவிட்டால் தமிழ்நாடு ஒரே வருடத்தில் சிங்கை மாநகரம் போல் ஆகி விடும் இது குழுமமாய் கூட்டாய் மக்களாய் ஓன்று திரண்டு செய்ய வேண்டிய செயல் இதில் நாம் யாரையும் குற்றம் கூற இயலாது ஆதங்கம் தான் பட முடியும் , பட்டிருக்கிறீர்கள், நானும் படுகிறேன்
நன்றி ஜேகே
படம் வர வரைக்கும் தான் இதெல்லாம்...அப்புறம் பாருங்க, இந்தப் பதிவர்தான் முதல்ல 500 ரூவா டிக்கெட் வாங்கிருப்பார்.
விதியே.......!
//இவர்களுக்கு ஏன் அந்த ஒரு நடிகன் மீது இவ்வளவு பாசம்?// அதானே.
//அப்படி அந்த பதிவில் நான் என்ன தேச விரோதமாகவா எழுதி விட்டேன்? // தேசவிரோதமாக எழுதுபவர்களுக்குத்தான் பதிவுலகில் மவுசு அதிகம்.
//நடிகனுக்காக வறிந்து கட்டிக் கொண்டு வந்த இவர்களில் யாரும் போபால் குறித்து பதிவெழுத அழைத்திருந்த போது வரவில்லை. இதிலேயே புரிகிறது இவர்கள் என்ன ரகம் என்று. //
Annan enna solla varaarunna, ivaroda ella padhivayum padikkanumaam !!!!! purinjadhaa....
neengal rajni patri kooriyiruppadhu, matra nadigargalukkum porundhum...
Adhu patri yeludhinaal Ivvalavu per vara maattaargal...
adhanaal dhaan Rajni patri mattum eludhugireeergal....
Unmayai sonnaal, ungalukku Poraamai !! sari vidunga...
Naanga Rajni padam dhaan vaazhkai endru 24 mani neramum adhaye seivadhillai..enga velaiyai paarthukk kondu dhaan irukkirom....
TO all Rajni fans : ini idhu pondru thalaivarai thaakki, arivurai koorum padhivugalai ignore seiyungal...
verum Panam !!!!!!
ஓசில ஒரு பிளாக்க ஓபன் பண்ணி வச்சுட்டு இவங்க பண்ணற அலப்பறை தாங்கமுடியலடா சாமி. அ, உன்னா அதைக் கண்டிக்கறன், நாட்டையே மாத்தறன் எண்டு கிளம்பிடுறானுகள். பேசாமல் உங்க பிளாக்கோட பெயர கண்டனம் அப்படீன்னு வச்சுக்கங்க, புண்ணியமாப்போகும்.
Who asked you to go to the theatre to see 60 yr old Rajni and 37 yr old Aishwarya? Arasialwathigalai vida ivargal mosam illai.. 80 vayathu thatha. 50 vayathu Amma - Ivinga pannum akkiramangala vida 60 vayathu Rajni onnum mosam poi vidavillaii.
/படம் வர வரைக்கும் தான்
இதெல்லாம் ...அப்புறம் பாருங்க,
இந்தப் பதிவர்தான் முதல்ல 500
ரூவா டிக்கெட் வாங்கிருப்பார்.//
parthutu vandhu adhu sari illa, idhu nalla illai. Idhunaladhan India kettu pogudhunu padhivum poduvar.
ஹஹஹஹ...அட இந்த ஆட்டம் கூட நல்லாருக்கே... பார்த்து தல...
ரஜீனி காந்த் என்னும் தெய்வம் சாபம் கொடுத்திடப்போகுது... தெய்வகுத்தம் ஆயிடும்...
அல்பைகள் தமது அல்பத்தனமும், பிழைப்புவாதமும் வெளிப்படடுவது கண்டு ஆத்திரமுற்று ஒன்று கூடி கும்மி அடிக்கிறார்கள். அல்பவாதிகளின் இது போன்ற நாய்க்குரைப்புகளும் சகஜமே. இது கூட கார்த்திக், உங்களது எழுத்துக்களின் வெற்றிதான். குறைந்த பட்சம் கண்ட கழிசடையை பற்றி எழுதாமல் தமது சொந்த இழிநிலையை கேவலமாக அம்பலப்படுத்தும் எழுத்துக்களை எழுத வேண்டிய நிலைக்கு அவர்கள் சென்றுள்ளனர். இது ஒரு முன்னேற்றமே. நேர்மையாக பேச அவர்களிடம் எதுவும் இல்லையென்பதால் சீண்டி விடுகிறார்கள். இதிலும் சிறுமைப்பட்டு போவது அவர்கள்தான்.
pulikeshi enna sollraru , oru padathuku ivvalavu kovapadararu ....
rompa pavam
ஏந்திரனுக்கும் போபலுக்கும் என்ன சம்மந்தம்?
படத்தை படமாக பார்க்கணும். அரசியல் பார்க்க கூடாது
hey thampi pulikesi , cinemava ... cinemavaa pakanum , india varumaiya neeka porenu unkita sonnara rajini, illa avar kastapadumpothu nee udhavi seithaya...
நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை .. ஆனால் யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் ......
ஆதங்கம் தான் பட முடியும் , பட்டிருக்கிறீர்கள், நானும் படுகிறேன்
இதே கருத்தை தான் நானும் எனது பதிவில் தெரிவித்திருந்தேன், ரஜினி என்கின்ற தனி மனிதனுக்கும் அவரது நடிப்பிற்கும் நான் எதிரியல்ல என்பதையும் பதிவு செய்திருந்தும் என்னையும் கேவலமாகவே திட்டுகின்றனர். மக்களது ரசிகத்தனம் இந்த அளவிற்கு இருக்குமென்றால் இதற்க்கு ரஜினி கூட பொறுப்பேற்க இயலாது.
இதையும் படியுங்கள் ஓட்டு போடுங்களேன்
3 இடியட்ஸ் =கலைஞர் + ஜெயா +ராமதாஸ் = மக்கள்
http://athiradenews.blogspot.com/2010/08/3.html
adha vidunga boss. purichi nayagan pulikesi vazhga. Appuram enna purachi paneenga boss?
boss ellarukum ella karuthaium rasika urimai iruku. unga pecha mattum kekkanumna eppadi boss.
Unga karuthuku eadira 2 vimarsanam vandhadhuke ennai thitaranganu polambaringa. Oru sambandhamum illama 1 nadigara varinchu katti aalaluku vimarsikaradhu sariya?
CM kitta kekka vendiyadhai rajini kitta ketta...?
Avar mela mattum enna paasamnu kekaringa? Ungaluku avar mela mattum enna veruppu?
//சங்கரின் ஒரு படத்தில் ஒரு கிராமத்திற்க்கே வர்ணம் அடித்திருந்தார் அது போல் திட்டம் தீட்டி ஒவ்வொரு கிராமமாய் ஒவ்வொரு தெருவாய் பட செலவில் ஒரு பகுதியை சீர் அமைக்க செலவிட்டால் தமிழ்நாடு ஒரே வருடத்தில் சிங்கை மாநகரம் போல் ஆகி விடும் //
நண்பரே இவையனைத்தும் அரசு செய்ய வேண்டிய வேலைகள். இவற்றை சங்கரோ அல்லது இன்னொரு என்.ஜி.ஓ வோ செய்வது மக்களின் தட்டிக் கேட்கும் நோக்கை அழித்து விடும். இது செய்யவில்லையெனில் அரசை தட்டிக் கேட்க வேண்டும். இது போன்ற என்.ஜி.ஓக்களை எதிர் பார்த்தல் தவறு. அதை மறைப்பது இது போன்ற சினிமாக்களே...
//velumani1 says:
August 19, 2010 10:00 AM
படம் வர வரைக்கும் தான் இதெல்லாம்...அப்புறம் பாருங்க, இந்தப் பதிவர்தான் முதல்ல 500 ரூவா டிக்கெட் வாங்கிருப்பார்.
விதியே.......//
நல்லது மிக்க நன்றி...
//nivashah says:
August 19, 2010 3:14 PM
ஏந்திரனுக்கும் போபலுக்கும் என்ன சம்மந்தம்?
படத்தை படமாக பார்க்கணும். அரசியல் பார்க்க கூடா//
அரசியலை அரசியலாப் பாத்து கேள்விக்கேக்க யாருமில்லாதப்போ படத்தை மட்டும் எதுக்கு படமா பாக்கனும்?
நான் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். புரட்சி என்பது சுலபமானதல்ல. புரட்சியாளன் என்ற சொல்லுக்கு நான் தகுதியனவனுமல்ல. நான் ஒரு சாதாரண சாமான்யன். அவ்வளவே...
அலங்காரப் பேச்சில் மக்களை மயக்கி வாய் கிழிய பேசும் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பிரச்னைகள் குறித்து பேசத்தான் தெரியுமே தவிர அவற்றுக்கு தீர்வு சொல்லத் தெரியாது.
அதே போல சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து இன்று மைக் பிடித்து பொது கூட்டங்களில் பேசும் நடிகர்களுக்கு அங்கும் சினிமா டயலாக் தான் பேச தெரிகிறதே தவிர உருப்படியாக ஒன்றும் பேசத் தெரியவில்லை. .
பிற அரசியல் தலைவர்களை குறை சொல்வதே இவர்களின் பெரும் தகுதியாக இங்கு கருதப்படுகிறது என்பது கொடுமை. இதை சுட்டி காட்ட வேண்டிய ஜனநாயகத்தின் மூன்றாம் தூண் என்று அழைக்கப்படும் பத்திரிக்கைகளோ காசுக்காகவும் வேறு சில அற்ப காரணங்களுக்காகவும் தடம் புரண்டு நாலந்தரத் தூண்களாக மாறிவிட்டது இன்னும் கொடுமை.
இவர்களுக்கெல்லாம் “தமிழ்நாட்டில் பிறந்த தமிழனாக்கும் நான்” என்று மார் தட்டிக் கொள்ளத்தான் நேரமிருக்கிறதே தவிர தமிழனை மேம்படுத்துவது எப்படி என்று சுத்தமாக தெரியாது.
ஆனால் ரஜினி ? எங்கோ பிறந்து, வளர்ந்து, இங்கு நடிக்க வந்து, தமிழை எழுதப் படிக்க கற்று, அனைவரையும் விட நன்றாக தமிழ் பேசும் கலையையும் (பயனுள்ள வகையில்) கற்று தேர்ந்துவிட்டார். அவரின் மேடைப் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் அர்த்தம் பொதிந்தவை. பிரச்சனைகள் குறித்து அவர் ஆவேசப்ப்டும்போது அவற்றுக்கு தீர்வு சொல்லவும் அவர் மறப்பதில்லை.
//உண்மைதான்… ‘தலைவர்’ கண்ணசைத்தால், அவரது ரசிகர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதனால்தான், முடிந்தவரை தனது உணர்வுகளை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கூட பெரிதாக காட்டிக் கொள்வதில்லை ரஜினி.//
ரசிகர்களே என்னை நாண்பர்களிட்டமிருந்து காப்பாற்றுங்கள். எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்னு ரசினி கொஞ்ச நாள் முன்பு கதறினார். ரசிகர்கள் எவனும் கண்டு கொள்ளவில்லை, என்பதுடன் அல்லாமல் ரசினியை நம்பி தெருவில் இறங்கி, இங்கே பித்தம் தலைக்கேற உளறிக் கொட்டியுள்ள சில லூசுகள் போல சலம்பித் திரிந்தவர்கள் பாமக தொண்டர்களால் நையப் புடைக்கப்பட்டனர்.
ரஜினி காந்த் காப்பாற்ற வந்தார் என்றா நினைக்கிறீர்கள்?? இவுங்கள் நம்பினா நம்ம கோவணத்தை உருவிட்டுவாங்க அதனால அதுக்கு முன்பே பட எடுத்து ரசிகங்க கோவனத்த உருவிடனும்னு சிவாஜி படம் எடுத்தார். இது தெரியாம இன்னும் பலதுங்க அம்மணாம் திரியுதுங்க.. வெக்கமில்லாம நம்மளயும் அம்மணமா வான்னு கூப்பிடுதுங்க
######
///ஈழத் தமிழர்களின் உணர்வுக்கு இந்த வகையில் மதிப்பளித்தார் ரஜினி என்றால் அவரது ரசிகர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன…//
இலங்கை விழாவுக்கு தமக்கு வந்த அழைப்பிதாழை வாங்காமல் ரசிகர்களும் புறக்கணித்தூவிட்டனரா?
##########
//. பிரச்சனைகள் குறித்து அவர் ஆவேசப்ப்டும்போது அவற்றுக்கு தீர்வு சொல்லவும் அவர் மறப்பதில்லை.//
என்னென்ன பிரச்சினைக்கு என்னென்ன் தீர்வூ சொன்னார்
மரண மொக்கைகள், மூன்றாந்தர சினிமா விமரிசனங்கள், இலக்கிய அரிப்புகள், இவைகள் மட்டுமே காணக்கிடைக்கிற பதிவுலகத்தில் சமூக மாற்றத்திற்காக நீங்கள் எழுதத்தொடங்கிய வினாடியில் உண்மையான எழுத்தாளராகிறீர்கள்.
மொழியில் புலமையும், எழுத்தாற்றலும் முயற்சியில் யாருக்கும் கைகூடும். அதை வைத்து எழுத்து விபச்சாரம் செய்யாமல் இலக்கிய மேட்டிமையை விளம்பரம் செய்யாமல் சமூகத்திற்காக எழுத வேண்டும் என்ற நினைப்பு ஒரு உண்மையான மனிதனுக்கு வரும்.
கேலிக்கும் ஜாலிக்குமான cross breed -இல் பிறந்தவர்களுக்கு சாமானியனின் சோகம் வெறும் டி-வி சினிமாவில் விளம்பரம் வந்தது போலத்தான் இருக்கும். மக்களுக்காக எழுதுகிற வீரத்திற்காக நீங்கள் நிமிர்ந்தது நிற்கலாம். கலை இலக்கியம் எழுத்து யாவும் மக்களுக்கே எனும்போது கும்மிகளுக்காக எழுதுகிறவர்களை சொறிநாயைப்போல பரிதாபத்துடன் பார்த்துவிட்டு தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
சபாஷ்டா தம்பி.காமெடி பீஸான நீ கரெக்ட்டான பேர்தான் வச்சுருக்க புலிகேசின்னு பொருத்தமா.வாழ்த்துகள்.
Ivunugaluku vera velye illapa...summa oosi la oru blog open pannitu istathuku eluthuranga
Kannan
அன்புள்ள நண்பர்களே, என் பெயர் மணிமாறன்.
சேலம் சொந்த ஊரு.
பெங்களுருவில் தற்போது வாசித்த வருகிறேன்.
என்னக்கு ஊரு சுற்றிபக்க ரொம்ப ஆசை. அப்படித்தானே கொல்லி மலை வந்தேன். நான் கொல்லி மலையில் ஒரு வித்தியாசமான விடுதி கட்டி உள்ளேன், அனைவரும் கொல்லி மலை வருக என வரவேற்கிறேன்.
இப்படிக்கு,
மணிமாறன்
+919739700059
http://wildorchidcamp.com
Post a Comment