கடவுளை மற..மனிதனை நினை..

15 August 2010

அடடே 64வது சுதந்திரம்!

1:26:00 PM Posted by புலவன் புலிகேசி , 16 comments

இன்றுடன் 64-ஆண்டுகள் கடந்து விட்டது. நாம் வெள்ளைக்காரனிடம் பெற்று அரசியல்வியாதிகளிடம் ஒப்படைத்து. இன்று நாம் சுதந்திர நாட்டில் வாழ்வதாக பீற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் மனதை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் சுதந்திரமாகத்தான் வாழ்கிறீர்களா?

அது குறித்து சில கேள்விகள். சுதந்திரப் பெருமை பேசுபவர்கள் பதிலளிக்குமாறு கோருகிறேன்.

1) அரசியல்வாதி அல்லது அரசியல் கட்சியின் ஊழல்கள் பல நம் முன் பலமுறை வெளிக்கொணரப் பட்டிருக்கின்றன. அவர்கள் மீண்டும் ஆட்சி அமைக்க என்ன காரணம்? இங்கு சுதந்திரம் மக்களுக்கா? (அ) அரசியல்வியாதிகளுக்கா?

2) மக்களுக்கான ஆட்சிதான் இப்போது இந்தியாவில் நடக்கிறதா? இல்லை என்றால் அதை எதிர்த்து கோசமிடும் அல்லது கேள்வி கேட்கும் சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறதா?

3) அரசியல் கட்சி ஊர்வலங்கள், ஆர்பாட்டங்கள் இதுவரை உங்களில் யாரையும் பாதிக்கவில்லையா? அப்படிப்பட்ட ஆர்ப்பாட்டங்களை எதிர்த்து கேட்க உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?

4) அமெரிக்கா காரன் கொட்டும் குப்பைகளாக பல அணு உலைகள், விடம் கக்கும் நிறுவனங்கள் இங்கு வந்து விழுகின்றன. அதை எதிர்த்து கேட்க, தடுத்து நிறுத்த உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?

5) போபாலில் கொடுக்கப் பட்ட தீர்ப்பு அனைவருக்கும் அதிருப்தியே! ஆனால் அதை தவறு என கூறி கேள்வி எழுப்பி ஆந்தர்சனை தூக்கிலிடும் கோரிக்கையை நிறைவேற்ற உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?

6) நீங்கள் வசிக்கும் இடத்தை பெரு முதலாளிக்கு அரசாங்கம் விற்று விட்டு உங்களை அந்த இடத்திலிருந்து காலி செய்ய சொல்லக் கூடும். அது நடக்காமல் தடுத்து உங்கள் வசிப்பிடம் அதன் இயற்கைவளம் சுரண்டப் படாமல் தடுக்கும் சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறதா?

7) உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் மற்றும் சரியான நேர உழைப்பு இவைகளை உள்ளடக்கிய வேலை சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறதா?

8) தேர்தலில் போலியாக மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெட்டிகளையும் ஏமாற்றி வெற்றி பெறும் அரசியல்வியாதிகள் இல்லையா? இருக்கிறார்கள் என தோன்றினால் அதை தடுக்கும் சுதந்திரம் உங்களிடம் இருக்கிறதா?

இதில் ஒன்று இல்லை என்றாலும் கூட நாம் என்ன சுதந்திர நாட்டில் வாழ்கிறோம். இதில் ஒன்று அல்ல 8 கேள்விகளுக்கும் மனசாட்சியுடன் பதிலளித்தால் சுதந்திரம் இல்லை என்றுதான் வரும். இது 64 ஆனால் என்ன 100 ஆனால் என்ன? மக்களுக்கு ஒன்றும் பயனில்லை. வெள்ளைக் காரனிடம் வாங்கி அமெரிக்கா காரனிடமும், நம் அரசியல்வியாதிகளிடமும் அடகு வைத்திருக்கிறோம்.

அனைவருக்கும் சுதந்திர தின(?) வாழ்த்துக்கள்!

16 விவாதங்கள்:

எல் கே said...

நீங்கள் இவ்வாறு எழுதுகிறீர்களே அதற்கும் காரணம் இந்தச் சுதந்திரம் தான்

புலவன் புலிகேசி said...

இதற்கு பெயர்தான் சுதந்திரம். எனக்கு இது போதும் என எண்ணும் எண்ணம் தான் நம்மை மேலும் அடிமைப் படுத்துகிறது.

Unknown said...

இதை நீங்கள் எழுதுவதும் நாங்கள் படிப்பதுவும் சுதந்திரத்தால் தான். பிரச்சனைகளை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் தீர்வுக்காக யோசிப்போர்/போராடுவோர் ஒரு சிலரே. நீங்க அந்த ஒரு சிலரில் ஒருவரா?

புலவன் புலிகேசி said...

நண்பா கலாநேசன், இவ்வளவு பிரச்சினைகள் நாட்டில் இருக்கு அதில் ஒன்றான போபால் பற்றி எழுத எவ்வளவோ பேரை அழைத்து விட்டேன். யாரும் வரவில்லை. காரணம் நிச்சயம் சுதந்திரமின்மைதான். அப்படி இருக்கையில் எப்படி இதை வைத்து மட்டும் சுதந்திரம் என சொல்ல முடியும்.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////// 1) அரசியல்வாதி அல்லது அரசியல் கட்சியின் ஊழல்கள் பல நம் முன் பலமுறை வெளிக்கொணரப் பட்டிருக்கின்றன. அவர்கள் மீண்டும் ஆட்சி அமைக்க என்ன காரணம்? இங்கு சுதந்திரம் மக்களுக்கா? (அ) அரசியல்வியாதிகளுக்கா?

2) மக்களுக்கான ஆட்சிதான் இப்போது இந்தியாவில் நடக்கிறதா? இல்லை என்றால் அதை எதிர்த்து கோசமிடும் அல்லது கேள்வி கேட்கும் சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறதா?

3) அரசியல் கட்சி ஊர்வலங்கள், ஆர்பாட்டங்கள் இதுவரை உங்களில் யாரையும் பாதிக்கவில்லையா? அப்படிப்பட்ட ஆர்ப்பாட்டங்களை எதிர்த்து கேட்க உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?

4) அமெரிக்கா காரன் கொட்டும் குப்பைகளாக பல அணு உலைகள், விடம் கக்கும் நிறுவனங்கள் இங்கு வந்து விழுகின்றன. அதை எதிர்த்து கேட்க, தடுத்து நிறுத்த உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?

5) போபாலில் கொடுக்கப் பட்ட தீர்ப்பு அனைவருக்கும் அதிருப்தியே! ஆனால் அதை தவறு என கூறி கேள்வி எழுப்பி ஆந்தர்சனை தூக்கிலிடும் கோரிக்கையை நிறைவேற்ற உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறதா?

6) நீங்கள் வசிக்கும் இடத்தை பெரு முதலாளிக்கு அரசாங்கம் விற்று விட்டு உங்களை அந்த இடத்திலிருந்து காலி செய்ய சொல்லக் கூடும். அது நடக்காமல் தடுத்து உங்கள் வசிப்பிடம் அதன் இயற்கைவளம் சுரண்டப் படாமல் தடுக்கும் சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறதா?

7) உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் மற்றும் சரியான நேர உழைப்பு இவைகளை உள்ளடக்கிய வேலை சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறதா?

8) தேர்தலில் போலியாக மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெட்டிகளையும் ஏமாற்றி வெற்றி பெறும் அரசியல்வியாதிகள் இல்லையா? இருக்கிறார்கள் என தோன்றினால் அதை தடுக்கும் சுதந்திரம் உங்களிடம் இருக்கிறதா? ///////

இந்த கேள்விகளிஎல்லாம் உலகில் உள்ள எல்லா நாட்டிற்கும் பொருந்தும் .....,

புலவன் புலிகேசி said...

@ பனங்காட்டு நரி said... அப்பறம் எதுக்கு சுதந்திர நாடுன்னு சொல்றீங்க. சுதந்திரம் என்பது இவற்றை நிவர்த்தி செய்யும் போது மட்டுமே சாத்தியம். கிடைத்தது போதும்னு நடுத்தர மக்கள் இருக்குறதாலதான் இன்னைக்கு 50 கோடி ஏழைகள் இருக்காங்க.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

இந்த மாதிரி பேசுவோர்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்று தான் ...,
உங்கள் கொள்கை என்ன ?
நீங்கள் அதை எப்படி செயல் படுத்த விரும்புகிறீகள் ?
அதனால் மக்களுக்கு பலன் முழுமையாக செல்லுமா ?
மற்றும்
அதற்கான செயல் திட்டங்களை தெரிவிக்கலாமே புலிகேசி
************************************************
உங்களுக்கு என்று ஒரு கொள்கை, கோட்பாடு அல்லது சித்தாந்தம் இருந்தால் மட்டுமே இது போல் கேள்விகளை கேட்க வேண்டும் ....,

புலவன் புலிகேசி said...

//பனங்காட்டு நரி says:
August 15, 2010 8:09 PM
இந்த மாதிரி பேசுவோர்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்று தான் ...,
உங்கள் கொள்கை என்ன ?
நீங்கள் அதை எப்படி செயல் படுத்த விரும்புகிறீகள் ?
அதனால் மக்களுக்கு பலன் முழுமையாக செல்லுமா ?
மற்றும்
அதற்கான செயல் திட்டங்களை தெரிவிக்கலாமே புலிகேசி
************************************************
உங்களுக்கு என்று ஒரு கொள்கை, கோட்பாடு அல்லது சித்தாந்தம் இருந்தால் மட்டுமே இது போல் கேள்விகளை கேட்க வேண்டும் ....,//

என்னுடைய கொள்கையெல்லாம் மக்கள் அரசியல் துரோகங்களையும், அரசியல் சார்ந்த அறிவையும் பெற்று அரசியல்வாதிகளை தூக்கி எறிய வேண்டும். அதனால் தான் இத்தகைய கேள்விகள்.

Prathap Kumar S. said...

அதானே... சுதந்திரமே இல்லாம சுதந்திர தின கொண்டாடுறோம்... உருப்டா மாதிரிதான்...:((

gops2020 said...

சுதந்திரம் இருக்கிறது நாங்கள் தான் அதை வித்துவிடுகிறோமே..
இப்பயெல்லாம் கிட்டினி சட்டினிய விட எங்கள் சுதந்திரம் தான் சார் நல்ல வெலைக்கு போகுது .
நாங்க என்ன பண்ண எங்க வயிற கழுவனும் இல்ல.. :):)

vinthaimanithan said...

நண்பரே! தயவு செய்து சுதந்திரத்தையோ, இந்திய தேசபக்தியையோ எங்கும் விமர்சித்து விடாதீர்கள்! உடனே நம்மீது பாய்ந்து குதற நம் நண்பர்கள் தயாராக இருக்கிறார்கள். நேத்துதான் நான் ஒரு ப்ளாக்கில் பின்னூட்டப்போய் நொந்து வந்தேன். நீங்கள் கேட்கும் எந்தக்கேள்விக்கும் அவர்களிடம் விடை இருக்காது. கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பார்கள். எதுக்கு வம்பு? பேசாமல் சுதந்திர இந்தியன் என்பதில் 'பெருமைப்பட்டு'விட்டுப் போங்களேன்!

tshankar89 said...

Friends..

Do we have a freedonm to question a person from where the money comes from (like Dy CM's son producing a movie with a cost in Crores of Rs)?

If it is not there, then we live in Karunanidhi's monarchist rule in tamilnadu..

So do not talk about "independance" here ...

Anonymous said...

Another communist??????

புலவன் புலிகேசி said...

//Anonymous says:
August 16, 2010 9:05 AM
Another communist??????//

போலி கம்யூனிஸ்ட் ஆகறது ரொம்ப ஈஸிங்க...ஆனா கம்யூனிஸ்ட் ஆகறது ரொம்ப கஷ்டம்...நான் ஒன்னும் கம்யூனிஸ்ட் அப்புடின்னு சொல்லி போலி கம்யூனிஸ்ட் ஆக விரும்பல...

Robin said...

புலவரே,
கிடைத்த சுதந்திரத்தை நமக்கு ஒழுங்காக பயன்படுத்த தெரியவில்லை, அவ்வளவுதான்.
மற்றபடி கம்யுனிச நாடுகளை ஒப்பிடுகையில் நம் நாட்டில் சுதந்திரம் அதிகம்தான்.

சசிகுமார் said...

இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை