கல்வியை அரசாங்கம் ஏற்கனவே தனியாருக்கு கூறு போட்டு விற்றாகி விட்டது. கல்வித்துறை என்ற ஒன்று பெயருக்காகவும், அரசியல்வியாதிகள் பணம் சம்பாதிக்கவும் அரசுத் துறையாக இருந்து வருகிறது. இத்தகையப் பொறுப்பற்றவர்கள் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக பணம் படைத்தவனிடமும், அரசியல் செல்வாக்கு நிறைந்தவனிடமும் கல்லூரி நடத்தும் உரிமையைக் கொடுத்து விட்டிருக்கின்றன.
அதன் விளைவாகப் பொது மக்களும் கல்வியைக் காசு கொடுத்து வாங்கும் பொருளாக பாவிக்கும் அளவிற்கு மாற்றப் பட்டிருக்கின்றனர். இப்போது இந்தத் தனியார்க் கல்லூரிகள் படிக்க வரும் மாணவர்களை ஆள் பிடிக்கும் புரோக்கர்களாகவும் மாற்றி விட்டிருக்கிறது. இடப் பிரச்சினைக்காக நில புரோக்கர்கள் கொலை என்ற செய்தியைப் படித்து வந்தவர்களுக்கு புதிதாக கல்லூரி "இட"ப் பிரச்சினைக் காரணமாக மாணவ புரோக்கர் கொலை என்ற செய்தி கிடைத்துள்ளது.
இங்கு சாதாரணமாக செய்தியாக மட்டும் படிக்கும் பல பொது மக்களின் புரிதல் என்னவாக இருக்கும்?
"படிக்கிற காலத்துல பொறுக்கித் தனமாத் திரிஞ்சா இப்புடித்தான் ஆகும்"
"காலேஜ் பசங்க அடிச்சிக் கிட்டு ஒருத்தன கொன்னுட்டாங்க."
"பணத்துக்கு ஆசப் பட்டு ஒரு பையன கொன்னுட்டானுங்க படுபாவிங்க"
இந்த மாதிரியெல்லாம் அந்த மாணவர்களை மட்டுமே இகழ்ந்து கொண்டிருப்பவர்கள் யாரும் அந்தக் கல்லூரிகளை வைத்து காசுப் பார்த்துக் கொண்டிருக்கும் கொழுத்த முதலைகளாலலும், அவர்களுக்கு கொடி பிடித்துக் காப்பாற்றும் கேடுகெட்ட அரசியலாலும் நிகழ்ந்தவைதான் இவை என்பதை அறிந்தாலும் அவர்களைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை.
சரி விடயத்திற்கு வருவோம். அந்த மாணவன் கொல்லப் பட்டதற்கு கல்லூரி நிர்வாகங்களின் பண வேட்டைக் காரணம் என்பது பொது மக்களிடையே பரவி வரும் செய்தியாக இருக்கும் நிலையில், இது குறித்து விசாரனையைத் துவக்கியுள்ள காவல்த்துறைஇப்போது இந்த வெளி மாநில மாணவர்களை மாவோயிஸ்டுகளாக இருப்பார்களோ? என்ற கோணத்தில் விசாரிக்கப் போகிறதாம்.
அதாவது சென்னையிலுள்ள இந்த பெருத்த முதலாளிகளின் கல்லூரிகளில் படிக்கும் வெளி மாநிலத்தவர்களில் பலர் பீகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒரிசா, அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களாம். அதனால் மாவோயிஸ்டுகள் கலந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கின்றனராம்.
இதெல்லாம் நிச்சயம் அந்த பெருத்த முதலாளி வர்க்கத்திற்கு அரசியலாளர்களால் செய்யப் படும் ஒருத் தொண்டு. விசாரனையைத் திசைத் திருப்பி கல்லூரி மாணவன் கொல்லப் பட்ட காரணம் ஆராயப் படாமல் அந்தப் பண முதலைகள் தப்பிப்பதற்கு அரசியல் போர்வையில் நடத்தப் படும் நாச வேலை.
இந்த விசாரனை இப்படித் திசைத் திருப்பப் படவில்லை என்றால் அந்த கல்லூரிகளுக்கு மூடு விழா நடத்த நேரிடும். அந்த பண வெறிப் பிடித்த முதலைகள் கம்பி எண்ண நேரிடும். இதை மனதில் நிறுத்தி அவர்களை போபால் ஆன்டர்சன் போல் தப்பிக்க வைக்க அரசியல்வியாதிகளால் இந்த விசாரனைத் திசைத் திருப்பப் ப்ட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
14 விவாதங்கள்:
விசாரனையா? தீர்ப்பா? நியாயமா? எந்த நாட்ல இருக்கீங்க.....
தமிழ்நாடு அரசின் இலட்சினை - தேவையில்லாமல் பயன்படுத்த வேண்டாமய்யா. இது என்ன அரசாங்க ப்ளாகா?
//
Rangan Kandaswamy says:
July 9, 2010 8:37 AM
தமிழ்நாடு அரசின் இலட்சினை - தேவையில்லாமல் பயன்படுத்த வேண்டாமய்யா. இது என்ன அரசாங்க ப்ளாகா?//
வந்துட்டாருய்யா...சொல்ல வந்த விசயத்தை உட்டுட்டு லோகோ பாத்துக் கிட்டிருக்காரு.
நாம் இந்தியர்கள்..
இந்த விசாரணை, நியாயம், தீர்ப்புக்கெல்லாம் ஆசைப்படக் கூடாது.
நண்பா மாவோயிஸ்ட் யாரவது பணத்திற்காக கொலை செய்வார்களா ???? இதில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்
ஒன்று திசை திருப்பல் மற்றொன்று மாவோயிஸ்ட் மேல் அவதூறு ,அவர்கள் மோசமானவர்கள் என்று உளவியல் ரீதியாய்
மக்களை மூளை சலவை செய்வது .
@ வெண்ணிற இரவுகள்....! அதேதான் கார்த்தி. இதையெல்லாம் புரிய வைக்க வேண்டியது நம் கடமை.
//நண்பா மாவோயிஸ்ட் யாரவது பணத்திற்காக கொலை செய்வார்களா ???? // நண்பா இங்கு ஒரு விடயம். அவர்கள் கொலை செய்தவர்களை மாவோயிஸ்டுகள் எனக் கூறவில்லை. கொலைக்கான காரணமும் மாவோயிஸ்டுகள் என சொல்லவில்லை. ஆனால் கொலைக்கான கரணம் வெளியில் தெரியாதபடி இந்த விசாரனையைத் திசைத் திருப்பி ஒட்டு மொத்தமாக வடமாநில மாணவர்களில் மாவோயிஸ்டுகள் இருக்கிறார்களா எனப் பார்க்கின்றனர்.
ஆனால் ஒரு காமெடி செய்திருக்கிறார்கள். இவ்வாறு வசூலிக்கப் படும் கமிஷன் தொகை மாவொயிஸ்டுகளுக்கு கொடுக்கப் படுகிறதா என ஆராய்கிறார்களாம்.
நாட்ல மழைவரலைன்னா கூட மாவோயிஸ்டுகள் என்பது அரசியல்வாதிகளின் நிலைப்பாடு!
விசாரணை, நியாயம், தீர்ப்புக்கெல்லாம் ஆசைப்படக் கூடாது.
தொடர் பதிவுக்கு அழைக்கிறேன்
http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post.html
நல்ல சுய அறிமுகம்... டெம்ப்ளேட் மாற்றி இப்போதுதான் பார்க்கிறேன். நன்று.
தமிழ்நாட்டுக்குடிமகன் இதுமாதிரி எல்லாம் ஆசைப்படக்கூடாது.......
மாவோயிஸ்ட்கள் பாவம்
This following blog is my reaction to your longing innovative views.
http://erithazhal-vasan.blogspot.com/
Post a Comment